Wednesday, July 20, 2011

அபார்ஷனின் எல்லைக்கோட்டில் சென்னை பெண் பதிவர் -கண்ணீர் சம்பவம்




சென்னை பெண் பதிவர் பற்றிய உண்மை சம்பவத்தை முதல் பாகத்தில் படிக்காதவர்கள் இங்கே க்ளிக்கி படிக்கவும்

மேலும் வாசிக்கவாசலில் முபாரக்கை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த மாளவிகா


”என்ன வேணும்?எதுவா இருந்தாலும் அவர் இருக்கும்போது வா. “

ஏய்.. உன் கிட்டே கொஞ்சம் பேசனும். கதவை திற

“ஏன்..? என் கிட்டே பேசற மேட்டரை அவர் இருக்கறப்ப பேச முடியாதா?”

வாக்குவாதம் முற்றுகிறது.. பக்கத்து வீட்டில் எட்டிப்பார்க்கிறார்கள்..தேவையற்ற சிக்கல் எதற்கு? என்று நினைத்த மாளவிகா கதவின் சேஃப்டி சங்கிலியை விடுவித்து அவனை உள்ளே அனுமதிக்கிறார்.

” ஏண்டி.. உனக்கு எவ்வளவு கொழுப்பு இருந்தா உன் புருஷன் கிட்டே என்னை போட்டுக்குடுப்பே..உன் புருஷன் பெரிய இவன் மாதிரி உன் ஃபிரண்டுக்கு சப்போர்ட் பண்றான்..?அவ அப்படி இருக்க மாட்டா அப்டின்னு சர்ட்டிஃபிகேட் தர்றான்? அவ்வளவு டீட்டெயிலா அவளைப்பற்றி அவனுக்கு எப்படி தெரியும்? அவளை அவன் வெச்சிருக்கானா? 

”டேய். வார்த்தையை அளந்து பேசு. அவ என் கணவனுக்கு தங்கை மாதிரி ...”


“அப்டின்னு நீ நினைக்கறே.. உன் புருஷன் என்ன நினைக்கறானோ?”


 தன் தோழியை அன்புக்கணவனோடு சம்பந்தப்படுத்திப்பேசியதைக்கண்டு கொதிப்படைந்த மாளவிகா முபாரக்கை ஆவேசமாக வெளியே தள்ள  முயற்சிக்கிறார்.கோபம் அடைந்த முபாரக் மாளவிகா கர்ப்பவதி என்பதையும்,5 வருட சிநேகிதி என்பதையும், நண்பனின் மனைவி என்பதையும் மறந்து அவரை ஆவேசமாக பிடனியைப்பிடித்து தள்ளுகிறார்.. எதிர்பாராத அந்த தாக்குதலில் நிலை குலைந்த மாளவிகா வேகமாக டைனிங்க் டேபிள் மேல் போய் விழுகிறார்..


 அவரது வயிற்றில் அடிபட்டதில் மயக்கம் அடைகிறார்.. உடனே பயந்து போன முபாரக் வேகமாக அறையை விட்டு வெளியேறுகிறான்.. உண்மையான மனித நேயம் உள்ளவனாக இருந்தால் அட்லீஸ்ட் யாருக்காவது தகவலாவது சொல்லி காப்பாற்றி இருக்கலாம்..



20 நிமிடம் மயக்க நிலையில் இருந்து தானாக எழுந்த மாளவிகா ரத்தப்போக்கு (BLEEDING)ஏற்பட்டிருப்பது கண்டு பதட்டம் அடைந்து தன் கணவருக்கு ஃபோன் செய்ய லைன் கிடைக்காததால் பின்  குடும்ப நண்பர் ஒருவருக்கு ஃபோன் செய்து நிலைமையை சொல்லி அழைத்தார்..

அவரால் நகரக்கூட முடியவைல்லை.. அரை மயக்கத்தில் அப்படியே கிடந்தார்.. மீண்டும் 25 நிமிடங்கள் கழித்தே வந்த குடும்ப நண்பர் அவரை ஆட்டோவில் ஹாஸ்பிடல் அழைத்து சென்றார்..

மாளவிகாவின் கணவருக்கு விபரம் தெரிவிக்கப்பட்டு ,அவர் பதறி அடித்துக்கொண்டு ஹாஸ்பிடல் ஓடி வந்தார்..

கர்ப்பப்பையின் வாய் கிழிந்து விட்டது என்றும் 2 நாட்கள் தையல் போட்டு பின் அசையாமல் கால்களை மட்டும் மேலே தூக்கிய நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும் சொல்லப்பட்டது..

Socotra Dragon Tree,( Socotra, is a small archipelago of four islands in Yemen)
Socotra_dragon_tree.jpg


2 நாட்கள் நரக வேதனைக்குப்பிறகு கிட்டத்தட்ட அபார்ஷன் நிலை வரை சென்று  மீண்டு வந்தார். அதற்குப்பின் 27 நாட்கள் ஹாஸ்பிடல்ல் சிகிச்சை பெற்றார்..

முபாரக் மீது வழக்கு தொடரப்பட்டது.. அட்டெம்ப்ட்  ரேப் கேஸ் போடப்பட்டது..

தனிமையில் இருந்த பெண்ணிடம் தகராறு, கர்ப்பவதி ஆன பெண்ணிடம் கரு கலையும் விதம் தாக்கியது,கற்பழிப்பு முயற்சி என 3 பிரிவுகளில் கேஸ் போடப்பட்டது..

மாளவிகா மயக்க நிலையில் இருந்த போது கற்பழிப்பு நடந்திருக்க வாய்ப்பு இருக்கிறது என்ற சந்தேக அடிப்படையில் அப்படி ஒரு கேஸ் போடப்பட்டது..

ஆனால் மெடிக்கல் ரிப்போர்ட் கற்பழிப்போ , அதற்கான முயற்சிகளோ எதுவும் நடக்கவில்லை என தெரிவிக்கப்பட்டது..

முபாரக் ஹாஸ்பிடல் செலவு ரூ 3 லட்சம் கட்டி விட வேண்டும் எனவும் இனி மாளவிகா விஷயத்தில் தலையிடக்கூடாது எனவும் , ஏதாவது ஆபத்து வந்தால் அதற்கு முபாரக் தான் பொறுப்பு எனவும் போலீஸ் ஸ்டேஷனில் எழுதி வாங்கப்பட்டது..



இப்போது தாயும் ,வயிற்றில் வளரும் சேயும் நலம். 

இருந்தாலும் மோசமான சகவாசத்தால் அந்த குடும்பத்துக்கு நேர்ந்த மன உளைச்சல்கள்......

1. மெடிக்கல் ரிப்போர்ட் வரும் வரை தன் மனைவி மானபங்கப்படுத்தப்பட்டிருப்பாரா? என்ற சந்தேகம் + வருத்தம் இவற்றின் கலவையாக  மன உளைச்சலுக்கு ஆளான கணவன்.


2. சொந்த வீட்டிலேயே இந்த சம்பவம் நடந்ததால் இனி அங்கே குடி இருக்க முடியாது என்பதால் அவசர அவசரமாக காலி செய்து வேறு இடம் பார்த்து குடி போக வேண்டிய அலைச்சல்.


3. மாளவிகா  32 நாட்கள் ஹாஸ்பிடலில் படுத்த படுக்கையாக  கிடந்த நிலை..





இந்த சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்

1. வேலைக்கு செல்லும் பெண்கள் என்னதான் பழக்கமான ,நம்பிக்கையான நபர் என்றாலும்  தானே தனியாக பஸ்ஸிலோ,ஆட்டோவிலோ ,வண்டியிலோ, நடந்தே செல்வதே நல்லது.. கணவனின் நண்பன் என்பதற்காக டபுள்ஸ் போனால் இக்கட்டான நேரங்களில் அதை மிஸ் யூஸ் பண்ண வாய்ப்பு அதிகம்..

2. சந்தர்ப்பங்கள் ,எப்படி வேண்டுமானாலும் மனிதனின் மனதை மாற்றும் வல்லமை படைத்தது என்பதால்  நட்பு  வட்டாரத்தை ஆண்கள் வீட்டுக்கு வெளியே  வைத்துக்கொள்வதே நல்லது.. ( எல்லா ஆண்களும்  கெட்டவர்கள் அல்லதான்.. எந்த புற்றில் எந்தப்பாம்பு இருக்குமோ யார் கண்டது? ஏன் ரிஸ்க்? )

3. தனிக்குடித்தனத்துக்கு ஆசைப்படும் பெண்கள் பிரைவஸிக்கு ஆசைப்படுகிறார்கள்.. ஆனால் பெற்றோருடன் கூட்டுகுடும்பமாக இருந்தால் எப்போதும் ஆட்கள் வீட்டில் இருந்தால் இந்த மாதிரி சம்பவங்கள் தவிர்க்கப்படலாம்..

4. இவர் கூட ரொம்ப நாளாக பழகி இருக்கேன்.. இவர் அப்படி பண்ணமாட்டார்.. நல்லவர் என எப்போதும் யாரையும் நினைக்க வேண்டாம்.. உதாரணமாக 20 வயதில் ஒருவருக்கு 36 சைஸ் பேண்ட் எடுத்தால் 30 வயசில் அவர் பேண்ட் சைஸ் 38 அல்லது 40 என மாறலாம்.. அதே போல் தான் மனித மனமும் நல்லவராக இருப்பவர் எப்போதும் நல்லவராகவே இருக்க வாய்ப்பில்லை.. உடை அளவு மாறுவது போல மனித மனமும் மாறும் தன்மையது... இன்று நல்லவனாக இருப்பவன் நாளை கெட்டவனாக மாறலாம்.. எல்லோரிடமும் , எப்போதும் ஜாக்கிரதையாக இருப்பதே நல்லது..

5. இந்தப்பதிவின் நோக்கம் ஆண்களை கெட்டவர்கள் என லேபிள் பொருத்த அல்ல.. ஒரு பெண்ணின் வாழ்வில் நடந்த சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டு மற்றவர்களுக்கு ஒரு வார்னிங்க் தரவே...

6. சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம்  மனைவியை சந்தேகப்படும் கணவன் களூக்கு மத்தியில் இப்படி ஒரு இக்கட்டான சூழலிலும் தன் மனைவியை விட்டுக்கொடுக்காமல் அவருக்கு ஆதரவாக  வாதாடி அவருடன் மகிழ்ச்சியான வாழ்வை வாழும் சாந்தனு அவர்களுக்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்.

7. மேலும் இந்த சம்பவத்தை போலீசில் புகார் கொடுக்க வேண்டும் என ஆணித்தரமாக வாதாடி நீதி கிடைக்கப்போராடிய அறிவுமதிக்கு வாழ்த்துக்கள். அறிவுமதி - மாளவிகா இருவரின் 20 வருட நட்பின் ஆழத்துக்கு இந்த சம்பவம் மேலும் மெருகு சேர்த்திருக்கிறது .. அவர்கள் நட்பு தொடர வாழ்த்துக்கள்


டிஸ்கி - 1. சிலர் தனி மெயிலில் முபாரக் பேரை மட்டும் ஏன் உண்மையாக வெளியிட்டீர்கள்? பெண்கள் பெயர் மட்டும் ஏன் புனைப்பெயர்? என்று கேட்கிறார்கள்.. பாதிக்கப்பட்ட பெண்கள் மனம் மீண்டும் மீண்டும் காயப்படக்கூடாது என்பதற்காகத்தான் அவர்கள் உண்மையான பெயர் தெரிவிக்கப்படவில்லை.. முபாரக் மாதிரி ஒரு கறுப்பு ஆட்டின் முகமூடியை கிழிக்க அவனது உண்மையான பெயர் சொல்வதில் தப்பு இல்லை.. மேலும் முபாரக்கின் மனைவிக்கும் இந்த மேட்டர் மெயில் அனுப்பப்பட்டுள்ளது..


டிஸ்கி  - 2  -இந்தப்பதிவுக்கு கமெண்ட் போடுபவர்கள் பாதிக்கப்பட்ட பெண்கள் மனம் கோணாதவாறும் ,மாளவிகாவின் கணவர் மனம் பாதிக்கப்படாதது போலும் நாகரீகமாக, நாசூக்காக கமெண்ட் போடவும்.. ஏன் எனில் மிக வற்புறுத்தலுக்குப்பிறகே இந்த சம்பவம் பதிவு போட அனுமதி கிடத்தது.. நீங்கள் போடும் சின்ன தவறான வார்த்தை கூட அவர்கள் மனதை புண்படுத்த வாய்ப்புள்ளது.. உலகிலேயே மென்மையானது மனித மனம் தான். நாம் அதை காயப்படுத்தலாமா?