1. பத்திரிகைச் செய்தி: சுப்ரீம் கோர்ட்டுக்கு விரைவில் பதிலளிக்க வேண்டிய சூழ்நிலை சி.பி.ஐ.,க்கு ஏற்பட்டிருக்கிறது. அதனால், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக, தி.மு.க., எம்.பி.,யும், முதல்வர் கருணாநிதியின் மகளுமான கனிமொழியிடம் சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர்.
சும்மா கண் துடைப்பு விசாரனை பண்ணுனா நாங்க நம்பிடுவோமாக்கும்?முதல்ல கலைஞர் டி விக்கு சீல் வெச்சு விசாரனை பண்ற வழியைப்பாருங்க...
-------------------------------------------

2. "டிவி' நிகழ்ச்சி தொகுப்பாளரான அரவாணி ரோஸ்: தி.மு.க., அரசில் எந்த திருநங்கைக்கும் அரசு பணி வழங்கப்படவில்லை. அ.தி.மு.க., ஆட்சியின் போது திருநங்கையர்கள் மூன்று பேருக்கு ஜெயலலிதா அரசு பணி வழங்கினார். கருணாநிதிக்கு எதிராக என்னை நிறுத்தினால் போட்டியிடுவேன்.
அதுவுமே அம்மா எதேச்சையா குடுத்திருப்பாரு..அல்லது கலைஞர் ஆட்சியில் இல்லாதது என் ஆட்சியில் நடந்ததுன்னு காட்ட குடுத்திருப்பாரு.. எப்படியோ நல்லது நடந்தா சரிதான்.
-------------------------------------------
-------------------------------------------
3. அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா: கபட நாடகம் நடந்து முடிந்தாகிவிட்டது. இறுதியாக, குட்டு வெளிப்பட்டு விட்டது. அனைவருக்கும் தெரியும் வண்ணம் உண்மை வெளிவந்து விட்டது. "ஸ்பெக்ட்ரம்' ஊழல் மூலம் கிடைத்த பணத்தை, தங்களுக்குள் பங்கு போட்டுக் கொண்ட தி.மு.க., - காங்கிரஸ், தங்கள் வேறுபாட்டைப் போக்கி, தமிழக சட்டசபை தேர்தல் தொகுதிப் பங்கீட்டை முடித்துள்ளன.
ஏம்மா ,சும்மா நடிக்காதீங்க.. 50 சீட்டுக்கு ஓக்கே சொல்லி இருந்தா அவங்க கூட நீங்க கூட்டணி வெச்சிருப்பீங்க.. பச்சைக்கலர் டிரஸ் போட்டுட்டு ஏன் இப்படி பச்சோந்தி மாதிரி பேசறீங்க?
------------------------
------------------------
4, பா.ஜ., மாநில துணைத் தலைவர் எச்.ராஜா பேட்டி: குரல் வளையை நசுக்குவது போல காங்கிரஸ் நடந்து கொண்ட பிறகும், அக்கட்சியுடன் தி.மு.க., கூட்டணி அமைத்துள்ளது. ஊழலின் ஊற்றுக்கண்ணாக உள்ள காங்கிரஸ் செய்த ஊழலில் நான்கில் ஒரு பங்கு தி.மு.க.,விற்கும் உண்டு.
என்னது? வெறும் 25 % தானா? எங்க தானைத்தலைவர் அந்த அளவுக்கு இறங்கி வர மாட்டாரே.. அட்லீஸ்ட் பாதிக்குப்பாதியாவது வாங்கி இருப்பாரே,...
-------------------------------------------
5. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அகில இந்திய பொதுச் செயலர் பிரகாஷ் கராத் பேச்சு: இந்திய மக்கள் முன் இப்போது மிகப் பெரிய இரு பிரச்னைகள் உள்ளன. ஒன்று மிகப் பெரிய ஊழல், மற்றொன்று விலைவாசி உயர்வு. இந்த இரு பிரச்னைகளுக்கு காரணம், மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான அரசும், மாநிலத்தில் தி.மு.க., அரசும் தான்.
பிரச்சனை என்ன?ன்னு எல்லாருக்கும் தெரியுது.. ஆனா அதுக்கான தீர்வு என்ன?ன்னு தான் யாருக்கும் தெரியல...

6. முன்னாள் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா பேட்டி:பணத்திற்கும், பிரியாணிப் பொட்டலத்திற்கும், மது பானத்திற்கும் ஓட்டுகளை அடகு வைக்கும் நிலை இனியும் தொடரக்கூடாது. "என் ஓட்டு விற்பனைக்கல்ல' என்பதை ஒவ்வொரு அரசியல்வாதிக்கும் மக்கள் புரிய வைக்க வேண்டும்.
அது சரி.. இதையும் ஓ சி ல குடுத்து எங்களை வேடிக்கை பார்க்க சொல்றீங்களா?வந்த வரை லாபம்னு வாங்கி போட்டுட்டு போய்ட்டே இருக்க வேண்டியதுதான்.
--------------------------------------------
7. புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி பேட்டி:சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் போட்டியிட இரண்டு தொகுதிகள் கேட்டோம். ஆனால், ஒரு தொகுதி மட்டும் தருவதாகக் கூறினர். எனவே, தி.மு.க., கூட்டணியில் இருந்து வெளியேறி, 40 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளோம்.
ஹா.. ஹா.. ஹா.. இருங்க என்னால சிரிப்பை அடக்க முடியல... எங்க தலைவர் ஒரு சீட் பிச்சை போட்டதை வாங்காம இப்படி சுய மரியாதை அது இதுன்னு ஏன் சார் உடம்பை கெடுத்துக்கறீங்க? எங்க அண்ணன் ராம் தாசை பார்த்தீங்களா? எவ்வளவு கேவலப்படுத்தினாலும் ஒண்ணுமே தெரியாத மாதிரி , எதுவுமே நடக்காதது மாதிரி சிரிச்சுட்டே போஸ் குடுப்பாரு.. நீங்க இன்னும் வளரனும் தம்பி...
----------------------------------------
8. இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலர் டி.ராஜா பேச்சு: ஆண்களுக்கும், பெண்களுக்கும் சம உரிமை வழங்கப்படாத எந்த ஒரு நாகரிகமும் மனித நாகரிகமாகவே ஏற்றுக் கொள்ளப்படாது. அதனால், மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றுவதில் இன்னும் கால தாமதம் கூடாது. மேலும், அதை தள்ளிப் போடுவதை அனுமதிக்க முடியாது. விரைவில், மசோதா நிறைவேறிவிடும் என்ற நம்பிக்கை உள்ளது.
ஆமாங்க ..அப்படித்தான் கடந்த 25 வருஷமா எல்லாரும் நம்பறாங்க... இன்னும் 25 வருஷம் நம்புனா என்ன ஆகிடும்?
---------------------------------------
9. பா.ஜ., செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் பேச்சு: நிதி நிலை அறிக்கையில், கறுப்புப் பணம் தொடர்பான எந்த விவரத்தையும், அரசு அறிவிக்கவில்லை. குறைந்தபட்சம் வெளிநாட்டில் எவ்வளவு கறுப்புப் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது, எத்தனை பேர் இதில் சம்பந்தப்பட்டுள்ளனர், என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பன போன்ற விவரங்களையாவது அரசு வெளியிட வேண்டும்.
அது சரி.. அதை வெளியிட்டா எங்களுக்கு எப்படி வருமானம் வரும்?னு காங்கிரஸ் கேட்குமே..?
10. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்மூத்த தலைவர் பிருந்தா கராத் பேச்சு: விலை உயர்வு என்பது சட்டப்பூர்வமாக அறிவிக்கப்படாத வரி போல் உள்ளது. இந்த பட்ஜெட் பணக்காரர்களுக்கும், கம்பெனிக் காரர்களுக்கும் தான் பயனுள்ளதாக இருக்கும். மருத்துவமனைகள், ரத்த பரிசோதனை மையங்களுக்கு கூட, இந்த பட்ஜெட்டில், 5 சதவீத சேவை விதிக்கப்பட்டுள்ளது.நோய் வந்தால் கூட வரி விதிக்கப்படும் என்பது கொடுமையானது.
ஏழைகளுக்கும் தேர்தல் சமயங்களிலே ஏதாவது நல்லது செய்வாங்க , கவலைப்படாதீங்க...
டிஸ்கி - சனி ஞாயிறு நெட் பக்கம் வராதவர்களுக்காக என் முன் தினப்பதிவுகள்