1. நாட்டு நலனுக்காகத்தான் கட்சி நடத்தறேன்...
காமெடி பண்ணாதீங்க தலைவரே.... நீங்க கட்சியை கலைச்சாத்தான் அது நாட்டுக்கு நலன்.....
--------------------------------------------
2. உங்க மேல சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு நீங்க பதிலே சொல்லலையே...
கண்டு பிடிக்கப்பட்டது கை அளவு... கண்டுபிடிக்கப்படாதது கடல் அளவு...
-----------------------------------------
3. தலைவருக்கு இனப்பற்று அதிகம்னு எப்படி சொல்றே..?
அவரோட ஜாதி ஆளுங்களுக்கு மட்டும் தான் சீட் தர்றாராம்...
-----------------------------------------
4. நான் 25 வருஷமா ஊழல் பண்றேன்...
தலைவரே... அதெல்லாம் கமுக்கமா வெச்சுக்கவேண்டியது...இப்படியா வெள்ளி விழா கொண்டாடி ஊரை கூட்டறது?
---------------------------------------
5. இன்ஸ்பெக்டர! ஆயுதக்கடத்தல் வழக்குல எதுக்கு மளிகைக்கடைக்காரரைப்போய் அரெஸ்ட் பண்ணி இருக்கீங்க..?
அவரு கடைல 100 கிலோ ரவை ஸ்டாக் வெச்சிருந்தாராம்..
-------------------------------------
6.சி பி ஐ ஆஃபீசர்ஸ் ஏன் திக் பிரமை அடைஞ்சு நின்னுட்டாங்க?
ஊழல் எனது பிறப்புரிமை அப்படின்னு தலைவரு உரிமை முழக்கம் இட்டாராம்..
-------------------------------------
7. தலைவருக்கு தன்னம்பிக்கை குறைஞ்சிடுச்சுன்னு எப்படி சொல்றே...?
கட்சில தப்ஸி, தமன்னா இவங்களை சேர்த்துக்கிட்டா ஜெயிச்சிடலாமா? அப்படிங்கறாரே..
-------------------------------------
8. சித்தோடு சதீஷ் அம்மா கட்சின்னு எப்படி சொல்றே..?
மஞ்சள் கலர்ல இருக்குன்னு போஸ்ட் கார்டு கூட யூஸ் பண்றதில்லை...
-----------------------------
9. பேடு பாய்ஸின் டெண்ட்டாக டெம்ப்பிள்ஸ் எல்லாம் மாறி விடக்கூடாதுன்னு ஹீரோ வசனம் பேசறாரே.. என்ன அர்த்தம்? புரியலையே..?
கொடியவர்களின் கூடாரமாக கோயில்கள் ஆகி விடக்கூடாதுங்கற பராசக்தி வசனம் தான்.. ரீ மிக்ஸ்ல அப்படி ஆகிடுச்சு...
----------------------------------
10. தலைவரோட செல் ஃபோன்ல காலர் டியூனாக என்ன வெச்சிருக்காரு..?
அது தெரியலை.. கரகாட்டக்காரி காஞ்சனாவை வெச்சிருக்காரு. அது வேணா தெரியும்...
---------------------------------