எவ்ரி ஹீரோ ஈஸ் பிக்கம் போர் ஒன் டே (EVERY HERO IS BECOME BORE ONE DAY)என்று சொல்வது ஜாக்கிசானுக்கு மட்டும் பொருந்தாது என நினைக்கிறேன்..அவர் மொக்கை படத்தில் நடித்தாலும் அவர் வரும் காட்சிகள் போர் அடிப்பதில்லை..போர் சம்பந்தப்பட்ட படம் என்றாலும் போர் அடிக்காமல் காட்சிகள் பர பரவென நகர்கின்றன...
ஒரு பேரரசின் 2 வாரிசுகளில் (ஸ்டாலின்,அழகிரி மாதிரி) ஒரு வாரிசு சதித்திட்டத்தால் அரண்மனை விட்டு வெளியேற்றப்படுகிறார்..பேரரசின் ஆளுகைக்கு உட்படாத ஒரு சிற்றரசின் வீரரிடம் பணயக்கைதியாக மாட்டிக்கொள்ளும் இளவரசரின் பயணம் தான் படம்..
புரூஸ்லிக்குப்பிறகு டூப் போடாமல் ஒரிஜினல் ஃபைட் போடுவதில் ஜாக்கிக்கு நிகரான ஒரு ஃபைட் வீரர் இனி கிடைப்பது சிரமம் தான். அப்படியே கிடைத்தாலும் ,நவீன விஞ்ஞான உலகில் எது ஒரிஜினல்,எது கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் என வரையறுப்பது சிரமம் தான்..
ஜாக்கிசானுக்கு வயசாகிக்கொண்டே இருப்பது நன்றாகவே தெரிகிறது.. ஆனால் நம்மூர் ஆட்கள் போல் மேக்கப் போட்டு மறைக்க நினைக்காத அசால்ட் தனம் அவர்க்கு கூடுதல் அழகை தருகிறது..
இளவரசரும், ஜாக்கிசானும் செல்லும் பயணம் லேசான அலுப்பை தந்தாலும் அவ்வப்போது அவர் செய்யும் காமெடிகள்,லேசான ஃபைட் காட்சிகள் ஓரளவு படத்தை காப்பாற்றுகிறது..
க்ளைமாக்ஸ் காட்சியில் ஜாக்கிசான் தாய் நாட்டுக்கொடியை பிடித்துகொண்டே வீர மரணம் அடைவது திருப்பூர் குமரன் கதை நினைவு படுத்துகிறது..
படத்தில் 2 அழகிய பெண் கேரக்டர்கள் இருந்தும் இயக்குநர் படத்தில் அவர்களை சரியாக பயன் படுத்தாமல் அம்போ என விட்டதற்கு எனது கடும் கண்டங்கள்.. ( ஹி ஹி வர வர கண்டனம் எதெதுக்கு தெரிவிக்கறதுன்னு விவஸ்தை இல்லாம போச்சு.. ) இதை ஏன் சொல்றேன்னா ரொம்ப வறட்சியான போர்க்கதைல கொஞ்சம் காதல்,இளமை என சேர்த்தா கொஞ்சம் இண்ட்ரஸ்ட்டா படம் போகும்..
படத்தில் காமெடி வசனங்கள்
1. சின்ன வயசுல ஒரு காட்டுப்பன்றியை பிடிச்சப்ப அதை எங்கப்பா விட்டுடச்சொன்னாரு.. பன்னி கர்ப்பமாம்.. நீங்க என் பணயக்கைதி.. உங்களை ஏன் நான் விடனும்?நீங்க என்ன கர்ப்பமா?
2. வாயைக்கட்டி இருக்கும்போதே கெட்ட வார்த்தையா?
யோவ் நான் முனகுனேன்.. அவ்வளவ் தான்..
3. செத்த மாதிரி நடிக்கறதுல நானே ஒரு கில்லாடி.. என் கிட்டேயேவா?
4. கரடி சாணியை மிதிச்சா அதிர்ஷ்டம்னு எங்கப்பா அடிக்கடி சொல்வாரு.. அப்போ எனக்கு இன்னைக்கு செம லக் தான்./. ( நம்ம ஊர்ல யானை சாணியை மிதிச்சா லக்காம்)
5. தளபதி.. எனக்கு பரிசா கிடைக்கப்போற 5 ஏக்கர் நிலத்துல நான் நெல்லு பயிரிடவா? அரிசியா?
அரிசியே பயிரிடலாமே..?
நெல்லு, அரிசி ரெண்டும் ஒண்ணுதான்கறதே உங்களுக்கு தெரியலை.. நீங்களேல்லாம் ஒரு தளபதியா?
6. என்னை யாரும் ஏமாத்த முடியாது..
அந்தப்பொண்ணைத்தவிர,,
நிறைய பேரு இப்படித்தான் சொல்லிட்டுத்திரியறாங்க..என்னை யாரும் ஏமாத்த முடியாது.. ன்னு.. ஆனா பொண்ணுங்க கிட்டே ஏமாறாத ஆணே கிடையாது..
நிறைய பேரு இப்படித்தான் சொல்லிட்டுத்திரியறாங்க..என்னை யாரும் ஏமாத்த முடியாது.. ன்னு.. ஆனா பொண்ணுங்க கிட்டே ஏமாறாத ஆணே கிடையாது..
7. உனக்கு எந்த மாதிரி பொண்ணு பிடிக்கும்?அழகாவா? அறிவுடனா?
நேர்மையான பொண்ணு ( வாட் எ ஒண்டர்ஃபுல் டயலாக்!!)
8. உனக்கு பொண்ணுங்க கூட அதிகம் பழக்கம் இல்லை போல..
எப்படி சொல்றே..?
நேர்மையான பொண்ணு வேணும்கறியே?
9. அட.. உனக்கு படிக்க தெரியுமா?
யார் படிச்சாங்க.. எங்கப்பா எழுதுன ஓலையை சும்மா பார்த்துட்டு இருக்கேன்.. அவ்வளவுதான்..
10. ஒரே தலைவரை மக்கள் எப்போ தேர்ந்தெடுக்க நினைக்கறாங்களோ அப்போ தான் அந்த நாட்டுக்கு நல்ல காலம் பொறக்கும், இல்லைன்னா சாபக்கேடு தான்,.. ( கலைஞர் வகையறாக்கள் கவனிக்க)
11. ஒரு சிட்டுக்குருவி கூட ஃபீனிக்ஸ் பறவையா மாறும்னு எங்கப்பா அடிக்கடி சொல்வாரு..
12. நாம 2 பேரும் ஒண்னு சேர்ந்தா தப்பிக்கலாம்..
நீங்க சொல்றது ஓக்கே தான்.. பசிக்கு நமக்கு கஞ்சி வேணும். அது கேப்பைக்கஞ்சியா இருந்தா என்ன? அரிசிக்கஞ்சியா இருந்தா என்ன?
13. உன் வருங்கால அரசனையே கொல்லப்பார்க்கிறாயா?
என்னைப்பொறுத்த வரை நீ அரசனே கிடையாது..
என் படையே அழிஞ்சாலும் நான் சாகாம இருப்பேன்னு உன் தளபதி கிட்டே போய் சொல்லு..
14. உங்க குடும்ப சண்டைல 2000 படை வீரர்களை பலி ஆக்கீட்டீங்களே? ( கலைஞர் குடும்ப சண்டைல தினகரன் ஊழியர்கள் 3 பேர் இறந்த மாதிரி./. )
15. நம்ம நாட்டுக்கு ஒரு ராசா போதும்.... ( ஆமாமா அவரே ஒன்னேமுக்கால் லட்சம் கோடி அடிச்சிருக்காரே?)
இதுல இருந்து எனக்கு என்ன உண்மை தெரியுதுன்னா ராசா ஆகனும்னா கூடப்பொறந்த தம்பியே ஆனாலும் அவனை போட்டுத்தள்ளிடனும்..
இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்
1. போர்க்கதையாக இருந்தாலும் படம் நெடுக மனித நேய வசனங்கள் தூவி காண்ட்ரவர்சியான கருத்துக்களை வாழைப்பழ ஊசி போல பார்வையாளன் மனதில் பதித்தது..
2. ஜாக்கிசான் அடிக்கடி எங்கப்பா அடிக்கடி சொல்வாரு என கூறி ஒரு பழைய சம்பவம் பற்றி சொல்வதாக காட்டும் சீன்களில் மனிதனின் வாழ்வில் தனது தந்தை பற்றிய நினைவுகள் பசுமரத்தாணி போல பதியும் என உணர்த்தியது
3. காட்டில் பசியுடன் இருக்கும்போதும்,இரை கிடைக்கும்போதும் கூட அது கர்ப்பம் என்று தெரிந்ததும் அதை தப்பிக்க விடும் மனித நேயம்..
4. போர்க்காட்சிகளை பிரம்மாண்டமாக எடுத்தது.. பின்னணி இசை,ஒளிப்பதிவு போன்ற டெக்னிக்கல் மேட்டர்களில் பாஸ் மார்க்.
5. ஜாக்கிசான் என்ற மாஸ் ஹீரோ இருந்தும் கதையின் தன்மை கருதி அவரை அண்டர்ப்ளே ஆக்ட் பண்ண வைத்தது..
இயக்குநர் பல்பு வாங்கிய இடங்கள்
1. ஹீரோ- வில்லனின் ஈகோவை தூண்டி விட்டு தன் படை வீரர்களை தவிர்த்து ஒண்டிக்கு ஒண்டி சண்டை போட அழைப்பதும், அதற்கு வில்லன் சம்மதிப்பதும்.. இன்னும் எத்தனை படத்துல?
2.படத்தின் மிக முக்கியமான க்ளைமாக்சில் ஜாக்கிசான் தனது நாட்டின் கரையில் ஒதுங்கும்போது அங்கே போர் நடக்கிறது.. மரண ஓலங்கள், மனிதர்களின் அலறல்கள் என ஒரே சத்தமாக இருக்குமே? எப்படி அது கேட்காமல் ஜாக்கி மன்னரை விடு வித்து விட்டு தான் மாட்டிக்கொள்ள வேண்டும்..
3.பிடி பட்ட ஜாக்கி வீரர்களிடம் உங்கள் மன்னரை காப்பாற்றியதே நான் தான் இப்போதான் படகில் போறார்.. போய் கேட்டுப்பாருங்கள் என ஏன் சொல்லவில்லை?
4. ஜாக்கிசானின் உயிர்த்தியாகம் வலிய திணிக்கப்பட்டது போல இருப்பதால் மனதில் ஒட்டவில்லை..
5.மன்னருக்கு ஏன் ஓலை வரவில்லை? அவருக்கு தன் நாட்டின் ஸ்டேட்டஸ் ஏன் அப்டேட் செய்யப்படவில்லை?