Saturday, April 23, 2011

விகடன் VS நாமக்கல் எம் ஜி ஆர் பேட்டி - காமெடி கும்மி

 http://tamil-actress.net/wp-content/uploads/2010/10/Sonia_Agarwal.jpgஏரியாவுக்குள் கட்-அவுட்களில் இரட்டைவிரல் களால் மூக்கைச் சுண்டியபடி போஸ் கொடுக்கிறார் தலைவர்!

என்னது? இவரும் தலைவரா? இந்த நாடு எத்தனை  தலைவரைத்தான் தாங்கும்?

நாமக்கல்வாசிகளோ இவர் செய்யும் டார்ச்சரில் டர்ர்ராகிறார்கள். ''என் உண்மையான பேரு சுப்ர மணி. எனக்கு வயசு 53. விவரம் தெரிஞ்ச வயசுல எம்.ஜி.ஆரைப் பார்த்த பின்னாடி, 'சுப்ரமணி’யை தூக்கிப் போட்டுட்டு எம்.ஜி.ஆர்-னு பேர் வெச்சிக் கிட்டேன். காலேஜ் படிக்கிறப்ப பசங்க என்னை, 'எம்.ஜி.ஆர். மாதிரி சும்மா தகதகனு மின்னுற’னு சொல்லுவாங்க.

ஏன்? உடம்பெல்லாம் கரகாட்டக்காரி மாதிரி ஜிகினா ஒட்டிக்கிட்டே திரிவீங்களா?


காலேஜ் முடிச்சிட்டு மஞ்சள் தூள் வியாபாரம் செஞ்சிட்டு இருந்தேன்.


 அடடா... மஞ்ச மாக்கான்னு யாரும் நக்கல் அடிக்கலை?


அப்பதான் இதய தெய்வம் இந்த மண்ணைவிட்டு மறைஞ்சார்.

 நல்லவேளை அவர் உங்களைப்பார்க்கலை... 



எம்.ஜி.ஆர். இல் லாத இந்த மண்ணுலகம் வேஸ்ட். அதனால நானே எம்.ஜி.ஆர் ஆக மாற முடிவு செஞ்சேன்.

அய்யய்யோ .. அப்போ நடிகை லதா வீட்டுக்கு போனிங்களா?
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhNTItADvyMOreOkZAYBZKll6gKsnQYXtPyX91pGF4QisrLkWdY3dqZQftGFf-53fUznksYH_spLNghqvRKD3qSnjhvqmUjy4VbOWZJfHvP3bWcQlkR1sQFin3VI9bqI5Bs9aC8KAvPWaE/s1600/sonia_agarwal_latest_hot_stills_images_02.jpg
அப்ப இருந்து இந்த எம்.ஜி.ஆர். கெட்- அப் தான்.
ஆரம்பத்துல எம்.ஜி.ஆர். பாட்டுக்கு நானே காட்டு மேட்டுல சுத்தி டான்ஸ் ஆடி, கத்திச் சண்டைப் போட்டு அதை வீடியோவுல பதிவு செஞ்சேன்.

 ஆமா.. பார்த்தோம். படு கேவலமா இருந்துது



 ஆனா, பல் வரிசை மட்டும் எனக்கு தலைவர் மாதிரி இல்லை. அதனால ஒரு பல் டாக்டரைப் பார்த்து, 'எம்.ஜி.ஆர். மாதிரி பல் வரிசை எனக்கு வேணும். எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை’னு சொன்னேன்.

 நல்ல வேளை பல் வரிசையை மாத்துனீங்க..



 பல டாக்டர்கள் பயந்து ஒதுங்கிட்டாங்க.

 டாக்டர் மட்டுமா? நர்சுங்க கூட பயந்து ஓடி இருப்பாங்களே..?


 தஞ்சாவூர்ல இருக்கிற ஒரு டாக்டர் மட்டும் ஓ.கே சொல்லி, ஆபரேஷன் செஞ்சாரு. எம்.ஜி.ஆர். மாதி ரியே எனக்கும் பல் வரிசை வந்துடுச்சு.

அடங்கொன்னியா...

அப்புறம் காது. அதுதான் ரொம்ப முக்கியம். எம்.ஜி.ஆருக்கு காது, கன்னத்தோட ஒட்டி இருக்கும். புகழ் பெற்ற நடிகர்கள் எல்லோருக்குமே அப்படிதான் இருக்கும்.

காது ஒட்டி இருக்கறவனெல்லாம் புகழ் பெற்ற நடிகன்னா எல்லாரும் பிளாஸ்டிக் சர்ஜரி  பண்ணிக்கிட்டு அலைவானுங்களே..?

ஆனா, எனக்கு காது விரிஞ்சிக்கிட்டு இருந்தது. அதுக்கும் ஆபரேஷன் செய்ய முடிவு எடுத்தேன். டாக்டர்கள் சிலர், 'உயிருக்கே ஆபத்து’னு பயமுறுத்தினாங்க. உயிரே போனாலும் சரினு பயப்படாமல் ஆபரேஷன் பண்ணி காதையும் தலைவருக்கு இருந்த மாதிரியே மாத் திக்கிட்டேன்.



 உயிர் போயிருந்திருக்கனும்.. மவனே தப்பிச்சுட்டே.. 
அடுத்த ஆபரேஷன்... அது சினிமாதான்! 'இதயத்தில் ஒருவன்’ படபிடிப்பு. கதை, வசனம், இயக்கம் எல்லாமே நான்தான். ஹீரோவும் நானே.

புரொடியூசரும் நீங்க தானே..? வேற எந்த கூமுட்டையன் பணம் போட வருவான்? 

என் வாழ்க்கை வரலாறுதான் படத்தோட கதை. அந்தமான் சோனியானு ஒரு பொண்ணைத் தேடிப் பிடிச்சு கதா நாயகியா நடிக்கவெச்சேன். சும்மா சொல்லக் கூடாது... 'சொக்கவைக்கும் சோனியா’ அந்தப் பொண்ணு.

 சோனியா அகர்வால் இந்த பேட்டியை படிச்சா மனசொடிஞ்சு போயிடுவார் பாவம்.. 

ஒரு வழியாப் படத்தை உலகம் பூராவும் ரிலீஸ் பண்ணிட்டேன்.

ஆமா.. பெரிய எந்திரன் படம் ரிலீஸ் ஆகி இருக்கு


நல்ல ரிசல்ட் வந்துட்டு இருக்கு.

 என்ன 4 காட்சிகள் ஓடிடுச்சுன்னா?


அடுத்த  படமும்  ரெடி!  பெயர்...  ரோபோ எம்.ஜி.ஆர்!''
 http://www.extramirchi.com/gallery/albums/south/actress/surthihassan/SruthiHassan9.jpg

 உதை வாங்காம அடங்க மாட்டீங்க போல.. 

 ஈரோடு ஸ்டார் தியேட்டர்ல இந்த காமெடி பீஸ் நடிச்ச நாமக்கல் எம் ஜி ஆர் படம் ரிலீஸ் ஆகி அடுத்த நாளே எடுத்துட்டாங்க.. காமெடி பண்றதுக்கும் ஒரு அளவு இருக்குல்லா.. லத்திகா சீனிவாசன் கூட தேவலை.. ஹி ஹி