Sunday, March 20, 2011

ஆனந்த விகடன் VS சீமான் பேட்டி - காமெடி கும்மி



காங்கிரஸ் கட்சிக்கான தொகுதிப் பட்டியலும் வேட் பாளர் விவரமும் எப்போது வெளியாகும் என தொடை தட்டிக் காத்திருக்கிறார் சீமான். 

''ஒரு நாளைக்கு முன்று தொகுதிகள்...
ஐந்து மணி நேரம் தொண்டை கிழியப் பேச்சு... 20 நாட்களில் 63 தொகுதிகளில் வலம்... காங்கிரஸுக்கு எதிராக இப்போதே களம் இறங்கிவிட்டேன். காங்கிரஸோடு கூட்டுவைத்தால், கருவறுக்கப் படுவோம் என்கிற அச்சம் இங்கே இருக்கும் அத்தனை கட்சிகளுக்கும் பிறக்க வேண்டும். அத்தகைய மரண அடியை இந்த முறை காங்கிரஸுக்குக் கொடுப்பேன். 

இந்த அடிபட்ட புலியின் உறுமலில் காங்கிரஸ் என்ன கதியாகப்போகிறது பாருங்கள்!'' - சபதம் போடும் சீமான் கட்சியின் உயர் மட்டக் குழு, ஆன்றோர் பேரவைகளைக் கூட்டி தேர்தல் வியூகங்களில் தீவிரமாக இருக்கிறார். 

 

1. ''தி.மு.க-வின் ராஜினாமா நாடகம் காங்கிரஸிடம் எடுபடாமல் போய்விட்டதே..?'' 

சீமான் - ''தமிழகத்தின் மிச்சம் மீதித் தன்மானத்தையும் காங்கிரஸின் காலடியில் அர்ப்பணம் செய்துவிட்டு வந்திருக்கிறது தி.மு.க. '63 தொகுதிகள் கேட்பது நியாயமா..? அதுவும் தங்களுக்கான தொகுதிகளை அவர்களே தேர்ந்தெடுக்கலாமா..?’ என்றெல்லாம் உரிமைக் குரல் எழுப்பி, முறுக்கிக் கிளம்பினார் முதல்வர். 

அதை வரவேற்று தி.மு.க-வினரே பட்டாசு வெடித்தார்கள். 'உலகத் தமிழர்களின் உளமார்ந்த எண்ணம் ஈடேறிவிட்டதாக’ப் பாராட்டி பொன்னாடை போர்த்திப் பூரித்தார்கள் பலரும். இறுதியில் என்ன நடந்தது? அதே 63 தொகுதிகளில் ஒன்றுகூடக் குறையாமல் நிர்பந்தித்து வாங்கி இருக்கிறது காங்கிரஸ். மீசை முறுக்கி ராஜினாமா கடிதங்களோடு கிளம்பியவர்கள், காங்கிரஸின் ஆசையை நிறைவேற்றிவிட்டு, 'கூட்டணி தொடரும்’ என வெட்கமே இல்லாமல் வெளியே வருகிறார்களே... இந்தக் கேவலமான சரணாகதி தேவைதானா? 

மலை மலையாக சொந்த இன மக்கள் கொன்று  குவிக்கப்பட்டபோதுகூட கருணையையும் சுரணையையும் கணக்கில்கொள்ளாதவர்கள், தேர்தலுக்காகத் திடீர் தன்மானம் காட்டினால் காங்கிரஸே சிரிக்காதா? சீட்டுக்காகப் பதவியைத் துறப்பதாகச் சொன்னவர்கள், ஈழ நாட்டுக்காகத் துறக்க முன்வந்தார்களா?

விசாரணை வளையம் தன் குடும்பத்தைச் சுற்றிவிடக் கூடாது என்பதற்காக கலைஞர் வீசிய மிரட்டல் அஸ்திரம் முனை மழுங்கி விழுந்திருக்கிறது. காங்கிரஸை வீழ்த்துவதற்காகவே தொடங்கப்பட்ட இயக்கத்தை, காங்கிரஸின் காலடியில் விழவைத்த பெருமை கலைஞர் பெருமகனாரையே சேரும்!''

சி பி - கலைஞர் ஒரு ராஜ தந்திரி.. .. எது செஞ்சாலும் ஒரு அர்த்தம் இருக்கும். தமிழ்க்குடும்பத்துக்குத்தான் என்ன செய்வது என அவருக்கு தெரியாதே தவிர.. தன்னோட குடும்பத்துக்கு என்ன பண்ணனும்னு அவருக்கு நல்லாவே தெரியும்.


2. ''காங்கிரஸின் சாதிப்பை முதல்வரின் ராஜ தந்திரத்துக்கு விழுந்த அடியாகக் கருதுகிறீர்களா?'' 

சீமான் - ''கிச்சுக்கிச்சு மூட்டாதீங்க... யார் ராஜ தந்திரி? எம்.ஜி.ஆர். உயிரோடு இருந்த வரை ஆட்சிக் கட்டிலில் அமர முடியாமல் அல்லாடித் தவித்தாரே, இவரா ராஜ தந்திரி? ஜெயலலிதாவிடம்கூட அரசியல் நடத்த முடியாமல் அவர் ஆட்சிக் கட்டிலில் அமர அடிகோலினாரே... இவரா ராஜ தந்திரி? வருகிற, போகிற கட்சிகளுக்கு எல்லாம் ஏழு சீட்டு, இருபது சீட்டு என அள்ளி வழங்கி, எப்படியாவது மறுபடியும் ஆட்சியைப் பிடிக்க மாட்டோமா என அஞ்சிக் கிடப்பவரை அரசியல் ராஜ தந்திரி என்றால், சிரிப்புத்தான் வருகிறது!''

சி பி  - கொடுத்ததெல்லாம் கொடுத்தார்.. அவர் யாருக்காக கொடுத்தார்... ஒருத்தருக்கா கொடுத்தார்.. இல்லை.. அனைவருக்குமே (பங்கு)கொடுத்தார்..


3. ''தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து கனிமொழி உள்ளிட்டவர்களும் களம் இறங்கிக் கைதாகி இருக்கிறார்களே?'' 

சீமான் - ''கனிமொழி மட்டுமா களம் இறங்கினார்... காங்கிரஸ்காரர்களே களம் இறங்கினார்கள். 'தமிழ் மீனவர்கள் தாக்கப்படக் கூடாது’ என ராஜபக்ஷே மட்டும்தான் கொடி பிடிக்கவில்லை. இவர்கள் நாடகப் போராட்டம் நடத்திய அடுத்த நாளே நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடத்தப்பட்டார்கள். இவர்களின் போராட்டத்தாலேயே அவர்கள் விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. திரைக்கதைகளில்கூட இயற்ற முடியாத கற்பனையை இங்கே கடை விரிக்கிறார் கள்.

இதே மீனவப் பிரச்னைக்காகத் தானே நானும் போராடினேன். நான் பேசினால் ஐந்து மாதம் சிறைவாசம்... கனிமொழி பேசினால் ஐந்து மணி நேர சிறைவாசமா? அப்பாவின் கையில் இருக்கும் காவல் துறை, மகளைக் கைது செய்து விடுவித்த கூத்தைப் போராட்டம் எனச் சொல்லாதீர்கள். நாடகத்தாலேயே நாட்டை ஆண்டுவிட முடியும் என நினைக்கிற நயவஞ்சகம் அது!''

சி பி  - இந்தியாவின் இறையான்மைக்கு எதிரா நீங்க பேசுனீங்க..அவங்க என்ன பண்ணுனாங்க..? பாவம்.. அப்பா சொல்லிக்குடுத்ததை கரெக்ட்டா பண்ணுனாங்க..அவங்க அப்பாவுக்கு எதிராவும் பேசலை.. மீனவர்களுக்கு ஆதரவாவும் எதுவும் செய்யலை...


4. ''இந்தத் தேர்தல் களத்தில் நடிகர் விஜய்யின் நிலைப்பாடு எப்படி இருக்கும்?''

சீமான்  - ''விஜய் மட்டும் அல்ல... களத்துக்கு வராத பலருக்கும் இந்த ஆட்சியை அகற்றவேண்டிய ஆவேசம் இருக்கிறது. என்னுடைய நோக்கம் வேறு... விஜய் யின் நோக்கம் வேறு. ஆனால், இருவருமே ஆட்சி மாற்றத்தை விரும்புகிறோம். 

தேளும் ஒரு புழு இனத்தைச் சேர்ந்ததுதான். ஆனால், அதற்கு கொடுக்கு வந்தது எப்படி? பலரும் நசுக்க நசுக்க, தன்னைத் தற்காத்துக்கொள்ள தானாகவே அதற்கு கொடுக்கு முளைத்துவிட்டது. அப்படி கொடுக்கு முளைத்த தேள்தான் விஜய். அவர் என்ன ஆற்று மணலை அள்ளி விற்றாரா? மதுபானத் தொழிற்சாலை தொடங்கி மலை மலையாக பணம் குவித்தாரா? அப்படி இருக்க, அவருக்கு ஏன் இத்தனை பிரச்னைகள்? 

'இளைஞன்’ படம்தான் ஓட வேண்டும்; 'காவலன்’ ஓடக்  கூடாது என ஏன் கட்டுப்பாடு? தன்மானத்துக்காக மூன்று கோடி ரூபாயைத் தூக்கிக் கொடுக்கவேண்டிய இக்கட்டை விஜய்க்கு ஏற்படுத்தியது ஏன்? விநியோகஸ்தரையே தூக்கிக்கொண்டு போன விசித்திரங்களை எல்லாம் விஜய்யால் எப்படிப் பொறுக்க முடியும்?

ஒரு புழுவின் மனதோடு அத்தனையையும் பொறுத்துக்கொண்டவருக்கு அடுத்தடுத்த அவமானங்களும் அடக்குமுறைகளுமே கொடுக்கைக் கொடுத்துவிட்டன. அந்தக் கொடுக்கு, அவர்களைக் கொத்தாமல் விடாது. அதற்காக, விஜய் களத்துக்கு வந்து பிரசாரம் செய்யவேண்டியது இல்லை. அவர் வீட்டுக்குள் இருந்தாலே போதும். அவர் ஆட்சி மாற்றத்தை விரும்புகிறார் என்பது கடைக்கோடி ரசிகனுக்கும் தெரியும்!''

சி பி  - இளைஞன் படம் ஓடுச்சா.. ? செம காமெடி போங்க.. தியேட்டர்ல ஓடுனது 4 காட்சிகள்..ஒரு நாள் மட்டும்தான். இன்னும் கலைஞர் டி வி ல மட்டும் தானே ஓடிட்டு இருக்கு..?விளம்பரமா..?


5. ''ஜெயலலிதா - விஜயகாந்த் கூட்டணியை வலுவானதாகப் பார்க்கிறீர்களா?'' 

சீமான்  - ''ஆட்சி மாற்றத்தை அனைத்துத் தரப்பு மக்களும் விரும்புகிறார்கள் என்பதற்கு இங்கே ஆயிரத்தெட்டு பிரச்னைகள் இருக்கின்றன. தமிழகத்தில் இருக்கும் பெரிய கட்சியான அ.தி.மு.க-வுடன் விஜயகாந்த் இணைந்திருப்பது நிச்சயமான ஆட்சி மாற்றத்துக்கு வழிவகுக்கும்.

இத்தனை வருடங்களாகத் தொடர் போராட்டங்களைச் சந்திக்கும் தே.மு.தி.க. இன்றைக்கு அ.தி.மு.க. கூட்டணியில் 41 இடங்களைப் பெற்று இருப்பது அந்தக் கட்சித் தொண்டர்களை நம்பிக்கையோடு நிமிரவைத்து இருக்கிறது. அவர்களின் உழைப்புக்கான அறுவடைக் காலம்தான் இந்தத் தேர்தல்.


இவர்களோடு அண்ணன் வைகோவும் இடதுசாரித் தலைவர்களும் இணைந்திருப்பது மக்களின் கூட்டணியாக அந்த அணியை மாற்றி இருக்கிறது. இதைச் சொல்வதாலேயே, இரட்டை இலை சின்னத்துக்கு சீமான் ஆதரவு கேட்கிறார் என சொல்லத் தொடங்கிவிடுவார்கள்.

காங்கிரஸை எதிர்த்து நிற்பது இலையாக இருந்தாலும் பம்பரமாக இருந்தாலும் அதைத்தான் ஆதரிப்பேன். இங்கே சின்னம் முக்கியம் இல்லை. எண்ணம்தான் முக்கியம். கலைஞரையும் காங்கிரஸையும் எதிர்ப்பது ஜெயலலிதாவை ஆதரிப்பதற்குச் சமமாகிவிடுமே எனப் பதறுகிறார்கள் சிலர்...

அதைப்பற்றி கவலை இல்லை. அ.தி.மு.க. பார்ப்பன தலைமையிலான கட்சி என்பதற்காக கலைஞரின் அத்தனை கொடுமை களையும் சகித்துக்கொண்டு இருக்க வேண்டிய அவசியம் இல்லை!''

சி பி  - தமிழ்நாட்டின் இரண்டு தீய சக்திகளையும் துரத்த ஐடியா இருக்கா? அதை சொல்லுங்க.. மாத்தி மாத்தி 2 கொள்ளைக்காரங்களுமே நாட்டை கொள்ளை அடிக்க விடனுமா?