-----------------------
2. எதிர்பார்த்த வாழ்க்கை யாருக்கும் அமைவது இல்லை,ஆனால் யாரும் எதிர்பார்க்காமல் வாழ்வதும் இல்லை
-----------------------
3.சரக்கு உடம்புக்கு கெடுதலாம்.டி வி ல சொன்னாங்க..அதனால.
ஓ சரக்கு அடிக்கறதை நிறுத்திட்டீங்களா?
ம்ஹூம், டிவில அந்த புரோக்ராம் நிறுத்திட்டேன்
---------------------
4. ”ஹாய் 143 “
“சாரி ,420” “....
.” “ ஏன் கோபம்?நான் என்னை சொன்னேன்..”
“ உங்களைச்சொன்னால் அது என்னை சொல்வது மாதிரிதானே?”#காதல் ஊடல்
-----------------------
5. ”டியர்.. மத்தவங்க முன்னால உங்களை செம மாத்து மாத்துனேனே?மனசுக்கு கஷ்டமா இல்லை?”
“ ம்ஹூம் எப்டி மாத்துனாலும் உன்னை மாத்தும் எண்ணம் இல்லை”
--------------------------
6. ”நான் யார் கூடவாவது பேசுனா உங்களுக்குப்பொறாமை வருதா?”
“ம் ம் லேசா”
“அப்போ என் மேல உங்களுக்கு உண்மையான காதல் இல்லையா?” #பல்பு ஃப்ரம் ஜில்பு
-----------------------
7. சாதாரண உப்புக்கு 6 மாதம் தடை: சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்தது#உப்பு போட்டு சாப்பிடறவங்களுக்குத்தானே அது பற்றிக்கவலை!நமக்கேன்ன போச்சு?
--------------------------
8. ஆண்கள் யாராவது பெண்ணிடம் மாட்டிக்கொண்டால்,நம் மேல் தவறே இல்லை என்றாலும் இன உணர்வின் காரணமாகவோ என்னவோ ஒரு குற்ற உணர்வு பிறக்கிறது
-----------------------
9. ஆப்பிளில் மட்டும் 7500 வகைகள் உண்டாம்..உன் கன்னங்கள் அதில் கணக்கு சேர்க்கப்படவில்லை
-----------------------
10. தலைவரே,ஃபேக் ஐ டி ல தொந்தரவு தர்றீங்களாமே? நிஜமா?
கன்னி வாசம் மட்டுமே எனக்குத்தெரியும்,கணினி வாசமே தெரியாதவன்யா நானு
----------------------
11. ரூபி தீப்பெட்டியில் போலி வருகிறது,வாங்கும்போது உஷார். சைடு பாக்ஸில் சீல் லேபிள் இல்லாமல் வருகிறது பார்த்து வாங்கவும்.90% குச்சிகள் வேஸ்ட்
---------------------
12. டியர்,கல்யாணம் ஆன பிறகு என்னை அடிப்பீங்களா?
ச்சே ,ச்சே.. கண்ணடிப்பேன்,ஜாலியாய்.. அவ்வளவுதான் என் தைரியம்#காதல் கடலை
----------------------
13. உடல் நனையும் சந்தோஷம் மழைக்கொண்டாட்டம்,உள்ளம் நனையும் சந்தோஷம் மழலைக்கொண்டாட்டம்
-------------------------
14. டியர்,எங்கண்ணனுக்கு நம்ம காதல் மேட்டர் தெரிஞ்சிடுச்சு,ஆனா பயப்படாதீங்க!
அடிப்பாவி,குண்டைத்தூக்கிப்போட்டுட்டு கூல்டிரிங்க் தர்றியா:?
----------------------
15. டியர்,வெற்றிலை என என்னை வர்ணிக்கிறீங்களே? நான் வெற்று இலையா?
ச்சே,ச்சே,இலையை எள்ளி நகையாடியவர்கள் கதியைப்பார்த்தபின்புமா இந்த கேள்வி?#ஜெ
-------------------
16. பாலத்துக்காக விஜய் திருமண மண்டபம் இடிக்கப்பட வாய்ப்பு- செய்தி#அய்யய்யோ,இவரும் கட்சி ஆரம்பிச்சு 8% ஓட்டு வாங்கிடுவாரோ?காப்பாத்து ஆண்டவா
---------------------------------
17. காதல் என்பது காய்ச்சல் மாதிரி ,வரும்,போகும்,ஆனா நட்புங்கறது எய்ட்ஸ் மாதிரி,வந்தா கன்ஃபர்மா போகாது,இப்போசொல்லுங்க ,உங்களுக்கு எய்ட்ஸ் உண்டா?
-----------
18. கனவு பெரிதாக இருக்கும்போது உழைப்பு அதை விட பெரிதாக இருக்க வேண்டும்
-----------------------------
19. ”எல்லா மிஸ்டேக்ஸ்ஸையும் கரெக்ட் பண்ணீட்டியா?
சாரி சார், மிஸ்ஸை கரெக்ட் பண்ணிட்டு இதை கோட்டை விட்டுட்டேன்..
--------------------------
20. டியர்,நான் கலைஞர் மாதிரி ,கட்டுமரமாய் உனை சுமப்பேன்”
அடப்பாவி, மேரேஜ்க்கு முன்னேயே என்னை சுமைதாங்கி ஆக்கிட்டு பேச்சை பாரு ராஸ்கல்.
------------------------------