Friday, March 11, 2011

பிரகாஷ்ராஜ்-ன் அன்வர் - கோவை குண்டு வெடிப்பு பின் புலக்கதை - சினிமா விமர்சனம்


http://www.filmics.com/tamil/images/stories/news/March/3-3-11/Prithviraj-anvar.png
 நல்ல சினிமாவில் நடிக்க வேண்டும், நல்ல சினிமா தர வேண்டும் என்ற பிரகாஷ்ராஜின் கொள்கையால் அவரது இமேஜ் திரை உலகில் உயர்ந்து கொண்டே இருக்கிறது என்பதற்கு சாட்சியாக பிரித்விராஜ் ஹீரோவாக நடித்த இந்த மலையாள டப்பிங்க் படத்துக்கு பிரகாஷ்ராஜின் பிம்பத்தை  போஸ்டரில் போட்ட சாமார்த்தியத்துகு ஒரு சபாஷ்..

கோவையில் நடந்த குண்டு வெடிப்பில் என்ன நடந்தது?யார் அதன் பின் புலமாக இருந்தார்கள்?முஸ்லீம்கள் அந்த நிகழ்ச்சியால் எந்த அளவு பாதிப்பு அடைந்தார்கள் என்பதை விளக்கும் கதை.

தீவிரவாதிகள் ட்ரூப்பில் பிரித்விராஜ் சேரும்போதே இது கேப்டனின் நரசிம்மா படத்தில் வருவது போல போலீஸின் டெக்னிக் என  தெள்ளத்தெளிவாய் தெரிகிறது ..ஆனால் பிரித்விராஜின் ஃபிளாஷ்பேக் காட்சிகள் வரும்போது இயக்குநரின் சாமார்த்தியம் வெளிப்படுகிறது.

படத்தோட ஓப்பனிங்க்லயே ஜெயில் கைதிகள் வேட்டி சட்டையோட உலாவுவதைப்பார்த்தால் லாஜிக் கன்னா பின்னா என அடி வாங்கப்போகுதுன்னு பார்த்தா கேரளாவில் அப்படித்தானாம்.

ஒளிப்பதிவு அம்சமாக இயற்கை அழகுகளை அள்ளிக்கொள்கிறது...அதுவும் அபூர்வமாய் வரும் பாடல் காட்சிகள் 3-ல் ஒளிப்பதிவு ரெகை கட்டிப்பறக்குது.. போற போக்கைப்பார்த்தா இந்த டைரக்டர் ஆக்‌ஷன் படத்தை விட காதல் சப்ஜெக்ட்ல படம் எடுத்தா கலக்குவாருன்னு தோணுது...



http://www.tutyonline.net/gallery/a6b80ab31fe861c8163b9956d44b1e8e/b/prithivra10.jpg
கிழக்கில் பூக்கும் ஆதவன் போல் ஒளிர்ந்திடுவாயோ பாடல் வரிகளை கேட்கும்போது இந்த மாதிரி ஆக்‌ஷன் சப்ஜெக்ட்ல கூட மனுஷன் மெனக்கெட்டு பாடல் வரிகளை செலக்ட் பண்ணி இருக்காரே..ன்னு தோணுச்சு..வெல்டன் டைரக்டர் கம் பாடல் ஆசிரியர் .அந்த பாடலுக்கான ஹீரோயினுக்கான ஆடை வடிவமைப்பு மகா கண்ணியம்.செம...

அதே போல் கண்ணின் இமை போலே பாடலுக்கு நடன தாரகைகள் ( நன்றி - சாண்டில்யன்) அணிந்திருக்கும் கவுரவமான உடைகள் புதிதாய் படம் எடுக்க வரும் இயக்குநர்களுக்கு நல்ல ஒரு முன் உதாரணம்..சமீப கால படங்களில் இவ்வளவு  டீசண்ட்டாக க்ரூப் டான்சர்ஸை ஃபுல்லா கவர் பண்ணி அழகு படுத்தியவர்  யாரும் இல்லை...( நற நற... )


பிரகாஷ்ராஜ் பல இடங்களில் சர்வ சாதாரணமாய்ப்பேசும் ஆங்கில வசனங்களில் வசனகர்த்தா மிளிர்கிறார்.. துல்லியமான ஆங்கில அறிவும், நாட்டு நடப்பை தாக்கும் வசனங்களும் வெல்டன் சொல்ல வைக்கிறது.

http://www.ulakacinema.com/wp-content/uploads/2011/03/anwar01.jpg
வசனகர்த்தா வெங்கடேஷ் கலக்கிய இடங்கள்

1.  உங்களை ஏன் அரெஸ்ட் பண்ணி இருக்காங்க தெரியுமா?

ம்.. தெரியும்.. ஏன்னா நான் ஒரு முஸ்லீம்..

மத்த முஸ்லீம்களை ஏன் அரெஸ்ட் பண்ணலைன்னு தெரியுமா?

ஓ... அதுக்காக வருத்தப்படுகிறீர்களா?


2.  அப்போ.. உங்களுக்கும் பாம் பிளாஸ்ட்க்கும் தொடர்பு இலைன்னு சொல்றீங்களா..?

நீங்க என்ன சொல்லப்போறீங்களோ அது தானே நாளைக்கு பேப்பர்ல வரப்போவுது...? நான் சொல்றதையா போடப்போறாங்க..?

3. ஜெயிலர் - அங்கே என்னடா பேச்சு..?

புது கைதி வந்திருக்கான் இல்ல// விசாரிக்கறோம்..

ஆமா, அடையாளம் தெரிஞ்சு எம் எல் ஏ சீ ட் குடுக்கப்போறியா..?

4.  அன்வர், அப்துல்லா இப்படி பேர் வெச்சது தப்பு.. அதான் போலீஸ்ல அரெஸ்ட் பண்றாங்க..

அதுக்காக இந்த வயசுல போய் பேரை மாத்த முடியுமா?

5,  சரி சரி.. சிகரெட்டை அணை... ஜெயிலர் வர்றான்...

ஏன்.. அவர் ரொம்ப கண்டிப்போ...?

ம்ஹூம்.. சிகரெட்டை பிச்சை கேட்பான்...

6.  போலீஸ்காரங்க எல்லோரும் கெட்டவங்கன்னு சொல்றியா..?

முஸ்லீம்கள் எல்லாரும் தீவிரவாதிகள்னு சொல்றியா..?

7.  அங்கே என்னடா மீட்டிங்?

ஜெயில்ல பாம் வைக்கறதைப்பத்தி  டிஸ்கஸ் பண்ணிட்டு இருக்கோம்..

அப்படியாவது  இந்த ஜெயில் வாழ்க்கைக்கு முடிவு காலம் வரட்டும்...

8.  இது கோர்ட் வாசல்.. விசில் அடிக்கறே..?

உள்ளே ஜட்ஜ் சுத்தியல்ல அடிக்கிறாரு...அதை கேட்க மாட்டீங்க..?
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEit8qnQCdrhYeFbaekQVQg6koONINqJdmE1SXg0FpZyskK6hWS2ibkf72qoRhYQGyBe-wBMIKhQLJsy3rwJnmqtrQWxACK-MB1BzhuKf5UZ92ITbRoKILmP9H94l2vwh6iFC0jIjd3ovNsq/s1600/Anvar+Movie+photos+_27_.jpg
9.  உங்களை நான் ஜெயில்ல பார்க்கவே இல்லையே...

வரனும்.. ரொம்ப நாளா நண்பன் கூப்பிட்டுட்டே இருக்கான்.....

10. மேலே போனவன் கீழே வந்தே ஆகனும்.. இது இயற்கையின் விதி ( LAW OF NATURE)

11..ஆஷா.. விசாரணைக்கு ஒத்துழைக்கனும்.. உனக்கு கடவுள் நம்பிக்கை உண்டா..?

அதை உங்க கிட்டே சொல்ல வேண்டிய அவசியம் இல்லை...

12. மரண பயத்தை வெல்லும்போதுதான் ஒரு சாதாரண மனிதன் முஸ்லீம் ஆகறான்.

13.  இவ்வளவு கஷ்டப்பட்டும் 3 பேர் தான் செத்தாங்களா?

எத்தனை பேர் செத்தாங்கங்கறது முக்கியம் இல்ல..உயிரோட இருக்கறவங்க மனசுல பயத்தை விளைவிக்கனும்..

14.  என் பையனுக்கு  திமிர் ஜாஸ்தி.. ஆனா வயசானா அது சரியாகிடும்...

15. பசியோட இருக்கறவங்களுக்கும், அநாதைகளுக்கும் உதவி செய்யனும் நாம எல்லாரும்...

16.  ஒரு நிமிஷம்... ஒரே நிமிஷம்.. நான் அநாதை ஆகிட்டேன்...

http://img1.dinamalar.com/cini//CNewsImages/NT_095934000000.jpg
இயக்குநருக்கு சில வார்த்தைகள்

1. பிரகாஷ்ராஜ் சுடப்படும் சீன் குருதிப்புனல் க்ளைமாக்ஸை நினைவு படுத்துவதை தவிர்த்திருக்கலாம்...

2. மதி நுட்பம் வாய்ந்த ஆங்கில வசனங்களை கரெக்ட்டான இடங்களில் போட்டது சந்தோஷம் .. ஆனால் திரையில் அதைத்தமிழ்ப்படுத்தி இருக்கலாம்.

3. மிக நீளமான அந்த ஆக்‌ஷன் காட்சியில் ஹீரோ ஜீன்ஸ் பேண்ட் போட்டபடி காலை தூக்கவே சிரமப்பட்டு உதைக்கிறார்.. அது எப்படு பவர் ஃபுல் ஷாட்டாகும்? ஜாக்கி சான் படங்களில் ஃபைட் சீன்களில் அவர் அணியும் பேக்கீஸ் ரக பேண்ட்களை கவனிக்கவும்..

4. வெறும் 3 சீன்களே வந்தாலும் ஹீரோவின் தங்கையாக வரும் ஃபிகர் செம செலக்‌ஷன்.. கீப் இட் அப்...
5.. இடைவேளைக்குப்பிறகு வரும் 28 நிமிட ஃபிளாஷ்பேக் காட்சியில் வெறும் 6 நிமிட இடை வெளியில் 2 பாடல்கள் வருவதை தவிர்த்திருக்கலாம்..

http://thatstamil.oneindia.in/img/2010/04/21-mamthamoh200.jpg

அது போக காயத்ரி ரகுராம் அவர்களின் நடன இயக்கம்  ரொம்பவே அழகு...ஹீரோயின்  18  நிமிடங்களே வந்தாலும் (மம்தா) மனதில் நிற்கிறார்.. ( நல்ல வேளை உட்காரலை)

இந்தப்படம் மலையாள டப்பிங்க் படம் என்பதால் ஆனந்த விகடன் -ல் விமர்சனம் போட மாட்டாங்க..குமுதம் புக் எலக்‌ஷன் ஸ்பெஷல்ல மும்முரமா இருக்கறதால அதுலயும் போட மாட்டாங்க.... ( அப்போ நான் தான் இளிச்சவாயனா..?)

படம் எத்தனை நாள் ஓடும்.. ஆவரேஜ்ஜா 20 நாட்கள்