Tuesday, May 03, 2011

THOR -3 D - ஹாலிவுட்டில் கலைஞர்-ன் பர்சனல் கதை - ஹாலிவுட் சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh95jrPoGFZRAG9XPJ-sWJXK_wEc7Nf4-QwVolH3JYIj8ecSiv5q2qYzH97jrsAeEUQPkCPzguZDJsKa-7MwO3q__HktPuVSkbtPCFehYClhGId-lQS_7ipnpB9Eve3iJHUS_xloSDDm9Y/s1600/Thor+Film.jpg 

தமிழ் இனத்தலைவர் டாக்டர் கலைஞரின் புகழ் இந்த அளவு ஹாலிவுட்டில் கூட பரவும் என நான் நினைத்தே பார்க்கவில்லை..மார்வெல்ஸ் பிக்சர்ஸ் எடுத்த ஒரு மாயாஜாலக்கதை கம் வேற்றுக்கிரகவாசியை பூமியில் எப்படி டீல் பண்றாங்க என்ற கதையில் சாமார்த்தியமா கலைஞரின்  குடும்பக்கதையை  நுழைத்தது தற்செயலா? இல்ல.. என் கண்ணுக்கு மட்டும் அப்படி தெரியுதா புரில..

 படத்தோட ஓப்பனிங்க் ஷாட்லயே கிராஃபிக்ஸ், ஆர்ட்டைரக்‌ஷன் ரெண்டும் செம அசத்தல்.. ஒரு கடல் பாலத்தை ஜிகு ஜிகு கலர்ல பிரம்மாண்டமான அழகியல் ரசனையோட காட்றாங்க.. பார்க்க கண் கோடி வேணும்.. குழந்தைங்க கை தட்டி ரசிப்பாங்க.. டோண்ட் மிஸ் தட் ஷாட்.

ஒரு வயசான பெரியவர். ( வயசானாத்தானே   அவர் பெரியவர்?).அவர் தான் அந்த கிரகத்தோட தலைவர் கம் கிங்க் .அவருக்கு 2 பசங்க..அவருக்குப்பிறகு யாரை அவரோட அரசியல் வாரிசா நியமிக்கறதுன்னு அவருக்கு ஒரு குழப்பம்.(இப்போத்தான் எல்லாருக்கும் அழகிரி,ஸ்டாலின் கதை ஞாபகத்துக்கு வருது)
http://blogs.coventrytelegraph.net/thegeekfiles/KatDennings.jpg
போர் பற்றிய வாக்குவாதத்துல மூத்த பையன் அந்த கிரகத்தை விட்டு விரட்டப்பட்டு பூமிக்கு அனுப்பப்படறான். ( அழகிரியை நைஸா டில்லி அரசியலுக்கு அய்யா அனுப்புன மாதிரி ).அவனை பூமில இருக்கறவங்க எல்லாம் ஆச்சரியமா பார்க்கறாங்க.. (ஹிந்தி தெரியாத அழகிரியை டில்லி வாலாக்கள் கிண்டலா  பார்த்த மாதிரி )அவனை வெச்சு ஆராய்ச்சி பண்ண ஒரு குரூப் நினைக்குது.

அவனால பூமில ஏற்படும் மாற்றங்கள், பிரச்சனைகள் என்ன? அவன் மீண்டும் தாய்க்கிரகத்துக்கு போனானா? என்பது தான் மீதிக்கதை.

குழந்தைப்பசங்க  பார்க்கற அம்புலிமாமா கதை தான். ஆனா 3 டி எஃப்ஃபக்ட்+ ஆர்ட் டைரக்‌ஷன்+ ஒளிப்பதிவு +கிராஃபிக்ஸ் இதெல்லாம் படத்தை தூக்கி நிறுத்துது..
http://www.masculin.com/images/news/1526/nathalie-portman-super-heros-thor-film.jpg
படத்தில் வந்த ரசனையான காட்சிகள்

1.அயல் கிரக வாசி பூமியில் இறங்கிய அடுத்த ஒரு மணி நேரத்தில் அந்த இடம் பிக்னிக் ஸ்பாட் போல் ஆவதும், அதி விரைவில் ஆராய்ச்சிக்கூடங்கள் அதை சுற்றி அமைக்கபாடுவதும் செம ஜாலி சீன்ஸ்.

2.ஹீரோ வெறி வந்தவன் போல் ரெஸ்ட்டாரண்ட்டில் சாப்பிடுவதையும்,அவனது கட்டுமஸ்தான உடம்பைப்பார்த்தும் 2 ஃபாரீன் ஃபிகர்கள் அடிக்கும் கிளு கிளு கமெண்ட்ஸ்..

3. ஹீரோ சுத்தியலால் பாலத்தை தட்டி பூமிக்கும், தனது தாய் கிரகத்துக்கும் உண்டான இணைப்பைத்துண்டிப்பது.. ( லாஜிக் பார்க்காம பார்க்கனும்)

4.க்ளைமாக்ஸ் காட்சியில் பிரம்மாண்டமான கூட்டத்தை காட்டியது, , போர்க்காட்சிகள் கண் முன் விரியும் போது ஏற்படும் பிரமிப்பு
http://imagecache2.allposters.com/images/pic/54/039_36431~Natalie-Portman-Posters.jpg
 தோர் பட வசனங்களில் ஜோர் என சொல்ல வைத்தவை

1. மன்னா.. உங்களையே காப்பாத்திக்கத்தெரியாத நீங்க எப்படி இந்த நாட்டை காப்பாத்துவீங்க? ( டெல்லிக்கு கடிதம் எழுதுவோம் இல்ல?)

2.  அவசரப்படாதே.. மகனே.. ஒரு நாட்டுக்குத்தலைவன்னா ஆணவம் கூடாது.. அவசரம் கூடாது.. அகம்பாவம் கூடவே கூடாது.. ..(அப்புறம் எப்படி ஜெ...? சி எம்  ?)

3. அங்கே பாருடி.. இவ்வளவு கட்டு மஸ்தான உடம்பு வெச்சிருக்கறவன் பைத்தியமா இருக்க முடியாது.... ( அப்போ உடனடியா நாமளும் ஜிம்முல மெம்பர் ஆகிட வேண்டியதுதான்)

4. எனக்கு இந்த மீல்ஸ் ரொம்ப பிடிச்சிருக்கு..

ஆமா.. ஓசி ல சாப்பிட்டா பிடிக்காமயா இருக்கும்? ( ஏ சி யில் ரோசி கூட ஓ சி ல சாப்பிட்டா எவனுக்கு பிடிக்காது?)
http://blogs.popzara.com/media/14/20090714-portman.jpg
5. ஆஃபீசர்ஸ்.. பல வருஷங்கள் நான் கஷ்டப்பட்டு கண்டு பிடிச்ச பல கண்டு பிடிப்புகள் அந்த ஆராய்ச்சிக்கூடத்தில் இருக்கு..  நீங்க பாட்டுக்கு எல்லாத்தையும் எடுத்துடு போய்ட்டா என்ன அர்த்தம்?

மறுபடி எல்லாத்தையும் முதல்ல இருந்து கண்டு பிடிச்சுக்குங்கன்னு அர்த்தம்..


6. காரணமே இல்லாம அவரை ஏன் தாக்குனீங்க?

 குடிச்சாரு. நிறையா பேசுனாரு. என்னை தாக்க முயற்சி பண்ணுனாரு..போட்டுத்தள்ளிட்டேன்..

7. உன் முன்னோர்கள் இதை மந்திரம்னு சொன்னாங்க.. நீ இதை விஞ்ஞானம்னு சொல்றே..

8. நானும் உங்களோட போருக்கு வர்றேன்.. நான் செத்தாலும் வீரனாத்தான் சாவேன்..

அதை நீ உயிரோட இருந்து உன் சந்ததிகளுக்கு கதை சொல்லு..

9. என் கிட்டே என்ன குறையை நீ கண்டே..?

 ஒரு இனத்தை முழுசா அழிக்க நினைக்கறது தப்பு.. ( டெடிக்கேட்டட் டூ ராஜபக்‌ஷே & கலைஞர்)


ஹீரோ வேற்றுக்கிரக வாசி என்று தெரிந்தும் ஹீரோயின் ( பூலோக வாசி ) அவரைக்காதலிப்பது நல்ல பூச்சுற்றல்.( நல்ல வேளை டூயட் இல்ல)

சின்ன வயசுல லயன் காமிக்ஸ், முத்து காமிக்ஸ்ல வந்த ஆர்ச்சி கேரக்டர் பாதிப்புல அந்த க்ளைமாக்ஸ் நடமாடும் ஃபயர் ஃபேக்டரி வருது.. குழந்தைங்க ரசிக்கலாம் ... 
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgY4JWubtFOa3BNnRyrY5HA1Xp_YLcI2kE4JkaPnu2fPziScc1MbuBIXbFTVrY1Ic22caaovSm2zDS5fC_MZ1BduMiiu2AMITzABGde3Fc7g3DjWOuGR_zVFVoBTR3H4JK2Ai-71kxIxTg/s1600/thor-film+%25287%2529.jpg
 
இந்தப்படத்தை என்னை மாதிரி சின்னப்பசங்க, குழந்தை மனம் படைத்தவர்கள், அம்புலிமாமா, பாலமித்ரா கதை படிக்கறவங்க மட்டும் பார்க்கலாம்.. மாயாஜால மந்திரக்கதைகளை ரசிக்கறவங்களும் பார்க்கலாம்..

 ஈரோடு ஸ்ரீலட்சுமி தியேட்டர்ல படம் வந்திருக்கு. 3 டி எஃப்ஃபக்ட் இல்ல.. சென்னைல மட்டும் 3 டின்னு கேள்வி..மத்த ஊர்ல எல்லாம் திருடாத டி தான் ...