Wednesday, April 06, 2011

டோனி ஜோ வின் ONG BAK 3 - ஹாலிவுட் சினிமா விமர்சனம் 18 கூட்டல்

http://inyourhonour1989.files.wordpress.com/2011/03/ong-bak-3.jpg
A

புரூஸ்லீ,ஜாக்கிசான்,ஜெட்லீ வரிசையில் தானும் வந்துடனும்னு டோனி ஜோவுக்கு ரொம்பவே ஆசை...அப்புறம் ஒரு படம் ஹிட் ஆச்சுன்னா உடனே ரசிகர்கள் சலிக்கும் வரை பாகம் 2 பாகம் 3 அப்படின்னு கொலையா கொன்னெடுக்க எல்லா நாட்டு தயாரிப்பாளர்களும் ரெடியா இருக்காங்க... அந்த வகைல  வந்த லேட்டஸ்ட் படம் தான் இது.. 

படத்தோட கதை என்ன?ராஜா காலத்து கதை..மன்னரின் உயிரை பதவிக்கு ஆசைப்பட்டு தளபதி விஷம் வைத்துக்கொன்று மந்திர வாதியின் உதவியுடன் அரியணை ஏறுகிறான். ,..பின் அந்த தளபதியை கொன்று  மந்திரவாதி மன்னர் ஆகிறான்.. கடைசில அந்த மந்திரவாதியை ஆரம்பத்துல கொலை செய்யப்பாட்டாரே ஒரிஜினல் மன்னர் அவரோட ரியல் வாரிசு கொன்று பழி தீர்க்கிறார்...ஸ்.. ஸ். அப்பா.. முடில ... 


அமரர் சாண்டில்யன் கதையை தெலுங்குல சிரஞ்சீவியை வெச்சு எடுத்தா எப்படி இருக்கும்? அதே மாதிரி தான் இருக்கு.. படத்துல திரைக்கதை சரி இல்லை... 


http://www.doblu.com/wp-content/uploads/2011/02/ong3bak4952.jpg

திரைக்கதையில் உள்ள லாஜிக் ஓட்டைகள்

1. தளபதி மன்னருக்கு விஷம் கலந்த பானத்தை தரும்போது உடனே மன்னர் அதைக்குடிக்கிறார்.. அது எப்படி? அந்த காலத்தில் எல்லாம் மன்னர் உணவோ, மதுவோ அருந்தும் முன் ஒரு டெஸ்ட் ஈட்டர்  (TEST EATER) உண்டே.. சமைத்தவரோ,பரிமாறுபவரோ சாப்பிட்ட பின்னால் தான் மன்னர் சாப்பிடுவார்..

2. மன்னரை கொன்றவுடன் தளபதி மன்னரின் வாரிசாக உள்ள இளவரசரை போட்டுத்தள்ளாமல் சித்திரவதை செய்து சிறையில் அடைத்திருக்காரே.. ஏன்? அவரையும் ஈஸியா போட்டிருக்கலாமே.. ( அப்புறம் எப்படி ஹீரோ பழி வாங்கறது?)

3. இளவரசரை ராஜதுரோகி என்று குற்றம் சாட்டி சிறையில் அடிக்கிறார்களே.. மக்கள் புரட்சி பண்ண மாட்டார்களா?

4. விஜயகாந்த வேட்பாளரை அடிக்கற மாதிரி 100 மடங்கு கடுமையா அடிச்சும் இளவரசர் உயிரோட இருப்பது எப்படி?

5. காலம் காலமா வில்லனை ஹீரோதான் கொல்வாரு.. இதுல எதுக்கு சம்பந்தமே இல்லாம இன்னொரு வில்லன் வந்து பழைய வில்லனை கொல்லனும்?

6.மந்திரவாதி எதுக்காக மன்னர்ட்ட பதவி கேட்கனும்? இது எப்படி இருக்குன்னா ஜெ வலியனா போய் தனக்கு கீழே இருக்கற கூட்டணிக்கட்சிகளிடம் என்னை சி எம் ஆக்குங்கன்னு கேட்கற மாதிரி இருக்கு... 
7. பட்டத்து யானையை மன்னராக மாறிய தளபதி சித்திர வதை செய்வதா படத்துக்கு சம்பந்தம் இல்லாம ஒரு சீன் வருது.. ( அந்த ஒரு சீன் மட்டுமா?)
பிடிக்கலைன்னா போட்டுத்தள்ளவேண்டியதுதானே.. எதுக்கு அவங்களை,அவைகளை சித்திரவதை பண்றேன்கற போர்வைல ஆடியன்சை சித்திர வதை பண்ணனும்?


8.. அட்டு ஃபிகரைக்கூட விடாம பிட்டுப்படத்துல நடிக்க வைக்கிற இந்த கால கட்டத்துல லட்டு மாதிரி ஹீரோயின் கிடைச்சும் அவங்களை யூஸ் பண்ணிக்கலையே ஏன்? ( படத்துல.. )

9. ஹீரோயினை வில்லன் கொலை பண்ற மாதிரி காண்பிச்சு திடீர்னு அதெல்லாம் கற்பனைகள்னு பல்டி அடிச்சு திரைக்கதைல குழப்பம் பண்ணி இருக்கீங்களே .. அது எதுக்கு....?





http://www.lovehkfilm.com/panasia/aj6293/ong_bak_3.jpg 

தலைவலி ஏற்படுத்தும் படத்தில் கூட தட்டுப்பட்ட தலை சிறந்த வசனங்கள்

1.  இந்தப்பதவி உனக்கு எப்படி வந்ததுன்னு எனக்குத்தெரியாதா?நம்பிக்கைத்துரோகத்தின் நாயகனே நீ தானே...? ( வை கோ அம்மாவைப்பார்த்து சொல்ற மாதிரியே இருக்கு..)


2. பஞ்ச பூதங்களையும் அடக்கறது ரொம்ப சுலபம் தான்.. அதுக்கு தேவை தியானம் + விடா முயற்சி

3.  வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு... மன்னனை நீ வஞ்சகமா கொலை செஞ்சது தப்பில்ல்லை.. ஆனா நான் உன்னை நேருக்கு நேர் போரிட்டுக்கொல்வது தப்பா..?



டோனிஜோவுக்கு ஒரே ஒரு அட்வைஸ்.. சண்டைக்காட்சிகள் வடிவமைப்பு மட்டும் நீங்க செய்ங்க.. மற்றபடி டைரக்‌ஷன் எல்லாம் வேணாம்.. எடுபடலை.. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்... 

ஈரோடு ராயல் தியேட்டர்ல இந்தப்படத்தை  பார்த்தேன்..