Saturday, August 13, 2011

ஜெ ஆளுங்க மிரட்னாலும் சரி , ஜெயிச்ச ஆளுங்க மிரட்னாலும் சரி பயப்படமாட்டேன் - வடிவேல் பேட்டி - காமெடி கும்மி

உண்மையை உடைக்கும் வடிவேலு

நான் பொய்ப் புள்ள இல்லண்ணே... கைப்புள்ள!

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhI5p-TWhIPyn7z4Ti6NmHJgzrH3WkdlGgAp6cIX8skQ2iQha6oNMRLXZF-8j-dAMUjhoj_cFt0AwPAZFVzjOCiExM_NdKjeesszWOnTF4gS9mC-cRoMm04IczB_YEGXhqEvBVAVVuGZ60/s400/Vadivelu-and+Actress-Asin-in-Press-meet+.jpg 

ந்த நேரத்தில் பிரசார வேனில் ஏறி னாரோ... அக்கப்போரும் பரபரப்பும் வடிவேலுவை இன்னும் விடாது விரட்டுகிறது. லேட்டஸ்ட் வரவு... போலிப் பத்திர மோசடி! 


சென்னை புறநகர் போலீஸில் பழனியப்பன் என்பவர் புகார் கொடுத்த உடனேயே, 'வடிவேலு தலைமறைவு’ என்கிற செய்திகள் றெக்கை கட்டத் தொடங்கிவிட்டன.


''எங்கேண்ணே இருக்கீங்க?'' என போன் போட்டுக் கேட்டதுதான் தாமதம். ''எங்கேயும் ஓடலை. 'தலைமறைவு’னு போட்டிருக்கிற போஸ்டர்களை நானும் பார்த்தேன். இந்தத் தலை என்னிக்குமே மறையாதுண்ணே... நான் செத்தாக்கூட, என் தலை ஏதாச்சும் ஒரு தியேட்டர்லேயோ, டி.வி-யிலேயோ தெரிஞ்சு கிட்டேதான் இருக்கும்.


ஒண்ணு... சென்னையில இருப்பேன். இல்லன்னா, என் அன்னையோட மதுரைத் திண்ணையில இருப்பேன்.

 சி.பி - எங்கே இருக்கீங்கன்னா அதுக்கு மட்டும் பதில் சொல்லனும், அதை விட்டுட்டு சென்னை , திண்ணைன்னு ஏன் வெண்ணை மாதிரி சமாளிப்பு?

தலைமறைவு ஆகிற அளவுக்கு நான் ஒண்ணும் என்கவுன்ட்டர் குற்றவாளி இல்லண்ணே... நாலு பேரை வயிறு வலிக்கச் சிரிக்கவெச்சதைத் தவிர, வேற எந்த வேலையும் செய்யலண்ணே! என்னையப்போய் வில்லங்கம்னு சொல்ல எப்படித்தான் மனசு வருதோ?'' என்றவரிடம் சொத்து விவகாரக் கேள்விகளை வைத்தோம்.



சி.பி - ஏன்? சிங்கமுத்து கிட்டே காமெடி டிராக் எழுதி வாங்கிட்டு ஏமாத்தலை? 



http://www.chennai365.com/wp-content/uploads/movies/Indira_Logathil_Na_Azhagappan/Vadivelu-012908-.jpg
1. ''ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி ஒருவரே நீங்கள் மோசடி செய்ததாகப் புகார் செய்திருக்கிறாரே?''

சி.பி - அட!!! சிங்கி மங்கி சீட்டிங்க் ஒன் வங்கி !!! அவ்வ்வ்
''அந்த பழனியப்பன் கறுப்பா சிவப்பானுகூட எனக்குத் தெரியாது. இப்போ டி.வி-யிலதான் பார்த்தேன். என் மேனேஜர் முத்தையா மாதிரியே இருக்கார். 2002-ல் இப்போ சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிற நிலத்தை நான் வாங்கினேன். அதில், ஈ.சி. பார்த்தப்ப எந்த வில்லங்கமும் இல்லை. 


2009-ல் அந்த இடத்தில எங்க ஆளுங்க காம்பவுண்ட் போட்டப்ப, பழனியப்பன்கிறவர் வந்து, 'இது என்னோட இடம்’னு சொல்லி இருக்கார். 2006-ல் அந்த இடத்தை வாங்கியதாகச் சொல்ற பழனியப்பன், மூணு வருஷம் கழிச்சு வந்து கேட்க என்ன காரணம்? அப்புறம், அவரே செங்கல்பட்டு கோர்ட்ல கேஸ் போட் டார். அதுக்கு அப்புறம் அவர் கோர்ட் பக்கமே எட்டிப் பார்க்கலை. இதுக்கிடையில நானும் இது சம்பந்தமா கோர்ட்ல கேஸ் போட்டு இருக்கேன். இப்போ, 2011-ல் பழனியப்பன் திடீர்னு கிளம்பி வந்து கம்ப்ளெய்ன்ட் பண்றார்னா, அதில இருக்கிற உள்நோக்கம் புரியுதா?''

 http://thatstamil.oneindia.in/images34/vadivelu-asin-450.jpg

2. ''போலீஸ் உங்களை விசாரிச்சாங்களா?''


''இப்போ வரைக்கும் எந்த போலீஸும் விசாரிக்கலை. 

 சி.பி - ரொம்ப சந்தோஷம் வேணாம், அம்மா இப்போதான் ஃபிரீ ஆனாங்க, இனி விசாரணை தொடரும்

நான்தான் சில போலீஸ் ஆபீஸர்களுக்கு போனைப் பண்ணி, 'நீங்க எப்போ கூப்பிட்டாலும் வர்றேன்’னு சொன்னேன். 


 சி.பி - ஹா ஹா படத்துல வர்ற மாதிரியே நீங்களா போய் மாட்டிக்கிட்டீங்களே?


'உங்களை இன்டலிஜென்ஸ்ல இருந்து விசாரிக்கப்போறாங்களாம்’னு கொஞ்சம் பேர் சொன்னாங்க. உளவுத் துறை அளவுக்கு நான் ஒர்த் இல்லைண்ணே... புகார் கொடுத்திருக்கிற பழனியப்பன் நான் அவரை மிரட்டியதா சொல்லி இருக்காராம். ஒரு முக்கியமான ஆள் மூலமா அந்த பழனியப்பன் தரப்பு என்கிட்ட பேசினாங்க. பல லட்சம் ரூபாய் கேட்டாங்க. கொடுக்கலைன்னா, போலீஸுக்குப் போறதா சொன்னாங்க. 'எந்த விதத்தில உங்களுக்குப் பணம் கொடுக்க முடியும்?’னு கேட்டு நான் மறுத்துட்டேன். 


அததான், சிலரோட தூண்டுதலின் பேரில் இப்போ புகார் கொடுத்து புயலைக் கிளப்பி இருக்காங்க. இது எல்லாமே போலீஸுக்குத் தெரியும்ணே... அவங்க நியாயத்தை செய்வாங்கன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு!''


சி.பி - உங்க படத்துல வர்ற காமெடியை விட இந்த காமெடி செம! போலீஸ் நியாயத்தைசெய்யுமா? ஹய்யோ ஹய்யோ!


http://www.nitharsanam.net/wp-content/uploads/2007/10/24sreya.jpg
3. ''அரசியல் பழிவாங்கல் உங்களை நோக்கியும் திரும்புமோ?''


சி.பி - ஆமா, இவர் கர்ம வீரர் காமராஜர், அரசியல்ல போட்டியா வந்துடப்போறாரு....அடப்போங்கப்பா. சினிமால இவரு காமெடியன், அரசியல்ல காமெடி பீஸூ..


''அதெல்லாம் தேர்தலோட முடிஞ்சிடுச்சு. பிடிச்சவங்களுக்குப் பிரசாரம்பண்றதுல அரசியல் எங்கே இருந்து வருது? ஊரையே சிரிக்கவெச்ச ஒருத்தன் இன்னிக்கு, உள்ளுக்குள்ள வெந்து செத்துக்கிட்டு இருக்கேன். என்னால எந்த வேலையும் செய்ய முடியலை. எனக்கு ஏன் இவ்வளவு எதிரிகள்னு தெரியலை.


கிரிமினல் எண்ணம் ஒருத்தனுக்கு இருந்துச்சுன்னா, நிச்சயம் அவன் நல்ல காமெடியனா இருக்க முடியாது. பரம்பரை பரம்பரையா இந்த நரம்புக்குள்ள நகைச்சுவை ஓடுது. என்னையப்பத்தி தப்பா செய்தி பரப்புறவங்ககூட என்னோட காமெடிக்கு நிச்சயம் சிரிப்பாங்க. 


'உண்மை எப்போதும் தூங்குவது இல்லை... பொய்மை எப்போதும் ஓங்குவது இல்லை’ங்கிற எம்.ஜி.ஆரோட வரிகளைத்தான் மனசுக்குள்ள மந்திரமா நினைச்சுக்கிட்டு இருக்கேன். இந்த நில விவகாரத்தை சி.பி.ஐ. வந்து விசாரிச்சாலும் என் தரப்பு நியாயம் நிச்சயம் புரியும். அதனாலதான் எதையும் எதிர்கொள்ற தைரியத்தோட 'வரட்டும் பார்க்கலாம்’னு உட்கார்ந்து இருக்கேன்!''


சி.பி - எக்ஸ்க்யூஸ் மீ, ஒன் ஸ்மால் கரெக்‌ஷன், நடுங்கிட்டு இருக்கேன்னு சொல்லுங்க. 
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj7mJX6wSSAGdqnFMWQuURVkEytyRGErFiqks9Szi2KRf5nfMJYIJ_ZWW36C6JGK1T6bOca1XnMjd5PYjLxgll_o6AzkYPZBewrSZRyW8RR1sa1jUUAF96y4WBprsoWuWUyKN0MlxGvuV-n/s1600/24.jpg
4. ''வருமான வரித் துறைக்கு பயந்துதான் நீங்க சிங்க முத்து பெயரில் சொத்து வாங்கியதாக அவர் சொல்லி இருக்காரே?''

சி.பி - இந்த விஷயத்துல 2 மேட்டர் இருக்கு, 

1. சிங்கமுத்துவை வடிவேல் காமெடி ஸ்கிரிப்ட் மட்டும் எழுதி வாங்கிட்டு சம்பளம் தராம டேககா கொடுத்தாருன்னும், அதுக்கு பைசல் பண்ணும் விதமாகத்தான் நிலம்  சிங்க முத்து பேர்ல எழுதி வாங்கப்பட்டதுன்னும் சொல்றாங்க.  

2. பொதுவாவே வி ஐ பிங்க அவங்க பி ஏ பேர்ல சொத்து வாங்கறதும், அதனால பின்னால பிரச்சனை வர்றதும் சகஜம் தான். 


''என் வீட்ல திருடியவனைப் பிடிச்சாச்சு. அவனை விசாரிக்கிறப்ப, 'நீயும் நானும் சேர்ந்துதானே திருடினோம்’னு என்னையவே கைகாட்டுறான் அவன்! உன்கூட சேர்ந்து ஏன் என் வீட்டை நான் திருடணும்? ஆங்... உங்க கேள்விக்கு இதுதாண்ணே பதில். என் வீட்டு சுவத்தில நானே ஏன் ஏறிக் குதிக்கணும்? என்னோட குல தெய்வம் அய்யனார் கண் பார்க்க, என்னென்னமோ சொல்லி என்னை ஏமாத்திட்டாங்க. அதைக்கூடத் தாங்கிக்கிட்டேன். 


ஆனால், ஏமாந்தவன் மேலேயே பழிச் சொல் பேச எப்படித்தான் மனசு வருதோ? கைக்குழந்தை மாதிரி எதிர்ப்படுற எல்லாரையும் பார்த்துச் சிரிக்கிற ஆளுண்ணே. இந்தக் கைப்புள்ளைய பொய்ப் புள்ளைன்னு சொல்றவங்களுக்கு அந்த அய்யனார்தான் புத்தி கொடுக்கணும். மற்றபடி துரோகிகள், எதிரிகள்னு என்னைச் சூறையாட நினைக்கிறவங்களோட பெயரைச் சொல்றதைக்கூட பெரும் பாவமா நினைக்கிறேன் நான்!''


சி.பி - எப்படியோ வடிவேலுக்கு இது இறங்கு முகம்,. இதில் இருந்து மீண்டு வந்து அவர் பழையபடி காமெடியில் சினிமாவில் கலக்க வாழ்த்துக்கள். அதை விட்டுட்டு அரசியல்ல காமெடி பண்ணிட்டு இருந்தா அழிஞ்சு போயிடுவாரு

tks - vikatan