1. பா.ம.க., தலைவர் மணி: காங்கிரசுக்காக, எங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் ஒன்று இரண்டை குறைத்துக்கொள்ள வேண்டுமென்ற பேச்சே எழவில்லை. எங்களுக்கு ஒதுக்கப்பட்ட, 31 தொகுதிகளில் நாங்கள் போட்டியிடுவோம்.
அதை எப்படி நீங்க சொல முடியும்?அண்ணன் ராம்தாஸ் கூட சொல்ல முடியாது.. அவசரப்படாதீங்க.. கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டது...
----------------------------------------------
2. தமிழக முதல்வர் கருணாநிதி: காங்கிரஸ், 60 இடங்கள் போதாதென்று, 63 இடங்கள் கேட்பதும், அதுவும் எந்தெந்த இடங்கள் என அவர்கள் கேட்பதையெல்லாம் கொடுக்க வேண்டும் என்பதும் முறைதானா என்பதை அந்தக் கட்சி தான் முடிவு செய்ய வேண்டும்.
போங்க தலைவரே... உடனே ராஜினாமா பண்ணி கொள்கை வீரர்கள்னு புரூஃப் பண்ணாம இப்படி பெரியம்மா கால்ல விழுந்ததுக்கு போயஸ் அம்மா கிட்டே தோத்தே இருக்கலாம்.
-----------------------------------------------
3. பத்திரிகைச் செய்தி: பெருமளவில் வரி ஏய்ப்பு செய்து, 40 ஆயிரம் கோடி வரை சுவிஸ் வங்கியில் முதலீடு செய்துள்ள, புனே வர்த்தகர் ஹசன் அலியின் வீட்டில், அமலாக்க பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். பின்னர் மும்பையிலுள்ள அமலாக்க பிரிவு அலுவலகத்திற்கு ஹசன் அலியை அழைத்துச் சென்று விசாரணையை தொடர்ந்தனர்.
இப்படியே விசாரனை பண்ணீட்டே இருங்க.. ஆனா தண்டனை மட்டும் குடுத்துடாதீங்க... எனக்கென்னவோ பேரம் தான் நடக்குதுன்னு நினைக்கறேன்.
---------------------------------------------
4. தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டி:இந்த தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியில் உட்காரப் போவதில்லை; அதனால், எங்களுக்கு எந்த நஷ்டமும் இல்லை. மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஆசை தி.மு.க.,விற்குத்தான் உள்ளது. கூட்டணிக்கு காங்கிரஸ் நிபந்தனை விதித்து மிரட்டல் விடுத்தது என சொல்வதை எல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாது.
அண்ணே ஒரு சின்ன கரெக்சன் ,இந்த தேர்தல்ல மட்டும் இல்ல, எந்த தேர்தல்லயும் காங்கிரஸ் தமிழ்நாட்ல ஆட்சி அமைக்க முடியாது.. பல்லக்கு தூக்குவதே உங்க தலை எழுத்து..
------------------------------------------
5. பா.ஜ., மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி: தி.மு.க.,வை வீழ்த்த எதிர்க்கட்சிகள் அனைத்தும் இணைந்து செயல்பட வேண்டும் என, ஆறு மாதங்களுக்கு முன்பே வலியுறுத்தினேன். தற்போது, அ.தி.மு.க., - தே.மு.தி.க., கூட்டணி அமைத்துள்ளன. இது வரவேற்கத்தக்கது. பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்தால் சிறுபான்மையினர் ஓட்டுகள் கிடைக்காது என, பல கட்சியினரும் நினைக்கின்றனர். இது சரியல்ல; நாட்டு நலனுக்கும் நல்லது அல்ல.
நாட்டு நலனுக்கு நல்லதில்லைன்னு பார்த்தா திராவிடக்கட்சிகள் தலை முழுகப்படனும், கவர்னர் ஆட்சி வரனும்.. அதெல்லாம் முடியுமா? நடக்கறதை பேசுங்க..
------------------------------------
6. பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை: பொருளாதார பிரச்னைகளில் இருந்து விடுபட்டு பெண்கள் சொந்த காலில் நின்றால், சமுதாயத்தை பிடித்துள்ள வரதட்சணை நோய், பெண் சிசு கொலை போன்ற கொடுமைகளில் இருந்து மகளிருக்கு விடிவு பிறக்கும். ஒவ்வொரு வீட்டிலும் பெண்களுக்கு கட்டாய கல்வியும், கட்டாய வேலை வாய்ப்பும் கிடைக்க அனைவரும் சபதம் ஏற்று செயல்பட வேண்டும்.
இது மகளிர் தின அறிக்கை மாதிரி தெரியலயே.. அய்யா கூட இருந்துக்கிட்டே அம்மா கூட கூட்டணி போட அச்சாரம் மாதிரி தெரியுது..?
------------------------------------------------------
7.அ.தி.மு.க., மகளிரணி செயலர் கோகுல இந்திரா பேச்சு: ஸ்பெக்ட்ரம் ஊழல் பணத்தை வைத்து, ஆயிரம் ரூபாய் கொடுத்து ஓட்டு கேட்க வருவர். அப்போது அவர்களிடம், "இதில் ஒவ்வொருவருக்கும் ஒரு லட்சம் ரூபாய் வரும். அதனால், 99 ஆயிரம் ரூபாய் எங்கள் பணம்; அதை கொடுக்க வேண்டும்' என, கேட்க வேண்டும். வரும் தேர்தலில் ஜெயலலிதாவை முதல்வர் சிம்மாசனத்தில் அமர்த்த வேண்டும்.
அம்மா வந்ததும் அதை அபேஸ் பண்ணி கொட நாட்ல புதைச்சு வெச்சுக்குவார்...நாங்க வேடிக்கை பார்க்கனும்..?
------------------------------------------------
8. பிரதமரின் பொருளாதார ஆலோசகர் ரங்கராஜன் பேட்டி: பல முனை மாற்று வரியில் இருந்து சிறப்பு பொருளாதார மண்டலங்களில் உள்ள நிறுவனங்களுக்கு விதி விலக்கு அளிக்கப்படாது. கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து, 100 டாலருக்கு மேல் இருந்து வருவது கவலை அளிப்பதாக உள்ளது. எனவே, பெட்ரோலிய பொருட்களின்விலை உயர்வு தவிர்க்க முடியாதது. உணவுப் பொருட்களின் விலை இம்மாதத்தில் குறையும்.
எங்களுக்குக்கூட காங்கிரஸ் தொடர்ந்து ஆட்சியில் இருந்து வருவது கவலை அளிப்பதாகத்தான் உள்ளது..
---------------------------------------------------------
9. தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் அறிக்கை: ஆண்களுக்கு பெண்கள் அடிமை இல்லை. பெண்களுக்கும் ஆண்கள் அடிமை இல்லை. இருவரும் நண்பர்கள் போல் இருக்க வேண்டும். ஆண் - பெண் உறவு, நட்பின் அடிப்படையில் அமையும் போது, வாழ்க்கையில் எதிர் கொள்ளும் சவால்களை அவர்கள் ஒரு சேர சமாளிக்கின்றனர். அரசியலிலும், பெண்களுக்கு சம வாய்ப்பு கிடைக்க செய்ய வேண்டும். அதற்கான சூழ்நிலையை சமூக ஆர்வலர்கள் உருவாக்க வேண்டும்.
எப்படியோ அம்மாவுக்கு அடிமை ஆகீட்டீங்க..25 சீட் தக்கி முக்கி ஜெயிச்சுட்டா அம்மா மதிப்பாங்க.. இல்லைன்னா போட்டு மிதிப்பாங்க...
--------------------------------------
டிஸ்கி -1 : நடிகை ஃபோட்டோ இல்லாததால் எங்கே சி பி திருந்தீட்டானோ என யாரும் அதிர்ச்சி அடைய வேணாம்.கோதுமை அல்வாவை டெயிலி சாப்பிட்டுட்டே இருந்தா திகட்டும்.. நாம என்ன பண்ணுவோம்.. கொஞ்சம் காரக்கடலை சாப்பிட்டு நாக்குக்கு காரத்தன்மை கொடுத்து அப்புறம் மறு படி ஸ்வீட் சாப்பிடுவோம்.. அது மாதிரி தான்..
டிஸ்கி 2 - சி பி நடிகைகளை கோதுமை அல்வா என கூறிவிட்டான் என போராட்டம் நடத்த நினைப்பவர்களுக்கு, ... எதுக்கு சிரமப்படறீங்க..இனிமே நான் ஏதாவது தப்பு பண்ணுனா அப்பவே மன்னிப்பு கேட்டுடறதா முடிவு பண்ணிட்டேன்.. யாருக்கும் சிரமம் வைக்ககூடாது.. சோ எல்லாரும் என்னை மன்னிச்சிடுங்க.. ஹி ஹி( நாகேஷ் என்னை மன்னிச்சிடுங்க ஹி ஹி )