1. தமிழக பா.ஜ., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன்: விவசாயத்திற்கு தனி பட்ஜெட் போடப்படும். நெல், கரும்புக்கு பணவீக்கத்திற்கு தகுந்தபடி, உடனடியாக குறைந்தபட்ச விலை வழங்கப்படும். காவிரியில் இருந்து, 205 டி.எம்.சி., தண்ணீரை ஆண்டுதோறும் உறுதியாக பெற்று, தமிழக விவசாயிகளின் நலன் காக்கப்படும்.
முதல்ல அத்தைக்கு மீசை முளைக்கட்டும்.....இங்கே அம்மாவும், அய்யாவுமே அடிச்சுக்கிட்டு இருக்காங்க.. இதுல இவரு வேற காமெடி பண்ணிட்டு இருக்காரு...
---------------------------------------
2. தமிழக முதல்வர் கருணாநிதி: சிறுபான்மையினர் இட ஒதுக்கீட்டுக்கு எதிராகவும், அயோத்தியில் கோவில் கட்டுவதற்கு ஆதரவாகவும் பேசிவிட்டு, இப்போது, "முஸ்லிம் இட ஒதுக்கீட்டை உயர்த்தி வழங்குவேன்' என ஜெயலலிதா கூறுவதை, இஸ்லாமியர் நம்ப மாட்டார்கள்.
ஆமா தலைவரே.. இப்பவெல்லாம் நல்லதுக்கு காலம் இல்ல... உண்மையை சொன்னா எவனும் நம்ப மாட்டான்.. ஆனா இலவசம்னு சொல்லுங்க.. உடனே ஓடி வருவான்.. இந்த நாட்டில் கடைசி இளிச்சவாயத்தமிழன் இருக்கும் வரை நீங்க தான் தலைவரே, தமிழ் இனத்தலைவரு,.. ஒண்ணும் கவலைப்படாதீங்க..
----------------------------------------------------
3. பத்திரிகை செய்தி: திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில், தமிழக முதல்வர் கருணாநிதியின் மனைவி ராஜாத்தி, பரிகார பூஜைகள் செய்து வழிபட்டார்.
அது ஓக்கே.. இப்போ 2011ல கலைஞரே முதல்வர் ஆனா நாங்க என்ன பரிகார பூஜை யாருக்கு பண்ணனும்?
----------------------------------------------
4. பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேச்சு: இன்று வீட்டிற்கு வீடு ஆடு, மாடு தருவதாக அ.தி.மு.க., வாக்குறுதி கொடுத்துள்ளது. படித்த, படிக்காத பாமர மக்களான நம்மை மாடு மேய்க்கச் சொல்லி இருக்கிறார் ஜெயலலிதா. மாணவர்கள் அனைவருக்கும், "லேப்-டாப்' வழங்குவதாக கருணாநிதி கூறியுள்ளார்.
செம்மறி ஆடுகள் போல் ஒரே கட்சிக்கு வாக்களிக்கும் தமிழனுக்கு ஒரு அடையாளத்திற்கு ஆடு கொடுப்பது சரிதான்.. எலக்ஷன் முடிஞ்சு அன்புமணிக்கு சீட் தர்லைன்னா இதே நாக்கு எப்படி பேசும்னு எங்களுக்கு தெரியாதா? என்ன?
-----------------------------------------
5. தலைமை தேர்தல் கமிஷனர் குரேஷி பேட்டி: தமிழக அரசியல் கட்சிகள், வாக்காளர்களை கவரும் நோக்குடன் தாங்கள் ஆட்சிக்கு வந்தால், மிக்சி, லேப்-டாப்களை இலவசமாக வழங்கப்போவதாக தங்கள் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி வழங்கியுள்ளன. தமிழக அரசியல் கட்சிகளின் கவலையளிக்கும் இந்த போக்கை, மக்கள் கருத்தில் கொண்டிருக்கின்றனர்.
சார். நீங்க என்ன தான் சொலுங்க.. என்னதான் கஷ்டப்பட்டு சம்பாதிச்சு சாப்பிட்டாலும் , ஓசி சாப்பாடு சாப்பிடறப்ப கிடைக்கற சுகம் இருக்கே...
------------------------------------------
6. ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ பேச்சு: ம.தி.மு.க., உண்மையான ஜனநாயக கட்சி. ம.தி.மு.க.,வின் முடிவால், மக்கள் நல்லெண்ணத்தை கட்சி பெற்றுள்ளது. இந்த காலகட்டத்தில், படித்தவர்களையும் பெருமளவில் கட்சியில் சேர்க்க வேண்டும்.
ம தி மு க எடுத்த முடிவால் மக்கள் நல்லெண்ணத்தை பெற்றுள்ளதுன்னு சொல்லுங்க.. மொட்டையா ம தி மு க முடிவால்னா அண்ணன் கலைஞர் உடனே ம தி மு க முடிந்து விட்டது என தம்பி வை கோவே ஒத்துக்கிட்டாருனு ஒரு அறிக்கை ரெடி பண்ணிடுவாரே...
----------------------------------------
7. மா.கம்யூ., மாநிலச் செயலர் ராமகிருஷ்ணன் பேச்சு: தேர்தல் பிரசாரம் மேற்கொண்டுள்ள முதல்வர், உப்பு சப்பு இல்லாமல் பேசி வருகிறார். என்ன பேசுகிறோம் என்பதையே புரியாமல் பேசுகிறார். அ.தி.மு.க., அணியில் இருந்து எழுப்பப்படும் எந்த ஒரு கேள்விக்கும் பதில் சொல்ல முடியாமல் திணறுகிறார். எந்த ஒரு கட்சியாவது, 119 தொகுதிகளில் போட்டியிட்டு, 118 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க முடியுமா? தோற்பதற்காகவே தி.மு.க., கூட்டணி அமைந்துள்ளது.
வரலாறு தெரியாம பேசாதீங்க.. கள்ள ஓட்டு போடறதுல கழகம் தான் முதலிடம், பணத்தை அள்ளி இறைக்கறதுல கழகமே முன்னிலை...நேர்வழில போறவங்க தான் வெற்றியா? தோல்வியா?ன்னு கவலைப்படனும்.. கழகம் கண்ட வழி குறுக்கு வழி.. ஈசியா ஜெயிச்சுடுவாங்க பாருங்க....
------------------------------------
8. வி.சி., நிர்வாகிகள் கூட்டத்தில், தி.மு.க., அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் பேச்சு: கூட்டணியில் போட்டியிடும் ஒரு கட்சி, கூட்டணியில் உள்ள மற்றொரு கட்சிக்கு ஒழுங்காக வேலை பார்க்கவில்லை என்றால், அந்த கட்சி போட்டியிடும் தொகுதியில் மற்றொரு கட்சி வேலையை காட்டி விடுவாங்க. கூட்டணிக்கு ஒழுங்காக மனசாட்சியோடு வேலை பார்க்க வேண்டும்.
நீங்க காங்கிரஸை மிரட்டறீங்கன்னு தெரியுது... ஆனா இப்போ காங்கிரஸ்தான் கலைஞரை மிரட்டற சீசன்.. அதனால அமுக்கி வாசி அண்ணாத்தே...
-----------------------------------------
9. முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி பேச்சு:தமிழக அரசின் திட்டங்களை எடுத்துக்கூறினாலே போதும், நாம் அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறலாம். அ.தி.மு.க., தேர்தல் அறிக்கை நிதி நிறுவன அறிக்கை போல் உள்ளது. அம்மா என்றால் சும்மா. நாம் கிராமப்புற இளைஞர்கள் அனைவரையும் படிக்க வேண்டும் என்று சொல்கிறோம். ஆனால், அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதாவோ ஆடு மேய்க்க சொல்கிறார். இதனால், அந்த கூட்டணியை முறியடிக்க வேண்டும்.
ஆம்.. அம்மா என்றால் சும்மா.. அய்யா என்றால் அய்யோ....
---------------------------------------
டிஸ்கி 1 - முத ஸ்டில்லுல இலியானா கழுத்துல நாய்க்கு சங்கிலி மாட்டி இருக்கற மாதிரி ஏதோ மாட்டி இருக்கே அது அழகுக்கு மட்டும் இல்ல.. ஒரு பாதுகாப்புக்கும் தான்.. பாப்பா போட்டிருக்கற டாப்க்கு அதுதான் ஸ்டேண்ட்.. ஹி ஹி
டிஸ்கி 2 - ரெண்டாவது ஸ்டில்லுல இலியானா போட்டிருக்கற பாசி மாலை ரொம்ப சின்னதா இருக்கேன்னு யாரும் கவலைப்படவேணாம்.. அதுக்குப்பதிலாத்தான் கோட் பட்டன் மாதிரி 4 பட்டன் பெரிசா டி சர்ட்ல இருக்கே...
டிஸ்கி 3 - ஸ்டில் 3 - இலியானா அவரோட வாழ்க்கைலயே முதன் முதலா தலை சீவி சிங்காரித்த நாள் இதுதானாம். ஞாபகார்த்தமா வெச்சுக்குங்க.. இனி மறுபடி எப்போ தலை சீவுவாரோ...
டிஸ்கி 4 - ரெண்டாவது ஸ்டில்லுல இருந்து நாம தெரிஞ்சுக்க வேண்டிய முக்கியமான இன்னொரு உண்மை ஜாக்கிங்க் போறது உடம்புக்கு நல்லது.. ஆனா ஜாக்கிங்க் போற ஃபிகரை வேடிக்கை பார்க்கறது மனசுக்கு கெட்டது ஹி ஹி ....
டிஸ்கி 5 - கடைசி ஸ்டில்லுல இருக்கற இலியானா நிலைமையும் , தி மு க நிலைமையும் ஒண்ணுதான்.. இலியானா போட்டிருக்கற டிரஸ்ல கை வெச்சுக்கவும் மனசில்ல... கையே வேணாம்னு கை இல்லா ரவிக்கை போடவும் பயமா இருக்கு.. அதனால ரெண்டுங்கெட்டானா கை....
டிஸ்கி 6 - டைட்டிலுக்கு என்ன அர்த்தம்? இலியானாவும் சரி, தி முக கதாநாயகியும் சரி .. பார்க்க நல்லாருக்கும்..கவர்ச்சியா இருக்கும்..ஆனா........