Friday, March 18, 2011

முத்துக்கு முத்தாக - வெற்றிக்கு வித்தாக -சினிமா விமர்சனம்

http://www.sivajitv.com/newsphotos/MuthukuMuthaga1.jpg
மாயாண்டி குடும்பத்தார்,கோரிப்பாளையம் ,பாண்டி,பூ மகள் ஊர்வலம் பட வரிசையில் இயக்குநர் ராசு மதுரவனின் 5 வது ஃபேமிலி செண்ட்டிமெண்ட் படமான இது கல் நெஞ்சையும் கரைக்கும், கண் கலங்க வைக்கும் அம்மா, அப்பா பாசக்கதை...இந்த கால இளைஞர்களுக்கு ஒரு பாடமாக வந்திருக்கும் இந்தப்படம் அடையப்போகும் வெற்றி ரவுடியிசக்கதைகளையே நம்பி குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டும் பாடாவதி இயக்குநர்களுக்கான சவுக்கடி,...

அம்மா, அப்பாவாக வாழ்ந்திருக்கும் இளவரசு - சரண்யா ஜோடிகளின் குணச்சித்திர நடிப்பு அருமை.அதுவும் இளவரசின் அண்டர்ப்ளே ஆக்டிங்கும் அவரது பாடி லேங்குவேஜூம் வளர்ந்து வரும் நடிகர்களுக்கு ஒரு பாடம்.

படத்தோட கதை என்ன?5 பசங்க பெத்திருந்தும் கடைசி காலத்துல மருமகள்களின் நயவஞ்சகத்தால் அடைக்கலமோ, பாசமோ கிடைக்காமல் பரிதவிக்கும் பெற்றொரின் கதை தான்...ஏற்கனவே தவமாய் தவமிருந்து, சம்சாரம் அது மின்சாரம்,வானத்தைப்போல போன்ற பல படங்களின் சாயல் இருந்தாலும் இது ஒருகவனிக்கத்தக்க படமே...

படத்தோட ஓப்பனிங்க் சாங்க்ல ஒளிப்பதிவு கண்களை அள்ளுகிறது.அதே போல் ஓப்பனிங்க் ஃபைட் சீனில் பதட்டத்தை ஏற்படுத்தாமல் ஏதோ லவ் தீம் மியூசிக் மாதிரி போட்டு பின்னணி இசையில் ஏன் சொதப்பினார்கள் என்பது தெரியவில்லை.. 


http://monikaonline.in/wp-content/uploads/2011/01/monika-muthukku-muthaga.jpg
கிராமத்து தெம்மாங்குப்பாட்டான  பொண்ணைபார்த்தா விசில் அடிப்பேன்...என்னத்தை பாட்டுக்கு  செமயான கலக்கல் இசை அமைத்து தியேட்டரை எழுந்து ஆட வைத்திருக்க வேண்டாமா? இசை அமைப்பாளர் ரொம்ப வே அடக்கி வாசித்தது ஏனோ..?அந்த பாட்டுக்கு எல்லா ஆண்களும் வேட்டையை அவிழ்த்து அண்டர் டிராயருடன் ஆடுவது மொத்தப்படத்துக்குமான திருஷ்டி...

படம் முன் பாதி வரை கலகலப்பாகப்போகிறது என்றால் அதற்கு முக்கியமான காரணம் சிங்கம்புலி. சாதாரண சீனைக்கூட இவர் செய்யும் அலப்பறைகளால் களை கட்டுகிற மாஜிக் தெரிந்தவர் போல..

.கதைக்களனாக  ஐவரில் ஒருவர் வேன் டிரைவராக வருவதும் அவரது வேனில் மோனிகா பயணிப்பதும் அழகு. ஆனால் நாயகி மோனிகாவை எந்த வித பில்டப்பும் இல்லாமல் சர்வசாதாரணமாக அறிமுகப்படுத்தியதை அகில இந்திய ”அழகி ” பட மோனிகா ரசிகர் மன்றத்தை சார்ந்தவன் என்ற முறையில் இயக்குநரை வன்மையாக கண்டிக்கிறேன்..

அதே இயக்குநர் இன்னொரு  நாயகி களவாணி ஓவியாவுக்கு மட்டும்  ஸ்லோமோஷனில் செம பில்டப்போடு அறிமுக சீன் வைத்தது ஏன்?
ஆனால் தாவணீயில் வந்து கிராமத்துமாணவியாக மனதில் பதிந்த ஓவியா இதில் சிட்டி காலேஜ் கேர்ளாக எடுபடவில்லை.. அதுவும் அவரது ஹேர் ஸ்டை பல காட்சிகளில் சகிக்க வில்லை.

http://narumugai.com/wp-content/uploads/2010/09/oviya-4.jpg
மோனிகா காதலன் தனக்கு கிடைக்கமாட்டான் என தெரிந்து கதறுவது செம நடிப்பு.. அவரது கழுத்து நரம்புகள் புடைக்க கதறும் அந்த சீனில் மோனிகாவின் அர்ப்பணிப்பான  நடிப்பு அட்டகாசம்.

ஐந்து மகன்களில் இருவருக்கு திருமணம் ஆகிறது.. அதில் ஒரு மகன் வீட்டோட மாப்பிள்ளையாக போகிறான்.. அந்த சீனில் அந்த மகன் கண் கலங்கிக்கொண்டே வீட்டை விட்டுக்கிளம்பும் சீன் டாப் கிளாஸ் நடிப்பு....

5 மகன்களிடம் அடி வாங்கும் ஆள் இந்த தேன் கூட்டின் மீது கை வைக்காதீர் என கட் அவுட் வைப்பது செம காமெடி சீன்...அதே போல் வேன் வாடகைக்கு ஆசைப்பட்டு ஒரு கல்யாண ஜோடியையே பிரிக்கும் காமெடியும் கலகல ..
சிங்கம்புலியின் கரிமேடு கருவாயன் கெட்டப் நகைக்க வைக்கிறது..

கிளாமர் ஹீரோயின் என்றால் ஸ்லோமோஷன்ல பேஸ்கட் பால் விளையாட வேண்டும், ஜீன்ஸ் பேண்ட் டைட் டீ சர்ட் போட்டு ஜாக்கிங்க் போக வேண்டும் (அதுவும் ஸ்லோ மோஷன்ல தான்) என்ற கோடம்பாக்கத்தின் மாறாத செண்ட்டிமெண்ட்டை வரவேற்கிறேன்.. (ஹி ஹி கிடைச்ச வரை லாபம்....)

http://monikaonline.in/wp-content/uploads/2011/01/Muthukku-Muthaga-Audio-Launch-monika.jpg

என்ன பண்ணி தொலைச்சே.. என் நெஞ்சுக்குள்ளே ராட்டினங்கள் சுத்துதே  பாட்டுக்கு மோனிகா ஆடும் டான்ஸ் இதம்... பாடல் வரிகள் இலக்கிய நயம். படமாக்கிய விதம் கண்ணியம்..

ஊருக்கு போய் ஹாஸ்டலில் தங்கி படிக்கும் ஒரு பையன் அம்மா சேலையையும், அப்பா வேட்டியையும் ஞாபகத்துக்காகவும் , வாசத்துக்காகவும் எடுத்து செல்வது செம செண்ட்டிமெண்ட் சீன்..

ஒரு சுடிதார் பூ வந்து என்னைத்தொட்டு சென்றது.. என் கன்னம் 2-ல் ஹைக்கூ சொல்லி சென்றது 30 நாளும் பவுர்ணமியே பாட்டுக்கு ஓவியா ஆடும் சீனும் கலக்கலான கொரியோகிராஃபி..

இந்த பாடலுக்கு பிளாக் ஜீன்ஸ் + ஸ்கை ப்ளூ டீ சர்ட்டில் ஓவியா ஆடும்போது.. செம கிளு கிளு..

நாட்டாமை தீர்ப்பை மாத்தி சொல்லு பாட்டுக்கு கிராமத்தின் பெருமையை அறிமுகப்படுத்தும் காமெடி சீன்கள் ஓக்கே ரகம்...
http://img1.dinamalar.com/cini//CNewsImages/NT_145913000000.jpg
முத்துக்கு முத்தான வசனங்களில் நினைவில் நின்றவை...

1. எம் பி பி எஸ் படிச்சுட்டு ஃபாரீன் டாக்டர் ஆகாம் ஏன் இந்த கிராமத்துக்கு வந்தேன்? இங்கே ஜாதிச்சண்டை அதிகம்...நிறைய பேரு வெட்டிக்குவாங்க.. அடிச்சுக்குவாங்க.. 4 காசு சம்பாதிக்கலாம்னுதான்.....

2.  அண்ணே.. உள் குத்து, வெளி குத்து என்ன வித்தியாசம்?

அவங்க ஆள்கள் அவங்களுக்குள்ளேயே அடிச்சுக்கிட்டா அது உள்குத்து.. வெளி ஆட்களை அடிச்சா அது வெளி குத்து...

3.  என்னது வீட்டோட மாப்பிள்ளையாவா..? இது சரி ஆகுமா?

நம்ம பசங்க எப்படி வாழறாங்கன்னு பார்க்கனும்.. எங்கே வாழறாங்கன்னு பார்க்கக்கூடாது..

4. என்னதான் வீட்டுசாப்பாடு ருசியா இருந்தாலும் மாமன் மச்சான் வீட்ல ஓசி சாப்பாடு சாப்பிடற சுகம் இருக்கே,,,.. அடடா...

5.. டே.. எதுக்கு இவ்வளவு பதட்டம்..? முத ராத்திரி ரூம்ல இருந்து வெளில வந்து எதிர்ல இருக்கற பொருளை எல்லாம் தட்டி விடறே.. கைல குடுத்த காபி டம்ளரை தட்டி விட்டே... ஆனா தலைல இருக்கற மல்லைகைப்பூவை தட்டி விடாம இருக்கே..? அதை முதல்ல தட்டி விடடா..

6. எண்ணையை தூக்கி உள்ளே வைடான்னா என்னை தூக்கி உள்ளே உட்கார வைக்கறியா..?

7. ஹீரோ -எந்த அழகான பொண்ணு என் எதிரே வந்தாலும் ஆட்டோகிராஃப் வாங்கறது என் பாலிசிங்க..போடுங்க...

8.சிங்கம்புலி  -எதுக்குய்யா என்னை சுருட்டைன்னு கூப்பிடறீங்க.? சச்சின் டெண்டுல்கர்னு கூப்பிடுங்க..

9.   அண்ணே , என் ஆளு வர இன்னும் 10 நிமிஷம் ஆகும் .எப்படியாவது இவங்களை  சமாளி....

சிங்கம்புலி - ஆமா.. இவனுங்க என்ன கலெக்டர் ஆஃபீஸ்லயா வேலை பார்க்கறானுங்க..?

10. சிங்கம்புலி - வண்டி 10 நிமிஷம் நிக்கும், யூரின் போறவங்க எல்லாரும் போயிட்டு வந்துடுங்க..

யோவ்,, வண்டி கிளம்பியே 10 நிமிஷம் தான் ஆகுது.. அதுக்குள்ளே  யூரின் போன்னா எப்படி வரும்?

11.  சிங்கம்புலி - யோவ்.. இடைத்தேர்தல் வந்தா ஓட்டுக்கு ரூ 10000 கிடைக்கும்.. செத்துத்தொலைய்யான்னா சாக மாட்டேங்கறே.. நீ எல்லாம் என்னய்யா எம் எல் ஏ..?

12. எல்லா நாளும் சண்டேவா இருந்தா ரொம்ப நல்லாருக்கும்.. நாம் எல்லாரும் குடும்பத்தோட சந்தோசமா இருக்கறது  அன்னைக்குத்தானே..

13.  என்னதான் ஏ சி ரூம்ல சாப்பிட்டாலும் அம்மா கையால சாப்பிட்ட மாதிரி வருமா?

14.  சரண்யா - டே.. தம்பி.. காலேஜ்க்கு போ.. படி ஆனா பாஸ் மட்டும் ஆகிடாதே., அப்புறம் எங்களை  பிரிஞ்சு போயிடுவெ...

15.  நாங்கதான் 10 மாசம் சுமந்து பெக்கறோம்..

அடிப்போடி.. உங்களுக்கு அந்த 10 மாசத்தோட முடிஞ்சிடுது மொத்த வேலையும்.. மீதி நாள் பூரா கஷ்டப்படறது நாங்கதான்.. அடுத்த ஜென்மம்னு  ஒண்ணு இருந்தா நான் உனக்கு பொண்டாட்டி ஆகனும், நீ என் புருஷன் ஆகனும். நீ இப்போ நீ  பண்ற சித்திரவதை எல்லாத்தையும் நான் உனக்கு                 பண்ணனும்..

என்ன சாபம் குடுக்கறீங்களா?

கையாலாகாத  ஆம்பளைங்க சாபம் தான் குடுக்க முடியும்.. ( இந்த சீனுக்கு செம க்ளாப்ஸ்.. ஏகப்பட்ட ஆம்பளைங்க பாதிக்கப்பட்டிருக்காங்க போல )
http://tamildigitalcinema.com/wp-content/uploads/2010/05/D-0490.jpg
பல காட்சிகளில் அம்மா செண்ட்டிமெண்ட்டையும், ஆண்களே கண் கலங்க வைக்கும் காட்சிகள் வைத்தும் இயக்குநர் பாராட்டைப்பெறுகிறார்..

மாமனார் மாமியார் வந்ததும் தனது அம்மா வீட்டில் போய் சாப்பிட்டு விட்டு கடையில் டிஃபன் வாங்கி வருவது,பேரனைப்பார்க்க வந்த மாமியார் ஆஸ்துமா பேஷண்ட் என்பதால் தன் குழந்தைக்கும் வந்து விடும் என அவனை அண்ட விடாமல் பண்ணுவது , வீட்டோட மாப்ளையான பையன் அங்கே மரியாதை கிடைக்காமல் மன்ம் ஒடிந்து வந்து அம்மா பசிக்குது சோறு போடு என சொல்லும் இடங்கள் என கண்களை குளம் ஆக்கும் சீன்கள் மட்டும் 13 இடங்கள்.

இயக்குநருக்கு சில கேள்விகள்

1. சொல்லி வைத்தது மாதிரி எல்லா மருமகள்களும் அப்படி கொடூரமாக இருப்பார்களா? யாராவது ஒருவரையாவது பாஸிட்டிவ்வாக காண்பித்திருக்கலாம்..

2. மோனிகாவும், ஹீரோவும் செல் ஃபோன் ரிங்க் டோனில் காதல் பாட்டு ரிங்க் டோன்களை மாற்றி மாற்றி வைத்து வேனில் காதல் தூது விடுவது கவிதையான சீன் தான்.. ஆனால் செல் ஃபோனில் ரிங்க் டோனோ அல்லது மெசேஜோ வந்தால் லைட் எரியுமே.. என்னாச்சு? 

3. க்ளைமாக்ஸ் ஃபைட் சீனில்  பின்னணி இசை அந்தகாலத்து பழைய பாணீயில் ஏன்..?

4. கதைக்களன் திண்டுக்கல்லில் நடப்பது போல் காட்டி இருக்கிறீர்கள். புது மணத்தம்பதிகள் கல் உப்புக்குவியலில் கால் வைத்து மிதிப்பது போல் ஒரு சாங்கிய சம்பிராதய சீன் உள்ளது.. உப்பை தாண்டுவாங்க.. மிதிக்க மாட்டாங்க..

5. க்ளைமாக்சில் அரளி விதை அரைத்த துவையலை  ( பச்சை கலர்)சரண்யா மட்டன் குழம்பில் மிக்ஸ் பண்றாங்க... ஆனா அதே கலர்ல தான் குழம்பு இருக்கு மாற்றமே இல்லை கலர்ல..

6. மருமகள் அரளி விதையை அரைச்சு குடிச்சு சாக வேண்டியதுதானே  என திட்டியதால் மனம் உடைந்த சரண்யா கணவனுடன் சாவது ஓக்கே.. ஆனால் தற்கொலைக்கு தூண்டிய வழக்கு மருமகள்  மீது போடலை.. அவளுக்கு தண்டனையே தர்லையே ஏன்?
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh_txRCodujsFK0B71dlN4xtlPQiunyEcAqqHiqJkebXmXOqjhEaB0T_Pl_pN4hVcD82ZsDas6oP5kcBpYNGYBGdHW67rpIrluwJdKz5zU_FarnQgRbnYJ_LiiEDYqSoleQg9z4azdkO-uk/s320/Kollywood-news-1740.jpg
படம் பார்க்கும் இளைஞர்களுக்கு இயக்குநர் சொல்ல வரும் கருத்துக்கள்

1. கோடி கோடியா கொட்டி கொடுத்தாலும் வீட்டோட மாப்பிள்ளையா போகாதே..ஆரம்பத்துல சுகமா இருக்கும்.. ஆனா போகப்போக மதிக்க மாட்டாங்க..

2. அம்மா, அப்பா செத்த பிறகு அவங்களை நினைச்சு கண்ணீர் சிந்துவதை விட அவங்க உயிரோட  இருக்கறப்பவே அவங்களுக்கு ஏதாவது நல்லது செய்.

படம் முடியற ஸ்டேஜ் வந்ததும் நான் அப்படியே சுத்தி பார்க்கறேன். எல்லாரும் அவசர அவசரமா கண்களை துடைச்சுக்கறாங்க.. அவங்க விடற கண்ணீர் வெளி ஆட்களுக்கு தெரிஞ்சுடக்கூடாதாம்..லைட் போடப்போறாங்கள்ல...
இந்தப்படம் பி  செண்ட்டர்களில்  40 நாட்கள் , சி செண்ட்டர்களில் 20 நாட்கள் ஓடும். ஏ செண்டர்களில் 30 நாட்கள் ஓடலாம்.

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 42

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க் -ஓக்கே

ஈரோடு ஆனூர்ல படம் பார்த்தேன்.. லட்சுமிலயும் போட்டிருக்காங்க..