எப்படி ஸ்டார்ட் பண்றதுன்னே தெரில.. (அப்போ விட்டுடு)..சும்மா விளையாட்டாக எழுத ஆரம்பித்து இன்றோடு ஒரு வருடம் பூர்த்தி ஆகிறது.. இந்த சமயத்தில் எனக்கு ஆதரவாக இருந்தவர்கள்,நான் வளரக்காரணமாக இருந்தவர்கள் அனைவரையும் ஒரு முறை நினைவு படுத்திக்கொள்வது எனக்கு நானே என்னை புதுப்பித்துக்கொள்ள உதவும்..
640 பதிவுகள் (அதுல காப்பி பேஸ்ட் 89) , 643 ஃபாலோயர்ஸ் ,10,80,000 ஹிட்ஸ் , அலெக்ஸா ரேங்க்கிங்க்ல 49,000 & ட்விட்டர்ல 3290 ட்வீட்ஸ்,அதுல ஃபாலோயர்ஸ் 655 ,இண்ட்லியில் 603 போஸ்ட்கள் ஹிட் (சப்மிட்டட் 658)என முன்னேற்றப்பாதையில் ....செல்ல உறு துணையாக இருந்தவர்கள்...
1.நல்லநேரம் சதீஷ்குமார் - http://www.astr osuper.com/பத்திரிக்கைகளில் ஜோக்ஸ் எழுத ஆரம்பித்த காலத்திலிருந்தே இவர் எனக்கு பழக்கம். நிரஞ்சனா,ரிப்போர்ட்டர் போன்ற இதழ்களில் இருவரும் பணி ஆற்றினோம்.. இருவருக்கும் உள்ள பொதுவான அம்சம் நகைச்சுவை உணர்வு,கலாய்த்தல்...இருவருக்கும் உள்ள வேறுபாடு கடவுள் நம்பிக்கை,ஜோதிடம்.. அவருக்கு 2லும் அளவு கடந்த நம்பிக்கை....கால ஓட்டத்தில் அவர் ஜோதிடராகவே ஆகி விட்டார்.. எனக்கு இன்னும் கடவுள் நம்பிக்கை வரவில்லை.. அவர் பிளாக்கில் களவாணி பட விமர்சனம் முதன் முதலில் எழுதினேன்..படம் சூப்பர் ஹிட் என்று ரிலீஸ் ஆன அன்றே மாலை 3 மணிக்கு விமர்சனம் போட்டேன்.. பிறகு 2 மாதங்களில் தனி பிளாக் அவரே ஓப்பன் பண்ணிக்கொடுத்தார்.. நான் ஈரோடு,அவர் சித்தோடு என்பதால் அடிக்கடி இருவரும் சந்திக்க வாய்ப்பு உண்டு. அளவளாவுவோம்.. கருத்துப்பரிமாற்றங்கள் காரசாரமாக நடக்கும்..
2. ரமேஷ் ரொம்ப நல்லவன் சத்தியமா - http://sirippup olice.blogspot. com/2011/07/1.h tmlநான் எழுதிய 640 போஸ்ட்களில் 184 போஸ்ட்களுக்கு மீ த ஃபர்ஸ்ட் என கமெண்ட் போட்டவர்..ஆரம்ப நாட்களிலேயே இவர் எனக்கு அளித்த ஊக்குவிப்பு என் எழுத்தை மேம்படுத்த உதவியது.. செம காமெடியான ஆள்.. மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுவார்.. சென்னை சென்ற போது ஒரு முறை சந்தித்து எங்கள் நட்பை பலப்படுத்திக்கொண்டோம்..பிறகு விகடன் காப்பி பேஸ்ட் போஸ்ட்,பிளாக்கில் ஃபிகர்கள் ஃபோட்டோ போடுவது என அவருக்கு சில விஷயங்கள் பிடிக்காத போது, ஓப்பனாக ஃபோன் பண்ணி எதிர்ப்பு தெரிவித்தார்.. என்னை நேரடியாக தாக்கி 3 பஸ்கள் விட்டார்.. இருந்தாலும் இன்னும் நட்பு நீடிக்கிறது.. அவரது ஆசைப்படி அந்த இரண்டையும் முழுதாக என்னால் தவிர்க்க முடியா விட்டாலும் கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து வருகிறேன்..
3. திருப்பூர் புரட்சித்தலைவன் - இவரும் ஆரம்ப கட்ட நண்பர் + வாசகர்.. என் பதிவுகள் நன்றாக இருந்தால் ஓக்கே என்பார், குறை இருந்தால் ஓப்பனாக சொல்வார்.. இந்த மாதிரி ஓப்பன் மைண்ட் வாசகர்கள் தான் ஒரு படைப்பாளிக்குத்தேவை.. கண்ணாடி போல.. ஏன்னா நாம எது எழுதுனாலும் அது செம அப்டின்னு தான் நாம் நினைப்போம்.. ஆனா மற்றவர்களுக்குத்தான் உண்மை நிலவரம் புரியும்..
4. பன்னிக்குட்டி ராம்சாமி - http://shilppak umar.blogspot.c om/ ஒரே அலை வரிசை எண்ணம் கொண்ட இருவர் நண்பராக அமைந்து விட்டால் அதை விட ஒரு நல்ல கொடுப்பினை ஒரு மனிதனுக்குக்கிடைக்காது.. என்னை விட படிப்பு,அனுபவம்,திறமை அனைத்திலும் முன்னே இருந்தாலும் எங்களை கண்ணுக்குத்தெரியாத ஒரு பாச வலையால் கட்டியது இருவருக்கும் பொதுவான காமெடி உணர்வு, கலாய்க்கும் கலாட்டாத்தனம்.. என் பதிவுகளுக்கு இவரது கமெண்ட்கள் மேலும் மெருகு சேர்த்தது.. பல வாசகர்கள் ஃபோன் பண்ணி இதை தெரிவித்தார்கள்..ஈரோட்டில் இவர் ஒரு முறை வந்த போது நேரில் சந்தித்தோம். அது பற்றி தனியே ஒரு பதிவு விரைவில் போடுவேன்..எனது பஸ்கள் களை கட்ட இவரது கமெண்ட்ஸ் முக்கிய காரணம்..
5. விக்கி உலகம் தக்காளி - http://vikkiula gam.blogspot.co m/
காதல் கோட்டை படத்தில் வருவது போல் இருவரும் பார்க்காமலேயே நட்பு வளர்த்தோம்.. தினமும் 8 டூ 9 ஃபோனில் பேசுவார்.. (அவர் தான் பேசுவார் ஹி ஹி )பதிவுலகம் பற்றி பரிமாறிக்கொள்வோம்.. இவர் ஒரு ராணுவ வீரர் என்பது சமீபத்தில் தான் தெரிந்தது.என் மதிப்பு பன்மடங்கு உயர்ந்தது..வியட்நாமில் இருக்கிறார்.. நான் பழகிய வரை தன் மனைவியைத்தவிர எந்த ஒரு பெண்ணையும் மனதாலும் நினைக்காத அபூர்வ மனிதர்.. ஆனால் நான் சும்மா கமெண்ட்ல கலாய்ப்பேன்.. இப்போது அவர் மனைவி வியட்நாம் வந்த பிறகு சரியாக என்னிடம் பேசுவதில்லை.. ( மனைவிட்ட திட்டு வாங்கவே நேரம் சரியா இருக்காம்)
6. லேப்டாப் மனோ - http://nanjilma no.blogspot.com /பதிவுலகில் என்னை டேய் என உரிமையுடன் அழைக்கும் ஒரே பதிவர். (இதுதான் சாக்குன்னு ஆளாளுக்கு அப்படி கூப்பிடக்கூடாது)நெல்லை பதிவர் சந்திப்பில் தான் நேரில் சந்தித்தோம்.. ஆள் புரோஃபைலில் கேப்டன் மாதிரி மிரட்னாலும் நேரில் உதய கீதம் மோகன் மாதிரி சாஃப்ட் டைப்.
7.இலங்கை அதிரடிப்பதிவர் நிரூபன் - http://www.tham ilnattu.com/
எனது பிளாக் பாஸ்வோர்டு இவரிடம் உண்டு.. எப்போ வேணும்னாலும் உதவின்னு கேட்டா செஞ்சு குடுப்பார், (ஆளாளுக்கு தொந்தரவு பண்ணாதீங்கப்பா.. அப்புறம் எனக்கு பண்ண மாட்டார்)நல்ல மனிதர்.. இவரது பல கட்டுரைகள் என்னை வியப்பில் ஆழ்த்தியதுண்டு..
8. மாத்தி யோசி ஜீவன் - http://maaththi yosi-maaththiyo si.blogspot.com /ஃபிரான்சில் பணியாற்றிய இவர் என் ஆத்மார்த்த நண்பர். பதிவுலகில் விக்கி தக்காளிக்கு என் நட்பில் முதல் இடம் என்றால் இவருக்கு அடுத்த இடம்.. நான் பல சமயம் மனம் கலங்கிய நாட்களில் எல்லாம் எனக்கு ஆறுதல் அளித்து உதவி செய்தவர்.. ஒத்தடம் கொடுத்தவர்.
9. ராஜி - http://rajiyink anavugal.blogsp ot.com/
எனது பிளாக்கிற்கு பின்னூட்டம் போட்டது மூலம் அறிமுகம் ஆனவர்.. நான் ஆஃபீஸ் வேலையாக வெளியே ஃபீல்டு ஒர்க்கில் இருக்கும்போது என் பிளாக்கில் பதிவு போடுபவர் இவர் தான். கோவை பெண் பதிவர் கொலை வழக்கு என்னும் ஒரு தொடர் பதிவுக்கு காரண கர்த்தா இவரே.. அந்தப்பதிவு விரைவில் வெளிவரும்.. உண்மைக்கதை அது..
10. சித்தர்கள் ராஜ்ஜியம் தோழி - http://siththar kal.blogspot.co m/இவர் ஒரு இலங்கைப்பதிவர்.என் பிளாக்கில் பல லே அவுட் மாற்றங்களை கொண்டு வந்தவர். நான் மற்ற விகடன் பதிவுகளை காப்பி பேஸ்ட் செய்தாலும் என் பதிவை யாரும் காப்பி பேஸ்ட் பண்ணி விடக்கூடாது (!!!!) எனும் உயர்ந்த கொள்கைக்கு உதவி செய்தவர்..
( ரொம்ப தொல்லைப்பா)
இந்தக்கட்டுரை நீண்டு கொண்டே போய் விடும் அபாயம் இருப்பதால் இத்துடன் நன்றி நவிலல் நிகழ்ச்சியை நிறுத்துகிறேன்..
காமெடி,சினிமா,கலாய்த்தல் என்ற பாதையிலிருந்து கொஞ்சம் விலகி இனி சமூகம் சார்ந்த விழிப்புணர்வுப்பதிவுகள்,அனுபவப்பதிவுகள் அதிகம் போட உத்தேசித்து உள்ளேன்.. கமெண்ட் போடும் நண்பர்கள் தங்கள் கருத்தை கூறவும்..
அன்பு உள்ளங்கள்க்கு நன்றி
கருண்,உணவுலகம்அண்ணன், செங்கோவி, ம தி சுதா ,டகால்டி,ஹேமா, மைந்தன் சிவா பட்டா பட்டி,வைகை,கவிதைக்காதலன்,யாதவன்,ராஜபேட்டை ராஜா,டெரர் கும்மி குரூப்ஸ்,உண்மைத்தமிழன்,கேபிள் சங்கர்,அப்துல்லா அண்ணன்,ராஜராஜேஸ்வரி,சங்கவி,ஜேம்ஸ்பாண்ட் சதீஷ், ஃபிலாசஃபி பிரபாகரன்,தமிழ்வாசி,,பாபு,சேட்டைக்காரன்,பிரகாஷ்,கூடல்பாலா,ராம்வி,கடம்பவனக்குயில்,மணிவண்னன்,ராஜராஜெஸ்வரி,
ஆஞ்சலின்,சவுந்தர்,குணசேகரன்,கோவை நேரம் ,மதுரன்,காங்கேயம் நந்தகுமார்,செல்வா,சசிகுமார்,ரமேஷ்பாபு,ஜீ,அமைதி அப்பா,ரியாஸ் அகமது ,கோகுல்,மைந்தன் சிவா,ஷிவா ஸ்கை,சரியல்ல,சத்யா,நிகழ்வுகள்,கானோ வரோ,கல்பனா ,உமாகிருஷ்,சசிகா மேனகா,லக்ஷ்மி,ஹேமா, சித்ரா, நாய்க்குட்டி மனசு ரூபினா,ஜோசஃபின் ,துஷ்யந்தன்,மற்றும் விடுபட்ட உள்ளங்கள் என்னை மன்னிக்கவும் ( சி பி பிளாக்ல மன்னிப்பு கேட்காம இருந்தா எப்படி? ஹி ஹி )
தொடர்ந்து ஆதரவு அளிக்க அனைவரையும் வேண்டி விரும்பி கேட்டுக்கொல்கிறேன்.. அடச்சே கொள்கிறேன்....
டிஸ்கி - மேலும் என்னிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்பதை கமெண்ட்டில் போடவும் ( பண உதவி எல்லாம் கேட்கக்கூடாது ஹி ஹி )