1. சமச்சீர் கல்வி யை 10 நாட்களில் செயல்படுத்த வேண்டும்: தீர்ப்பு:# மேடம் , இனிமேலும் எவனாவது உங்க ராசியான எண் 9 னுசொன்னா அவனை துரத்திடுங்க. ஆகஸ்ட் 9ந்தேதி தீர்ப்பு பாருங்க..
------------------------
2.கோர்ட் தீர்ப்பைக்கேட்டதும் எனக்கு கனிமொழியே ரிலீஸ் ஆனது போல் இருக்கிறது - கலைஞர் குதூகலம் @ இமேஜினேஷன்
--------------------------
3. அழகாக இருக்கும் பெண் நம்மை சலனப்படுத்துகிறாள்.அறிவாக இருக்கும் பெண் நம்மை கேள்வி கேட்டே படுத்துகிறாள்
------------------------
4. மனைவி ஆன பிறகு காதலியாய் இருந்த போது அவளிடம் காட்டி வந்த மிகை அன்பை காட்டத்தேவை இல்லை என்ற திமிர்த்தனம் ஆணுக்கு வந்துவிடுகிறது # ஜெண்ட்ஸாலஜி
---------------------------
5. திருமணத்துக்காக நயன் தாரா மதம் மாறினார் # பிரபுதேவா கடைசி வரை மனசு மாறிடாம இருந்தா சந்தோஷம்.
--------------------
6.வாரத்தில் 6 நாட்கள் குடும்பத்தை ஒதுக்குகிறோம், ஞாயிறு மட்டும் குடும்பத்துக்காக ஒதுக்குகிறோம்
--------------------------
7. அயல்மகரந்த சேர்க்கை பற்றி பாடம் டீச்சர் நடத்துகையில் மாணவர்கள் மட்டும் நமுட்டுச்சிரிப்புடன் பாடத்தை கவனிக்கிறார்கள்
---------------------
8. நான் என்ன உனக்கு எதிர்க்கட்சியா? காரணமே கூறாமல் கண்களால் என்னை கைது செய்தது ஏன்?
------------------
9. 5 வருடங்களுக்கு ஒரு முறை ஆட்சி மாறுகிறது, 5 நிமிடங்களுக்கு ஒரு முறை பெண்களுக்கு மனசு மாறுகிறது
---------------------
10. நைட் பார்டியில் பங்கேற்று டைட் ஆக விருப்பமில்லை - டாப்ஸி! # டி ஆர் பேத்தி மாதிரியே பேசறீங்களே? அப்போ பகல் பார்ட்டின்னா ஓக்கேவா?
-------------------------
11. எனக்கு கூச்ச சுபாவம்: கவர்ச்சி நாயகி கத்ரீனா சொல்கிறார்!! # தமாஷ் பண்ணாதீங்க, உங்க ஸ்டில்ஸை பார்க்க எங்களுக்குத்தான் கூச்சமா இருக்கு
------------------------
12. கில்மா படமான கருங்காலி பெண்கள் அவசியம் பார்க்க வேண்டிய படம் என அங்காடித்தெரு அஞ்சலியே டி வியில் விளம்பரம் செய்வது செம காமெடி,அடுத்து சாருநிவேதிதாவும் இந்தபடத்தை பாராட்றாராம்.அம்மணி உஷார்... !!!!!!!!!!
--------------
13. எப்போது வேண்டுமானாலும் வெளியேறிக்கொள்ளலாம் என்ற நிபந்தனை அற்ற ஜாமீனில் உன் உள்ளத்தில் என்னை உட்கார வைத்தாய், நான் வெளியேறவே இல்லை
-------------------------
14. உன் மீது அன்பு செலுத்துவது எனக்கு மிக எளிதாக இருக்கிறது,உன்னிடம் இருந்து அன்பை பெறுவது மிக அரிதாக இருக்கிறது
------------------------
15. கோயிலுக்குப்போகும்போதெல்லாம் உனக்காக என் பிரார்த்தனைகள், உன்னிடம் பேசும்போதெல்லாம் எனக்காக உன் பிரயத்தனங்கள்
--------------------------
16. என் கன்னம் வழியே கண்ணீர் வழிந்தோடினாலும் சலனம் அடையாத வன்மையான மனம் உனக்கு,உன் கண்கள் பள பளத்தாலே தாங்க முடியாத மென்மையான மனம் எனக்கு
-----------------------------
17. என்னை நினைக்கையில் உன் இதயத்தில் அன்பு சுரப்பது இயற்கை,என்னைப்பார்க்கையில் உன் கண்ணில் வெறுப்பு தெறிப்பது செயற்கை
----------------------
18. ”உங்க கிட்டே விட முடியாத கெட்ட பழக்கம் ஏதாவது இருக்கா? “
“உன் நினைவுகளை என்னால் விட முடியவில்லை என்ற ஒரே ஒரு கெட்ட பழக்கம்தான் அன்பே!”
-------------------------------
19. முதல்வர் இருக்கும்போதே துணை முதல்வரை உருவாக்கியது மாதிரி உன் இதயத்திற்கு துணை இதயமாய் என் இதயம்
---------------------
20. என்னைத்தவிர யாரையும் நீங்க நினைச்சதே இல்லையா? எப்படி நம்பறது?
என் மனதை வெற்றிடம் ஏதும் இன்றி நீயே நிரப்பிய பின் ஏன் அந்த சந்தேகம் உனக்கு?
--------------------
21. காதல் மோசடி சட்டம் கொண்டு வந்தால் ஜெயில்கள் எல்லாம் ஒயில்களின் இருப்பிடம் ஆகி விடும்
------------------------
22.பூமியின் ஒவ்வொரு மூலைகளிலும் நல்ல பெண்கள் இருக்கிறார்கள்,ஆனால் அதிர்ச்சியான விஷயம் பூமி ஒரு வட்டம்,அதற்கு மூலைகளே இல்லை என்பது தான்
--------------------------
23. வாழ்வில் ஒரே ஒரு வரி எல்லா கதவுகளையும் திறக்கும் - இழு & தள்ளு
---------------------
24. போகும்போதே ரசித்து விட்டுப்போ , திரும்ப வந்தால் இருக்காது, பஸ் ஸ்டாப் ஃபிகர் # நாங்க திருந்த இன்னும் 3 வருஷம் இருக்கு
-----------------------
25. தனிமையாக இருப்பதாக நீ நினைக்க வேண்டாம்,. ஒவ்வொரு நொடியிலும் யாராவது உன்னை நினைத்திருக்கக்கூடும்,இந்த நொடியில் நான்
-------------------------