Tuesday, August 02, 2011

ஈரோடு டாப் 10 சினிமா தியேட்டர்கள் ERODE TOP TEN CINE - THEATRES

http://bollywoodpoint.com/gallery/d/6630-1/aishwarya+rai+hot.jpg

தமிழ்நாட்டிலேயே டீசண்ட்டான ஆட்கள் உள்ள ஊர் லிஸ்ட் எடுத்தால்  முதலிடம் கோவை என்றால் இரண்டாமிடம் ஈரோடு.. மஞ்சள் மார்க்கெட்,ஜவுளி,பெட்ஷீட் வியாபாரம்,புத்தகத்திருவிழா என எல்லாவற்றிலும் களை கட்டும் இந்த ஊர் சினிமா ரசனையில் மட்டும் விதி விலக்கா? என்ன? ஒரு படம் ஹிட்டா? டப்பாவா? என்பதை கோலிவுட்டே கணிப்பது மதுரை, ஈரோடு நகர ரிசல்ட்டை வைத்துத்தான்.. அப்படிப்பட்ட பாரம்பரியம் மிக்க ஈரோட்டில் உள்ள டாப்  10 சினிமா தியேட்டர்கள்  பற்றி ஒரு பார்வை..... 

1. அபிராமி 70 MM A/C DTS  - ஈரோட்டின் நெம்பர் ஒன் தியேட்டர்.பக்காவான பராமரிப்பு.. வெய்யில் அடித்தாலும் , மழை பெய்தாலும் க்யூவில் நிற்கும் ரசிகர்களை பாதிக்காதவண்ணம் ஃபுல் கவரேஜ் .கார் பாக்கிங்க், பைக் பார்க்கிங் என எல்லாமே செம பக்கா .. பாத்ரூம் மெயிண்ட்டனன்ஸில் இருந்து ஏ சி, ஃபேன் போடுவது வரை எல்லாவற்றிலும் ஒரு நீட்நெஸ் உள்ள தியேட்டர் இதுதான்.

ஷோ டைம் காலை 10.40 , மதியம் 1.40 மாலை 6 இரவு 9.30 . டிக்கெட் ரேட் ரூ 10 ரூ 20  ரூ 50 ரூ 70 . பைக் பாஸ் ரூ 7 கார் பாஸ் ரூ 15. ஈரோடு பஸ் ஸ்டேண்ட் எதிரே உள்ள தியேட்டர் என்பதால் நல்ல பிக்கப்.. ரஜினி , மணி ரத்னம் படங்கள்,ஷங்கர் படங்கள் உட்பட பிரம்மாண்டமான எதிர்பார்ப்புக்குள்ளான பல படங்கள் இங்கே தான் ரிலீஸ்  ஆகும்.

எந்தப்படம் ரிலீஸ் ஆனாலும் 20 டூ 30 நாட்கள் அபிராமியில் போட்டு விட்டு அதற்குப்பின் மேலே உள்ள தேவி அபிராமியில் போட்டு 100 நாட்கள் ஓட்டுவார்கள்..


அபிராமி தியேட்டரிலேயே அதிக நாட்கள் ஓடிய படம் கே பாக்ய ராஜின் இது நம்ம ஆளு 72 நாட்கள். தேவி அபிராமியில் அதிக நாட்கள் ஓடிய படங்கள்  டி ஆர் இன் என் தங்கை கல்யாணி 210 நாட்கள் , நாகார்ஜூன் -இன் உதயம் 137 நாட்கள் , இதயத்தை திருடாதே- 112 நாட்கள்.

கேண்டீன்ல கொள்ளை அடிப்பாங்க.. என்ன தமாஷ்னா விலைப்பட்டியல் போட்டு வெச்சு பக்கத்துலயே அதிக விலை என்றால் நிர்வாகத்திடம் புகார் தரவும்னு போர்டு வெச்சிருப்பாங்க, ஆனா அந்த லிஸ்ட்டை விட அதிக விலையில் தான் பொருள்கள் விற்கப்படும்.. 

எந்தப்படம் ரிலீஸ் ஆனாலும் இந்த தியேட்டர் மேனேஜரின் மீசை வெச்ச ஃபோட்டோக்கள் பட ஹீரோ சைஸ்க்கு இருக்கும். தியேட்டர் ஓனர் ஃபோட்டோ கூட இருக்காது.. அதுக்கு தனி கதை இருக்கு.. அது தனியே.. பகிர்கிறேன்..  ( அது ஒரு கில்மா கதை )


2. VSP A/C DTS  - ஆங்கிலப்படத்துக்கென்றே ஒரு தியேட்டர் முதன் முதலாக ஈரோட்டில் நிறுவப்பட்டது இது தான். ஜி ஹெச் அருகே உள்ளது. டி டி எஸ் சும்மா அதிரும்.. சூப்பர் ஹிட் ஆங்கிலப்படங்கள் இதில் தான் ரிலீஸ் ஆகும். பிரபா, ரவி ஆகிய தியேட்டர்களில் தான் முதலில் ஆங்கிலப்படங்கள் ரிலீஸ் ஆனது.. இந்த தியேட்டர் வந்த பிறகு  அவை பணால் ஆகி விட்டன.. இப்போ தனிக்காட்டு ராஜாவாக இங்கிலீஷ் படங்களுக்கான ஒரே தியேட்டர் என்ற பெருமையில் பட்டாசைக்கிளப்பிட்டு இருக்கு..


ஷோ டைம் காலை 11 மணி  மதியம் 2 மணி , மாலை 6 மணி , இரவு 9.30 மணி

டிக்கெட் விலை ரூ 20 , ரூ 40 , ரூ 50 , ரூ 70

இங்கே கேண்டீன்ல ஐஸ் க்ரீம் , கட்லெட் நல்லாருக்கும்..

THE ABYSS  என்ற படம் அதிக பட்சமாக 108 நாட்கள் ஓடியது.. அவ்வப்போது ஹிந்திப்படங்களும் போடுவாங்க.. இப்போ சமீப காலமா தமிழ்ப்படங்களும் போடறாங்க..

பால்கனி போற மாடிப்படில ஆள் உயர கண்ணாடி வெச்சிருப்பாங்க.. பால்கனி டிக்கெட் எடுக்காதவங்க கூட பால்கனில போய் தலை அலங்காரத்தை சரி செய்துட்டு வருவாங்க..

பாத்ரூம் மெயிண்ட்டனன்ஸ் சுமார் தான்..

3. ஆனூர் A/C DTS  -  ஃபயர் சர்வீஸ் பஸ் ஸ்டாப் எதிரே உள்ள சாலையில் உள்ளது.. கோழி முட்டை வடிவில் ஆன தியேட்டர்.. ஏ சி வாசம் கம கம நு இறங்கும்..சின்னத்தம்பி இதுல தான் ரிலீஸ் ஆகி 148 நாட்கள் ஓடி பட்டாசை கிளப்புச்சு..

ஷோ டைம் காலை 11 மணி  மதியம் 2 மணி , மாலை 6 மணி , இரவு 9.30 மணி

டிக்கெட் விலை ரூ15 , ரூ 40 , ரூ 50 , ரூ 70

பாத்ரூம் மெயிண்ட்டனன்ஸ் இன்னும் முன்னேறனும்..

4. ஸ்ரீ கிருஷ்ணா DTS  - மணிக்கூண்டு அருகே உள்ளது.. நகரின் மையபகுதியில் உள்ள தியேட்டர் என்பதாலும், கனி மார்க்கெட், காய் கறி மார்க்கெட் அருகே உள்ளது என்பதாலும், அனைத்து ஜவுளிக்கடைகள் உள்ள ஏரியா என்பதாலும் எப்பவும் கூட்டத்துக்கு பஞ்சம் இல்லை..

கேப்டன் பிரபாகரன் 142 நாட்கள் இதில் ஓடியது..

டிக்கெட் விலை ரூ 10  ரூ20 , ரூ 30 , ரூ 50 ,

 ஷோ டைம் காலை 10.45 , மதியம் 1.45 மாலை 6   இரவு 9.30

 பாத்ரூம் மெயிண்ட்டனன்ஸ் இன்னும் முன்னேறனும்..

ஃபேன் போட ரொம்ப யோசிப்பாங்க.. பால்கனிக்கு மட்டும் தான் ஃபேன் போடுவாங்க.. தியேட்டர் ஓனருக்கு ஏழைகள்னா இளக்காரம் போல.. 

5. அன்னபூரணி - அசோகபுரம் பஸ் ஸ்டாப்ல பவானி சாலையில் இருக்கு.. அவுட்டர் ஏரியா என்பதால் பெரிய படங்கள் ரிலீஸ் பண்ண மாட்டாங்க அதிகமா.. தியேட்டர் நீட்டா இருக்கும்.. சேர் சூப்பரா இருகும்.. நல்லா விஸ்தாரமான தியேட்டர்..  பாத்ரூம் மெயிண்ட்டனன்ஸ் ஓக்கே..

உன்னை நினைத்து இங்கே 60 நாட்கள் ஓடின. அதிக பட்ச ஓட்டமே அந்தப்படம் தான்.. 



டிக்கெட் விலை ரூ 10  ரூ20 , ரூ 40 , ரூ 50 ,

 ஷோ டைம் காலை 11 , மதியம்2   மாலை 6   இரவு10

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgsoW8SCSqmdXFKmvIvdt4Y0XfHudrq3RbMFehh2I56UWlsQGmM-UANv87s4r5Tt5qFVpfz3WtSxVYVwMd5L3uVaodoln9uKNmeMEOPCVuHrVKD-8YbrFnofX305XE3YVZwbl83Sw-efpM/s1600/005-aishwarya+rai+hot+photos+8.jpg

6. ஸ்ரீசண்டிகா -  - ரயில் நிலையம் எதிரே உள்ளதால் செகண்ட் ஷோ ஈஸியா ஃபுல் ஆகிடும்.. முத்துக்குமார் என்ற பெயரில் முதலில் இருந்த தியேட்டர் தான் கை மாறி இப்போ இந்தப்பேர்ல.. டிக்கெட் வாங்கற ரசிக மகா ஜனங்கள் வெய்யில்ல நின்னு தான் வாங்கனும்..தியேட்டர் கடல் மாதிரி இருக்கும்.. ஃபேன் போடுவாங்க.. பேப்பர் விளம்பரங்கள்ல டி டி எஸ்னு பந்தாவா போட்டுக்குவாங்க, ஆனா டி டி எஸ் இல்ல..  ஹி ஹி கேட்டா டி எஸ் பி சிஸ்டம்.. அவங்க தப்பா பிரிண்டட்னு சமாளிஃபிகேஷன் வேற...



 பாத்ரூம் மெயிண்ட்டனன்ஸ் ஓக்கே.



டிக்கெட் விலை ரூ 10  ரூ30 , ரூ 50 , ரூ70 ,

 ஷோ டைம் காலை 11 , மதியம்2   மாலை 6   இரவு  9..30

7. ஸ்ரீ லட்சுமி  DTS  - அசோக புரம் ஸ்டாப்ல இருக்கு , பவானி ரோடு ,அன்னபூரணி தியேட்டர் ஏரியாவே தான்.. பெரும்பாலும் கூட்டம் இருக்காது.. கள்ளக்காதல் ஜோடிங்க, தள்ளிட்டு வந்ததுங்க.. கெட் டுகெதர் லைஃப் இன் தியேட்டர் ஒன்லி ஜோடிகள்,பிக்கப், டிராப் எஸ்கேப் ஜோடிங்க எல்லாம் இங்கே வரும்.. தியேட்டர் ஸ்க்ரீன்ல ஓடற படத்தை விட இவங்க ஓட்டற படம் செம கில்மாவா இருக்கும்..

ஸ்க்ரீன்ல லைட்டிங்க் செட் பண்ணி வெச்சிருப்பாங்க.. ஹீரோ ஓப்பனிங்க் சாங்க், ஹீரோயின் ஒப்பனிங்க் சீன் ( ஹி ஹி ஹி ) எல்லாத்துக்கும்  லைட் போட்டு கிளப்புவாங்க.

  பாத்ரூம் மெயிண்ட்டனன்ஸ் சுமார்


டிக்கெட் விலை ரூ 10  ரூ30 , ரூ40 , ரூ50 ,

 ஷோ டைம் காலை 11 , மதியம்2   மாலை 6   இரவு  9..30

8. ராயல் -   பாரம்பரியம் மிக்க தியேட்டர். பஸ் ஸ்டேண்ட்க்கு பக்கம் என்பதால் டப்பா படம் கூட 25 நாட்கள் ஓடிடும்.. நடுவே 3 வருடங்கள் அண்ணன் என் கே கே பி ராஜா மிரட்டலால் க்ளோஸ் ஆகி இருந்தது.. இப்போ ரீ ஓப்பன்ல போய்ட்டிருக்கு,.

பிரமாதமா ஓடின படம் உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்  110 நாட்கள், துள்ளாத மனமும் துள்ளும் 117 நாட்கள்.

கேண்டீன் கேவலமா இருக்கும். பால்கனி போகும் வழில  ஒரு ஆள் உயர கண்னாடி, ஸ்டில்ஸ் வெச்சிருக்கற இடத்துக்கு எதிர்ல 2 கண்ணாடி இருக்கும்..

பாத்ரூம் மெயிண்ட்டனன்ஸ் படு கேவலம்


டிக்கெட் விலை ரூ 10  ரூ30 , ரூ40 , ரூ50 ,

 ஷோ டைம் காலை 11 , மதியம்2   மாலை 6   இரவு  9..30

9. ஸ்டார்   - இதுவும் ரொம்ப பழைய தியேட்டர்.. மஞ்சள் மண்டிகள் உள்ள ஏரியாவில் உள்ளது.. கூட்டம் அவ்வளவா வராது,. பஸ் ஸ்டேண்டில் இருந்து பள்ளி பாளையம் போற ரூட்ல அரை கி மீ தொலைவில் உள்ளது..

கரகாட்டக்காரன் ( 136), முதல் மரியாதை  ( 140)எல்லாம் இங்கே ரிலீஸ் ஆகி செம ஓட்டம் ஓடுச்சு..

பாத்ரூம் மெயிண்ட்டனன்ஸ் படு கேவலம்


டிக்கெட் விலை ரூ 10  ரூ30 , ரூ40 , ரூ50 ,

 ஷோ டைம் காலை 11 , மதியம்2   மாலை 6   இரவு 10

10. அண்ணா  DTS  - சம்பத் நகர் எதிர் சாலையில் உள்ளது. அதாவது நசியனூர் ரோட்ல ரைட் கட்ல இருக்கு.. சமீபத்துல தான் டிடி எஸ்  செஞ்சாங்க.. பாடாவதிப்படம் ( பகவதி அல்ல) நிறைய ரிலீஸ் ஆன தியேட்டர் இதுவாத்தான் இருக்கும்.. ஆனா பிது படம் ரிலீஸ் ஆனா டிக்கெட் ரேட்டை ஏத்தி வித்து நல்ல காசு பார்த்துடுவாங்க..




பாத்ரூம் மெயிண்ட்டனன்ஸ்  கேவலம்


டிக்கெட் விலை ரூ 10  ரூ30 , ரூ40 , ரூ50 ,

 ஷோ டைம் காலை 11 , மதியம்2   மாலை 6   இரவு 10

http://cinemamasti.com/wp-content/uploads/2011/05/Aishwarya-Rai-Hot-Nipple-Show-Pics-1.png

இவை போக மூடப்பட்ட கில்மா தியேட்டர்கள் ( அதாவது கில்மா படங்கள் மட்டுமே திரை இடுவதை லட்சியமாக கொண்ட தியேட்ட்ரகள்) நடராசா மரப்பாலம் ஏரியா , ராஜாராம், ஆகிய தியேட்டர்கள் க்ளோஸ்டு.. இதுல நடராசா தியேட்டர் மட்டும் 3780 தடவை போலீஸ் ரெய்டுக்குள்ளாகி கின்னஸ் சாதனையில் இடம் பிடித்தது.. அந்த தியேட்டரில் மாமூல் வசூல் பண்ணியே பல போலீஸ் குடும்பங்கள் சீரோடும், சிறப்போடும் வாழ்ந்தன.

ரவி தியேட்டர் பெருந்துறை ரோட்ல அதையும் மூடிட்டாங்க.. பிரபா தியேட்டர் பாழடைஞ்சு போய் கிடக்கு.. நோ ரன்னிங்..

இவை போக ஸ்ரீ நிவாசா, சங்கீதா, மாணிக்கம், சம்பூர்ணம் ( டெண்ட் கொட்டாய்)
போன்ற தியேட்டர்களும் உண்டு..