ஹீரோவுக்கு கேன்சர், ஹீரோயினுக்கு எயிட்ஸ்,வில்லனுக்கு பைல்ஸ்,வில்லிக்கு லொள்ஸ் இப்படி கதை சொல்ற இயக்குநர்களுக்கெல்லாம் ஆப்பு இருக்குடி..1980 களில் 47 படங்கள் இப்படி வந்தன.. அவற்றில் பாதி ஹிட் படங்கள். ஆனா 2011லயுமா? உஷ் அப்பா முடியல..
ஜித்தன் ரமேஷை சிரிக்கறப்பவே பார்க்க சகிக்காது.. இதுல பாதிப்படம் அழுதுட்டே வர்றாரு.. (சிரிப்புப்போலீஸ் ரமேஷ் மன்னிக்க)
படத்தோட கதை என்ன?ஹீரோவுக்கும் ,ஹீரோயினுக்கும் காதல்,ஹீரோயினுக்கு கேன்சர் என ஹீரோவும் ,ஆடியன்சும் நினைக்கும்போது கேன்சர் ஹீரோவுக்கு என ஒரு சஸ்பென்ஸ் வைக்கிறார்.. கேன்சர் ஹீரோவுக்கா இருந்தா என்ன? ஹீரோயினுக்கா இருந்தா என்ன? சாகறது ஆடியன்ஸ்தானே?
இந்த லட்சணத்துல இந்தப்படத்தோட டைரக்டர் பட ரிலீஸ் அப்போ டி விக்கு அளித்த பேட்டில வழக்கமான படங்களில் வர்ற மாதிரி ஹீரோ - ஹீரோயின் அறிமுகம் சாதாரணமா இருக்காது ஸ்பெஷல் டச் இருக்கும்னாரு.. அந்த ஸ்பெஷல் டச் என்னங்கறதை இப்போ சொல்றேன்.. சாப்பிட்டுக்கிட்டே இதை படிக்கறவங்க சாப்பிட்ட பிறகு தொடரவும்..
ஹீரோ கிராமத்துல காலைக்கடனுக்காக ஒதுங்கறார்.. பாதிலயே வயக்காட்டு ஓனர் டேய் யார்றா அங்கே என கத்தறார்.. பாதிலயே எந்திரிச்ச ஹீரோ கைல தண்ணி சொம்போட ஓடறார்.. (வித் அவுட் வாஷிங்க்.. )அப்போ ஹீரோயின் எதேச்சையா அங்கே வர்றார்.. 2 பேரும் மோதிக்கறாங்க.. அப்போ ஹீரோ அந்த 40 மார்க் ஃபிகரைப்பார்த்து பிரமிச்சுப்போய் பின்னாலயே போய் கிணத்துல விழறாரு.. ஹீரோயின் அவரைக்காப்பாற்ற முயற்சி பண்றப்ப ஹீரோவோட வேட்டி அவர் கைல.. ஹீரோ கிணத்துல..
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல ,ஒரு அப்பார்ட்மெண்ட் ஃபிகர்ஸ்சுக்கு ஒரு ஃபிகர் இதம் என்பது போல இந்த கேவலமான ஒரு சீனே போதும், அண்ணன் கிட்டே சரக்கு இல்லைன்னு.. தெரிஞ்சுக்க..
படத்தில் தேறிய வசனங்கள்
1. லவ்ங்கறது அழகைப்பார்த்தோ ,பணத்தைப்பார்த்தோ வர்றதில்லை.. உள்ளே இருந்து வர்றது..
எப்டி? வாமிட் மாதிரியா?
2. எனக்கு அந்தப்பொண்ணு வேணூம்....ம் ம்
என்னமோ டீக்கடை பன்னு வேணும்கற மாதிரி கேட்கறே?
3. உன் ஆளு எப்படி இருப்பா?
இந்த ஊர்லயே அழகான பெண் அவ தான்.. (இப்படித்தான் ஒவ்வொரு லவ்வரும் சொல்லிக்கறானுங்க.. )
4. நான் அடிக்கடி சொல்வேனே.. ஊரெல்லாம் அழகா இருக்கும், ஒருத்தன் மட்டும் அழுக்கா இருப்பான்னு அது இவன் தான்.. (ஆஹா என்னமா இண்ட்ரோ கொடுக்குது பொண்ணு..?)
5. நீ என்னடி படிக்கறே?
ஆமா, சொன்னா மட்டும் புரிஞ்சிடவா போகுது?
6. காக்கா எச்சம் போட்டா நினைச்ச காரியம் நடக்கும்.. (அட ஈனப்பயலுகளா.. அது தினமும் தாண்டா எச்சம் போடுது...?டெய்லி அதன் கீழ் போய் நின்னுக்கிட்டா காரியம் சக்ஸஸா?)
7. அம்மா.. அடுத்த ஜென்மத்துலயாவது உனக்கு நல்ல புருஷன் கிடைக்கட்டும்..
8. அவன் பண்றது கேனத்தனமா இருந்தாலும் பார்க்க நல்லாத்தான் இருக்கு..
9. நான் உன் கூட பேசுனது சாதாரண விஷயம்....உடனே லவ்ங்கறதா?
ஆனா எனக்கு அதுதான் விஷயமே..
10. பொண்டாட்டிங்க எல்லாரும் புகுந்த வீட்ல இருக்கறப்ப பழைய பாத்திரம் மாதிரி இருப்பாங்க,ஆனா பிறந்த வீட்டுக்கு வந்துட்டா மட்டும் பளிச்னு ஆகிடறாங்களே அது எப்படி?
11. நடந்தது நடந்து போச்சு..
ஆமா.. நடக்காதது ஆட்டோல போச்சு..
12. நட்பு, வீடு 2ம் தானா அமைஞ்சது,நீ மட்டும் தான் நானா தேடி கிடச்சது..
13. ஆண்டவன் சில சமயம் கெட்டவங்களுக்கும் நல்லது பண்ணிடறானே?
14. இவருக்கு ரொம்ப நல்ல மனசுங்க.. என்ன ,அறிவு தான் கொஞ்சம் கூட இல்லை..
15. ஒருத்தன் சாகப்போறான்னு தெரிஞ்சும் மேரேஜ் பண்ண ஓக்கே சொல்றியேம்மா.. உன்னை நினைச்சா.....
16. இந்த ஊர்ல எங்கண்ணன் ஏகப்பட்ட நல்லது பண்ணி இருக்கார்.. அவர் செஞ்ச நல்லதுகளை சொல்லிட்டே போகலாம்.. அவ்ளவ் ஏன்? கல்யாணம் ஆகி 5 வருஷம் ஆகியும் நோ சைல்டு.. இப்போ அவ 4 மாசம் முழுகாம இருக்கான்னா அதுக்கும் எங்கண்ணன் தான் காரணம்..(அண்ணன் பேரு ராம்சாமியா?)
17. உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கா?
தெரியலை.. இது வரைக்கும் அதுக்கான அவசியம் வர்லை..
18. மனசுல இருக்கறதை நாம சொல்லாமலேயே தெரிஞ்சுக்கறது 2 பேர் தான் 1. அம்மா 2.சாமி..
19. நீங்க தண்ணி அடிப்பீங்களா?
எப்பவும் அடிக்க மாட்டேன்.. சந்தோஷமா இருக்கறப்ப, மூடு அவுட்டா இருக்கறப்ப.. அடிப்பேன்..
=இதுக்கு பேசாம டெயிலி தண்ணி அடிப்பேன்னு சொல்லி இருக்கலாம்..
20. எல்லாரும் கல்யாணத்துக்கு போய் இருக்காங்க..
எதுக்கு? சாப்பிடவா?
21. காதல் ஒண்ணும் பஸ் இல்லை.. 50 பேர் 60 பேர் ஏத்திக்க.. அது கேரியர் இல்லாத சைக்கிள் மாதிரி.. ஒருத்தருக்கு மேலே ஏத்தவே முடியாது..
அடத்தூ.. பஞ்ச் டயலாக்..?
22.என்னை முன்னே பின்னே பார்த்திருக்கியா?
ம்ஹூம்..
அப்புறம் என்ன தைரியத்துல ஓ சி கட்டிங்க்க்கு ஷேர்க்கு வர்றே?
பசங்க சொல்வாங்க.. நல்ல காரியம் பண்ணப்போறப்ப ஒரு கட்டிங்க் போட்டுட்டு போனா நல்லதுன்னு.//..
23. பாக்கெட்ல காசும்,. உடம்புல தெம்பும் இருந்தா 10 பொண்டாட்டிங்க கூட கட்டிக்கலாம்... (நல்லவேளை.. பொண்ணுங்களை இதுல சேர்க்கல.. )
24. இந்த உலகத்துல எந்த ஆம்பள தப்பு பண்ணாம இருக்கான்?
25. ஒரு பேஷண்ட்டை காப்பாற்ற ஹாஸ்பிடல், பணம் மட்டும் போதாது..
. ( ஏன்?அழகிய நர்சும் வேணுமா?ராஸ்கல்.. பாடைல போறப்பக்கூட பருவச்சிட்டு கேட்குதா..?)
ஹீரோயின் புதுமுகம் போல ,பேரு சுஹாசினியாம்..சுமாரா இருக்கு ஃபிகரு,..
இயக்குநர் சபாஷ் பெறும் இடங்கள்
1. படத்தோட ஓப்பனிங்க் ஷாட்ல கிராமத்து சிறுவர்கள் வாய்க்கால்ல பாய்ந்து ஜம்ப் பண்ணும் கவிதையான காட்சி..
2. காதலி கடவுள் பற்றி பேசியதும், பத்தே நிமிடத்தில் ஆல விழுதுகளை, 2 எலுமிச்சம்பழங்களை (கண்கள்) வைத்தே ஒரு விநாயகர் சிலை ரெடி பண்ணும் காட்சி.. ஆர்ட் டைரக்ஷனுக்கு ஒரு சபாஷ்..
3. ஹீரோயினுக்கு கேன்சர் என ஹீரோ நினைத்துக்கொண்டிருக்கும்போது ஹீரோவுக்குத்தான் கேன்சர்,என ட்விஸ்ட் வைத்த விதமும்,அதைத்தொடர்ந்து வரும் ஹீரோ- ஹீரோயின் சந்திப்புகளும்..
4. எனக்கு ஒரு தேவதையை மெலோடி பாட்டை கையாண்ட விதம்..
இயக்குநர் பல்பு வாங்கிய இடங்கள்
1. ஓப்பனிங்க் சீன்ல ஹீரோ சைக்கிள்ல 12 கிமீ ஸ்பீட்ல போறார். அதை துரத்தும் போலீஸ் ஜீப் 75 கிமீ ஸ்பீடுல போகுது,ஆனா ஹீரோவைப்பிடிக்க 13 நிமிஷம் ஆகுது.. என்னா லாஜிக் இது?
2. ஹீரோவுக்கு வந்திருக்கும் கேன்சர்க்கு டாக்டர் சொல்ற டெக்னிக்கல் பேரையேதான் 180 (நூற்றி எண்பது) படத்து ஹீரோவுக்கும் அந்த டாக்டர் சொல்றாரு.. என் டவுட் கொஸ்டின் பேப்பர் அவுட் ஆகிடுச்சா? அல்லது 2 பேரும் ஒரே டி விடில சுட்டுட்டீங்களா?
3. டைட்டிலில் பொள்ளாச்சி பொன்னாவரம் என கதைக்களன் நடக்கும் ஊரைக்காட்டுகிறார்கள் ,ஆனால் பேசும் மொழி நடை (ஸ்லாங்க்) அந்த ஊர் போலவே இல்லையே?
4. ஹீரோ இறந்துட்டதும் டக்னு படத்தை முடிக்காம மெகா சீரியல் ரேஞ்சுக்கு ஏன் சடங்குகளை எல்லாம் காட்டி இழுக்கனும் படத்தை?
இந்தப்படம் எல்லா செண்ட்டர்லயும் சுமாரா 20 நாட்கள் ஓடலாம்..
எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 37
எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க்கிங்க் - சுமார்
சி. பி . கமெண்ட் - டி வி சீரியல் ரசிகைகள் பார்க்கலாம்
ஈரோடு தேவி அபிராமி,ஆனூர் 2 தியேட்டர்களில் படம் ஓடுது.. நான் எந்த தியேட்டர்ல பார்த்திருப்பேன்னு எல்லாருக்கும் தெரியும்..என் பொண்ணு பேரு இருக்கற தேவி அபிராமி தியேட்டர்ல தான் பார்த்தேன்..