Thursday, April 28, 2011

ஈரோடு,கோவை,திருப்பூர் மாவட்டங்களில் நிலத்தடி நீர் அபாயம்????


http://www.foothillhydroponics.com/07-01-05-gardening-3.jpg
புல்தரையும் நீர்ப்பூங்காவும் நமக்கு அவசியமா?

ஓவியம்:சிவபாலன்
சு.தியடோர் பாஸ்கரன்


உலகின் பல நாடுகளில் நிலத்தடி நீர் பாதுகாப்புக்குக் கடுமையானச் சட்டங்கள் விதிக்கப்பட்டிருக்கின்றன. நிலத்தடி நீரை எடுத்துப் பயன்படுத்துவதாக இருந்தாலும், ஆழ்துளைக்கிணறு அமைப்பதாக இருந்தாலும், அரசாங்கத்திடம் அனுமதி பெற்றால்தான் செய்ய முடியும். நம் நாட்டில்... நிலைமையே தலைகீழ்.

 இங்கே... நிலத்தடி நீர் என்பது பொதுச் சொத்து. யார் வேண்டுமானாலும், எவ்வளவு நீரை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். விற்பனை செய்யலாம். எந்த வரைமுறையும் கிடையாது. சுதந்திரம் கிடைத்த சில ஆண்டுகளில் கிராமப்புறங்களுக்கெல்லாம் மின்வசதி கொடுக்கப்பட்டது. அதனால்தான் தோட்டங்களில் எல்லாம் ஆழ்துளைக் கிணறு அமைத்து நீரை எடுக்க ஆரம்பித்தனர். விளைவு... அடுத்த பத்தாண்டுகளுக்குள்ளாகவே நிலத்தடி நீர்மட்டம் பாதாளத்துக்குப் போக ஆரம்பித்தத்து.



ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல், தர்மபுரி என்று பல மாவட்டங்களில் ஆயிரம் அடி வரை தோண்டினால்கூட தண்ணீர் கிடைக்காத பகுதிகள்தான் அதிகம் இருக்கின்றன. ஒருபுறம், காடுகள் அழிப்பு; இன்னொரு புறம், ஏரிகள் அழிப்பு. அதனால் நிலத்தின் மேல்மட்ட ஈரம்கூட முற்றிலும் காய்ந்து போய் விட்டது. கிடைக்கும் மழையைத் தக்க வைக்க முடியாமல் போய்விட்டது. ஆண்டுதோறும் மழை பெய்தாலும், தண்ணீர் பஞ்சத்துக்கு முடிவு கிடையாது.

இவ்வளவு மோசமான சூழ்நிலை நிலவினாலும், பாறைக்கடியில் பொக்கிஷமாக இருக்கும் நிலத்தடி நீரைப் பாதுகாக்க, இன்னமும் நாம் அக்கறை காட்டாமல்தான் இருக்கிறோம். கொஞ்சம்கூட யோசிக்காமல் சாயக்கழிவு உள்ளிட்ட இன்னபிற விஷயங்களால், நிலத்தடி நீரை முடிந்தளவு மாசுபடுத்தி விட்டோம். நீர் மாசுபடுவதையோ, குறைவதையோ நாம் உணர முடியாது.
http://www.dinamani.com/Images/article/2011/1/30/30ko1.jpg
மேல்நாட்டுப் பழக்க வழக்கங்களை நாகரிகம் என்று கருதி, அப்படியே நாம் கடைபிடிப்பது இன்னமும் கொடுமையான விஷயம். நீர்ப்பூங்கா, புல்தரை) போன்றவை இப்படிப்பட்ட நாகரிகத்தின் எச்சங்கள். நீர் எளிதாகக் கிடைக்கக்கூடிய வெப்பமில்லாத, குளிர்மிகுந்த மேலை நாடுகளில் இவற்றை ஏற்படுத்தி பராமரிப்பது சுலபம். குடிப்பதற்கே தண்ணீர் இல்லாமல், அல்லாடிக் கொண்டிருக்கும் வறண்ட பூமியில் இவை அவசியமா?

 இதைப் பற்றிக் கொஞ்சம்கூட யோசிக்காமல், காசை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு பூமியைக் குடைந்து நீர் எடுப்பது எந்த வகையில் நியாயம்? ஆஸ்திரேலியாவில் இப்படிப் புல்தரைகள் பாவுவதற்குக் கட்டுப்பாடுகள் உண்டு. அதேபோல மழைநீர் சேமிப்பும் கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது.  

சூழல்கேடுகளுக்கு முதலில் துணைபோவது வசதி படைத்தவர்கள்தான் என்பதற்கு உதாரணம்... வறண்ட பகுதிகளில்கூட பல்லாயிரம் சதுரடிப் பரப்பளவில் கோல்ஃப் விளையாட்டுக்காக புல்வெளி திடல் அமைப்பதுதான். இது, இந்தியச் சுற்றுச்சூழலின் சிதைவுக்கு மிகமுக்கியமானதொரு எடுத்துக்காட்டு.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhn4dfIbaxRSUKUyoa5kn3EYiiwKKGTrwTPPDRURHrNH4BY5_ZjlOvU_5gPMjwTtXrVg_MXj2b5bfV-B3LeCcO4qqOebI4_8FUzwGYeQUoo49EW-uU4c3uPBVEKgcF7vnKMHFG4RkQ_vjCo/s1600/0512+mdp+3+tn+ex.JPG
 இம்மாதிரியான காரியங்களுக்குப் பதிலாக, மனிதனின் அத்தியாவசியத் தேவைக்கு முன்னுரிமை அளிக்க அரசாங்கம் முன் வர வேண்டும். அதேப்போல எதற்கெல்லாம் நீரைப் பயன்படுத்துகிறோம் என்று கவனமாக இருக்க வேண்டும். அரிதான நீரைச் செலவழித்து ஆளைக் கொல்லும் புகையிலை போன்ற பயிர்களை நாம் பயிரிடுவது சரியா?

நமது தேசியக் கொள்கைப்படி, நீர்ப்பயன்பாட்டில் குடிநீருக்கு அடுத்தபடியாக விவசாயத்துக்குதான் முன்னுரிமை கொடுக்க வேண்டும். ஆனால், நடப்பது? பணக்காரத் தொழிலதிபர்கள் பலர் தங்கள் ஆலைகளுக்குப் பெருமளவில் நீரை உறிஞ்சிக் கொள்கிறார்கள். அதோடு கழிவுநீரை ஆற்றில் கலந்து விடவும் அவர்களில் பலர் தயங்குவதில்லை. நிலத்தடி நீரை உறிஞ்சியதால், கேரளாவில் 'பிளாச்சிமாடா’வில் கோகோகோலா குளிர்பான ஆலைக்கு எதிராக நடந்த போராட்ட நிகழ்வு, இதற்கு ஒரு சாட்சி.

ஆற்றுக்கு குறுக்கே அணைகளைக் கட்டினால் தமிழ்நாட்டின் வேளாண்மைப் பிரச்னைகள், குடிநீர்ப் பிரச்னை, மின்சாரத் தட்டுப்பாடு போன்றவை சரியாகி விடும் என்று நம்பப்பட்டது. ஆனால், என்ன நடந்தது? அமராவதி போன்ற நதிகள் வறண்டு, பாலைவனம் போல் காட்சியளிக்கின்றன. அணைப் படுகைகளில் வண்டல்தான் நிரம்பியுள்ளது.

பெரிய அணைத் திட்டங்களைப் போல், இன்று நதிகள் இணைப்பைப் பற்றிய பேச்சு அடிபடுகிறது. இதுவும் ஒரு கனவுதான். நம்பிக்கையின் பேரிலும், யூகத்தின் பேரிலும் இயற்கையை, மனிதர்கள் திருத்தி அமைக்க முயல்வது பேதமை. அண்ணா ஹஜாரே தனது கிராமத்தில் செய்ததைப் போல உள்ளூர் முயற்சிகளை ஊக்குவித்தாலொழிய 'நீர் சேமிப்பு’ என்பது நம் நாட்டில் சாத்தியமில்ல

நன்றி - பசுமை விகடன்