Monday, August 08, 2011

பாலா, கௌதம் மேனன், விஷ்ணுவர்தன் இவர்களுடன் மோதலா? அஜீத் பேட்டி - காமெடி கும்மி

http://www.mirchigossips.in/wp-content/uploads/2011/04/mankatha-movie-stills-1-600x399.jpg

ரஜினி என் கடவுள்!

''என் படத்தை புரமோட் பண்ணி நான் எதுவும் பேச மாட்டேன். நல்லா இருந்தா, மக்கள் பார்க்கட்டும். யாரையும் நான் ஏமாத்த விரும்பலை!''- அதிரடி ஒப்பந்தத்துடன் ஆரம்பிக்கிறார் அஜீத்.

சி.பி - என்ன தல!!! ரசிகர் மன்றமும் வேணாம், வெளம்பரமும் வேணாம்னா எப்படி? மார்க்கெட்டிங்க் டெக்னிக்கே தெரியாம இருக்கீங்களே?


1.  ''நீங்க எப்படி வெங்கட் பிரபு டீமுக்குள் வந்தீங்க?''


'' 'ஜி’ படத்தில் சேர்ந்து நடிச்சதில் இருந்தே, எனக்கும் வெங்கட் பிரபுவுக்கும் நல்ல ஃப்ரெண்ட்ஷிப் உண்டு. 'வாலி’ மாதிரி ஒரு நெகட்டிவ் ரோல் ஸ்க்ரிப்ட் இருந்தா சொல்லுங்க, நான் நடிக்கிறேன்!’னு  சொல்லி இருந்தேன். அப்புறம், 'பில்லா’, 'அசல்’னு அடுத்தடுத்த படங்களில் பிஸி ஆகிட்டேன். 

ஒருநாள் வெங்கட் பிரபு, 'கிளவுட் நைன்’க்கு படம் பண்ணப்போறார்னு கேள்விப்பட்டேன். என்ன கதைனு அவர்கிட்ட கேட்டேன். 'அஞ்சு பேரோட கதை. எல்லாருமே கெட்டவங்க. அதில் ஒருத்தன் ரொம்ப ரொம்பக் கெட்டவன்’னு 'மங்காத்தா’ கதையைச் சொன்னார். ரொம்பப் பிடிச்சது. 'நானே நடிக்கிறேன் வெங்கட்’னு சொல்லிட்டேன்!''

சி.பி - வாலி மெகா ஹிட் ஆச்சு,.காரணம் திரைக்கதை பக்கா, + கேரக்டர்ஸ் கம்மி, ஆனா இதுல ஏகப்பட்ட கேரக்டர்ஸ், பத்தாததுக்கு உங்க கெட்டப் வேற நரைச்ச தலை முடியோட.. கொஞ்சம் டவுட் தான்.. 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg78M1Waghr-ft6VYWswNvEOqAFXLYGl3IEKaWM9xml4TDigNF2hkX3GUB2KGgRwO5D32PQjCvwheBCe-D_w7TzcEvPhwGFlfHCH9TceZVP08C1G2HXs8Nayb5QSS3UtSq7WmX_g76_RRKZ/s1600/phoca_thumb_l_mankatha-stills-1.jpg
2. ''படத்தில் உங்கள் கேரக்டர்பற்றி சொல்லுங்க?''


''என் கேரக்டர் பேரு விநாயக் மகாதேவன். படத்தில் நான் ரொம்ப ரொம்பக் கெட்டவன். இப்போதைக்கு அவ்வளவுதான் சொல்ல முடியும்!''


சி.பி - ஆன்ட்டி ஹீரோ சப்ஜெக்ட் தமிழ்ல எடுபட்டது ரஜினிக்கும், சத்யராஜ்க்கும் மட்டும் தான், பார்ப்போம் உங்க ராசியை.. வாலில நெகடிவ் கேரக்டரை பேலன்ஸ் பண்ண  இன்னொரு பாசிடிவ் இருந்தது..


3. ''பாலா, கௌதம் மேனன், விஷ்ணுவர்தன்னு தொடர்ந்து உங்களுக்கு இயக்குநர்களோட மோதல் இருந்துகிட்டே இருக்கே?''


''நான் எப்பவுமே டைமை நம்புறவன். டைம் சரியா இருந்தா, எல்லாமே சரியா நடக்கும். அந்த நேரத்துல சில காரணங்களால் எங்களால் சேர்ந்து வொர்க் பண்ண முடியலை. மற்றபடி எங்களுக்குள் தனிப்பட்ட விரோதம் எதுவும் இல்லை. மீண்டும் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தால்... நிச்சயம் நடிப்பேன்!''


சி.பி - பாலாவின் நான் கடவுள் நீங்க மிஸ் பண்ணி இருக்கக்கூடாத படம் .. க்ளைமாக்ஸ்ல ஹீரோயினை கருணைக்கொலை செய்யும் சீன்ல நடிக்க மாட்டேன்னு சொல்லீட்டீங்களாமே?


4. ''ஏன் ரசிகர் மன்றங்களைக் கலைத்தீர்கள்?''

''இதுதான் காரணம்னு சொல்ல முடியாது. அதை இப்போ போஸ்ட்மார்ட்டம் பண்ண விரும்பலை. நான்தான் பெரிசாப் படிக்கலை. ஆனால், என் ரசிகர்கள் நல்லாப் படிக்கணும்னு விரும்புறேன். படிங்க, வேலைக்குப் போங்க. உங்களுடைய தினசரி வேலைகளைப் பாருங்க. என் படம் நல்லா இருந்தா, தியேட்டரில் வந்து பாருங்க. அது போதும்!''


சி.பி - எந்த ஊர்லயாவது யாராவது அவர் பேரை சொல்லி மிஸ் யூஸ் பண்ணி இருப்பாங்க.. அதான் தல பொங்கிடுச்சு..!!


http://www.a2zpictures.com/wp-content/uploads/2011/03/ajith-trisha-lakshmi-rai-mankatha-movie-stills.jpg

5. '' 'ஆடுகளம்’ ஆறு தேசிய விருதுகளை வாங்கி இருக்கு. தமிழ் சினிமா இயக்குநர்களும் நடிகர்களும் அடுத்தடுத்த கட்டத்துக்குப் போவதை உணர்கிறீர்களா?''


''ஒட்டுமொத்த சினிமாவையும்பற்றி பேசும் அளவுக்கு எனக்குத் தகுதி இருக்கா இல்லையான்னு தெரியலை. நம் தமிழ் சினிமா நண்பர்கள் வெற்றி பெறுவது சந்தோஷமான விஷயம். 'காதல் கோட்டை’ படத்துக்காக அகத்தியன் தேசிய விருது வாங்கியபோது ரொம்ப சந்தோஷப்பட்டேன். இப்போதும் அதே சந்தோஷம்தான்!''

சி.பி - ஏகன்,ஆஞ்சநேயா மாதிரி படங்கள்ல நடிக்கறதை கட் பண்ணிட்டு விருதுக்குன்னு ஒரு படம் பண்ணுங்க..  

Actress Thrisha hot wallpaepr



6. '' 'பில்லா-2’ எப்படிப் போயிட்டு இருக்கு?''


''50 நாள் ஒரே ஷெட்யூல்ல ஹைதரா பாத்ல ஷூட்டிங் போயிட்டு இருக்கு. அடுத்து ஐரோப்பிய நாடுகளில் ஷூட் பண்ண இருக்கோம். நவம்பர் மாதம் ஷூட்டிங் முடிஞ்சவுடன், 'பில்லா-2’ பத்தி உங்ககிட்ட நிறையப் பேசுறேன்!''


சி.பி - இதுலயும் வாக்கிங்க், கூலிங்க் கிளாஸ் தொடருதா?


7. ''ரஜினியும் நீங்களும் நெருங்கிய நண்பர்கள். உடல்நிலை சரி இல்லாமல் இருக்கும் அவரிடம் பேசினீர்களா?''


''கடவுளை யாரும் நேரில் பார்த்தது இல்லை. ஆனால், என் அப்பா, அம்மாவுக்குப் பிறகு, நான் பார்த்த கடவுள் ரஜினி சார்தான். அவர்கிட்ட என்ன பேசினேன்னு வெளில சொல்றது நாகரிகமா இருக்காது. ரஜினி சார் எப்போதும் சிரிச்சுக்கிட்டே இருக்கணும்கிறதுதான் என் விருப்பம்!''


8. ''ஆட்சி மாற்றம்பற்றி..?''

''என்னுடைய கடமை... ஓட்டுப் போடுவது. நான் அதை ஒழுங்காச் செய்து வருகிறேன். மக்களின் மனதுக்கு ஏற்ப ஆட்சி மாற்றங்கள் நடக்கிறது ரெகுலரான விஷயம்தானே? நான் ஒரு நடிகனா இருந்துட்டு, என்னு டைய சொந்த அரசியல் கருத்து களை வெளிப்படையாச் சொல்ல முடியாது. அப்புறம் என்னை 'இவங்க ஆள், அவங்க ஆள்’னு முத்திரைகுத்திடு வாங்க!''  

சி.பி - என்னை மிரட்றாங்கன்னு தைரியமா நீங்க மேடைல சொன்னப்பவே நீங்க எந்த கட்சியையும் சாராதிருப்பவர்னு தெரிஞ்சிடுச்சே? 

http://moviestills.in/wp-content/uploads/2010/09/laxmi-rai-hot-navel-1.jpg


9. ''ஷாலினியும் அனோஷ்காவும் எப்படி இருக்காங்க?''


''அனோஷ்கா, இப்போ எல்.கே.ஜி படிக்கிறாங்க. அவங்களுக்கு இப்போ ஏகப்பட்ட சொந்தங்களோட அன்பும் அரவணைப்பும் வேணும். அதனால், அப்பா, அம்மானு எல்லோரையும் வீட்டுக்குள் கூட்டி வந்து கூட்டுக் குடும்பமா மாத்திட்டேன். வாரத்துக்கு ஒருமுறை ஷாலினியோட அப்பா, அம்மாவும் வந்து பாப்பாங்க. என்னை மட்டுமே நம்பி வந்தவங்க ஷாலினி. 11 வருஷமா எங்க குடும்ப வாழ்க்கை சந்தோஷமாப் போயிட்டு இருக்குன்னா, அதுக்கு முழுக் காரணமும் ஷாலினிதான். எத்தனை பிறவி எடுத்தாலும் அவங்களுக்கு நான் நன்றி சொல்லிட்டே இருக்கணும்!'

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgxuKp-BZyhbK8BXILpom_oaHOn4AJQuWnJZGmE5NvjWX6Dk1Z1eE70RhmahPzGPT1a_gDq-0UUt8BHBpgnhnXG98pOx7VDwpLhpCHYdPEv2SYXpKRSja6AgSYE458oq2pxcJ5yOYeGNzI/s1600/Ajith+(6).jpg a

thanx - vikatan