கலைஞர் எப்படி தன்னோட வாரிசை எப்படியாவது களம் இறக்கிடனும்னு துடிக்கறாரோ,அதே மாதிரி சினி ஃபீல்டுல பல பிரபலங்கள் தங்களோட வாரிசுகளை களம் இறக்கத்துடிக்கறாங்க.பெப்சி விஜயனுக்கும் அப்படி ஒரு ஆசை வந்தது தப்பில்லை, சந்தானத்தையும் , 2 ஃபிகர்ங்களையும் படத்துக்காக புக் பண்ணுனதும் தப்பில்லை..ஆனா ஒரு படத்தை எப்படி எடுக்கக்கூடாதுன்னு ஃபிலிம் இன்ஸ்டிடியுட் ஸ்டூடண்ட்ஸூக்கு போட்டுக்காட்டறதுக்கே எடுத்த மாதிரி இப்படியா குப்பை படம் எடுக்கனும்?
முதல்ல படத்தோட ஒளிப்பதிவாளரை நல்ல ஃபிகரே இல்லாத ஆப்பிரிக்கா கண்டத்துல கொண்டு போய் விடனும்.. 25 வருஷத்துக்கு முன்னால வந்த படம் மாதிரி படம் அவ்வளவு மங்கல்.. மங்கலோ மங்கல்..
எம் ஜி ஆர் நடிச்ச ஆயிரத்தில் ஒருவன் படத்தை காப்பி அடிச்சு முன் பாதிக்கதை பூரா ஒரு தீவுல நடக்குது.. காட்டில் உள்ள மூங்கில்களை வெட்டி சட்டத்துக்கு புறம்பா ஒரு மக்கள் குழுவே இயங்குது.. வெற்றி விழா கமல் மாதிரி தன்னோட சுய நினைவு இழந்த ஹீரோ அவங்களுக்கு ஹெல்ப் பண்ணிட்டு ,அங்கே இருக்கற ஹீரோயினை கரெக்ட் பண்ணிட்டு இருக்காரு.
( எந்த ஹீரோவும் இதை மட்டும் மறக்கறதில்லை.. )
அப்புறம் பார்த்தா ஒரு தாதா ,அவரோட வளர்ப்பு பிள்ளை தான் ஹீரோ.. தாதாவோட உண்மையான பிள்ளையை இந்த தத்து பிள்ளை தான் போட்டுத்தள்ளறாரு.. அது தெரிஞ்சு வில்லன் ஹீரோவை , ஹீரோயினை போட்டுத்தள்ளறாரு. சாகறதுக்கு முன்னே ஹீரோ வில்லனை, வில்லனோட ஆட்களை போட்டுத்தள்ளிடறாரு.. \கடைசில குற்றுயிரும் கொலை உயிருமா மிச்சமா இருக்கறது ஆடியன்ஸ் மட்டும் தான் .. உஷ் அப்பா சாமி முடியல ..
சந்தானம் காமெடியில் தப்பிப்பிழைத்த தருணங்கள்
1. ஏன் காண்ட் ஆகறே?
இருக்கற கோபத்துக்கு காண்டா மிருகம் ஆகாம இருந்தா சரி..
2. ஆ காட்டுன்னா இவளும் ஆ காட்டறா. அவன் என்னமோ சோறு ஊட்டற மாதிரி லிப் டூ லிப் கிஸ் கொடுக்கறான்.. டேய்.. என்னடா நடக்குது இங்கே?
3. அதை எடு.. இதை எடுன்னு எல்லாரையும் வேலை வாங்கறியே? நீ எதை எடுத்தே?
டாஸ்மாக்ல சரக்கடிக்கறப்போ வாமிட் எடுப்பேன்..
4. யார் நைட்டுக்கு காவல் காக்கறதுன்னு பேசி ஒரு முடிவு எடுங்க..
இப்படியே பேசிட்டு இருந்தா விடிஞ்சிடும், எப்படி காவல் காப்பீங்க?
5. நான் காவலுக்கு போகலை, வீட்ல என் பொஞ்சாதி தனியா இருப்பா..
நான் பார்த்துக்கறேன் ..
என்னது?
அண்ணனா இருந்து பார்த்துக்கறேன்னு சொல்ல வந்தேன்..
6. பயம்னா என்ன?
இரு டம்ளர்ல ஊற்றி தர்றேன்..
அது பாயாசம் ஆச்சே?
7. இவங்கண்ணன் மிலிட்ரில இருந்தப்ப தற்கொலைப்படைன்னா தனியா போய்
தற்கொலை பண்ணிக்கறதுன்னு நினைச்சு அப்படி பண்ண ட்ரை பண்ணுனானாம்
8. டேய்.. நேத்து நைட் என்ன பண்ணிட்டு இருந்தே?
பொன்னம்மா கிழவி கிட்டே நீ என்ன பண்ணிட்டு இருந்தியோ அது தான் நானும் பண்ணிட்டு இருந்தேன்.. கேக்கறான் பாரு கேள்வி..
9. இவன் காவலுக்கு போக முடியாது.. இவனுக்கு 7 பிள்ளைங்க இருக்கு..
இவன் பம்பு செட் போட்டு விவசாயம் பார்த்ததுக்கு நான் கரண்ட் பில் கட்டனுமா?
10. கல்யாண வீட்ல பந்தில உக்காந்தா அது சொத்து.. சரக்கோட சாப்பிட்டாத்தான்யா அது கெத்து...
11. ஒரு டம்ளர் 2 ரூபாதானே .. எனக்கு ஒரு டம்ளர் ஊத்துங்க.. ஆனா நான் கொண்டு வந்த டம்ளர்ல..
டேய்.. நாயே.. இதுக்குப்பேரு டம்ளராடா? 180 சொம்புக்கு சமம்டா..
12. இவன் என் அண்ணியை தள்ளி விட்டுட்டான்.
பண்ணியை தள்ளி விட்டுட்டான்னு சொல்லு மேட்சிங்கா இருக்கும்.
13. டேய்.. பந்தை பார்த்து அடிங்கடா.. மேலே வந்து விழுதில்லை?
அக்கா, பார்த்து தான்க்கா அடிச்சோம்.. ஹி ஹி
14. இங்கே வாடி , பசு கிட்டே எப்படி பால் கறக்கறதுன்னு சொல்லி தர்றேன்.. முதல்ல மடில தண்ணி தெளிக்கனும்.
தண்ணி அடிச்சுட்டுத்தான் பாலை கறக்கணுங்களா?அட.. என்னங்க இழுக்க இழுக்க நுரையா வருது?
15. வில்லன். - என்னய்யா இத்தனை கேஸ் என் மேலே.? கேஸெல்லாம் நிறைய வரக்கூடாதுன்னு தானே நிறைய பேரை போலீஸ் ஆக்கி இருக்கேன்?
16. பொண்ணுங்களைப்பற்றி உனக்கு சரியாத்தெரியாது.. சொந்தத்தை ஈசியா பிரிச்சிடுவாளுங்க..
17. பத நீர் சாப்பிடறீங்களா மேடம்?
அதென்ன மியூசிக்கா?
அது சரிகமபதநி அல்ல....
கேவலமா படம் எடுத்த இயக்குநரிடம் சில அவலமான கேள்விகள்
1. ஆத்துக்குள்ள மூங்கில் குச்சி மூலமா மூச்சு விட்டுக்கிட்டு போலீசுக்கு பயந்து எல்லாரும் தண்ணிக்குள்ள ஒளிஞ்சிருக்கறப்ப ஹீரோயினுக்கு மூச்சு சுவாசிக்கும் மூங்கில் மிஸ் ஆகிடுது.. உடனே ஹீரோ தண்ணீர்க்குள்ள லிப் டூ லிப் கிஸ் அடிச்சு அவருக்கு காற்று அல்லது மூச்சு ஏதோ கொடுக்கறாரு.. என்னா கண்றாவி லாஜிக் இது?
2. ஹீரோவை ஒரு சீன்ல 84 பேர் துரத்தறாங்க.. அவரும் 24 கி மீ ஓடி தப்பிச்சிடறாரு.. அது எப்படி?
3. போலீஸ் எஸ் ஐ என்றால் மார்பளவு அட்லீஸ்ட் 34 இஞ்சாவது இருக்கனும். 24 இஞ்ச் கூட இல்லாத ஒரு சொங்கிப்பய எஸ் ஐ யா வர்றானே எப்படி?
4. இடைவேளை வரை ஹீரோயின் அரிவாளோடு தான் சாதா வசனத்தைக்கூட கோபமா பேசறாங்க, அது ஏன்?
5. இலக்கியத்தரம் மிக்க வரிகளான டண்டணக்கு டாங்கறே, சரக்கடிச்சு தூங்குறே.. பாட்டுத்தான் கேவலமா இருக்குன்னா படம் எடுத்த விதம் அதை விடக்கேவலாமா இருக்கே? அது ஏன்?
இந்தப்பப்படம் எல்லா செண்ட்டர்லயும் 10 ஷோ தான் ஓடும்னு நினைக்கறேன்.
இந்தப்படத்துக்கு ஆனந்த விகடன் விமர்சனம் போடவே மாட்டார்னு ஜெயில்க்குள்ளே இருக்கற எங்க குஷ்பூ ஆண்ட்டி மேல சத்தியமா சொல்றேன்.
இருந்தாலும் ஃபார்மாலிட்டின்னு ஒண்ணு இருக்கே?
எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 27
எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க் - ம்ஹூம்
சி பி கமெண்ட் - அய்யய்யோ ம்ஹூம்.
ஈரோடு அன்னபூரணி ல இந்தப்படம் பார்த்தேன்.