Tuesday, March 29, 2011

என்னது? பவுன் போட்டு பொண்ணு கட்டிட்டு போகனுமா?

Hilarious political cartoon images
1. ம.தி.மு.க., கொள்கை விளக்க அணிச் செயலர் நாஞ்சில் சம்பத்: 2016ம் ஆண்டு பொதுத் தேர்தலில் வைகோவை முதல்வராக்க, இந்தத் தேர்தலில் குறிப்பிட்ட தொகுதியில் வெற்றி பெற வேண்டுமென கனவு கண்டோம். அந்தக் கனவை கல்லெறிந்து கலைத்துவிட்டனர்.

அண்ணன் 10 சீட்டுக்கே தகிந்தினந்தோம் போட்டுட்டு இருந்தாரு.. அதுக்குள்ள 234 தொகுதிக்கு ஆசப்பட்டா எப்படி? கணக்கு போட்டுக்குங்க.. இன்னும் 50 வருஷம் கழிச்சு வேணா ம தி மு கவுக்கு 25 சீட் கிடைக்கும். ஆனா அது வரை கட்சி இருக்கனும்..

----------------------------

2. தலைமைத் தேர்தல் கமிஷனருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்: இந்தத் தேர்தலிலும் ஓட்டுக்காக பணமும், பொருளும் வழங்க, தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணியினர் திட்டமிட்டுள்ளனர். பணம் எடுத்துச் செல்ல, "108' ஆம்புலன்சை பயன்படுத்தப் போவதாக, தகவல்கள் வருகின்றன. இது குறித்து தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முதல் உதவி வாகனத்தை மக்களுக்கு முதல் போட உதவியா கொண்டு போறாங்க.. அதுல என்ன தப்பு இருக்கு?கோடிக்கனக்குல பணத்தை அடிப்பாங்க .. அதை விட்டுடுங்க.. ஏதோ எங்களுக்கு 2000 குடுக்கறது உங்களுக்கு பிடிக்காதே..


--------------------------------------------

http://www.movieinf.com/wp-content/images/2009/07/Hansika-Motwani1.jpg
3. சேலம் மாவட்ட தேர்தல் அதிகாரி: சாதாரண சாப்பாடு 35 ரூபாய், அசைவம் 80 ரூபாய், சைவ பிரியாணி 20 ரூபாய், வெரைட்டி ரைஸ் 15, உப்புமா 18, இட்லி இரண்டு 12 ரூபாய், சப்பாத்தி இரண்டு 18 ரூபாய், பூரி செட் 18, பொங்கல் 18, ரோஸ்ட் 20, புரோட்டா 20, வடை 15, மினரல் வாட்டர் 14, மட்டன் பிரியாணி 100, சிக்கன் பிரியாணி 80, வாட்டர் பாக்கெட் 2, டீ 5, காபி 8, கூல் டிரிங்ஸ் 10, ஆம்லெட் 10 ரூபாய் என, உணவு வகைகளுக்கு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முக்கியமான ஒண்ணை விட்டுட்டியே நைனா.....சரக்கு..?


---------------------------------------------

4. அ.தி.மு.க., எம்.பி., சிவசாமி பேச்சு: ஒரு நாட்டின் வளர்ச்சி, அனைத்து நாடுகளுடனும் நல்லுறவு வைத்துக் கொள்வதில் தான். ஆனால், அண்டை நாடுகளுடன் நம் உறவு திருப்திகரமாக இல்லை. இந்திய அரசு தன் வெளிநாட்டுக் கொள்கையை கூர்ந்து கவனித்து மாற்றிக் கொள்ள வேண்டியது.

எனக்கென்னமோ ஒரு நாட்டோட வளர்ச்சி ஓட்டோட ரேட்டை வெச்சுத்தான்னு தோணுது.. போன எலக்‌ஷன்ல ரூ 2000. இப்போ ரூ 10,000 என பேசிக்கிறாங்க.. அப்போ 5 மடங்கு வளர்ந்திருக்கு...அடி வாங்குன கைப்புள்ள தமிழனுக்கே இவ்வளவுன்னா அடி குடுக்கற கலைஞருக்கு எவ்வளவோ..?
--------------------------------------------------
http://rianai.com/wp-content/uploads/2009/10/Hansika_Motwani_11-500x750.jpg
-5. ராஷ்ட்ரீய லோக்தளம் தலைவர் அஜித் சிங் பேட்டி: அணு ஒப்பந்தத்தை எங்கள் கட்சி கடுமையாக எதிர்த்தது. இந்த விவகாரத்தில், அரசுக்கு எதிராக வெளிப்படையாக ஓட்டளித்தோம். எனவே, அரசுக்கு ஆதரவளிக்க எங்கள் கட்சி எம்.பி.,க்கள் லஞ்சம் பெற்றதாக வெளியான தகவல் அடிப்படையற்றது.

ஓஹோ உங்க எம் பிக்கள் யாருக்கும் கொடுக்காம  எல்லாத்தையும் நீங்களே சுட்டுட்டீங்களா? இது ரொம்ப தப்பு.. எல்லாரும் சரி சமமா பிரிச்சுக்கனும்.. அது தானே நல்ல இந்தியனுக்கு அடையாளம்..?

----------------------------------
6. பா.ஜ., தேசிய செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் பேட்டி: தமிழகத்தில் ஓட்டு வங்கியைக் கருத்தில் கொள்ளாமல், தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் பா.ஜ., தனித்துப் போட்டியிடுகிறது. தென் மாநிலங்களில், கர்நாடகாவிற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் கட்சியை வலுப்படுத்த தனிக்கவனம் மேற்கொள்ளப்படும்.

 உங்க கட்சி ஆளுங்க தினமும் பேரீட்சை சாப்பிட்டாலும் கட்சி வளர்ச்சி அடையாது...ஏன் இந்த  வேண்டாத வேலை..?

------------------------------------------
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjtOYasLEDrghHumtsCvnbBIxJzp_reCPVrV09ykzRsoJDNpWbSsPEm0vMALrexfhWOTBzVU42E0YHAsPeqLN2x-n8e-vqmb_co0TIR0FsSkkMnJoU13BOO3bh3l7PsoZ14xYZi57dbrqg/s1600/HansikaMotwani01.jpg

7. ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் பேச்சு :இந்தியாவில், ஆண்களுடன் ஒப்பிடும் போது, பெண்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இதே நிலை நீடித்தால் சமூகத்தில், வேண்டாத விளைவுகள் ஏற்படும்.

ஆமாமா.. ஏற்கனவே சில  பொண்ணுங்க பண்ற அல்டாப்பு தாங்கல... இதுல அவங்களோட பிறப்பு விகிதம் இன்னும் குறைஞ்சிட்டா  அப்புறம் அவங்க ஓவரா ஆடுவாங்க.. பவுன் போட்டு கட்டிட்டு போக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுடும்..

------------------------------------------------------

8. சமூக சேவகி மேதா பட்கர் பேச்சு: அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் ஒரே மேடையில் நிறுத்தி கேள்வி கேட்கும் முறையைக் கொண்டு வரவுள்ளோம். எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் எம்.பி.,க்கள் சரியாக செயல்படாத போது, அவர்களை திரும்பப் பெறுவதற்கான உரிமையும் மக்களுக்கு கொடுக்க வேண்டும்.

எங்க ஆளுங்களுக்கு லஞ்சம் கேட்கத்தான் தெரியும்.. கேள்வி கேட்டா பதில் சொல்லத்தெரியாதே...அப்புறம் ரிட்டர்ன் பெறும் உரிமையை மக்களுக்கு குடுத்துட்டா வாரா வாரம் எலக்‌ஷன் வைக்க வேண்டி வந்துடுமே..எவன் இங்கே யோக்கியனா இருக்கான்?

--------------------------------------------------
டிஸ்கி 1 - நடிகைகள் போஸ் குடுக்கறப்ப நேரா நிமிர்ந்து நிக்காம ஏன் கூன் விழுந்த மாதிரி இருக்காங்க?ன்னு ரொம்ப நாளா எனக்கு ஒரு சந்தேகம் உண்டு.. ஹன்சிகா மோத்வானியின் முத ஸ்டில்லை பார்த்ததும் அது க்ளியர் ஆகிடுச்சு.. அப்புறம் அவங்க லிப்ஸ்டிக்,இமைகளின் மேல் போட்ட வண்ணப்பூச்சு,சுடி எல்லாமே ஒரே கலர்ல இருக்கறதைப்பாருங்க..இது தான் மேட்சுக்கு மேட்ச்..ஹி ஹி

டிஸ்கி 2 - திருப்பூர் ஜோதிஜி அண்ணன் எலக்‌ஷன்ல நிக்கறதை முன்னிட்டு கிஃப்டா குடுத்த திருப்பூர் பனியன் தான் மேடம் போட்டிருக்காங்க 2 வது ஸ்டில்லுல...தொடர்ந்து அவர் எல்லா நடிகைகளுக்கும் இதே டைப்ல (ஹி ஹி மாடல் நல்லாருக்குல்லா?)பனியன் வழங்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

டிஸ்கி 3 - மேடத்தோட 3 வது ஸ்டில் பெண்களுக்கான விழிப்புணர்வு ஃபோட்டோ.. இள நரை வந்தாlலோ, கிழ நரை வந்தாலோ கறுப்பு மருதாணி தான் தலைக்கு போடனும்.. விவரம் தெரியாம சிவப்பு மருதாணி போட்டா இப்படித்தான் தலை செம்பட்டை ஆகிடும்..இந்த அரிய தகவல் தெரிவிச்சதுக்காக எனக்கு யாராவது அழகு டிப்ஸ் அழகேசன் விருது கொடுத்தா கூச்சமே இல்லாம வாங்கிக்குவேன்.. ( விருது வாங்க எதுக்கு கூச்சம்?)