Monday, April 25, 2011

விகடகவி - அமலாபால்-ன் கன்னிப்படம் - சினிமா விமர்சனம்

http://i.indiaglitz.com/tamil/news/vikatakavi220411_1.jpg
ஆடிமாசம் குழந்தை பிறந்தா குடும்பத்துக்கு ஆகாது என்ற நெகடிவ் வசனத்தோடும்,அதே கருத்து உள்ள பாட்டோடும் படம் தொடங்குது.. பத்தாம்பசலித்தனமான இயக்குநரோ என கவலைப்பட்டுக்கொண்டே தான் படம் பார்த்தேன்.. ..

படத்தோட ஓப்பனிங்க்ல ஒரு கிராமத்து பள்ளிக்கூடத்தை கண் முன் கொண்டு வந்து நிறுத்தி சிறார்கள் செய்யும் சில்மிஷங்களை காமெடி கலாட்டாவாக 40 நிமிடங்கள் காட்டும்போதே நினைச்சேன்.. அண்ணன் கிட்டே சரக்கு கம்மி போலன்னு.. மெயின் கதைக்கு வந்ததும் படம் பிரேக் அடிச்ச தேர் மாதிரி டக்குன்னு நிக்குது.. 

படத்தோட கதை என்ன? ஒரு கிராமம்.. அதுல சின்ன வயசுல இருந்தே ஒண்ணா படிச்ச 2 பொண்ணுங்க, 3 பசங்க அதுல ஒரு பையனும் ,பொண்ணும் லவ் பண்ணறாங்க.. ( வேற என்ன பண்ணுவாங்கன்னு நாம எதிர்பார்க்கமுடியும்?)பொண்ணோட அப்பா வில்லன்.. நரி மாதிரி திட்டம் போட்டு காதலர்களை பிரிக்க நினைக்கறான்.. எப்படி காதலர்கள் ஒண்ணு சேர்றாங்க என்பதுதான் படம். 

 25 வருஷங்களுக்கு முன்னால் வந்திருக்க வேண்டிய படம். அமலா பால் இந்தப்படத்தில் தான் நாயகியாக அறிமுகம் ஆனார்.. ஆனால் இந்தப்படம் கிடப்பில் போடப்பட்டு அதற்குப்பிறகு புக் ஆன சிந்து சமவெளி, மைனா என 2 படம் வந்த பிறகு இப்போ லேட்டா வந்த படம் இது...

http://kollyworld.com/images/stories/news/102009/Vikatakavi_movie.jpg



இங்கிலீஷ் டீச்சருக்கும்,தமிழ் வாத்தியாருக்கும் லவ் ஏற்படுவதையும் அதை மாணவர்கள் கிண்டல் அடிப்பதையும் செம காமெடியாக எடுத்திருக்கிறார்கள் என்றால்.. அடி ஆத்தாடி நீ போகும் பாதை.. பாட்டைப்போட்டு டைமிங்க் அடித்தது தூள்.. 

குட்மார்னிங்க்  என்று மட்டும் ஒரு வெள்ளைத்தாளில் எழுதி டீச்சர் மாணவியை தூதாக அனுப்பி வாத்தியாரிடம் குடுப்பது நம்பவே முடியலை.. அவர் என்ன சீமைலயா இருக்கார்? அடிக்கடி 2 பேரும் சந்தித்துக்கொண்டு தானே இருக்காங்க.(.# மொக்கைப்படத்திலும் லாஜிக் பார்ப்ப்மில்ல?)

படத்தில் தென்பட்ட நல்ல வசனங்கள்


1.  அப்பா - டேய்.. போய் புக்கை எடுத்துப்படி.... 

 மகன் - ஹூம்.. ஆடு மாடு மேய்க்கிறவன் எல்லாம் நமக்கு அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சுட்டான்.. 

2. இந்த ரன்னிங்க் ரேஸ்ல நானும் கலந்துக்கறேன்.. 

 தம்பி நீ செம சோம்பேறி ஆச்சே..இது ஜாக்கிங்க் போட்டி இல்ல தம்பி.. ரன்னிங்க் போட்டி.
http://icdn1.indiaglitz.com/malayalam/news/amala171210_1.jpg
-- 
3.  அப்பா - டேய்.. எங்கேடா போய்ட்டு வர்றே..?

மகன் - வம்பை விலை குடுத்து வாங்கறே,. ம் ம் 

4. கட்டப்பஞ்சாயத்துல என்ன இம்புட்டுக்கூட்டம்?

என் பொண்டாட்டி கேஸ் நடக்குதே... ( அவன் பொண்டாட்டி ஒரு கேஸ்.. கேஸ் நடத்தும் கேஸ் ஹி ஹி )

5. இப்போது நேரம் நெருங்கி விட்டதால் நமது மாண்பு மிகு கலெக்டர் அவர்கள்..... ( டமால்.. வெடி.. )

நிஜமாவே கலெக்டருக்கு நேரம் நெருங்கிடுச்சு..

6.இப்போ என்ன நடந்ததுன்னு டைனோசர் மாதிரி கத்தி ஊரைக்கூட்டறே..?

7. இன்னைக்கு என்ன நாள்?

சனிக்கிழமை..

 அட.. ஞாபகம் வெச்சுக்கரெக்ட்டா சொல்லீட்டியே.. செம மூளை தான்..

8. டியர்.. ஏதாவது பேசுங்க..

ஐ லவ் யூ... 

 வெறும் காத்து தாங்க வருது.. 

9. எனக்கு லவ் மூடு வந்துடுச்சு.. இம்மீடியட்டா என்னை லவ் பண்ணு .. 

 அய்யோ என்னை வீட்ல வைவாங்க.. 

http://1.bp.blogspot.com/-PcS2SljOfq0/TavojdzdPuI/AAAAAAAABFM/8tKW4RQoq_w/s1600/kungumam_75.jpg


படத்தில் ரசனையான காட்சிகள்

1. செம காமெடியான ஆனால் ஏகப்பட்ட குறும்புகள் செய்து ஊர் மக்களுக்கு தொல்லை கொடுக்கும் 5 பேரையும் விரட்ட அநாதை விடுதிக்கு நிதி திரட்டி குடுக்கும் சீன்...

2. கேஸ் சிலிண்டரை குக்கர் என நினைத்து விறகு அடுப்பில் அதை வைக்கும் மாணவியின் அப்பாவித்தனம்... சத்துணவு  ஆயா டமால் ஆவது... ( அந்த அளவுக்கு மடச்சியா இருப்பாங்களா? யாராவது என எண்ண வைத்தாலும் சீனில் தெறிக்குது காமெடி)

3. பொண்ணுங்க 4 பேரு நடந்து வரும்போது பசங்க கூட்டம்ல ஒருத்தன் ஒரு பேனாவைப்போட்டு யார் இந்தப்பேனாவை எடுக்கறாங்களோ அவ தான் என் ஆள் என உதார் விட ஸ்கூல் கக்கூஸ் காரம்மா அதை எடுப்பது .. 

4. ஏதோ ஒண்ணு சொல்ல நினைச்சேன்  பாடல் காட்சியில் திராட்சைத்தோட்டத்தை அழகு ரசனை பொங்க காட்டியதும்.. அந்தப்பாடலில் அமலா பாலின் அழகு முக பாவனைகளும்.. 

5. அமலாபாலின் மாமா அவரை காதலிக்க சொல்லும்போது உப்பு மூட்டை தூக்கத்தெரியுமா? என விளையாட்டாக கேட்கையில் அமலாபாலை உப்பு மூட்டையாக தூக்காமல் மளிகைக்கடையில் உப்பு மூட்டை தூக்கி பயிற்சி எடுப்பது..  ( அம்புட்டு அப்பாவியா அவரு.. சின்னத்தம்பி பிரபு தோத்தார் போ)


இயக்குநருக்கு சில கேள்விகள் ( மைனஸ்)

1. சொத்துக்காக ஆசைப்பட்டு அக்கா கணவரையே போட்டுத்தள்ளும் வில்லன் அடுத்த சீனே சாமான்யன் போஸ்ட்டில் இருந்து ஜமீன் தாரர் ஆவது எப்படி?

2. தன் அப்பாவின் கபட நாடகம் புரியாமல்  ஹீரோயின் காதலனை வெறுப்பது ஓக்கே.. ஆனால் எனக்கு உங்களை விட அப்பா தான் முக்கியம் என பஞ்ச டயலாக் பேசி கொல்வது எதற்காக? 

3. அமலாபாலும், ஹீரோவும் ஒரு பாறையில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள் ( அடச்சே வெறும் பேச்சுத்தானா? )அப்போ ஹீரோ ஷேவ் செய்யப்பட்ட முகத்துடன் இருக்கிறார்.. அப்போ ஃபிரண்ட்ஸ் வர்றாங்க.. கூப்பிட்டதும் அவர் பாறையை விட்டு இறங்கி வர்றார்,, இப்போ அவருக்கு அக்னி நட்சத்திரம் கார்த்திக் மாதிரி தாடி..???? ( கண்ட்டினியூட்டி மிஸ்ஸிங்க்)

படத்தில் ஒரே ஒரு ஆறுதலான அம்சம் அமலாபால் 18 3/4 வயசுல இருந்தப்ப எடுத்த படம்.. அவரது அபார இளமை கொள்ளை அழகு.. 

பாடல்கள் சுமார்.. எல்லா டெக்னிக்கல் அம்சங்கள் ரொம்ப சுமார்.. திரைக்கதை ஜவ்வு.. படம் எல்லா செண்ட்டர்களிலும் ஒரு வாரம் தான் ஓடும்

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன்  மார்க் - 35

எதிர்பார்க்கப்படும்  குமுதம் ரேங்க்கிங்க் - சுமார்

 ஈரோடு ஸ்டார் தியேட்டர்ல படம் பார்த்தேன்

டிஸ்கி - அமலாபாலின் கன்னிப்படம் என்றால் முதல் படம் என அர்த்தம்.. ஹி ஹி .