Tuesday, May 31, 2011

A NIGHT MARE ON ELM STREET -3 - ஹாலிவுட் சினிமா விமர்சனம்

http://onlinemoviesplanet.com/covers/February-17-2011-2-25-53-a-nightmare-on-elm-street.jpg
மனுஷன் நிம்மதியா இருக்கறதே தூங்கறப்பத்தான்.. ஆனா தூங்குனா உங்க உயிருக்கு ஆபத்துன்னா நீங்க என்ன பண்ணுவீங்க?அதிர்ச்சியா இருக்கா? இது தான் படத்தோட ஒன் லைன்...
ஸ்கூல்ல ஒண்னா படிச்ச ஒரு ஸ்டூடண்ட்ஸ் செட்ல வரிசையா ஒவ்வொருவரா கொலை செய்யப்படறாங்க.. ஒவ்வொரு கொலையும் அவங்க தூங்கறப்ப தான் நடக்குது.. தூங்கும்போது ஒரு சக்தி அவங்களை அதனோட கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்து கொலை செய்யுது.. 

ஏன் கொலைகள் நடக்குது? ஒரு ஃபிளாஸ்பேக்.. 

அந்த ஸ்கூல்ல தோட்ட வேலை பார்த்த ஒருவனோட நடவடிக்கைகள் மர்மமா இருக்கு.. தொடர்ந்து கண்காணிக்கறாங்க.. அவன் ஸ்கூல்ல படிக்கற சின்ன பசங்களோட,பொண்ணுங்களோட பாலியல் பலாத்காரம் பண்ணுறானோன்னு ஒரு டவுட்.. அது பற்றி சரியா விசாரிக்காமயே,அவன் குற்றவாளியாங்கறது  உறுதி செய்யப்படாமயே குழந்தைகளோட பெற்றோர் அவங்களா ஒரு முடிவெடுத்து அவனை ஒரு ரூம்ல வெச்சு தீக்குளிக்க வெச்சுடராங்க.. 

அவன் சாகறப்ப உங்களை எல்லாம் கொல்லாம விட மாட்டேன்னு சபதம் எடுக்கறான்.. அவன் ஆவியா வந்து ஒவ்வொருவரா கொல்றான்.. அதான் கதை...

http://maxcdn.fooyoh.com/files/attach/images/1068/532/601/004/nightmare-elm-st-mouthwash.jpg
படம் ஓப்பன்ல இருந்து முதல் 3 ரீல் செம சஸ்பென்ஸ் தான்.. ஆனா கொலைகள் ஏன் நடக்குதுன்னு தெரிஞ்ச பிறகு விறு விறுப்பு மிஸ்ஸிங்க்.. ( இதனால தான் சில படங்கள்ல கடைசி வரை கொலையாளி யார்னு சொல்லாமயே விட்றாங்க போல..)
திக் திக் படத்தில் வரும் டக் டக் வசனங்கள்

1. மிஸ்.. வீக் எண்ட்ல ரொம்ப டயர்டு ஆகீட்டீங்கபோல..?


ஏன்.. நீ அப்படி ஆக மாட்டியா?  ( ஹாலிவுட்லயும் டபுள்மீனிங்க்கா?)


2. என்னால 3 நாளா தூங்க முடியல.. தூங்குனா கனவு வருது.. கனவுல பேய் வந்துடுது.. என்னை என்ன பண்ண சொல்றீங்க?


3. எந்தக்கடவுளும் உன்னை காப்பாற்ற முடியாது.. மரண தேவன் கிட்டே இருந்து நீ தப்பிக்கவே முடியாது.. 


4. உன் இதயம் நின்னு போனாக்கூட மூளை மட்டும் 7 நிமிஷம் இயங்கிட்டே இருக்கும்.. நாம விளையாட அந்த 7 நிமிஷம் போதும்..

5. என்னால தூங்காம இருக்க முடியல.. 72 மணி நேரம் தொடர்ந்து தூங்கலைன்னா உடல் பலஹீனம் ஆகிடும்.. ..தூங்குனா உயிர் என் கைல இல்ல.. இப்போ நான் என்ன பண்ண?


6. டாக்டர்.. சொன்னா நம்புங்க.. நான் என்னோட 15 வது வயசுல இருந்தே இந்த மாத்திரையை சாப்பிட்டு வர்றேன்.. என் உடம்புல பலம் குறைஞ்சிடுச்சுன்னா அதை சாப்பிடனும் . ப்ளீஸ் குடுத்திடுங்க.. சக்தியை பூஸ்ட் பண்ணும் மாத்திரை அது.. 

7. டியர்.. நீ எதுக்கும் கவலைப்பதாதே.. நான் உன்னை எந்த சூழ்நிலைலயும் தூங்க விட மாட்டேன்..

ஐ நோ.. சப்போஸ் நான் என்னையும் மீறி தூங்கிட்டா தூக்கத்துல நான் துடிச்சா என்னை எழுப்பி விட்டுடு.. என்னை உடனே காப்பாத்து

http://thewolfmancometh.files.wordpress.com/2011/01/nightmare-on-elm-street-3-dream-warriors-patricia-arquette.jpg
இயக்குநர் சபாஷ் பெறும் இடங்கள்

1. ஃபிளாஸ்பேக் சீனில் சஸ்பென்ஸை சரியாக காப்பாற்றி டெம்ப்போ ஏத்துனது.. 

2. ஹீரோயின் அழகான ஃபிகரா செலக்ட் பண்ணி டீசண்ட்டா அவரை (படத்துல )யூஸ் பண்ணிக்கிட்டது.. 

3. ஹீரோயின் அம்மா மேல் டவுட் வர வைத்து டைவர்ட் செய்தது.. 

4. க்ளைமாக்ஸ் சீனில் ஹீரோயின் தரையில் நடக்கும்போது அது அப்படியே ரத்தக்குளமாக மாறும் சீன்...

5. ஒவ்வொரு கொலை நடக்கும் போதும் கனவு சீனில் வரும் வில்லன் நிகழ்கால பேக் கிரவுண்டை அப்படியே கனவு உலகத்து அதே பேக் கிரவுண்டில் இடம் மாற்றுவது.. 


http://moviemusereviews.com/wp-content/uploads/2011/03/spring-movie-preview-2011-scream-4.jpg
 

 இயக்குநர் பல்பு வாங்கிய இடங்கள்

1. தோட்டக்காரன் மேல் தவறு இருக்கா? இல்லையா? என்பதை கடைசி வரை தெளிவாக சொல்லாதது..

2. தோட்டக்காரன் மேல் தவறு என்றே வைத்துக்கொண்டாலும் பெற்றோர்கள் போலீசில் புகார் தராமல் ஏன் அவனை எரித்துக்கொள்ளவேண்டும்? அதை ஏன் போலீஸ் விசாரணை செய்யவே இல்லை.. ?

3. ஹீரோயின் நான்சி அடிப்பட்டு ஹாஸ்பிடலில் அட்மிட் செய்யப்பட்டு ட்ரீட்மெண்ட் தரும்போது கடைசி வரை அவர் ஷூ சாக்ஸ் கழட்டாமலேயே ட்ரீட்மெண்ட் தருவது.. 

4. ஷாப்பிங்க் காம்ப்ளெக்ஸில் ஆபத்தான மருந்துகள் எப்படி ஓப்பனாக வைத்திருப்பார்கள்? அவை பாதுகாப்பாக பீரோவில் தானே இருக்கும்?

5.ஹீரோவுக்கு இருக்கும் ஸ்லீப்டெப்ரிவேஷன் நோய்க்கும் படத்துக்கும் என்ன சம்பந்தம்?

6.  ஹீரோயின் பாத்ரூமில் குளித்துக்கொண்டிருக்கும்போது பேயின் கரங்கள் பாத் டப்பில் வருது.. அப்போ ஹீரோயின் அம்மா நான் சி என அழைக்கிறார்.. உடனே பேய் ஓடிடுது.. ஏன்? பேய்க்கு ஹீரோயின் அம்மான்னா பயமா?
7.  கடைசியாக ஒரு கில்மா டவுட்.. ஸ்கூல் ஃபிகர்கள் உட்பட படத்தில் வரும் அனைத்து பெண் கேரக்டர்களும் குளிருக்காக கோட் போட்டே வருவது ஓக்கே.ஆனா ஏன் முழங்காலுக்கு கீழே வெறும் சருமம் தெரிய இருக்க வேண்டும்? குளிராதா?

http://moviesmedia.ign.com/movies/image/article/108/1085171/a-nightmare-on-elm-street-2010-20100421114129649_640w.jpg

--
படத்தில் ஆரம்ப காட்சிகளில் இருந்த திகில் போகப்போக குறைவு.. பின்னணி இசை இன்னும் நல்லா போட்டிருக்கலாம்.. வில்லனுக்கான மேக்கப் சரி இல்லை.. தசாவதார மேக்கப் மாதிரி சுமார் தான்.. அதுவே படத்தின் பெரிய மைனஸ்..

 கர்ப்பிணிப்பெண்கள் தவிர அனைவரும் பார்க்கலாம்.. திகில் பட ரசிகர்கள் பார்க்கலாம். இது ஈரோடு ஸ்ரீநிவாசாவில் பார்த்தேன்..