நேத்து இரவு 7 மணில இருந்து நம்ம ட்வீட்டர்களுக்கு செம கொண்டாட்டம் போல..கலைஞர் - காங்கிரஸ் உறவு முறிஞ்சு போனதுல (தற்காலிக பிரிவு??) ஸ்வீட் எடு கொண்டாடு ரேஞ்சுக்கு போய் அவங்க ட்வீட்டிய வேகம் அபாரம். வழக்கமாக ஒரு நிமிடத்துக்கு ஒரு ட்வீட் என்ற சராசரி வேகத்தைத்தாண்டி நேற்று ஒரு செகண்டுக்கு ஒன்று என்ற வேகத்தில் ட்வீட்டினார்கள்.(60 மடங்கு அதிகம்)
ரெகுலராக பதிவு போடும் நம்ம ஆட்களில் பாரத் பாரதி,பட்டா பட்டி,ரஹீம் கஸாலி இருந்தாங்க.நான் நைட் படித்த 2700 ட்வீட்களில் தேர்ந்தெடுத்த 16 ட்வீட்கள்...அப்புறம் நம்ம ஆட்களின் ட்வீட்டை வேணும்னே தவிர்த்துட்டேன்.தேவையற்ற விமர்சனத்தை தவிர்க்க... பாரத் பாரதி மட்டும் விதி விலக்கு.
1.காங்கிரஸ் தனியாப் போனா 234 தொகுதிகளில் நிற்க வேட்பாளர்களே இல்லையாம் :-) #டெல்லியில் அவசர ஆலோசனை.
2. ABC_02 சொத்துக்குவிப்பு வழக்கில் பச்சயம்மாவுக்கு எதிரான தீர்ப்பு வந்தால் கேப்டன்தான் முதலமைச்சர். #அந்தக்கூட்டணிஜெயிச்சா.
3. TBCD செயலலிதா சசியயையும் தினகரனையும் கழட்டி(?!) விட்ட மாதிரி தலைவர் கனிமொழி/இராசத்தியயை கழட்டி விடுவது போல வேசம் கட்டினால் #2g #tnae11
4. balawatrap கலைஞ்சர்: எங்கேய்யா வைகோ? கூப்பிடு!!! வச்சுக்கோ 45! வைகோ:தாயகம் அல்ல, தாய்க்கழகம் திரும்புகிறேன்.
5. narain தமிழகத்தில் தொடர்ச்சியாய் ஒரே கட்சி ஆட்சி அமைத்ததில்லை. இப்படி பால் ஆக்டோபஸ் ஜோசியம் பார்த்தால் திமுக தோற்கும் :)
6. writerpara @kavi_rt தமிழகத்தில் காங்கிரசுக்கு ஓரளவு வாக்குவங்கி உண்டு. பெரும்பாலும் முதியோர் வாக்கு. ஓட்டுப்போட அழைத்துவரமட்டும் தெரியாது.
7. iamkarki மச்சான் சண்ட போடாத.. கிராண்ட்பா நல்லதுதான் சொல்லும் #காங்கிரசிடம் நமீதா பேச்சுவார்த்தை
8. kolaaru திமுக-காங் கூட்டணி முறிவுக்கு காரணம் # காமராஜர் ஆட்சினு காங்கிரஸ் சொன்னதை,என்னாது “ராமராஜன்” ஆட்சியா என திமுக கலாய்தது
9. RajanLeaks டாஸ் ஜெயிக்கறதுக்கு முன்னாடியே ஒருத்தன் பவுலிங் எடுப்போம்ங்கிறான்! எலெக்சன் வரதுக்கு முன்னாடியே ஆட்சில பங்குங்கிறான்! என்னதாண்டா ஆச்சு!
10. bharathbharathi போனவாரம் இனி வசந்தகாலம் என கூவிய கைப்புள்ள கட்சி தலைவர் வெங்கல பாலு எங்கப்பா? # இனி இலையுதிர்காலம்.
11. ChPaiyan ராமதாஸ்: என்னோட எல்லா சீட்டையும் (+1 தவிர) காங்.கே கொடுத்துடுங்க. நீங்க ரெண்டு பேரும் பிரிஞ்சி என் குடியை கெடுத்துடாதீங்க.
12. iamkarki அப்பாடா.. இந்த கலவரத்துல கரண்ட் மேட்டர மக்கள் மறந்திருப்பாங்க. தலைவர்கிட்ட நைசா சீட் வாங்கிடணும் - ஆற்காட்டார் மனசாட்சி
13. losangelesram தன்மானம், இனமானம், தமிழ்மானம், திராவிட மானம், உன் மானம், என் மானம் எல்லாம் இனிவரும் நாட்களில் அதிகமாக உச்சரிக்கப்படப்போகும் வார்த்தைகள்!
14. RajanLeaks RT @kolaaru: திமுக-காங் கூட்டணி முறிவுக்கு காரணம் # திருமா மேக்கப் போடாமல் இருக்கும்மோது சோனியாவை சந்திக்க வைத்தது திமுக -காங்
15. gpradeesh திமுக காங்கிரஸை கழட்டிவிட்ட சந்தோசத்தில் ரவுண்டுஎண்ணாமல் குடித்து கொண்டிருக்கிறேன். நாளைக்கி திரும்பி அவய்ங்ககூட சேந்தீங்க #கொண்டேபுடுவேன
16. iamkarki எதிரியான எனக்கு 41 தந்தாங்கஅம்மா. கூட இருந்தவனுக்கு 60 தராம துரத்திட்டாரு அய்யா.இப்போ சொல்லுங்க.யார்நல்லவங்க? #விஜய்காந்த் குரலில் படிக்க