Monday, March 21, 2011

பங்குனிதேர் உற்சவம் -சென்னிமலையில் ஒரு உற்சாக உலா..?

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEglpO6dgaJc4OFurCXq9JC2YrzJiFKxksuLzLDlPYwcsjaDBVzdT9uBGrsG0HAj86folCq2rsWLZeOutsvd04l5FhDWyhWfu2XgdyQ_LTjLdcYvX6RHD_4pz1xGQKKAYU3idzlBdlthNv1t/s400/thaipusam6_creativespark.jpg 

நேற்று பங்குனித்தேர்த்திருவிழா...வழக்கமா தைத்தேர்க்கு இருக்கற உற்சாகமும், மக்கள் கூட்டமும் இதுல 4 மடங்கு கம்மியா இருந்தது.சென்னிமலையோட மக்கள் தொகை 1,76,000 .அதுல வெறும் 500 பேர் வந்தாக்கூட தேரை இழுக்கலாம்.. ஆனா காலைல 6 மணில இருந்து வேட்டு வெச்சு  7 மணிக்குத்தான் கூட்டம் சேர்ந்தது.வேட்டு சத்தம் கேட்டு அங்கங்கே மனித தலைகள் தெரிய ஆரம்பித்தன.


தைத்தேர்க்கு வெளியூர் ஆட்கள் நிறைய வருவாங்க.. கூட்டம் செமயா இருக்கும்.. ஆனா இந்த தேர்க்கு ஏன் கூட்டம் வர்றது இல்லைன்னு தெரியல..பல வருடங்களாவே அப்படித்தான் இருக்கு..


மக்களிடையே பக்தி குறைந்து வருவதும், அவர்களிடையே  கடவுள் பற்றிய உண்மையான நம்பிக்கை அருகி வருவதும் வருத்தமான விஷயங்கள்.ஏன்னா தனி மனித ஒழுக்கத்துக்கும், சமூக முன்னேற்றத்துக்கும் ஆன்மீகம் தெரிஞ்சோ தெரியாமயோ ஒரு காரணியா இருக்கு.

எப்படின்னா ஒரு ஸ்கூல்ல ஹெச். எம் .கண்டிஷனா இருந்தா அந்த ஸ்கூல்  ஸ்டூடண்ட்ஸ் பங்க்சுவாலிட்டியா இருப்பாங்க.. ஒரு ஆஃபீஸ் அல்லது கம்பெனியின் மேனேஜர் கண்டிப்பானவரா இருந்தா அங்கே வேலை செய்யறவங்களும் ஒழுங்கா வேலை செய்வாங்க..அதே போல் முன்பெல்லாம் கடவுள் பற்றிய பயம் அதிகமா இருந்தது. தப்பு பண்ணுனா சாமி கண்ணை குத்திடும் என்று பயமுறுத்தி வெச்சிருந்தாங்க..

மனசாட்சிக்கு பயப்படாதவன் கூட சாமிக்கு பயப்பட்டான்.சாமி சும்மா விடாது.. தண்டனை உண்டுன்னு பயந்தான்.சின்ன வயசுல நோட் புக்கோ,பேப்பரோ மிதி பட்டா சரஸ்வதி சாமியை அவமானப்படுத்திட்டே.. உனக்கு இனி படிப்பே வராதுன்னு சொல்வாங்க..காசை,அல்லது பணத்தை தெரியாம மிதிச்சாக்கூட லட்சுமி சாமியை அவமானப்படுத்தீட்டே.. உன் கிட்டே செல்வம் தங்காது.. உன் கிட்டே லட்சுமி சேர மாட்டா அப்படிம்ப்பாங்க..
http://www.thedigitaltrekker.com/wp-content/uploads/2009/02/20090208-045908.jpg
ஆனா இந்தக்கால பசங்க கிட்டே பக்தியையோ,உண்மையான ஆன்மீகத்தையோ பார்க்க முடியல..இப்ப இருக்கற தலை முறைகள்ல எத்தனை பேருக்கு தேவாரம், திருவெம்பாவை, திருப்பாவை, கந்த சஷ்டி தெரியும்?


கடவுள் நம்பிக்கை இல்லாதவங்க கூட புராணங்கள், பக்தி இலக்கியங்கள் படிப்பது தப்பில்லை.இப்போ இருக்கற ஆட்கள்ல எத்தனை பேர் திரு நீறை நெற்றி நிறைய இட்டுக்கறாங்க..?அது சும்மா கம கமன்னு வாசம்  வீசுமே.. தலை வலியை காணாம போகச்செய்யுமே..நிறைய பேரு பவுடர் அடிச்சுட்டு ஒரு துளி கீற்று பவுடரை திருநீறு மாதிரி இட்டுக்கறாங்க..

கோயிலுக்குள்ள இளைஞர்களைப்பார்க்கறது அரிதாகி விடுகிறது..ஒரு அசாதாரணமான அமைதி கோயில்ல இருக்கும். பல கஷ்டங்கள், குடும்ப பிரச்சனைகள், ஆஃபீஸ் தலை வலிகள் எல்லாத்துக்கும் ஒரு அரு மருந்தா கோவில் விசிட் நமக்கு கை கொடுக்கும்.

நீங்க சாமியே கும்பிட வேண்டாம்.சும்மா வந்துட்டு போங்க.. 10 நிமிஷம் அமைதியா உட்கார்ந்து பாருங்க..ஒரு மாற்றம் தெரியும்.. மனசுல ஒரு நிம்மதி இருக்கும்.சாமி கும்பிடறவங்க பெரும்பாலும் அவங்களுக்கு என்ன தேவை என்பதை கோரிக்கையா வைக்கிறான்.அதற்கான காணிக்கையை உண்டியல்ல போடறான்.. இதுக்குப்பெயர் பக்தியா?
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiwZICUISpjB2rN7jRhZmg14nYiQjwfWFezMsF5VwlJVAKK7hdPE14jYYdUxNgn6D6sPiZ5L61QfXDwjQ51EB1ERNj7Cq4FCINUjHmWYbbWBPLdgjC0bta0wLScWFoDMKAhxAhcFU0qojU/s1600/SAM_1546.JPG
ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்சோதியை
யாம் பாட கேட்டே யும் வாள் தடங்கன்,
,மாதே வளருதியோ வன் செவியோ நின் செவி தான்
மாதேவன் வார்க்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலி போய்

வீதி வாய்க்கேட்டலுமே விம்மி விம்மி மெய் மறந்து
போதார் அமளியின் கண் நின்றும் புரண்டிங்கன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே
ஈதே எந்தோழி பரிசேலோர் எம்பாவாய்....




இந்தப்பாட்டு திருவெம்பாவைல வருது..மார்கழி மாசத்துல விடியற்காலைல 5 மணிக்கு எழுந்து பச்சைத்தண்ணில குளிச்சு ,நெற்றில பட்டை இட்டுக்கிட்டு வெறும் வேட்டி மட்டும் கட்டி சட்டை இல்லாம குளிர்ல ஈஸ்வரன் கோயிலை சுற்றி வருவாங்க..பாட்டு பாடிக்கிட்டே ..( திருவெம்பாவை)

பாட்டுக்கு அர்த்தம் புரியனும்னு அவசியம் இல்லை.. கேட்டாலே புண்ணியம்னு சொல்வாங்க..

ஒண்ணும் வேணாம் காலைல எழுந்ததும் சுப்ரபாதம் பாட்டு டேப்ல போட்டு கேளுங்க.. மனசுல ஒரு எழுச்சி தோணும்.. மன அமைதி கிடைக்கும்.
http://tconews.files.wordpress.com/2008/07/dsc00863.jpg
அப்புறம் மனிதனின் மிருக குணங்களை  இறைவனின் சந்நிதானம் அடக்க வல்லது. குறிப்பா சைவம் மட்டும் சாப்பிடறவங்க இதை உணர முடியும்.ஒரு உயிரை கொன்று அதன் சதைகளை விரும்பி சாப்பிடும்போது யோசிச்சுப்பாருங்க....நாம இறந்தா அதை சவம் என சொல்றோம்.. ஆனா விலங்கு இறந்தா மட்டன் ஆகிடுது.. அதுவும் டெட் பாடிதான்.. டெட் பாடியை சாப்பிடறோம்னு அருவெறுப்பு மனுஷனுக்கு வரனும்.

நான் ஏன் சைவத்தை பற்றி இந்த அளவு சொல்றேன்னா மனிதனோட உணவுப்பழக்க வழக்கம் அவனோட கேரக்டரை தீர்மானிக்குது..அசைவத்தை தவிர்க்க முடியாதவங்க அதை குறைக்கலாம்..

சபரி மலைக்கு மாலை போடறவங்க மாலை கழுத்துல இருக்கற வரை உத்தமனா இருப்பதும், மாலை கழுத்தை விட்டு இறங்குனதும் பண்ணாத அட்டூழியம் எல்லாம் பண்ணுவதும் நகைக்க வைக்கும் உண்மைகள்.

கோயில் பிரசாதங்கள் செம டேஸ்ட்டாக இருபதற்கு முக்கிய காரணம் அதை சமைப்பவர்கள் அர்ப்பணிப்பு உணர்வோடவும் ,பக்தியோடவும் சமைக்கறதுதான்.இந்த வித்யாசத்திற்கு இன்னொரு உதாரணம் சொல்றேன்.நம்ம அம்மா சமையலை விட மனைவியோட சமையல் டேஸ்ட் கம்மியா தான் இருக்கும் இதுக்கு என்ன காரணம்?
http://img.dinamalar.com/data/aanmeegam/large_160032500.jpg
1. கிட்டத்தட்ட 25 வருஷங்களா நாம அம்மா கைப்பக்குவத்தை சாப்பிட்டு பழகிட்டோம்.

2.மனைவி சமைக்கும்போது சில சமயங்களில் ஏதானும் சண்டை போட்டுக்கிட்டு வேண்டா வெறுப்பா சமைக்கலாம். அந்த வெறுப்புண்ர்வு கூட சமையலில் வந்து விடுமாம்.

கட்டுரை எங்கேயோ ஆரம்பிச்சு இங்கே வந்து நிக்குது..கடவுள் இருக்காரா? இல்லையா? முன் ஜென்மம் என்பது உண்மையா?பொய்யா?கர்ம வினைப்பயன் என்பது என்ன? ஜாதகம் என்பது உண்மையா? வரும் வாரங்களில் பார்ப்போம்.