விகடன் மேடை - விஜய்
பெ.அருணா, திருப்பூர்.
1. '' 'விஜய் இளைஞர் காங்கிரஸில் சேர வயதுத் தகுதி இல்லை’ன்னு சொன்னாரே ராகுல் காந்தி. அவரைச் சந்தித்தபோது பதவி கேட்ட உங்கள் கோரிக்கையை நிராகரிக்கத்தான் அப்படிச் சொன்னாரா? அந்தச் சந்திப்பின் பின்னணியை இப்போதாவது சொல்லுங்களேன்?''
சி.பி - சொம்பு வாங்குனதை பப்ளிக்கா சொல்லச்சொன்னா எப்படி? அண்ணன் அந்த அளவு கேனையா?
''சினிமா கிசுகிசு கேள்விப்பட்டு இருக்கேன், அனுபவிச்சு இருக்கேன். அரசியலில் கூடவா இப்படி வதந்தி பரப்புவாங்க?இப்போ வரை அந்தச் சந்திப்பில் நாங்க என்ன பேசினோம்னு எங்க ரெண்டு பேருக்கு மட்டும்தான் தெரியும்.
சி.பி - என்னத்தை பேசி இருக்கப்போறிங்க? உங்களுக்கு ஹிந்தி தெரியாது.. அவருக்கு தமிழ் தெரியாது.. குத்து மதிப்பா புரிஞ்சாத்தான் உண்டு.. ஹா ஹா
அவரை ஏதோ நான் பதவி கேட்டு சந்திச்சதா வெளியான செய்தி முழுக்கவே தப்பு. இப்போ விகடன் மேடை மூலமா அதை சந்தேகத்துக்கு இடம் இல்லாமத் தெளிவுபடுத்திக்கிறேன் ஃப்ரெண்ட்ஸ்!
அந்தச் சந்திப்பில், ராகுல்... என் படங்கள், சினிமா உலகம், என் பெர்சனல் இன்ட்ரஸ்ட் பத்திப் பேசினார். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு இளைஞர்கள் மத்தியில் என்ன தாக்கம் இருக்கும்னு ஆர்வமா விசாரிச்சார். அவரோட அரசியல் அணுகுமுறை, சுறுசுறுப்பு, இளைஞர்கள் மத்தியில் அவருக்கு இருக்கும் 'குட்வில் இமேஜ்’னு நான் பேசினேன். அவ்வளவுதான்.
இது தவிர, எந்தப் பதவியைப்பத்தியும் அவரும் நானும் பேசிக்கவே இல்லை. 'எனக்கு இதைச் செஞ்சு கொடுங்க... அதைச் செஞ்சு கொடுங்க’ன்னு கேட்டு எனக்குப் பழக்கம் இல்லீங்ணா!''
சி.பி - அடடா.. அண்ணன் அம்புட்டு நல்லவரா? அப்போ பி ஜே பி ,கம்யூனிஸ்ட்னு நாட்டுல எத்தனையோ கட்சி இருக்கே.. அங்கே எல்லாம் போய் நலம் விசாரிக்கலைங்களே அது ஏன்?
ஜி.குப்புசாமி, சங்கராபுரம்.
2.''இந்தத் தேர்தல் முடிவு மூலம், நீங்கள் புரிந்துகொண்டது என்ன?''
சி.பி- இதுல புரிஞ்சுக்க என்ன இருக்கு? கேரளா, தமிழ்நாடு 2 ஸ்டேட்ஸ்லயும் 5 வருஷத்துக்கு ஒரு முறை ஆட்சி மாறும், மக்கள் மாத்தி மாத்தி குட்டைல ஊறுன ஒரே மட்டைகளான திமுக ,அதிமுக ஆகிய 2 கட்சிகளுக்குத்தான் ஓட்டு போட்டாகனும், வேற வழி இல்லைன்னு தெர்யுது..
'' 'தெய்வம் நின்று கொல்லும்’கிறது பழமொழி. 'தெய்வம் இன்றே கொல்லும்’கிறது புதுமொழி. இது இந்தத் தேர்தல் உலகத்துக்கு உணர்த்திய உண்மை!''
சி.பி - அண்ணா.. சில தெய்வங்கள் பஞ்ச் டயலாக்ஸ் பேசியே கொல்லுதுங்களே.. அதைப்பற்றி உங்க கருத்து என்னங்க்ணா?
எஸ்.பெரியசாமி, சென்னை-17.
3. ''நாகையில் மீனவர்களுக்காக நடத்தப்பட்ட பொதுக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கித் திண்டாடிவிட்டீர்கள்... அந்த மாதிரியான சமயங்களில் ரசிகர்களின் அளவுக்கு அதிகமான ஆர்வம் உங்களுக்கு எரிச்சலை ஏற்படுத்துமா?''
சி.பி - இதுல எரிச்சல்பட என்ன இருக்கு.. எந்த அளவு ஜனங்க அடி முட்டாளா தங்களோட க்ரேஸை காட்டிக்கறாங்களோ அந்த அளவு இவங்களுக்கு எல்லாம் லாபம் தானே? இவ்வளவு கூட்டம் கூடுதுன்னு சம்பளத்தை ஏத்திக்கலாம்..
''என் படம் ரிலீஸ் ஆகும் தியேட்டர்ல கூடத்தான் கூட்டம் முண்டியடிக்கும். வியர்வையில் நனைஞ்சு, சட்டை கசங்கி, பர்ஸ் தொலைஞ்சுன்னு... எவ்வளவோ கஷ்டப்பட்டுத்தான் என் ஒவ்வொரு படத்தையும் ரசிகர்கள் பார்க்கிறாங்க. அந்தக் கஷ்டத்தை என் மேல வெச்சு இருக்கிற அன்பு காரணமாத்தானே சகிச்சுக்கிறாங்க. அதே அன்பு அவங்க மேல எனக்கும் இருக்கும்ல!
சி.பி - இவ்வளவு நல்லவரா இருக்கறவரு ரசிகர் மன்றத்துக்கு மட்டும் டிக்கெட் ரேட்ல ரிலீஸ் அன்னைக்கு பல்க் புக் பண்ணீக்குடுங்களேன் பார்ப்போம்.. ஏன் பிளாக்ல விற்க சொல்றீங்க? அதை ஊக்குவிக்கிறீங்க?
அவங்களுக்காக நான் அந்த சிரமத்தைக் கூடப் பொறுத்துக்க மாட்டேனா? என் மேல் எவ்வளவு அன்பு, பாசம் இருந்தா... என்னைப் பக்கத்துல பார்க்கணும்னு முண்டியடிச்சுட்டு வருவாங்க. அப்படி லட்சக்கணக்கான ரசிகர்களோட அன்பை சம்பாதிச்சது என் பாக்யம். மக்கள் அன்பைப் பெறத்தானே கஷ்டப்படுகிறேன். அதைச் சிரமமா நினைக்கலை... அது வரம்ணா!''
சி.பி - மக்கள் அன்பு மட்டும் போதுமா? அப்புறம் ஏன் சம்பளத்தை உயர்த்திட்டே போறீங்க? மக்கள் அன்புக்காக 50% விட்டுக்குடுங்களேன் பார்ப்போம்..
க.ஆதிகேசவன், திருவண்ணாமலை.
4. ''அஜீத் பற்றி உங்க பெர்சனல் ஒப்பீனியன் என்ன?''
சி.பி - ஹி ஹி இப்படி ஓப்பனா கேட்டா எப்படி? அவர் படம் ஒண்ணு கூட ஓடக்கூடாது,,. என் படம் ஒண்ணு விடாம ஓடிடனும்..
''அவரோட தன்னம்பிக்கை எனக்குப் பிடிக்கும். எந்த விஷயத்தையும் 'ஜஸ்ட் லைக் தட்’ செஞ்சு முடிச்சிடுவாரு. என் படத்துல ஒரு பஞ்ச் வருமே... 'ஒரு தடவை முடிவெடுத்தா... அப்புறம் என் பேச்சை நானே கேட்க மாட்டேன்’னு. அது அஜீத்துக்கும் பக்காவாப் பொருந்தும்!''
சி.பி - ஓஹோ.. உங்க பஞ்ச் டயலாக் கூட தல கிட்டே இருந்து சுட்டது தானா ?அவ்வ்வ்வ்வ்வ்
ச.ஐயப்பன், சென்னை-75.
5.''உங்க பையன் ஜேசன் சஞ்சய் என்ன பண்ணிட்டு இருக்கார். சீக்கிரமே அவரையும் சினிமாவில் பார்க்கலாமா?''
சி.பி - இவரு லொள்ளையே தாங்க முடியல.. இதுல இவரோட வாரிசு வேறயா? சென்னைல இருந்துக்குட்டு வெண்ணை மாதிரி கேள்வி கேட்குது பாரு ராஸ்கோலு..
''தோளுக்கு மேல் வளர்ந்தால் தோழன்னு சொல்வாங்களே... அப்படி வீட்டுக்குள்ளேயே எனக்கு ஒரு தோழன் ஆயிட்டார் சஞ்சய். விறுவிறுன்னு என் தோள் உயரத்துக்கு வளர்ந்துட்டார். அப்பா - மகன்னு இல்லாம, ஒரு ஃப்ரெண்டோடு பேசுற மாதிரிதான் நானும் அவரும் பேசிப்போம். சஞ்சயோட குழந்தை முகம் கம்ப்ளீட்டா மாறிடுச்சு. 'நான் வளர்கிறேனே டாடி’ன்னு வளர்ந்துட்டார். இப்போ சாருக்குப் பிடிச்சது கிரிக்கெட், கிரிக்கெட், கிரிக்கெட்தான்! எதிர்காலத்தில் அவர் என்னவா வரணும்கிறது அவரோட விருப்பம். அதுக்கு ஒரு தந்தையா என்னால என்ன உதவ முடியுமோ... அதை மட்டும் பண்ணுவேன்!''
சி.பி - இந்த டகால்டி எல்லாம் இங்கே வேணாம்.. உங்க பையனுக்கு 16 வயசு ஆனதும் அவரை ஹீரோவா போட்டு ஒரு சொந்தப்படம் எடுக்கறீங்க.. இது அந்த சங்கவி மேல சத்தியம்... ஹி ஹி .
கு.ரத்தினம், ஆண்டிபட்டி.
6.''விஜயகாந்த்தின் வளர்ச்சி பற்றி?''
சி.பி - வயிற்றெரிச்சலாத்தான் இருக்கு.. ஆனா ஓவரா எரிச்சல் பட்டா அல்சர் வரும்கறதால அடக்கிக்கறேன் ஹி ஹி ..
''அண்ணன் வளர்ந்தா... தம்பிக்கு சந்தோஷம்தானே!''
சி.பி - ஹா ஹா சந்தோஷமா? துவேஷமா? #டவுட்டு
ஆர்.ராஜன், ஆரணி.
7. ''விஜய் - விஜயகாந்த் ஒப்பிட முடியுமா?''
சி.பி - சின்ன தலைவலி (ஒற்றை தலைவலி) , பெரிய தலைவலி (ரெட்டைத்தலைவலி)
இவர் படம் ஓரளவுக்கு டப்பாவா இருக்கும், அவர் படம் ரொம்ப பெரிய டப்பாவா இருக்கும்..
''இருவரும் என் தந்தையால் ஆசீர் வதிக்கப்பட்டவர்கள்!
சி.பி - உங்கப்பா என்ன கர்த்தரா?
ஒரு நல்ல ஆரம்பம், அடைய வேண்டிய இலக்கில் பாதியை எட்டினதுக்குச் சமம்னு சொல்வாங்க. அண்ணனுக்கும் தம்பிக்கும் ஆரம்பம் ரொம்பவே நல்லா அமைஞ்சது!''
சி.பி - பொதுவாவே. எல்லாருக்கும் ஓப்பனிங்க் நல்லாத்தானுங்க்ணா இருக்கு.. இந்த ஃபினிஷிங்க் தானே சரி இருக்கறதில்லை?
அப்துல் கபூர், நாகர்கோவில்.
8. ''ஜெயலலிதா அரசிடம் நீங்கள் எதிர்பார்ப்பது என்ன?''
சி .பி - என்ன ஏதாவது பதவி குடுத்தா போதும், பாலைவன கூடாரத்துல புகுந்த ஒட்டகம் மாதிரி இப்போதைக்கு உள்ளே புகுந்துக்கலாம்.. போகப்போக ஆமை புகுந்த வீடு மாதிரி கட்சி நாசமா போகட்டும் எனக்கென்ன? எனக்கென்ன? அதிமுக அதல பாதாளத்துல போனா எனக்கென்ன?எனக்கென்ன? ( தல ரசிகர்கள் மன்னிச்சூ)
''நான் மட்டும் இல்ல... ஒட்டுமொத்தத் தமிழர்களின் எதிர்பார்ப்புகளையும் நிறை வேற்றுவேன்னு அவர் ஒரே ஒரு உத்தரவாதம் மூலம் உறுதிப்படுத்திட்டாரே!
'தமிழகத்தை இந்தியாவிலேயே முதன்மை மாநிலமா மாற்றுவேன்’னு அவர் சொல்லி, அதைச் சாத்தியமாக்க முனைப் புடன் செயல்படுறார். கண்டிப்பா, அவரால் அதைச் சாதிக்க முடியும். சாதிச்சுக் காட்டுவார். அரசியல் அரங்கில் அவர் எப்பவுமே தமிழ் மக்களுக்கு நிழல் தரும் ஆலமரம்!''
சி.பி - ஜால்ரா சத்தம் ஜாஸ்தியா இருக்கே? போற போக்கை பார்த்தா ஏதாவது ஒரு போஸ்ட்டை வாங்கிடுவார் போல.. எப்படியோ அண்ணன் சினிமால கான்செண்ட்ரேஷனை குறைச்சா சரி,,...
கே.முத்து, செய்யாறு.
9. ''ரஜினி - கமல் ஒப்பிடுங்கள்?''
சி.பி - இதே கேள்வியை எத்தனை நாளுக்குய்யா கேட்டுட்டு இருப்பீங்க..
''சிங்கம் - புலி... வேறென்ன சொல்ல!''
சி.பி - வேற என்ன சொன்னாலும் இரு தரப்பு ரசிகர்கள் கிட்டேயும் உதை கன்ஃபர்ம்.. இப்போ எஸ்கேப் ஏஹே ஹே ஹேய்..
ஆர்.பாரி, செங்கல்பட்டு.
10. ''சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றுஇருக்கும் ரஜினி பற்றி..?''
''வீட்ல ஒருத்தருக்கு உடம்பு சரி இல்லாத மாதிரி ஒட்டுமொத்தத் திரையுலகமும் கவலையில் இருக்கோம். யாரைச் சந்தித்தாலும், பேச்சு ரஜினி சார்ல ஆரம்பிச்சு, ரஜினி சார்லதான் முடியுது.
பெர்சனலா நான் ரொம்ப மிஸ் பண்றேன். ஸ்க்ரீன்ல ரஜினி சாருக்கு உடம்பு சரியில்லாத மாதிரி ஸீன் வந்தாலே, கத்திக் கூப்பாடு போடுற ஆளு நான். இப்போ நிஜமாவே அப்படி ஒரு சூழ்நிலையைத் தாங்கிக்கவே முடிய லைண்ணா. சூப்பர் ஸ்டார் ரொம்ப சீக்கிரமே ஹெல்த்தியா திரும்பி வந்திருவார். 'ராணா’ படத்தை ரசிகர்களோட ரசிகனா தியேட்டர்ல உக்காந்து நானும் பார்ப்பேன்!''
சி.பி - ராணாவும் வேண்டாம்,, அதுக்காக டயட் இருந்து உடம்பை கெடுத்துக்கவும் வேண்டாம். ஒரு வருஷம் ரெஸ்ட் எடுத்துட்டு வரட்டும் அவரு.. ஃபிரியா விடுங்கப்பா அவரை..
சி.கேசவன், மதுரை.
11. ''உங்களுக்குப் பிடித்த மனிதர் யார்?''
சி.பி - என்னை வெச்சு படம் எடுக்கற இளிச்சவாய் புரொடியூசருங்க தான் ஹி ஹி
''ண்ணா... 'கள்’ சேர்த்துக்கலாமா? மனிதர்'கள்’ணா!
காந்தி, தந்தை பெரியார், காமராஜர், எம்.ஜி.ஆர். இவங்களை எனக்கு மட்டுமா.... ஒவ்வொரு தமிழனுக்கும் பிடிக்கும்தானே!''
எல்.ராஜன், தஞ்சாவூர்.
12. ''உங்களால் மறக்க முடியாத ரசிகர்..?''
சி.பி . நல்ல வேளை ,பயபுள்ள ரசிகர் பற்றி கேட்டுச்சு.. ரசிகை பற்றி கேட்டிருந்தா திண்டாடி இருப்பாரு..
''காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி கார்த்திக்னு ஒருத்தர். பெங்களூர்ல இருந்து புறப்பட்டு, என்னைப் பார்க்கணும்னு ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே வந்துட்டார். நேர்ல என்னைப் பார்த்ததும் முகத்துல அப்படி ஒரு பரவசம். 'இவ்வளவு தூரம் எப்படி கஷ்டப்பட்டு வந்தீங்க?’ன்னு நான் கேட்க, சைகையிலயே ஆர்வமா ஏதேதோ கதை கதையா சொன்னார். எனக்குக் கண் கலங்கிருச்சு. நான் அவருக்கு ஆறுதல் சொல்லப் போக, கடைசியில் அவர் என் தோளைத் தட்டிக் கொடுத்துத் தேத்தினார். ரொம்ப வெகுளி. அந்த மாதிரி ஒரு மனசு இருந்தா, உடலின் எந்த ஊனத்தையும் சமாளிச் சுடலாம்!''
எஸ்.எம்.ஹோஷ்மின், ஆப்பிரிக்கா.
13. ''உங்க படம் ரிலீஸாகும் சமயங்களில் கண்டபடி உலவும் எஸ்.எம்.எஸ்-கள் உங்கள் மொபைலை ரீச் செய்திருக்கிறதா? உங்க ரியாக்ஷன் என்ன?''
சி. பி - ஹா ஹா அண்னனுக்கு ஆக்ஷனே ஒழுங்கா வராது.. இதுல ரீ ஆக்ஷனா? ஹா ஹா
விஷமம் பரப்புறது சிலருக்குச் சந்தோஷமா இருக்கும்போல! அதை நான்...
S - சிந்திப்பேன்.
M - மௌனமாகிடுவேன்.
S - சிரிப்பேன்.
- அடுத்த வாரம்...
''எப்பண்ணா கட்சி தொடங்கப் போறீங்க..?''
''அஜீத் தன் ரசிகர் மன்றங்களைக் கலைத்திருப்பது ஆரோக்கியமான விஷயமா?''
''உங்கள் ரசிகர்கள் இன்று மக்கள் இயக்கத் தொண்டர்கள்... என்ன வித்தியாசத்தை அவர்களிடம் எதிர்பார்க்கலாம்?''