Thursday, March 03, 2011

கிறுக்குத்தனமான அரசியல்வியாதிகள் VS கேனத்தனமான ஜோக்குகள்

http://www.thelatestnews.in/wp-content/uploads/2010/03/vidya-balan1.jpg 
1. சம்பளமே வேணாம்னு தலைவர் சொல்லீட்டாரே.. அவரு அம்புட்டு .நல்லவரா?

பாவத்தின் சம்பளம் மரணம்னு சொன்னாங்களாம்... ( பதவில இருக்கறப்ப பண்ணுனதெல்லாம் பாவங்கள் மட்டும்தானே..)

---------------------------------------------

2. தலைவரே!  உங்களைக்கேவலமா திட்டுனவர் கூட வெட்கமே இல்லாம கூட்டணி வெச்சுக்கிட்டீங்களே... ஏன்?

ஆமா... அவலமான தோல்வியை விட கேவலமான திட்டு எவ்வளவோ பரவால்லைன்னு தோணுச்சு... ( கேவலப்படும்போது கூட எதுகை மோனை கேக்குது.. அடச்சே...)

------------------------------------

3. தியேட்டர்காரங்களுக்குகூட கரண்ட் பாலிட்டிக்ஸ் தெரிஞ்சு இருக்குன்னு எப்படி சொல்றே..?

த மம்மி ரிட்டர்ன்ஸ் ( THE MUMMY RETURNS) படத்தை ரீ ரிலீஸ் பண்றாங்களே...

------------------------------------

4. கேப்டன் அம்மா கூட கூட்டணி வைக்கறதுக்கு முன்னால ட்ரெயினிங்க் எடுக்க ஃபாரீன் டூர் போறாரா? எதுக்கு?

எகிப்து போய் மம்மி முன்னால எப்படி பம்மிக்கிட்டு நிக்கறதுன்னு பயிற்சி எடுக்கறாராம்.

-----------------------------------------

5.  வில்லன் சார்... இந்த சீன்ல நீங்க ஹீரோயினை ரேப் பண்ண முயற்சி பண்றீங்க...

போங்க டைரக்டர் சார்... வெறும் முயற்சி மட்டும்தானா? ( அடங்கொய்யால.. முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்... )

---------------------------------------
http://www.bharatwaves.com/wallpapers/d/5331-2/Vidya+Balan.jpg
6.   ஜெயில்ல இருந்து பெயில்ல வந்த தலைவரு ஏன் கடுப்பாகிட்டார்?

கட்சி ஆஃபீஸ் வாசல்ல இருந்த பியூன், “ என்ன தலைவரே, அதுக்குள்ளே வந்துட்டீங்க?ன்னு கேட்டானாம். ( 10 வருஷம் வர மாட்டாரு.. ஆட்டையைப்போடலாம்னு பார்த்தார் போல..)


---------------------------------------------

7. நடிகை - ஸாரி  சார்...  முதுகுல ஜன்னல் வெச்ச ஜாக்கெட் போட்டு நடிக்கறது எனக்கு பிடிக்கல...

டைரக்டர் -ஏம்மா? தமிழ்க்கலாச்சாரம் தடுக்குதா?

 . நடிகை - அதெல்லாம் இல்ல சார்.. வேணும்னா முதல் மரியாதை ராதா மாதிரி ஜாக்கெட்டே போடாம சேலை மட்டும் கட்டி நடிக்கறேன்...

-------------------------------------------------

8. உலகக்கோப்பை கிரிக்கெட் கோப்பை யாருக்கு கிடைக்கனும்னு நினைக்கறீங்க?ன்னு  தலைவர்  கிட்டே கேட்டது தப்பா போச்சு...

 ஏன்?


அது யாருக்கோ கிடைச்சுட்டு போகுது.. ஆனா பரிசுத்தொகை ரூ 170 கோடி மட்டும் என் கைக்கு வந்துடனும்னாரே...

-------------------------------------------------

9.  மளிகைக்கடைல வந்து  “வெரைட்டி ரைஸ்” 5 கிலோ குடுங்கன்னு கேட்கறீங்களே..புரியலை..?

என் மனைவிதான் சொன்னா, “ ஒயிட் ரைஸ் சாப்பிட்டு போர் அடிச்சிடுச்சு,இனி ஒரு வாரம் தக்காளி சாதம், லெமன் சாதம், புளி சாதம் இப்படி வெரைட்டி ரைஸ் சமையல் பண்ணுங்கன்னு... அதான்.. 

-------------------------------

10. சுவாமி... சொர்க்கத்துக்கு குறுக்கு வழி எது..?

சிஷ்யா... ஆசிரமத்தில் தியான அறையில் மட்டுமே உன் கவனம் இருக்கனும்...என் சயன அறையில் வேவு பார்க்கக்கூடாது...

---------------------------

டிஸ்கி 1  - சில்க்கின் வாழ்க்கை வரலாறு ஹிந்தியில் பேடு பிக்சர்ஸ் என்ற பெயரில் நடிகை வித்யாபாலனை  ஹீரோயினாக போட்டு படம் எடுக்கிறார்களாம்.அதற்கு வினுசக்ரவர்த்தி எதிர்ப்பு தெரிவிக்கிறாராம்.இதுதான் கோடம்பாக்க லேட்டஸ்ட் டாக். படத்தின் ஸ்டில்கள் கிளாமர் கம்மியாக இருப்பதால் சமூக விழிப்புணர்வை முன் வைத்து அட்ரா சக்க இணைய தளமும்  தன் எதிர்ப்பை பதிவு செய்கிறது.. ஹி ஹி

டிஸ்கி 2 -  BAD PICTURES  படத்தின் முன்னோட்ட விமர்சனம் அதி விரைவில்... ஹி ஹி ட்ரெயிலருக்குக்கூட  விமர்சனமா?என யாரும் கேட்க மாட்டீங்கன்னு நம்புறேன்.. ஹி ஹி

டிஸ்கி 3  - என்னைத்தொடர்ந்து அண்ணே என அழைத்துக்கேவலப்படுத்திக்கொண்டு வரும் விக்கி,செங்கோவி,தனிக்காட்டு ராஜா வகையறாக்களுக்கு மைனஸ்  ஓட்டு காத்திருக்கு ஹிஹி . டேய்.. ச்சோட்டா லட்கா,சின்னத்தம்பி, பொடிப்பயலே.. என கூப்பிடுபவர்களுக்க்கு ஒரு நல்ல ஓட்டு ,ஒரு கள்ள ஓட்டு கன்ஃபர்ம்.. ஹி ஹி