1. அண்ணே, பசிக்குது, 4 இட்லியாவது வாங்கிக் குடுங்க எனும் அவலக்குரலை கடந்து சென்று சாப்பிட அமர்ந்தபோது வழக்கத்தைவிட 2 இட்லி கம்மியாகத்தான் சாப்பிட்டேன்.
----------------------------------
2. சந்தர்ப்பம் தெரியாமல் செய்யப்படும் பகடிகள் சில சமயம் எதிர் விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்,டைமிங்க் ஜோக் சில சமயங்களில் டையிங்க் எஃபக்ட் (DIEING EFFECT)
-----------------------------
3. வலி என்பது நம் அன்புக்குரியவர் நம்மை புரியாத போது ஏற்படுவது,
மரண வலி என்பது அவர்கள் நம்மை தவறாக நினைக்கும்போது நமக்கு
நிகழ்வது
மரண வலி என்பது அவர்கள் நம்மை தவறாக நினைக்கும்போது நமக்கு
நிகழ்வது
-----------------------
4. காலப்போக்கில் வலிகள் மறந்து விட்டாலும்,தழும்புகள் மறைந்து விடுவதில்லை,கண்களில் அடிக்கடி தட்டுப்பட்டு ஆறிய காயத்தை மீண்டும் ரணம்ஆக்குகின்றன
------------------------------
5. முகம் அறியா நட்புக்களை நாம் நேரில் சந்திக்கும் போது நம் கற்பனையாக நினைத்திருந்த இமேஜ்போய் நிஜத்தின் தாக்கம் முகத்தில் அறையும்போது தாங்கிடமுடிவதில்லை
----------------------------------
6. அருவிகள் எழுப்பும் பேரிரைச்சலை விட அதில் நனைபவர்களின் ”ஹா”ரிரைச்சல் குதூகலத்தின் பிறப்பிடம்#குற்றால குளியல் அனுபவங்கள்
-------------------------------
7. அப்பர் பர்த்தில் லோ க்ளாஸ் பையன்,லோயர் பர்த்தில் ஹை க்ளாஸ் ஃபிகர்,நிறைவேறி இருக்குமா மிடில் க்ளாஸ் கனவுகள்?#ரயில் பயணங்கள்@மயில் சயனங்கள்
--------------------------------
8. தியேட்டரில் டூயட்சீன் வந்தால் தம் அடிக்கப்போகும் பார்ட்டிகள் பஸ்ஸில்,பார்க்கில் லவ்ஜோடிகளின் டூயட்களை கண் இமைக்காமல் ரசிப்பது விசித்திரம்
--------------------------
9. குற்றால அருவியில் குளிக்கப்போகையில் மழை வந்தால் குளியலை ஒத்திப்போடுபவன் இயற்கை ரசிகனாக இருக்க மாட்டான்#குற்றால குளியல் அனுபவங்கள்
-------------------------
10. முதல் காதலில் விழுந்த தருணத்தில் காதலனுக்கு ,எதிர்ப்படும் பெண்கள் எல்லாம் உயிர் உள்ள அழகு பொம்மைகளாக மட்டுமே தெரிவார்கள்#லவ்வாலஜி
------------------------------
A
அ
11. நீ அழகாக இருக்கிறாய் என்ற ஒரு பொய்யைத்தவிர வேறு எந்தப்பொய்யைச்சொன்னாலும் கண்டு பிடித்து விடுகிறாள் காதலி#லவ்வாலஜி
-------------------------------------
12. அம்மாவிடம் பல ரகசியங்களை மகள்கள் பகிர்ந்து கொள்வது போல் அப்பாவிடம் எந்த ஒரு ரகசியத்தையும் மகன்கள் கைர்ந்து கொள்வதில்லை#அப்பாலஜி(APOLOGY)
-------------------------------
13. என் காதலி ஒரு கடன்காரி,வாங்கியதை திருப்பித்தரமாட்டாள்.கந்துவட்டிக்காரனைப்போல் மிரட்டி,துரத்தித்தான் வாங்க வேண்டி இருக்கிறது கொடுத்த கிஸ்களை
-----------------------------
14. நான் இல்லாத தருணங்களில் யாரையும் நீ சைட் அடிக்கக்கூடாது என்றாள் காதலி.எல்லா இடங்களிலும் நீயே நீக்கமற நிறைந்து தொலைத்து விடுகிறாயே#சலிப்பு
--------------------------
15. அப்பனுக்குப்பிள்ளை தப்பாம பிறந்திருக்கு என்ற சொலவடையை கேட்கும்போது எந்த அப்பா புள்ளய அப்பாம இருந்திருக்கு? என கேட்க தோன்றுகிறது#கண்டிப்பு
----------------------------
அ
16. காதலி எனக்கு அணிவித்த மோதிரத்தில் இருந்த கற்கள் அவள் கன்னப்பருக்களை நினைவுபடுத்துகிறது#லவ்வாலஜி
-----------------------------
17. அம்மாவின் அருகாமையை விட அப்பாவுடன் இருக்கும் தருணங்கள் குறைவாக இருந்தாலும்அப்பாவின் அன்பு எல்லாக்குழந்தைகளுக்கும் நிறைவாக கிடைத்து விடுகிறது
-----------------------
18. நீ நல்லவனா? கெட்டவனா? என்பதை எப்படி கண்டுபிடிப்பது? என்றாள் காதலி.கெட்டவனின் கண்களுக்கு தேவதைகள் காட்சி அளிப்பதில்லை,நீ எனக்கு தெரிகிறாயே என்று மடக்கினேன்
----------------------------
19. என் அப்பா இருந்தவரையில் அப்பாவுக்காக நான் எதையும் செய்ததே இல்லை,திதி மட்டும் தான் செய்தேன்#குற்ற உணர்ச்சி
------------------
20. என்னை இம்ப்ரஸ் செய்யத்தான் அடிக்கடி கவிதை சொல்கிறாய் என குற்றம் சுமத்தினாள் காதலி,இனி பெயர் சொல்லி அவளை அழைப்பதை தவிர்த்துவிட முடிவு செய்தேன்
----------------------------
அ
21.அவள் முகத்தின் அருகே போய் மியாவ் என்றேன்,கோபத்தில் வவ் வவ் என்று குலைத்தாள்#ப்ளூ கிராஸ் காதல்
----------------------------
22. முகத்தைப்பார்த்தே காதல் கொண்டது எப்படி? என்றாள் காதலி. ஹோட்டலின் தரம் அறிய ரிசப்ஷனிஸ்ட்டை பார்த்தால் போதாதா? என்றேன்#லவ்வாலஜி
--------------------
23. என்னை விட ஒரு அழகியைப்பார்த்தால் மனசு மாறுவாயா? என்று கேட்டாள் காதலி,அந்த அளவுக்கு பிரம்மனுக்கு சமர்த்து இல்லை என்றேன்#லவ்வாலஜி
21.அவள் முகத்தின் அருகே போய் மியாவ் என்றேன்,கோபத்தில் வவ் வவ் என்று குலைத்தாள்#ப்ளூ கிராஸ் காதல்
----------------------------
22. முகத்தைப்பார்த்தே காதல் கொண்டது எப்படி? என்றாள் காதலி. ஹோட்டலின் தரம் அறிய ரிசப்ஷனிஸ்ட்டை பார்த்தால் போதாதா? என்றேன்#லவ்வாலஜி
--------------------
23. என்னை விட ஒரு அழகியைப்பார்த்தால் மனசு மாறுவாயா? என்று கேட்டாள் காதலி,அந்த அளவுக்கு பிரம்மனுக்கு சமர்த்து இல்லை என்றேன்#லவ்வாலஜி