Thursday, April 07, 2011

DISTRICT 9 - வேற்றுக்கிரக வாசிகள் கதை - ஹாலிவுட் சினிமா விமர்சனம்

http://pacejmiller.files.wordpress.com/2009/08/district9poster.jpg?w=321&h=475
போஸ்டர்ல கிங்க் காங்க், த லார்டு ஆஃப் த ரிங்க்ஸ் படத்தை எடுத்த இயக்குநரின் படம் அப்படின்னு சிலாகிச்சு இருந்ததாலயும்,  ஈரோடு வி எஸ் பி தியேட்டர்ல இந்தப்படம் போட்டிருந்ததாலயும் போனேன்...,(என்னது ?ஓப்பனிங்க்லயே ஒரு தன்னிலை விளக்க மன்னிப்பு..?)

ஏலியன்ஸ் வகையறா படங்கள்  ரிலீஸ் ஆனப்ப ஆரம்பத்துல ஒரு பிரமிப்பை ஏற்படுத்துனது நிஜம் தான் .. அது கேப்டன் கட்சி ஆரம்பிச்சப்ப கிடைச்ச ஓப்பனிங்க் வரவேற்பு மாதிரி... ஆனா இப்ப கழுதை தேஞ்சு கட்டெறும்பு ஆன கதையா,அழகி மோனிகா சிலந்தி மோனிகா ஆன கதையா,கதை கந்தல் ஆகிடுச்சு.. வடிவேல் எல்லாம் வந்து கேப்டனை பொளந்து கட்ற மாதிரி... 

சரி.. படத்தோட கதை என்ன?வேற்றுக்கிரக வாசிகள் ஃபாரீன்ல ஒரு ஊர்ல விண்கலம் மூலமா வந்து இறங்கறாங்க.. அங்கேயே டேரா போடறாங்க.. அவங்க வந்து இருக்கறதே பூமியோட ஆயுத பலம், படை பலம் எல்லாத்தை பற்றியும் ஆராய்ந்து நோட் ஸ் எடுக்கத்தான்...
http://cinemaverytasty.com/wp-content/uploads/2009/07/district9_biggun.jpg
ஆனா அந்த ஏரியா மக்களுக்கு பீதி.. இவங்க இங்கே இருக்கக்கூடாது.. அப்புறப்படுத்தனும்னு ஒரே ஆர்ப்பாட்ட்டம்... ஒரு ஆராய்ச்சிக்குழு வருது.. அதுல நம்ம ஹீரோ இருக்காரு.. அவர் ஆராயும்போது வை கோவை அம்மா துரத்தி விட்ட மாதிரி எதிர் பாராத சம்பவம் ஒண்ணு நடக்குது..


அதாவது ஏதோ ஒரு திரவம் அவர் மேலே பட்டுடுது... ஆராய்ச்சிக்குழுவுல இருந்த 27 பேர் மேல படாம ஏன் ஹீரோ மேல மட்டும் அது பட்டுச்சு அப்ப்டி எல்லாம் கேட்கப்படாது... ஊர்ல 1008 பர்சனாலிட்டி பசங்க இருக்கறப்ப தலையே சீவாம, தாடி வெச்சு, பல்லு கூட விளக்காத பர தேசியை ஹீரோயின் லவ் பண்ணுதே அந்த மாதிரி தான் இதுவும்..

அந்த திரவம் பட்டதால அவர் ஆஃப்பாயில் ஆறுமுகம் மாதிரி பாதி மனிதன், பாதி ஏலியன்ஸ் ஆகிறார்... 

http://passionforcinema.com/wp-content/uploads/district-9-warning.jpg

அவர் நிலைமை என்ன ஆச்சு? அவரோட மனைவியை அவர் எப்படி சமாதானப்படுத்துனாரு... இந்த கருமாந்தரத்தை எல்லாம் தில் உள்ளவங்க படம் பார்த்து தெரிஞ்சுக்குங்க..

வேற்றுக்கிரகவாசியை வடிவமைத்த ஆர்ட் டைரக்டரை இங்கே கூட்டிட்டு வந்து டி ஆர் படம் பத்து காண்பிக்கனும்.. சீரியசா படம் எடுக்க சொன்னா காமெடி பண்ணீட்டு.. ராஸ்கல்..

அந்த ஏலியன் முகத்தை க்ளோசப்ல பார்த்தா 4 நாள் சாப்பாடு இறங்காது.. ( 5வது நாள் மட்டும் இறங்கிடுமா..?)
http://shadesofcaruso.files.wordpress.com/2010/01/basterdsending.jpg

கேனத்தனமாக திரைக்கதை அமைத்த இயக்குநரிடம் கிறுக்குத்தன்மான சில கேள்விகள்

1.  ரெண்டு வருஷமா டேரா போட்டும் அந்த ஏலியன்சால ஒண்ணுமே கண்டு பிடிக்க முடியலையா?

2. ஏலியன்சில் ஆண், பெண் பேதம் இருப்பதைக்காண்பிக்க தோற்றத்தில் வித்தியாசம் காட்டினால் போதாதா? லேடி ஏலியன்சுக்கு ஜாக்கெட், பெட்டிகோட் போட்டு விட வேண்டுமா? ( பக்கத்து சீட் ஆள் அப்போ கண்டிப்பா சீன் இருக்கும்னு நம்பிக்கையா சொல்றான்.. )

3.ஏலியன்ஸ் தேசத்தின் பாதுகாப்புக்கு கேடு விளைவிப்பதாக சந்தேகப்பட்டால் அப்பவே ராணுவம் போட்டுத்தள்ளலாமே.. மனித உரிமைக்கமிஷன் எதிர்ப்பதாக சீன் வெச்சு இருக்கீங்களே.. அவங்க தான் நம்ம கிரகத்து ஆள் கிடையாதே...

4. ஹீரோவின் மனைவியிடம் ஹீரோவின் மாமனார் “ உன் கணவன் வேற்றுக்கிரக பெண்ணோடு தகாத உறவு வைத்ததால் தான் அப்படி ஏலியன்ஸ் போல் ஆகிட்டான் என கதை கட்டி விடுகிறாரே.. அதற்கு என்ன காரணம்..?அதைக்கூட நம்பிடலாம்.. அந்த முட்டாள் மனைவி  (பெரும்பாலும் மனைவிகள் எல்லாம் முட்டாள்களாகத்தான் இருப்பாங்க என்பது வேற விஷயம்.. ) அதை அப்படியே நம்பிடறாளே.. அது எப்படி?




http://images.allansgraphics.com/picture/2/t/tania_van_de_merwe_district_9-8113.jpg
5.ஆராய்ச்சிக்கூடத்தில் வைத்து ஹீரோவை கேள்வி கேட்கும் விசாரணை அதிகாரிகள்  திடீர் என சேம் சைடு கோல் போடுவது எப்படி?

6. படத்தின் பெரும்பாலான காட்சிகள் டமால் டுமீல் என ஒரே இரைச்சலாவே இருக்கே.. அது எதுக்கு..? ஆக்‌ஷன் படம்னு லேபிள் குத்திக்கவா?

7. வேற்றுக்கிரகவாசிகளிடம் பூமி ஆட்கள் பண்டமாற்றாக உணவு கொடுத்து ஆயுதம் வாங்கற சீனை எல்லாம் கேனயன் கூட நம்ப மாட்டான்.. அவ்வளவு ஏன்? ஒரு காங்கிரஸ்காரன் கூட நம்ப மாட்டான்.. 

8.. ஏலியன்ஸ் வெச்சிருக்கற ஆயுதத்தை மனிதனால் யூஸ் பண்ண முடியாது .. ஓக்கே.. ஆனால் ஏலியன்ஸ் மட்டும் மனிதனின் ஆயுதத்தை யூஸ் பண்ணுதே அது எப்படி?

9. எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பு வெச்ச மாதிரி ஒரு சீன்.. ஏலியன்சை அழிக்க வந்த ராணுவத்தினர் ஏலியன்சிடம் ஒரு பேப்பரை நீட்டி “ இதுல ஒரு சைன்( SIGN) பண்ணுங்க என கேட்பதுதான்.. அது என்ன கூட்டணிக்கட்சி பேச்சு வார்த்தையா? கையெழுத்து கேட்க...?
 http://www.joblo.com/images_arrownews/mr44.jpg
படத்துல ஹீரோயினை எதுக்கு ஒப்பந்தம் பண்ணுனீங்க.. அவர் ஒரு சீன்ல கூட ஹீரோ கூட சந்தோஷமாவே இல்லையே...  அவங்க 2 பேரும் சந்தோஷமா இருந்தாத்தானே ரசிகர்கள் சந்தோஷமா இருப்பாங்க.. ரசிகர்கள் சந்தோஷ்மா இருந்தாத்தானே டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் சந்தோஷமா இருப்பாங்க.. அட போங்கப்பா. கோடிக்கணக்குல செலவு தான் பண்ணத்தெரியுது.. போட்ட காசை எப்படி வசூல் பண்றதுங்கற சூட்சுமம் தெரியலையே...

 கேமரா, எடிட்டிங்க்,சவுண்ட் ரெக்கார்டிங்க், இசை எல்லாம் மகா மட்டம்... 

மொத்தத்துல 50 ரூபா தண்டம்..