Wednesday, April 06, 2011

தி மு க vs அ தி மு க டஃப் ஃபைட் - லயோலா காலேஜ் கருத்துக்கணிப்பு முடிவு - காமெடி கும்மி

ழக்கம்போலவே பரபரப்பான தேர்தல் கணிப்​பை வெளியிட்டு
http://athikalai.files.wordpress.com/2010/12/kalaiger-paradu.jpg
இருக்கிறது, சென்னை லயோலா கல்லூரி மக்கள் ஆய்வகம்!  ஆறு மாதங்களுக்கு முன்பு, இவர்கள் நடத்திய கருத்துக் கணிப்பில் ஆளும் கட்சிக்குப் பாதகமான முடிவுகள் வந்ததாகவும், 'அதை வெளியிடக் கூடாது’ என ஆளும் தரப்பால் மிரட்டப்பட்டதாகவும் தகவல் பரவியது!


இவ்வளவுதானா? ஒண்ணும் பிரச்சனை இல்ல.. ஆளும் கட்சியே ஜெயிக்கும்னு மேட்டர் போட்டுட்டு கீழே சின்னதா இவை யாவும் கற்பனையே... அப்படின்னு போட்டிருக்கலாம்.. 


ஆனால், மக்கள் ஆய்வகத்தின் சார்பில் அதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், கடந்த மாதக் கடைசியில் நடத்தப்பட்ட கள ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளார், மக்கள் ஆய்வக இயக்குநர் பேராசிரியர் ராஜநாயகம்.


''எதிர்வரும் சட்டப் பேரவைத் தேர்தலில், அ.தி.மு.க. அணிக்கு 48.6 சதவிகிதமும் தி.மு.க. அணிக்கு 41.7 சதவிகிதமும் வாக்குகள் கிடைக்கும். பெரும்பான்மை இடங்களை அ.தி.மு.க. அணி கைப்பற்றும் என 51.1 சதவிகிதத்தினரும், தி.மு.க. அணிதான் கைப்பற்றும் என 36.7 சதவிகிதம் பேரும் கூறியுள்ளனர்.


அய்யய்யோ... அம்மா ஓவரா ஆட ஆரம்பிச்சுடுவாங்களே.. 

மாவட்டம், தொகுதி அளவிலான நிலைமைகளை வைத்துக் கணக்கிட்டால், 5 சதவிகிதத்துக்கும் அதிகமான வாக்குகளுடன் அ.தி.மு.க-வுக்கு சாதகமாக 105 தொகுதிகளும், தி.மு.க அணிக்கு சாதகமாக 70 தொகுதிகள் வரையும் இருக்கின்றன. 59 தொகுதிகளில் இரு தரப்புக்கும் கடும் போட்டி நிலவுகிறது'' என்கிறது, இந்த ஆய்வு முடிவு.

டஃப் ஃபைட் 59ல ஆளுக்கு பாதின்னு கணக்கு போட்டாக்கூட அம்மா வந்துடுவாங்க போல இருக்கே.. அய்யய்யோ...


''இப்போதைய கணிப்பு முடிவு, அ.தி.மு.க அணிக்குச் சாதகமாக இருக்கிறது என்றாலும், கடும் போட்டி நிலவும் தொகுதிகளில் தேர்தல் வியூகத்தின் மூலம் தி.மு.க.வு-க்கு சாதகமாக முடிவுகள் மாறவும் வாய்ப்பு இருக்கிறது...'' என்றும் சொல்லப்பட்டு உள்ளது.

 தேர்தல் வியூகம்னா ஓட்டுக்கு ரூ 5000 தர்றதா பேசிக்கறாங்களே.. அதானே..?


''தேர்தல் அறிக்கை, சுமுகமான தொகுதிப் பங்கீடு, சரியான வேட்பாளர் தேர்வு, சிறுபான்மையினர் ஆதரவு, டி.வி., பத்திரிகை விளம்பரம், தெரு முனைக் கூட்டம் - பொதுக் கூட்டம், தலைவர்களின் பிரசாரம் போன்ற வியூகங்களில் தி.மு.க அணி மக்களை ஈர்த்திருக்கிறது.

 எனக்கென்னவோ இலவசம், ஓட்டுக்கு பணம் இந்த 2 மேட்டர் தான் அய்யா முன்னிலை வகிக்க ஒரு (இரு) காரணமா இருக்குமோன்னு டவுட்டா இருக்கு.




உட்கட்சிப் பூசல்கள் இல்லாதது, போஸ்டர், பேனர் விளம்பரம், வாக்காளருடன் நேரடிச் சந்திப்பு ஆகியவற்றில் அ.தி.மு.க அணி முன்னிலையில் இருக்கிறது.

இன்று ( 6.4.2011) கோவைல அம்மா+ கேப்டன் இணைந்த கைகள் போல போஸ் குடுத்து பிரச்சாரம் நடக்கப்போகுதாம்.. அங்கே என்னென்னெ காமெடி நடக்கப்போகுதோ..?


வியூகம் வகுத்துச் செயல்படுவதில் தி.மு.க-வின் எழுச்சியும் வீச்சும் இப்போதைய கணிப்பில் மாற்றத்தை ஏற்படுத்தும்!'' என்கிறார்கள்.

கள்ள ஓட்டு போடறது, பண பட்டுவாடா பண்றது இதுல எல்லாம் கழகத்தோட  வியூகம் பிரமாதமா இருக்குமே..?


ம.தி.மு.க-வின் தேர்தல் புறக்கணிப்பு முடிவால் ஏற்படும் தாக்கம் பற்றிக் கேட்டபோது, ''இந்தப் புறக்கணிப்பால் அ.தி.மு.க-வுக்குத்தான் பாதிப்பு'' என 25.4 சதவிகிதத்தினரும் ''ம.தி.மு.க-வுக்குதான் பாதிப்பு'' என 7.4 சதவிகிதம் பேரும் ''தி.மு.க. அணிக்கு பாதிப்பு'' என 3.8 சதவிகிதம் பேரும் ''யாருக்கும் பாதிப்பு இல்லை!'' என 53.6 சதவிகிதத்தினரும் கருத்துக் கூறியுள்ளனர். ''கடும் போட்டி நிலவும் தொகுதிகளில் ம.தி.மு.க எடுக்கப்போகும் நிலைப்பாடும் முக்கியத் தாக்கத்தை ஏற்படுத்தும்'' என்பதும் இந்தக் கள ஆய்வின் முக்கிய முடிவுகளில் ஒன்று!

 வை கோ வின் தேர்தல் புறக்கணிப்பு நிச்சயம் அம்மாவுக்குத்தான் பாதிப்பு.. தி மு க வுக்கு 1% கூட பாதிப்பு இல்லை.. வை கோவுக்கான 4% ஓட்டுல 2 % ஓட்டு தி மு க வுக்கு விழ  வாய்ப்பு இருக்கு.. ஆனா 0.0001% கூட அம்மாவுக்கு விழ வாய்ப்பில்லை...


ஆய்வு முடிவை வெளியிட்ட பேராசிரியர் ராஜ​நாயகத்திடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.


1. ''ஊழல் விவகாரம் பற்றிய கேள்விகளே இந்த ஆய்வில் இல்லையே?''

''மக்கள் எதைப் பிரச்னையாகக் கருதுகிறார்கள் என்பதுதான் எங்கள் ஆய்வின் அணுகுமுறை அடிப்படை. நாங்கள் சந்தித்த மக்கள், ஊழலையும் ஒரு பிரச்னையாகச் சொன்னார்கள். அரசுத் துறைகளின் ஊழல், முதல்வர் குடும்பத்தின் சொத்து, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலைப் பற்றி எல்லாம் பொதுவாகப் பேசுகிறார்கள். ஆனால், இதை வைத்துத் தேர்தலைத் தீர்மானிப்பதாக அவர்கள் சொல்லவில்லை.''

மக்கள் மனம் விசித்திரமானது.. கடைசி நேரத்தில் அது திடுக் முடிவுகளை எடுக்கக்கூடும்... 

2. ''தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளுக்கு வரவேற்பு எப்படி உள்ளது?''

''எல்லா இடங்களிலும் சுவர், சுவரொட்டி விளம்பரங்​களை மிகவும் குறைவாகவே பார்க்கமுடிந்தது. இதனால், பெரிய கட்சியின் வேட்பாளர் பெயர்கூட மக்களிடம் அறிமுகம் ஆகவில்லை. பொதுக் கூட்டம் நடத்தும்போதுதான், பெயர்களையே மக்களால் தெரிந்துகொள்ள முடிகிறது. சிறிய கட்சிகள், சுயேச்சை வேட்பாளர்களைப்பற்றி எந்தப் பகுதியிலும் யாருக்கும் தெரியவில்லை. தேர்தல் ஆணையத்​தின் கெடுபிடியால், பெரும்பாலான இடங்கள் இறுக்கமாக இருக்கின்றன. இதுபோன்ற நடவடிக்கைகளை 'ஜனநாயக விரோதம்’ என்று கணிசமானவர்கள் கருத்துக் கூறினார்கள்.


கடந்த  ஒன்பது நாட்களில், 11 இடங்களில் தேர்தல் ஆணையத்தினர் எங்களின் வாகனங்களையும் சோதனை இட்டனர். நாங்கள் அதை கேமராவில் பதிவுசெய்ய... 'நம்பளையே படம் பிடிக்கிறாங்க!’ என்று கிண்டல் செய்தார்கள். நேர்மாறாக, ஒரே ஒரு அதிகாரி, 'ஏன் சோதனை செய்கிறோம்?’ என எங்களுக்கு ஒரு பேட்டியே கொடுத்தார்!''


விட்டா கழகத்தினர் அவங்களுக்கு பொட்டியே குடுத்திருப்பாங்க.. 

3. ''எத்தனை தொகுதிகளுக்குப் போய் வந்தீர்கள்... பரவலான நிலவரம் என்ன?''

''39 மக்களவைத் தொகுதிகளுக்கு உட்பட்ட 117 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்குச் சென்றோம். பெரும்பாலான இடங்களில் அ.தி.மு.க. அணிக்கு சாதகமான நிலைதான்.

இதில், தெற்கு மாவட்டம், மேற்கு மாவட்டம், வடக்கு மாவட்டம் எனக் குறிப்பிட்டுச் சொல்லும்படியான வேறுபாடு இல்லை!


அதே சமயம், தி.மு.க-வின் தேர்தல் வியூகங்கள் அ.தி.மு.க. அணியைவிட அதிக அளவிலான மக்களிடம் சென்ற​டைந்து இருக்கிறது. இவர்களின் 'ரீச்’சை மக்கள் எப்படி எடுத்துக்கொள்கிறார்கள் என்பதைப் பொறுத்துத் தேர்தல் முடிவு அமையலாம்!''

 இப்படி எல்லாம் குழப்பக்கூடாது... அம்மாவா? அய்யாவா? வெட்டு ஒண்ணு .. மஞ்சள் துண்டு ரெண்டு... என பதில் வேணும்..