Saturday, July 02, 2011

தங்கம் ,வெள்ளி விலை நிலவரத்தில் வெள்ளி தங்கத்தை ஓவர் டேக்கியது எப்படி?

http://www.jewelry-designs.tk/wp-content/uploads/Wedding-jewellery-images-malabar-gold-1.jpg
உச்சத்தைத் தொட்ட தங்கம்!
மத்திய கிழக்கு ஆசியாவிலிருந்து நெகட்டிவ் செய்திகள் அதிகம் வரும்பட்சத்தில் சர்வதேச சந்தையில் தங்கம் விலை ஒரு அவுன்ஸ் 1,450 டாலருக்குமேல் செல்ல வாய்ப்புண்டு’ என கடந்த இதழில் சொல்லி இருந்தோம். ஆனால், நாம் எதிர்பார்த்ததைவிட 1,461 டாலருக்குமேலே சென்றிருக்கிறது. நம் நாட்டில் கடந்த வாரம் திங்கள்கிழமை அன்று காலை 10 கிராம் தங்கம் 20,744 ரூபாயாக இருந்தது.

 மூன்றே நாட்களில் இதன் விலை 21,194 ரூபாயாக உயர்ந்தது. இந்த விலையேற்றத்துக்கு என்ன காரணம்? விஷம்போல ஏறிவரும் உலகப் பணவீக்கம், அமெரிக்க டாலர் தொடர்ந்து பலவீனமடைந்து வருவது, மத்திய கிழக்கு நாடுகளில் மேலும் உக்கிரமாகி வரும் பதற்றமான சூழ்நிலை, ஐரோப்பிய நாடுகளின் கடன் பிரச்னை போன்ற பல்வேறு காரணங்கள்தான் தங்கம் விலையை வரலாறு காணாத அளவுக்கு உயர்த்தி இருக்கிறது.


அமெரிக்காவின் மிகப் பெரிய கோல்டு இ.டி.எஃப். நிறுவனமான எஸ்.பி.டி.ஆர். கடந்த 5-ம் தேதி அன்று 1.5 டன் தங்கத்தை வாங்கியது. கடந்த சில வாரங்களில் இந்த நிறுவனம் தங்கம் வாங்குவது இதுவே முதல் முறை.
சரி, அடுத்த வாரம் தங்கம் விலை எப்படி இருக்கும்?

மேற்சொன்ன காரணங்கள் இன்னும் மோசமாகும்பட்சத்தில் தங்கம் விலை கூடிய விரைவிலேயே 1,500 டாலரைத் தொட வாய்ப்பிருக்கிறது. 1,500-ஐ தொடவில்லை என்றாலும் 1,470 டாலரை நோக்கியாவது செல்ல வாய்ப்பிருக்கிறது. ஆனால், நிலைமை சீரடையும்பட்சத்தில் 1,440 டாலரைத் தொடவும் வாய்ப்பிருக்கிறது.


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhdLJosJpTrmSA2yUgtecMtz03aQM9Q9SVMzxuJdnmFlx8KdGg0PU_Q2ruA0cfgdZ41o1OB6PyYcCBcyUlprYynkV3fg1B2SBFE2YtY0z4dKghbOcaQOc92KlQ0eXVtKRHak04ZXpg6/s1600/artificial+jewellery.jpg

வெளுத்து வாங்கிய வெள்ளி!

தங்கம் விலை உயர்ந்ததை யட்டி வெள்ளி விலையும் கணிசமாக உயர்ந்தது. கடந்த வாரத்தின் ஆரம்பத்தில் ஒரு அவுன்ஸ் வெள்ளி விலை 38 டாலராக இருந்தது. ஆனால், மூன்றே நாட்களில் அது 39.75 டாலராக உயர்ந்தது. நம் நாட்டில் கடந்த திங்கள்கிழமை அன்று காலை வெள்ளி விலை ஒரு கிலோவுக்கு 55,870 ரூபாயாக இருந்தது. அதே வெள்ளி புதன்கிழமை இரவு 58,485 வரை உயர்ந்தது.

இந்த விலையேற்றத்துக்கு முக்கிய காரணங்கள் இரண்டு. சீன தொழிற்துறைக்குத் தேவைப்படும் வெள்ளியின் அளவு கணிசமாக அதிகரித்திருப்பது ஒரு காரணம். இந்தியாவில் இப்போது கல்யாண சீஸன் என்பதால் பலரும் கிலோ கணக்கில் வெள்ளிப் பொருட்களை வாங்கிக் குவித்து வருவது இன்னொரு காரணம்.

சரி, அடுத்த வாரம் வெள்ளி விலை எப்படி இருக்கும்?

சர்வதேச நிலைமை எப்படி இருக்கும் என்பதை வைத்தே வெள்ளி விலை குறையுமா அல்லது கூடுமா என்பது தெரியும். இப்போதுள்ள நிலைமையை வைத்துப் பார்த்தால், வெள்ளி விலை ஒரு அவுன்ஸுக்கு 39.75 டாலருக்கு மேலே செல்லுமா என்பது சந்தேகமே. ஆனால், குறையும்பட்சத்தில் 38 டாலர் வரை உடனடியாகக் குறைய வாய்ப்புண்டு.

கிடுகிடு கச்சா எண்ணெய்!


கச்சா எண்ணெய் 2008-ல் இருந்த உச்சபட்ச விலையை இப்போது தொட்டிருக்கிறது. கடந்த வியாழக்கிழமை காலை ஒரு பேரல் விலை 108.43 டாலர் என்கிற அளவில் விற்பனையானது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்யின் பயன்பாடு அதிகரித்திருப்பதோடு, மத்திய கிழக்கு, ஆசிய நாடுகளில் தொடர்ந்து நிலவிவரும் பதற்றமான சூழ்நிலை காரணமாக அதன் விலையும் உயர்கிறது.


கடந்த இரண்டரை ஆண்டுகளாக கச்சா எண்ணெய் ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தது. ஆனால், இப்போது உருவாகி இருக்கும் புதிய சூழ்நிலையைப் பார்த்தால், அதன் விலை இப்போதைக்கு 100 டாலருக்குக் கீழே குறைய வாய்ப்பில்லை என்கிறார்கள்.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh1r4DRfD2WXU_0eB7tE7n5gKRlU3x3lIUs79devx_5tUJtbiHZMlZx3DUBNMcjQMKKW0_8OVl3zcNVi7LTS1Iel6mlqu1FgwesqVTXhyHpRpC3hD6KZQqWBMLoyXS1ygrMAYevF3bmlMrR/s400/Indian_Bridal_Jewellery_Designs4.jpg

கச்சா எண்ணெய்யின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், பல்வேறு நாடுகளின் வளர்ச்சி வேகம் கொஞ்சம் குறைந்திருக்கிறது. ஆசிய நாடுகளின் வளர்ச்சி கடந்த ஆண்டு 9 சதவிகிதமாக இருந்தது. இது இந்த ஆண்டு 7.8 சதவிகிதமாக குறையும் என்றும், கடந்த ஆண்டு 8.6 சதவிகிதமாக இருந்த இந்தியாவின் வளர்ச்சி இந்த ஆண்டு 8.2 சதவிகிதமாகக் குறையும் என்றும் சொல்லப்படுகிறது.

முழிக்க வைக்கும் மிளகாய்!
மிளகாய் உற்பத்தி குறையும் என்கிற செய்தி காரணமாக கடந்த வியாழக்கிழமை அன்று அதன் விலை கடுமையாக உயர்ந்தது. என்.சி.டி.இ.எக்ஸ். சந்தையில் இந்த மாதம் ஏப்ரல் 20-ம் தேதியோடு முடியும் கான்ட்ராக்ட் 226 ரூபாய் உயர்ந்து 9,100 ரூபாயாக விலை போனது. ஜூன் கான்ட்ராக்ட் 9,792 ரூபாய்க்கும், ஜூலை கான்ட்ராக்ட் 10,008 ரூபாய்க்கும் விலை போனது. இதன் எதிரொலியாக அடுத்த சில நாட்களில் சில்லறை மார்க்கெட்டிலும் மிளகாய் விலை உயர வாய்ப்புண்டு என்கிறார்கள் மிளகாய் வியாபாரிகள்.

மஞ்சள் விலை உயர்ந்தது!

கடந்த பல வாரங்களாக விலை குறைந்து வந்த மஞ்சள் விலை இப்போது உயர ஆரம்பித்திருக்கிறது. ஈரோடு சந்தைக்கு மஞ்சள் வரத்து குறைந்ததே இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணம் என்கிறார்கள் மொத்த வியாபாரிகள். கடந்த புதன்கிழமை நிலவரப்படி, விரலி மஞ்சள் விலை ஒரு குவிண்டால் 7800 முதல் 9709 வரை இருந்தது. இப்போதைக்கு சந்தைக்கு வருகிற மஞ்சள் மூட்டைகள் உடனுக்குடன் விலை போய்விடுவதால் அடுத்த சில நாட்களில் அதன் விலை உயரவே வாய்ப்புண்டு என்கிறார்கள்.

நன்றி - நாணயம் விகடன்