a
10 லட்சம் ரூபாய் சம்பளம் கொடுத்தால் 10,000 ரூபாய்க்கு மட்டுமே நடிக்கும் ஹீரோ,20 லட்சம் ரூபாய் சம்பளம் கொடுத்தால் 50 லட்சம் ரூபாய்க்கு நடிக்கும் ஓவர் ஆக்டிங்க் ஹீரோயின் இவங்க ரெண்டு பேரும் இணைந்தா எப்படி இருக்கும்?அது தான் உதயன்.. அரசியல் வாழ்வில் மட்டும் அல்ல, சினிமா வாழ்விலும் கலைஞருக்கு ,அவர் குடும்பத்தார்க்கு இறங்குமுகம் ஸ்டார்ட்டட் என்பதை உணர்த்த வந்த படம்....
10 லட்சம் ரூபாய் சம்பளம் கொடுத்தால் 10,000 ரூபாய்க்கு மட்டுமே நடிக்கும் ஹீரோ,20 லட்சம் ரூபாய் சம்பளம் கொடுத்தால் 50 லட்சம் ரூபாய்க்கு நடிக்கும் ஓவர் ஆக்டிங்க் ஹீரோயின் இவங்க ரெண்டு பேரும் இணைந்தா எப்படி இருக்கும்?அது தான் உதயன்.. அரசியல் வாழ்வில் மட்டும் அல்ல, சினிமா வாழ்விலும் கலைஞருக்கு ,அவர் குடும்பத்தார்க்கு இறங்குமுகம் ஸ்டார்ட்டட் என்பதை உணர்த்த வந்த படம்....
சிங்கிள் ஆக்ட்டுக்கே ஃபீலிங்க்ஸ் காட்டத்தடுமாறும் ஹீரோவுக்கு இதில் டபுள் ஆக்ஷன்.. அண்ணன் தானும் சிரமப்பட்டு நம்மையும் சிரமப்படுத்தறார்... 2 கேரக்டருக்கும் என்னா வித்தியாசம்னா தாதா ஹீரோ பான்பராக்கோ வெற்றிலையோ போட்டிருப்பார்.. சாதா ஹீரோ டிரஸ் மட்டும் போட்டிருப்பார்.. ஹி ஹி ..
படத்தோட கதை என்னான்னா.. 2 தாதா கோஷ்டி... (அய்யய்யோ.. மறுபடி தாதா கதையா? வுடு ஜூட்.. ) ஒரு தாதா கோஷ்டில ஹீரோயின் அப்பா கணக்குப்பிள்ளை... இன்னொரு தாதா கோஷ்டில ஹீரோவோட அண்ணன் (இவரும் ஒரு ஹீரோ தான் )2 கோஷ்டியும் மாற்றி மாற்றி அடிச்சுக்குது.. இதெல்லாம் இடைவேளைக்குப்பிறகுதான்.. அதுவரை ஹீரோ ஹீரோயின் லவ் காட்சிகள், சந்தானம் காமெடி காட்சிகளை வெச்சு ஒப்பேற்றப்பார்த்திருக்காங்க.. ..ஹூம்...
60 மார்க் ஃபிகரை 80 மார்க் ஃபிகர் ஆக்கும் ரசவாத வித்தையை ஆடை வடிவமைப்புக்கலைஞரும்,முக ஒப்பனைக்கலைஞரும் பிரமாதமாக கற்றுத்தேர்ந்திருக்கிறார்கள்.. அவர்களுக்கு ஒரு சபாஷ்.. ..ஹீரோயின் முகத்தைபார்த்துக்கொண்டே இருக்கலாம்.. சோ க்யூட்.. ஆனா பாப்பாவுக்கு ஓவர் ஆக்ஷன் தான் வருது..
டபுள் ஹீரோ இருந்தும் அவர்களை ஓவர்டேக் செய்து சிங்கிள்மேன் ஆர்மியாக அசத்துவது நம்ம சந்தானம் தான்.. பாம்பு பிடிப்பவராக டி வி கேமராமேன்களோட அவர் அப்பார்ட்மெண்ட்க்கு வரும் பில்டப் சீன்கள் செம காமெடி ரகளை கச்சேரி..
சந்தானம் காமெடியில் பின்னிப்பெடல் எடுத்த காட்சிகள்..
1. எதுக்காக மறுபடியும் அங்கே போய் திரும்பி எண்ட்ரி கொடுக்கறீங்க?
சந்தானம் - ஹி ஹி பில்டப்ல பேண்ட் ஜிப் போட மறந்துட்டேன்..
2. சந்தானம் - பாம்பை பிடிக்க பரபரப்பா போறேன்.. எதுக்கு கேமராவை முன்னால கொண்டு வர்றீங்க?.. இந்த கீரித்தலையனை கூடவே கூட்டிட்டு போறேன்.. பாம்பை பயமுறுத்த உதவுவான்..
3. சந்தானம் - அவன் என்ன அபிஷேக் பச்சனா?க்ளோஷப்ஷாட் வைக்க?
4. சந்தானம் - அடேய்.. பாம்புக்கு எதுக்கு பால், முட்டை இதெல்லாம்? அதென்ன ஜிம்முக்கா போகுது?
5. சந்தானம் - அடப்பாவிகளா.. இந்நா வரைக்கும் பூட்டாத கதவையா நம்பிட்டு இருந்தீங்க..?நீங்கள்ளாம்......
6. ஹீரோ- சாரி. மிஸ்.. நீங்க ரொம்ப அழகு.. வண்டியை இடிச்சா திரும்பி பார்க்கறீங்க.. அதுக்குத்தான் அடிக்கடி இடிச்சேன்.. அடிக்கடி உங்க முகத்தை பார்க்கலாமே..?
7. ஹலோ.. இப்போ நீங்க என்ன டிரஸ் போட்டு இருக்கீங்க?
சந்தானம் - ம் ,அழுக்கு பனியனும்,கிழிஞ்ச லுங்கியும் போட்டிருக்கேன்.. பேசுதுங்க பாருங்க.. ஃபோன்ல..
8. சந்தானம் - சரி சரி.. போடா.. பேண்ட் சர்ட் உனக்கு ஓசி கொடுத்தவன் உன்னை தேடுவான்.. இவரு பெரிய மிஸ்கின் பாரு.. கூலிங்க் க்ளாஸ் போடாம வெளீல வரவே மாட்டாரு..
9. ஹீரோ - இது யாரு ஆண்ட்டி..? உங்க தங்கச்சியா? ஓ சாரி உங்க மகளா?
10. ஹீரோயின் - ஆம்பளைங்களூக்கு உடனே கிடைச்சுட்டா அதனோட அருமை தெரியாது.. ஆராய்ச்சி பண்ணிட்டு இருப்பாங்க..
11. மிஸ்.. உங்க பேரென்ன?
------------------------
ஓ , ஊமையா? சாரிங்க...
அய்யோ.. என் பேரு பிரியா..
12. இப்போ பாருடி.. என் சர்ட் பட்டன் மேல் பட்டனை ஒண்ணு மட்டும் கழட்றேன்.. லோன் சாங்க்ஷன் ஆகிடும் பாரு.. ( ஓப்பன் யுனிவர்சிட்டி ஓமனா வாழ்க)
13. சந்தானம் - மேடம், உள்ளே ஏ சி ஒர்க் ஆகலையா? ஏன் பட்டனை கழட்டி விட்டிருக்கீங்க?
ஸ்டுப்பிட்..
டவுட் கேட்டா ஏன் திட்டறீங்க?
14. என்னப்பா இது சொல்லாம கொள்ளாம வந்திருக்கே?
சொல்லாம வந்தா சர்ப்பரைஸ்.. சொல்லிட்டு வந்தா அது மீட்டிங்க்..
15. அவ பேரு கூட என்னமோ வர்றியா? போறியா?ன்னு வருமே.. ம் பிரியா....
16. சின்னப்பையன் - அங்க்கிள், எங்க கூட விளையாட வர்றதா சொன்னீங்க?
சந்தானம் - அது உங்கக்கா கூட இருக்கறப்ப சொன்னது.. இப்போ நீ தனியாத்தானே இருக்கே?
17. சந்தானம் - கோணியை திட்டுனா சாணிக்கு ஏன் கோபம் வருது?
18. சந்தானம் - இந்த பொண்ணுங்க எல்லாம் சாக்கு மூட்டைல கால் விட்டு தத்தி தத்தி வர்றாங்க பாருங்க.. இந்த கேமை நிமிர்ந்து பார்த்தா தெரியாது.. குனிஞ்சு பார்த்தாதான் தெரியும்..
19. எத்தனை பேர் இருந்தாலும் அந்த கூட்டத்துல பொண்டாட்டி வாசனை புருஷனுக்கு தெரிஞ்சிடும்..
20. ஸாரி.. மேடம்,,. நான் வேணும்னு பண்ணலை.. தெரியாம இடிச்சுட்டுது..
இல்லை.. நான் வேணும்னுதான் இடிச்சேன்... ( ஆஹா பெண்ணுக்கு சம உரிமை)
21. சாரி சார்.. யாரும் சாகலை.. சுடுகாடு காலி.. அதனால டியூ கட்ட முடியல..
22. ஏய்.. வசந்த்.. நீயா!!!!!!!!!!!
ஏன்? வேற யாரையாவது எதிர்பார்த்தியா?
அது இல்ல.. வீட்டுக்குள்ள எப்படி வந்தே?
வாசல் வழியாத்தான்...
23. ஹலோ.. பூசாரியா? நீங்க மந்திரிச்சதுல இருந்து என் பொண்ணு ராத்திரில உளர்றதில்லை..
வெரிகுட்..
பகல்லயே உளற ஆரம்பிச்சுட்டா..
24. சந்தானம் - வெள்ளிக்கிழமை தலைக்கு குளிச்சுட்டு கோயிலுக்குப்போற பொண்ணுங்களைவிட சனிக்கிழமை தலையை விரிச்சுப்போட்டுட்டு பஃபே க்ளப் போறபொண்ணுங்க அதிகம்
25. வோட்கா சரக்குல இவ்வளவு தண்ணி கலக்கக்கூடாது.
சந்தானம் - மிஸ்.ஒரு படி அரிசில எவ்வளவு தண்ணீர் கலந்து குக்கர்ல வைக்கனும்தெரியுமா உங்களுக்கு?
26. சந்தானம் - நீயும் சிங்கிள்,நானும் சிங்கிள்.. ஒய் டோண்ட் வீ கெட் மிங்கிள்?
27. சந்தானம் - கல்யாணம் பண்ணிக்கறியா?ன்னு கேட்டதுக்கு ஏன் இந்த கத்து கத்தறா?கற்பழிச்சிருந்தாக்கூட இப்படி கத்தி இருக்க மாட்டா.. போல..
28. ஹீரோ - ஹாய்.. ப்ரியா.. நீ பக்கத்துல இருந்து பார்க்கறதை விட தூரத்துல இருந்து பார்க்கறப்பத்தான் அழகா தெரியறே!!
அப்படியா? அப்போ நான் கிளம்பறேன்.. என்னை தூரத்துல இருந்தே ரசிச்சுக்கோ..
29. சந்தானம் - எதுக்கு இத்தனை பொண்ணுங்க? இவங்க எல்லாம் யாரு?
எல்லாரும் என் ஒயிஃப்ங்க தான்.. ஹவுசிங்க் லோன் வாங்கி கட்னதால எல்லாரும் ஹவுசிங்க் ஒயிஃப் ஆகிட்டாங்க..
30. சந்தானம் - டேய்.. உன் கிட்டே கரண்ட் இருக்கறதால தானே லோன் வாங்கி லோன் வாங்கி வீடு கட்டறே..?ஃபீஸ் பிடுங்கிட்டா?
எப்படி பிடுங்குவீங்க..?
இப்படி உதைச்சுத்தான்
அய்யோ.....
இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்
1. ஹீரோ சின்னப்பையன்கிட்ட ஐஸ்க்ரீம் குடுத்துவிட்டு அதை ஹீரோயினிடம் தரச்சொல்ல அவன் அவனோட ஆள் சிறுமிக்கு அதை தருவது சோ க்யூட் சீன்..
2. ஹீரோயின் காதல் வசப்பட்ட முதல் நாள் ஹீரோவின் ரூமில் உடை மாற்றும்போது ஹீரோவின் ஃபோட்டோவை தன் துப்பட்டாவால் மூடும் இடம் கவிதை..
3. இத்தனை நாளாய் எங்கே இருந்தாய் பாடல் காட்சிகளில் காமிரா கோணங்களும் , ஹீரோயின் முக அழகை 100% மெருகேற்றி காட்டியதும்..
4. அபார்ட்மெண்ட்சில் ஹீரோ,ஹீரோயின், சிறுவர் ,சிறுமிகள் கண்னாமூச்சி ஆட்டம் ஆடும்போது வரும் பின்னணி இசை
5. டூயட் சாங்க்ஸ் தவிர ஹீரோயினை பிரமாதமான அழகுடன் கண்ணியமான உடைகளில் காட்டியது.. ( டூயட் சாங்க்ஸில் தடார் என கவர்ச்சி டிரஸ்ஸில் ஹீரோயின் வரும்போது மொத்தப்படத்திலும் மெனக்கெட்டு காட்டிய கண்ணியக்காதல் களங்கம் அடைகிறது)
இயக்குநர் பல்பு வாங்கிய இடங்கள்
1. ஒரு தனியார் வங்கியில் அசிஸ்டெண்ட் மேனேஜராக இருக்கும் ஹீரோ இப்படித்தான் கலர் போன ஜீன்ஸ் பேண்ட்டும் ,டக் இன் செய்யாத சட்டையுமாக படம் பூரா வருவாரா? THE DRESSING SENSE OF THE HERO IS VERY BAD
2. டிராஃபிக்கில் மாட்டும் ஹீரோயின் நடி ரோட்டில் சாவதானமாக மேக்கப் போடறாரே . அது எப்படி? எந்தப்பெண் அப்படி போடுது?
3. ஹீரோவுக்கு முக உணர்வுகளை சரியாக வெளிப்படுத்தத்தெரிவதில்லை என்பதற்காக அவருக்கு படம் பூரா கூலிங்க் கிளாஸ் மாட்டி விட்டது..
4. படம் பூரா கண்ணியமாக பாடல்களை நுழைத்தவர் திடீர் என யக்கா யக்கா லக்கா லக்கா மேல இல்ல கீழே இல்ல ஆதரிப்பார் யாரும் இல்ல என்ற மோசமான டப்பாங்குத்துப்பாடலை நுழைத்து படத்தின் தரத்தை குறைத்தது..
இடைவேளைக்குப்பிறகு வன்முறை ஜாஸ்தி..
ஏ , பி செண்ட்டர்களில் 25 நாட்கள் ஓடும்.. சி செண்ட்டர்களில் 10 நாட்கள் ஓடும்
எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 40
எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்கிங்க் - ஓக்கே
சி .பி .கமெண்ட் - சந்தானம் காமெடிக்காக பார்க்கலாம் என நினைப்பவர்கள் மட்டும் பார்க்கலாம்
பலரது வேண்டுகோளுக்கிணங்க நாட்டுக்கு முக்கியமான தகவல் ஹீரோ பெயர் - அருள் நிதி (வம்சம்),ஹீரோயின் பெயர் ப்ரனீதா (காஜல் அகர்வால் தங்கை)
டிஸ்கி - 1 வரி,வீட்டு மனை மற்றும் சட்ட சிக்கல்கள் கேள்வி பதில்கள்
டிஸ்கி 2 கோ தானம் எதற்காக?அரிசி மாவால் கோலமிடுவது புண்ணியமா? நவக்கிரகங்களை வழிபடுவது ...