Saturday, April 09, 2011

விகடன் VS விக்ரம் -ன் தெய்வத்திருமகன் - காமெடி கும்மி

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhUXZdasBkREM6X5evceiVKs15rGtSfhLnXrQEjaiaNELbDIX16-CVDtgGFBOq4QomwsEknWTKVJoHJIT5wIaadhL3bfmtTmA-wfRVe4c0sjQQ0Z7SrkZu73KHQsPF2BemhYmUANIj1x-yD/s1600/amala_paul.jpg
''இந்தப் படம் விக்ரமோட விஸ்வரூபம். 'சேது’, 'பிதாமகன்’ படங்களில் அவர் பண்ணி வெச்சிருக்கிற ரெக்கார்டுகளை அவரே இதில் அடிச்சு உடைச்சிருக்கார். கதையும் கேரக்டரும் முடிவானதும் நான் யோசிச்ச ஒரே ஹீரோ... விக்ரம்தான். என்னோட எதிர்பார்ப்பை 100 சதவிகிதம் நிறைவேற்றி இருக்கார். டெல்லியில் தேசிய விருதுக்கு ஆர்டர் சொல்லிரலாம்!'' - சந்தோஷமாகச் சிரிக்கிறார் டைரக்டர் விஜய்.

இப்படிவிருது கிடைக்க்ப்போகும் படம்னு  சொன்னா படம் ஓடாதே....

விக்ரம் நடிக்கும் 'தெய்வத்திருமகன்’ போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளுக்கு நடுவே நடந்தது இந்தச் சந்திப்பு.
1. ''எடை குறைந்து, முகம் மாற்றி இருக்கும் விக்ரம் போட்டோக்களைப் பார்த்தாலே, ஆச்சர்யமாக இருக்கிறதே...''

''இது என் கனவுப் படம். இந்தப் படத்துக்காக நானே ஒரு குழந்தை மாதிரி மாறி இருக்கேன். உங்களையும் ஒரு குழந்தையா மாத்தி, வேறு ஒரு உலகத்தைக் காட்டப் போறேன்.

 அய்யா.. ஜாலி.. அப்போ யாரும் தியேட்டர்ல டிக்கெட்டே எடுக்க வேண்டியதில்லையா? .. ஹி ஹி 


படத்தில் விக்ரமின் மனசின் வயசு அஞ்சு. அந்த வயசுக்கு உண்டான மன வளர்ச்சி மட்டுமே உள்ள ஆளா வர்றார். ஒரு குழந்தைக்கு இருக்கிற அதிகபட்சமான கேள்வி 'பட்டாம்பூச்சிக்கு யார் கலர் அடிச்சாங்க?’ங் கிறதுதானே? அப்படி ஒரு குழந்தைதான் விக்ரம். 

சுத்தி நடக்கிற எதுவும் அவருக்குத் தெரியாது. யாருக்கும் எந்தக் கெடுதலும் நினைக்கத் தெரியாது... முடியாது. கள்ளம், கபடம், காமம், பொறாமை, வக்கிரம்னு எதனோட நிழலும் படாமல் சிரிக்கிற ஒரு குழந்தையா வர்றார் விக்ரம். 

அப்படி ஒரு மனசு, உலகத்தில் ரெண்டே பேருக்குத்தான் கிடைக்கும்.  ஒண்ணு... ஞானி. இன்னொண்ணு... குழந்தை. எல்லோராலும் ஞானி ஆக முடியாது. ஆனா, யார் நினைச்சாலும், குழந்தை ஆக முடியும்!


உலகத்தோட அசிங்கங்கள் தெரியாம இருக்கிறவங்களை நாம மன வளர்ச்சி இல்லாதவங்கன்னு சொல்றோம். நான் அவங்களை 'தெய்வத்திருமகன்’னு சொல்றேன்!''

 மோகன்லால் நடிச்ச ஒரு மலையாளப்படம் + அமிதாப் நடிச்ச ஒரு ஹிந்திப்படம் இவற்றின் உல்டான்னு சொல்றாங்களே.. அதை சின்னப்புள்ளத்தனமான குற்றச்சாட்டா நினைச்சுக்கலாமா?  ... 
2. ''கேட்கவே நல்லா இருக்கு... படத்துக்காக நிறைய மெனக்கெட்டு இருப்பீங்கள்ல?'' 

''நானும் விக்ரமும் நிறைய ரிசர்ச் பண்ணினோம். 

 அப்போ படத்தோட ஹீரோயின்ஸ் அனுஷ்காவும், அமலா பாலும் உடன் இருந்தாங்களா?  ஹி ஹி..

மன வளர்ச்சி குன்றிய வங்களோட உலகத்தைப் பார்க்கிறதுக்கு 'உதவும் கரங்கள்’ வித்யாகர் நிறைய உதவி பண்ணினார். விக்ரம் சார், ஒரு மாசம் அவங்களோடு பழகினார். அவர் இல்லைன்னா... இந்தப் படத்தை நான் செய்து இருக்கவே மாட்டேன். அவ்வளவு அழகா அந்த கேரக்டரை உள்வாங்கிட்டார். ஷூட்டிங்கில் நிறைய இடங்களில் நான் கட் சொல்ல மறந்து நிற்கும் அளவுக்கு, நடிப்பைக் கொட்டியிருக்கார் விக்ரம்.

அப்போ படத்துல எடிட்டிங்க்ல கோட்டை விட்டிருக்கீங்களா?


உடல் மெலிஞ்சதால், நிறைய உடல் உபாதைகள் அவருக்கு இருந்தன. பொறுக்க முடியாத தலைவலி வரும்.

ராவணன் படம் பார்த்தப்போ எங்களுக்கு இருந்தா  மாதிரியா? 

விருப்பப்பட்டதைச் சாப்பிட முடியாது. எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டார். 14 கிலோ எடை குறைச்சார். அப்படியே அஞ்சு வயசுப் பையனோட பேச்சு, சிரிப்பு, குரல், பாடி லாங்வேஜ்னு அத்தனையும் மாத்தி அவர் வந்து நின்னப்போ... பிரமிச்சுட்டேன்.


இந்தியாவின் தலைசிறந்த நடிகர்களில் விக்ரம் ஒருத்தர். ஒவ்வொரு டைரக்டரும் அவரோடு ஒரு படம் பண்ணணும்கிறது என்னோட வேண்டுகோள்!''



3. ''இதில் அனுஷ்கா - அமலா பால்னு டபுள் தமாக்காவுக்கு என்ன வேலை?''


''நிச்சயமா மூணு ஃபைட், நாலு ஸீன் படம் கிடையாது. 

சீனா?.... ஓ.. ஸீனா?

ஹீரோயின் விஷயத்தில் பெரிய சர்ப்ரைஸ் இருக்கு. அனுஷ்கா தமிழில் தொடர்ந்து நடித்தால், சாவித்திரி, ரேவதி, சுஹாசினி அளவுக்குச் சிறந்த நடிப்பைத் தர முடியும். அதற்கான தகுதிகள் அவங்ககிட்ட உண்டு. 

அந்த 3 நடிகைங்க மேல உங்களுக்கென்ன கோபம்?

எல்லாரையும் சிரிக்கவைக்கிற சந்தானம், இந்தப் படத்தில் சிரிக்கவும் அழவும் வைப்பார். படத்தின் இன்னொரு ஸ்பெஷல் ஜி.வி.பிரகாஷ். எங்க கெமிஸ்டரி இதில் அடுத்த கட்டத்துக்குப் போயிருக்கு. குழந்தையா இருக்கிறதைவிட பெரிய சந்தோஷம் உலகத்தில் உண்டா?


நம்ம எல்லாருக்கும் குழந்தையாகும் வாய்ப்பு கிடைச்சிருக்கு. 'தெய்வத்திருமகன்’ உங்களை, என்னை, நம்மை இன்னும் அழகாக்கும்னு நம்புகிறேன்!''

நம்புங்க நம்புங்க.. நம்பிக்கை தானே வாழ்க்கை...