1. அனுஷ்கா: ஆறடி
உயர அழகியின் ஆரம்ப கால எடை 108 கிலோவாம். (அடேங்கப்பா.. 80 கிலோவா இருக்கறப்பவே இம்புட்டு அழகா இருக்காரே....அப்போ 108 ல? # ஒரு வேளை ஆம்புலன்ஸ்க்கு 108 வெச்சது கூட.....)
யோகா டீச்சரான பிறகு 80-க்கு வந்திருக்கிறார். (என்னது? யோகா டீச்சரா? பார்த்தா மோகா டீச்சர் மாதிரி இருக்காரு..?)
காலையில் இட்லி, தோசை வெளுப்பார். மதியம் பறப்பன, ஊர்வன, நீந்துவன அனைத்தும் டைனிங் டேபிளில் ஆஜர். இரவு அரை டஜன் சப்பாத்திகளை அசால்ட்டாய் உள்ளே தள்ளுவார். 'சிங்கம்’ படப்பிடிப்பில் அம்மணியின் ஒரு நாள் சாப்பாட்டு செலவு 3,000-த்தைத் தாண்டியதாம். விழித்திருக்கும் நேரம் எல்லாம் குடித்துக்கொண்டே இருப்பார், மினரல் வாட்டரைத்தான்! (குடி மகளே... பெரும் குடிமகளே... ஏ ஏ .. நான் கொடுக்கட்டுமா? அதை உனக்கு..?)
2. த்ரிஷா: காலையில் முட்டையில் உள்ள வெள்ளைக் கருவை மட்டும் எடுத்து பிரட் ஆம்லெட். மதியம் கொஞ்சூண்டு சாதம் சப்பாத்தி டூ பீஸ். இரவு ஆயில் இல்லாத சில்லி சிக்கனுக்கு தொட்டுக்க சப்பாத்தி. ஏதாவது பார்ட்டிக்குப் போனால், ஃபுல் கட்டு கட்டுவார்.
(அடேங்கப்பா.. ஃபுல் கட்டா? கேப்டனை விட பெரிய ஆள் தான் போல..)
ஷூட்டிங் கேன்சல் என்றால், காலை டிபன் கட். ஏன்னா அம்மணி எந்திரிப்பதே லஞ்சுக்குத்தான்! ( ஆமா , படுக்கறதே காலைல 6 மணீக்குத்தான்.. அது வரை பார்ட்டி, டேன்ஸ்,டிஸ்கொத்தேன்னு சுத்த வேண்டியது...)
3. ரீமாசென்: காலையில் சான்ட்விச் ப்ளஸ் ஆம்லெட். மதியம் கொஞ்சம் சாதம், பாதி வேகவைத்த காய்கறிகள், தொட்டுக்க மட்டன் சுக்கா. இரவு பீட்ஸா, தந்தூரி சிக்கன். அவ்வப்போது சுற்றிலும் இருப்பவர்கள் கண்களில் மண்ணைத் தூவிவிட்டுக் காணாமல் போய்விடுவார், சீக்ரெட்டாக சிகரெட் பிடிக்க!
(ஓஹோ.. தம் பார்ட்டியா?புண் பட்ட மனதை புகை விட்டு ஆற்றாரா?)
4. ஸ்ரேயா: காலை, தோசையை கவுன்ட் பண்ணாமல் லபக்குவார். பர்கரைப் பார்த்துவிட்டால், குழந்தையாய் குதிப்பார்.
(ஹி ஹி நல்லா குதிக்கட்டும்..ரசிப்போம்... )
ஜூஸ் வகைகளை ஜூஸ் செய்வதில் கில்லாடி, அடிக்கடி அருந்துவது மாதுளம் பழச்சாறு. மதியம் சப்பாத்தி ஒன்லி. இரவு பிரட் ஆம்லெட், ப்ளஸ் சிக்கன். வெயிட் போட்டா... டயட்!
5. அசின்: காலை ஓட்ஸ் கஞ்சி மட்டும். மதியம் மட்டன் பிரியாணி வளைத்துக் கட்டுவார். இரவு சப்ப£த்தி கொஞ்சூண்டு, மீன் வகையறா ஜாஸ்தி. அசின் அழகுக்கு, கடல் வாழ் உயினங்கள்தான் காரணமாம்!
இப்படி ஃபிகர் உருவாகக்காரணம் சாகர்?
6. தமன்னா: காலை சான்ட்விச் வித் ஆம்லேட். மதியம் ஒயிட் ரைஸ் சிக்கன் கிரேவி. இரவு சப்பாத்தி, முட்டையின் வெள்ளைக் கரு. ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவை வெஜிடபிள் சூப், அம்புடுதேன்!
(வெஜிடபிள் சூப் அரை லிட்டர் குடிப்பாரோ...?)