போலீஸ் எஸ் ஐ செலக்ஷனில் நடக்கும் ஊழல்கள் மற்றும் மோசடிகளை படம் பிடித்துக்காட்ட வேண்டும் என்ற எண்ணம் இயக்குநருக்கு வந்ததைக்கூட சாதாரணமாக எடுத்துக்கொள்ளலாம்.. ஆனால் அதற்காக அவர் மெனக்கெட்டு அமைத்த ஜனரஞ்சகமான திரைக்கதை இருக்கே .. கலக்கல்...
இடைவேளை வரை காதல் ,அதற்குப்பிறகு போலீஸ் செலக்ஷன் ஸ்டோரி என எந்த விதக்குழப்பமும் இல்லாமல் இயக்குநர் சர்வசாதாரணமாக திரைக்கதையை கையாண்ட விதம் பிரமிப்பூட்டுகிறது...
ஹீரோ - ஹீரோயின் சந்திப்பைக்கூட சாதாரண செல்ஃபோன் ரீ சார்ஜ் மேட்டரில் அவர் டெவலப் பண்ணிய விதம் வளர்ந்து வரும் இயக்குநர்களுக்கு நல்ல பாடம்..
வெண்ணிலா கபடிக்குழு ஹீரோ விஷ்ணு இதில் ஆர்ப்பாட்டம் இல்லாமல் ரொம்ப சாதாரணமான தோற்றத்தோடு ,இயல்பாக நடித்து பெயரை தட்டி செல்கிறார்...படத்தில் ஹீரோவுக்கு ஃபைட் இல்லை என்பது கூடுதல் நிம்மதி..
ஹீரோயின் ரம்யா நம்பீசன்.. சுமாரான ஃபிகர்.. நடிப்பு ஓக்கே..இவர் கசாமுசா டிரஸ் எல்லாம் போடாமல் கதையின் கண்ணியத்துக்கு ஏற்றவாறு டீசண்ட்டாக உடை அணிந்து வந்து இயக்குநர் சொன்ன வேலையை கரெக்ட்டாக செய்து பாராட்டை பெறுகிறார்...
படத்தோட கதை என்ன?ஒரு போலீஸ் ஆஃபீசருக்குத்தான் பொண்ணைக்குடுப்பேன் என பிடிவாதம் பிடிக்கும் போலீஸ் ஆஃபீசர் பெண்ணை காதலிக்கும் பையன் தன் அப்பாவுக்கு போலீசையே பிடிக்காது என்ற முட்டுக்கட்டையை தாண்டி எப்படி எஸ் ஐ ஆகி காதலியின் கையைப்பிடிக்கிறான் என்பதுதான்... அதை எந்த அளவு கதையோட்டத்துடன் கூடிய காமெடியுடன் சொல்ல முடியுமோ அந்த அளவுக்கு சுவராஸ்யமாய் சொல்லுவதில் இயக்குநர் டிஸ்டிங்க்ஷனில் பாஸ் ஆகி இருக்கிறார் .
படத்தோட ஓப்பனிங்க்ல அப்பாவின் ஃபோனுக்கு ரீசார்ஜ் பண்ணுவதற்குப்பதிலாக யாரோ ஒரு பொண்ணுக்கு தவறுதலாக ரீ சார்ஜ் செய்ய அந்தப்பெண்ணை பார்த்து அந்த ரீ சார்ஜ் பணத்தை பெறுவதற்குள் அவர்களுக்குள் காதல் ரீ சார்ஜ் ஆகிறது..இந்த சுவராஸ்யமான சம்பவம் படத்தை இடைவேளை வரை கொண்டு போவது ஆச்சரியம் தான்..
கதையுடன் கூடிய காமெடியில் கலக்கும் வசனங்கள்
1. அப்பா - டேய், எனக்கு ஒரு உதவி பண்றியா..?
ஹீரோ - வேலைக்குபோன்னு சொல்லாம எது வேணாலும் சொல்லுங்க.. கேட்கறேன்..
அப்பா - நடக்காததைப்பற்றி நான் எதுக்கு கவலைப்படறேன்..?
2. இங்கே பாரு பசங்களா... மழைக்குக்கூட போலீஸ் ஸ்டேஷன் பக்கம் ஒதுங்கிடக்கூடாது...அது உங்களுக்கு ஞாபகம் வரட்டும்னு தான் நான் இப்படி நடந்துக்கறேன்...
3. டேய்.. வாயை மூடிட்டு சாப்பிடு..
அது எப்படி முடியும்?நீ சாப்பிட்டு காமி...
அய்யோ அப்பா முடியலடா சாமி.. வெற்றிங்கற உன் பேரை ஏன் உன் வீட்ல வெட்டின்னு கூப்பிடறாங்கன்னு இப்பத்தான் தெரியுது...
4. இந்தா.. நான் உன் கிட்டே வாங்குன 10 ரூபா.. சரியா இருக்கான்னு எண்ணிப்பார்த்துக்க...
ஏண்டா.. நீ என்ன 7 ரூபா + 3 ரூபான்னா குடுத்திருக்கே..? ஒரே ஒரு பத்து ரூபாதானே .. எதுக்கு எண்ணி பார்க்கனும்?
5. ஹீரோயின் - நீங்க என்ன பண்றீங்க..?
ஹீரோ - ...................................
ஹீரோயின் - என்னங்க.. இப்படி சும்மாவே இருந்தா எப்படி? பதில் சொல்லுங்க..
ஹீரோ - நான் வேலைக்கு போகாம சும்மா இருக்கேன்கறதைத்தான் அப்படி சிம்பாலிக்கா சொன்னேங்க..
6. எந்த பேங்க்ல அக்கவுண்ட் வெச்சிருக்கீங்க..?
ஹூம்.. என்னை நம்பி ஒரு டீக்கடைல கூட அக்கவுண்ட் வெக்க விட மாட்டேங்கறாங்க...( குமுதம் ஜோக் வெ சீதாராமன்)
7. ஏங்க.. ஆட்டோ எல்லாம் வேணாம்ங்க....
காசு நான் தர்றேன்..
அப்ப சரி.. இப்பவே போலாம்.. ஹி ஹி
8. ஏம்ப்பா.. ஆட்டோ வருமா..?
வந்தா கூட்டிட்டு போ... ( எஸ் வி சேகர் நாடகக்காமெடி- தத்துப்பிள்ளை)
9. ஹீரோயின் தோழி - யார்டி இவன்?
ஹீரோயின் - ஜஸ்ட் ஃபிரண்டுதாண்டி...
ஹீரோயின் தோழி - ஹூம்.. கல்யாணம் பண்ணிக்கப்போறவனையும் இப்படித்தான் சொல்றீங்க.. கழட்டி விடப்போறவனையும் இப்படித்தான் சொல்றீங்க... ( ஆடியன்ஸின் செம க்ளாப்ஸ்#எத்தனை பேர் பாதிக்கப்பட்டாங்களோ)
10. ஹீரோயின் - ஏண்டி.. அவனுக்கு ஃபோன் போட்டு பேசட்டுமா?
ஹீரோயின் தோழி - ஹய்யோ பச்சை மண்ணு.. என்னை கேட்டுத்தான் எதுவும் செய்யும்.. ஹூம்.. நானும் அழகாத்தான் இருக்கேன்.. எனக்கு ஒருத்தனும் மாட்ட மாட்டேங்கறானே..? (எந்த ஒரு மொக்கை ஃபிகருக்கும் ஒரு இளிச்சவாயன் உண்டு , அது இயற்கையின் நியதி #இடைச்செருகல் சொந்த டயலாக் ஹி ஹி - நன்றி குருதிப்புனல் கமல் வசனம்)
11. காது குத்தல் ஃபங்க்ஷன் நல்ல படியா முடிஞ்சுதா..?
ஹூம்.. இவன் நமக்குத்தாங்க காது குத்திட்டான்..லவ்வை டெவலப் பண்ண போயீட்டு வந்திருக்கான்..
12. இப்படி தம் அடிக்க்கறீங்களே... போலீஸ் செலக்ஷன் ல எப்படி ஓடப்போறீங்க?
ரயில் ஓடறதுக்கு முன்னால புகை விடறதில்லையா? எப்படி ஓடறேன்னு மட்டும் பாரு... ( வெ. க.குழு படத்தில் 50 புரொட்டா சாப்பிட்டு ஜெயிக்கும் காமெடியனின் இந்த டயலாக்கிற்கு அரங்கம் அதிரும் கை தட்டல் # தம் பார்ட்டிங்க)
13. ஏண்டா.. காதல் அவ்வளவு சக்தியை தருமாடா..?
அனுபவிச்சுப்பார்த்தாத்தாண்டா அதனோட அருமை தெரியும்..
14. பேசாம நீ என் கட்சில சேர்ந்துடு.. நல்லா வளர்ந்துடுவே...
28 வருஷமா வளராதவனா இப்போ வளரப்போறேன்? அட போங்கப்பா.. (இந்த டயலாக்கை பேசும் காமெடியன் அழகர் சாமியின் குதிரை பட ஹீரோ)
படத்தில் பல சீன்கள் கை தட்டலை அள்ளிக்கொள்கின்றன.... பர்சனல் லோன் வேணுமா? என பிரைவேட் பேங்க் ஸ்டாஃப் கேட்கும்போது எரிச்சலாய் மறுக்கும் ஹீரோ அடுத்த 10 நிமிஷத்துலயே சார் எனக்கு 1500 ரூபா பர்சனல் லோன் வேணும் என கேட்பது செம காமெடி...
மிஸ்டு கால் கொடுக்கும் ஹீரோவை கலாய்க்க ஹீரோயின் ரெடியாக ஃபோனையே பார்த்துக்கொண்டிருக்க கண்ணிமைக்கும் நேரத்தில் ஹீரோ மிஸ்டு கால் கொடுப்பது செம சீன்...
மிஸ்டு காலை உடனே காண தோழி செய்யும் டி வி பக்கத்தில் போய் அலை வரிசை ஆடும்போது டக் என ஆன் பண்ணுவது இயக்குநரின் நுட்பமான பார்வைக்கு எடுத்துக்காட்டு..
இடைவேளை வரை காதலை கலகலப்பாக கொண்டு செல்லும் இயக்குநர் படத்தின் பின் பாதியை அப்படியே சர்வசாதாரணமாக கலர் மாற்றுவது செம..
ஃபர்ஸ்ட் ஆஃப் எடுத்த டைரக்டர் வேற.. செகண்ட் ஆஃப் எடுத்த டைரக்டர் வேற என சொன்னால் கூட நம்பி விடலாம்...அந்த அளவு செகண்ட் ஆஃப்பில் களம் மாற்றம்..
எஸ் ஐ செலக்ஷன் எப்படி நடக்குது? என்பதை இவ்வளவு விலாவாரியாக எந்த தமிழ்ப்படத்திலும் காட்டியதில்லை என்ற அளவிலும் இந்தப்படம் முக்கியமான பதிவை பகிர்கிறது...
காதல் என்பதை முத்தத்தில் சொல்லி விட்டாய்.. மவுனத்தில் உணர்த்தி விட்டாய் பாடல் வரிகள், படமாக்கப்பட்ட விதம் எல்லாமே தரம்.. ஒளிப்பதிவு கண்ணுக்கு குளிர்ச்சி.. எடிட்டிங்க் உட்பட்ட டெக்னிக்கல் சமாச்சாரங்கள் எல்லாம் ஓக்கே ரகம்
.
படத்தில் டைட்டில் தான் சரி இல்லை.. இன்னும் கவித்துவமாய் வைத்திருக்கலாம்.. அதே போல் ஆரம்பத்தில் செல் ஃபோன் ரீ சார்ஜ் செய்யும் பெண்ணிடம் ஹீரோ பேசும் டபுள் மீனிங்க் டயலாக்கை கூட கட் பண்ணி விடலாம்....
இயக்குநர் ஸ்ரீ பாலாஜிக்கு இது முதல் படம்.. சுசீந்தரனின் அசிஸ்டெண்ட் டைரக்டர் ஒரு கண்ணியமான படம் கொடுத்ததற்குப்பூச்செண்டு கொடுத்துப்பாராட்டலாம்..
ஏ செண்ட்டர்களில் 50 நாட்கள், பி செண்ட்டர்களில் 35 நாட்கள், சி செண்ட்டர்களில் 25 நாட்கள் ஓடலாம்..
எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 44
எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க்கிங்க் - நன்று
ஈரோடு அபிராமி தியேட்டரில் பார்த்தேன்.. 140 நிமிடங்கள் ஓடுகிறது...
டிஸ்கி -1. சட்டப்படி குற்றம் - ஆ ராசாவை துவைச்சு காயப்போட்ட படம் - சினிமா விமர்சனம்
டிஸ்கி 2 -
- SUCKER PUNCH - ஹாலிவுட் சினிமா விமர்சனம் 18 கூட்டல்
டிஸ்கி -1. சட்டப்படி குற்றம் - ஆ ராசாவை துவைச்சு காயப்போட்ட படம் - சினிமா விமர்சனம்
டிஸ்கி 2 -
- SUCKER PUNCH - ஹாலிவுட் சினிமா விமர்சனம் 18 கூட்டல்