பண்டிகைகளும், விழாக்களும் மக்களின் மகிழ்ச்சிக்காக உருவாக்கப்பட்டவை.வீட்டில் ஏதாவது சண்டை,கணவன்,மனைவிக்குள் ஊடல் என்றால் இந்த மாதிரி விழாக்காலங்களில் உறவினர்கள் வீட்டுக்கு வரும்போது அவர்கள் முன் சும்மானாச்சிக்காவது தம்பதிகள் சந்தோஷமாக முகத்தை வைத்துக்கொள்வார்கள்.. அந்நியோன்யமாய் இருப்பது போல் காட்டிக்கொள்வார்கள்.. பிறகு அதுவே தொடர் கதை ஆகிவிடும்..
இது போன்ற உயரிய காரணங்களுக்காகவும்,மனித நேயம் வளர்வதற்காகவும்,உறவுகள் மேம்படுவதற்காகவும் உருவாக்கப்பட்டவைதான் விழாக்கள்..ஊர்த்திருவிழா என்றால் வியாபாரிகளுக்குக்கொண்டாட்டம்.. சுபச்செலவாக இருப்பதால் யாரும் அது பற்றி கவலைப்படுவது இல்லை..
பிரபலமான எழுத்தாளர்களை வாசகர்கள் சந்திக்க ஆர்வமாக இருப்பதும், சந்திப்புக்குப்பின் அவன் மனம் ஏமாற்றம் அடைவதையும் நான் கண்டிருக்கிறேன்.. காரணம் அவன் படித்த எழுத்து மூலம் அவனுக்குள் ஒரு கற்பனை பிம்பத்தை உருவாக்கி வைத்திருப்பான்..
நேரில் சந்தித்து உரையாடிய பின் அவன் கற்பனைகள் தவிடுபொடியாகும்..அவன் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக எழுத்தாளனின் முகம் வெளிப்படும்போது அவன் ஏமாற்றம் அடைகிறான்...
ஆனால் பதிவர் சந்திப்பில் யாரும் அதிகமாக எதிர்பார்த்து வரவில்லை.. ஒவ்வொரு பதிவரின் எழுத்தை மட்டுமே பார்த்தவர்கள் அவர்கள் எப்படிப்பட்ட கேரக்டர்?பழகுவதற்கு எந்த மாதிரி ஆள் என்பதை கண்கூடாக காண முடிவதால் சந்திப்புக்கு பிறகு உறவு பலப்படும் வாய்ப்பே அதிகம்..
எல்லா பதிவர்களூம் பேசி முடித்த பின் ஒரு நன்கொடை வசூலிக்கப்பட்டது.. பதிவர்கள் மனம் உவந்து பணம் கொடுத்தனர்.. இதில் சித்ராவும் ,பலாப்பட்டறை சங்கரும் அதிகமான பணம் கொடுத்தனர்.. நான் 100 ரூபாய் கொடுத்தேன்..
மொத்தம் 37 பதிவர்கள் வந்திருந்தனர்.. சராசரி ஆளூக்கு ரூ 50 டூ 100 தருவாங்க, அதிக பட்சம் ரூ 3000 கலெக்ட் ஆகும் என நினைத்தேன்.. ஆனால் ரூ 5615 கலெக்ட் ஆச்சு.. ஆச்சரியம் தான்.. இதில் நெஞ்சை நெகிழ வைக்கும் செய்தி யாரோ ஒரு பதிவர் ஏழ்மை நிலையையும் மீறி ரூ 15 நன்கொடையாக கொடுத்ததுதான் விழாவின் ஹை லைட்..அப்போதுதான் நான் நன்கொடை இன்னும் அதிகமாக கொடுத்திருக்கலாமோ என வருந்தினேன்..
ஒவ்வொரு மனிதனும் அவசரமாக ஒரு செயலை செய்தி முடித்து விடுகிறான்.. பிறகு காலம் எல்லாம் அதை அப்படி செய்திருக்கலாமோ?இதை இப்படி செய்திருக்கலாமோ என நினைத்து நினைத்து வருந்துகிறான்.. இது இயற்கை.. மனித மன விசித்திரம்..
சும்மா வந்து சந்தித்தோம், சிந்தித்தோம் என வாய் வார்த்தைக்காக இல்லாமல் ஏதோ உபயோகமாக செய்த திருப்தி அனைவர் உள்ளத்திலும்..
பதிவர் மீட்டிங்க் முடிந்ததும் சாப்பாடு...

பஃபே சிஸ்டம்..ஒரு ஆள்க்கு ரூ 160 செலவு (உபயம் அண்ணன் உணவு உலகம்).
செம கலக்கலான சைவ சாப்பாடு..
முதல்ல ஒரு சூப் குடிச்சோம்.. அப்புறம் நாண் ரொட்டி ,குருமா , பிறகு வெஜ் ஃபிரைடு ரைஸ்.. தயிர் பச்சடி..
அப்புறம் நார்மல் ஒயிட் ரைஸ் ,ரசம், தயிர்.. அப்பளம், மாங்காய் ஊறுகாய் என வெளுத்து வாங்கினோம்..
இந்த சாப்பாட்டை செம எஞ்சாய் பண்ணி சாப்பிட்டது இம்சை அரசன் பாபு,வெறும்பய ஜெயந்த்,கல்பனா ,நாஞ்சில் மனோ சாரி லேப்டாப் மனோ இந்த செட் தான்.. ஊஞ்சல்ல உக்காந்துட்டு ஜாலியா பேசிக்கிட்டே கிண்டல் அடிச்சுக்கிட்டே சாப்பிட்டாங்க.. அவங்க என்ன பேசுனாங்க, என்ன கமெண்ட்ஸ் பண்ணாங்க என்பது எல்லாம் இங்கே சொன்னா அது ரொம்ப நீளம் ஆகிடும்.. ஏற்கனவே பதிவை சீக்கிரம் முடிடா ரொம்ப இழுக்காதே என ஏகப்பட்ட மிரட்டல்கள் வருவதால் அவை கட்..
பாபு வும் ,மனோவும் கல்பனாவை மிரட்டி (அன்பு மிரட்டல்) அதை வாங்கிட்டு வா, இதை வாங்கிட்டு வா என அதிகாரம் செஞ்சாங்க.. ஏன்னா இவங்க போனா அடிக்கடி வர்றானே அப்டின்னு இமேஜ் ஸ்பாயில் ஆகிடுமாம்..
நாய்க்குட்டி மனசு,சித்ரா,கவுசல்யா இவங்க ஒரு செட்.. டேபிள்ல உக்காந்து சாப்பிட்டாங்க..
பலாபட்டறை சங்கர்,மணிஜி,மணிவண்ணன் ,வலைச்சரம் சீனா,வெடிவால் இவங்க எல்லாம் ரொம்ப நாசூக்கா சாப்பிட்டாங்க..
ஜோசஃபின் அவர் கணவர் கூட ஸ்டேண்டிங்க்லயே சாப்டாங்க.. அவர் மனைவிக்கு ரொம்ப தான் மரியாதை செலுத்துனார்.. லவ் ஜோடி போல.. நான் கேட்டேன்.. என்ன சார் உக்காந்து சாப்பிடலியா?ன்னு , அதுக்கு அவர் அது எப்படிங்க மனைவிக்கு எதிரே மரியாதை இல்லாம அமர்வது என்றார்.. ஹூம்.. நல்லவேளை.. என் மனைவியை அழைத்து வரவில்லை என நினைத்துக்கொண்டேன்..
நான் நின்னுட்டே தான் சாப்பிட்டேன்.. ஒரு இடத்துல உக்காந்து சாப்பிட்டா எல்லாரையும் நோட் பண்ண முடியாதே?
சாப்பிட்டு முடிச்ச பிறகு எல்லாரும் குரூப் குரூப்பா ஃபோட்டோ எடுத்துக்கிட்டோம்..காலேஜ் ஃபைனல் இயர் ஸ்டூடண்ட்ஸ் மாதிரி ஒரு ஃபீலிங்க்..
இறுதி நிகழ்ச்சியா சித்ரா எல்லா பதிவர்களூக்கும் ஸ்வீட் பாக்கெட் குடுத்தாங்க.. உணவு உலகம் அண்ணன் தான் அவங்க கிட்டே நீங்க கொடுங்கன்னு வேண்டுகோள் விடுத்தார்.. அப்பவே என் மைண்ட் 37 பதிவர்களுக்கு அல்வா கொடுத்த ஃபாரீன் பதிவர் சித்ரா.. பதிவுலகம் அதிர்ச்சி அப்டின்னு டைட்டில் வெச்சுடலாமா?ன்னு யோசிச்சுது..
சித்ரா கிட்டே பர்மிஷன் கேட்டேன்.. தம்பி.. நீ பதிவர் சந்திப்பு போஸ்ட்டையாவது எந்த கோணங்கித்தனமும் பண்ணாம உருப்படியா எழுதப்பாரு அப்டின்னாங்க.. ஆஹா.. சி.பி போற பக்கம் எல்லாம் பல்பு வாங்கறானே அப்டின்னு நினைச்சுட்டு டைட்டில் ஐடியா கேன்சல்..ஓக்கே அக்கா அப்டின்னுட்டேன்..
அப்புறம் எல்லார்கிட்டேயும் சொல்லிட்டு பிரியா விடை பெற்றோம்.. ( நல்ல வேளை பிரியாங்கற பேர்ல எந்த பதிவரும் இல்லை)
அப்புறம் நான் ,லேப்டாப் மனோ, கோமாளி செல்வா ,லேப் டாப் மனோ மேல நம்பிக்கை இல்லாம அவரோட சம்சாரம் ( தாலி கட்டிய முதல் மனைவி ) பாடிகார்டா அனுப்பின மனோவின் மச்சினன் 4 பேரும் குற்றாலம் போய் வந்தோம்.. அது தனியாக பின்னொரு நாளில் குற்றாலத்தில் கும்மி அடிச்சோம் என்ற தலைப்பில் பதிவு போட்டுக்கலாம்..
இப்போதைக்கு நெல்லை பதிவர் சந்திப்பு போஸ்ட் இனிதே நிறைவு பெறுகிறது.. வாழ்க வளமுடன்,, வாழ்க வையகம்..
டிஸ்கி - பதிவர்சந்திப்புக்கான வீடியோ இணைப்பு கிடைத்தால் அண்ணன் உணவு உலகம் அனுமதியுடன் அதை பதிவாக போடலாமா? என யோசித்து வருகிறேன்.. ..