1. தலைவர் சினிமா அதிகம் பார்க்கறதில்லை போல... ..
எப்படி சொல்றே..?
படத்துல நமீதாவைப்பார்த்துட்டு “ பாவம், ரொம்ப ஏழை போல.உடுத்திக்கவே நல்ல டிரஸ் இல்லாம கஷ்டப்படறார்,அரை குறையா டிரஸ் பண்றார்னு வருத்தப்படறாரே...?
-----------------------------
2. என்னது ? மேடைல தலைவர் எழு ,மேலே சிரிப்பு நிகழ்ச்சி வழங்கறாரா?
அதான்பா, ஸ்டேண்ட் அப் காமெடி... ( STAND UP COMEDY)
------------------------
3. ஏம்மா .. பொண்ணு .. இந்தா டிக்கெட்.. வாங்கிக்க...
சாரி.. கண்டக்டர் சார்.. வெளில தனியா போறப்ப யார் எது குடுத்தாலும் வாங்கிக்கக்கூடாதுன்னு அம்மா சொல்லி இருக்கு....
-----------------------------
4.சைபர் கிரைம்ல தலைவர் சம்பந்தப்பட்டிருப்பார்னு எப்படி சொல்றே..?
அவருதான் எல்லா விஷயத்துலயும் பூஜ்யம் ஆச்சே..?
---------------------------------
5. பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்கன்னு மணமக்களை வாழ்த்தி தலைவரு 16 சீட் வேணும்னு சூசகமா கூட்டணிக்கட்சித்தலைவருக்கு உணர்த்திட்டாரே....
நோ யூஸ்.. ஒன்றுக்கு மேல் இப்போது வேண்டாம்,இரண்டுக்கு மேல் எப்போதும் வேண்டாம்னு சொல்லி தலைவர் சமாளிச்சிட்டாரே..
=------------------------------------------
6. கூட்டணிக்கு அழைச்ச தலைவர்ட்ட நம்ம தலைவர் ரொம்ப அல்பமா நடந்துக்கிட்டாராமே..?
சிவப்புக்கம்பள வரவேற்பு அளிக்கப்படும்னு கூட்டணிக்கு அழைச்சீங்களே.. அந்த கம்பளத்தை நான் வீட்டுக்கு எடுத்துட்டு போயிடலாமா?ன்னு கேட்டுட்டார்.
-------------------
7. எனக்கு இன்னும் முதுகெலும்பு முறிந்துவிடவில்லை. 10 சீட் பத்தாது-னு சொன்னது தப்பா போச்சு தலைவரே!
ஏன்?
உங்களை உதச்சு முதுகெலும்பை முறிக்க ஆட்டோல ஆட்கள் வந்திருக்காங்க.
-----------------------
8. சாரி... உங்களுக்கு 80 சீட் தரமுடியாது. 4 சீட்தான்.
இது கூட்டணி தர்மம் இல்லை. இது கூட்டணி பிச்சை.
----------------------
9. எதுக்காக தியேட்டரை பூட்டறீங்க?
திறந்தா ஆடியன்ஸ் ஓடிடுவாங்க.
------------------------
10. தலைவர் ஏன் கோபமா இருக்காரு?
கூட்டணி பேச்சு வார்த்தைக்கு போனப்ப வாசல்ல NO ENTRY போர்டு வெச்சு கேவலப்படுத்தீட்டாங்களாம்.
-------------------------------
டிஸ்கி (v)- மகளிர் தினத்தை முன்னிட்டு என்ன ஸ்பெஷல்?னு கேட்டவங்களுக்கு இன்று மாலை 5 மணிக்கு நான் பெண் பார்த்த அனுபவங்கள் பற்றி ஒரு மேட்டர் போடப்போறேன்.