1. ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியசாமி பேட்டி : ராசாவுடனான விசாரணையில், அதிகாரிகள் முக்கியமாகக் கேட்டுத் தெரிந்து கொள்ள முயற்சிப்பது, "ஸ்பெக்ட்ரம்' ஊழல் மூலம் கொள்ளையடித்த பணத்தை அவர் எங்கு பதுக்கி வைத்திருக்கிறார் என்பதைத் தான். ராஜா எதுவுமே சொல்லவில்லை என்றாலும், சி.பி.ஐ., கைக்கு எல்லாமே கிடைக்கும். என்னைப் போன்ற பலரும் இதற்காக, இரவு, பகல் பாராமல் உலகம் முழுக்க சுற்றிச் சுற்றி வேலை பார்த்துக் கொண்டுள்ளோம் என்பது, ராஜாவுக்கும், அவர் கட்சித் தலைவர் கருணாநிதிக்கும் தெரியும்.
அது சரி.. கஷ்டப்பட்டு கொள்ளை அடிக்கறது ஒரு கூட்டம்.. நீங்க ஒத்த ஆளு மொத்த பணத்தையும் அமுக்கலாம்னு பார்க்கறீங்களா?அப்புறம் மத்த கூட்டுக்களவாணிகளுக்கு பங்கு கொடுக்கனுமே....?நீங்களா வந்து பதில் சொல்வீங்க?
2. முன்னாள் அமைச்சர் ஜெனீபர் சந்திரன் பேச்சு: "2ஜி ஸ்பெக்ட்ரம்' ஒதுக்கீட்டில், மத்திய அரசுக்கு, 1.76 லட்சம் கோடி இழப்பை ஏற்படுத்திய, கருணாநிதி குடும்பத்தின் மீது நடவடிக்கை எடுக்க, மத்திய அரசு தயங்குவது ஏன் என்று கேள்வி எழுந்துள்ளது. அரிசியில் கொள்ளை, மணல் கொள்ளை, நகை மற்றும் பணம் கொள்ளை என கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், காற்றில் ("2 ஜி' அலைக்கற்றை) கொள்ளையடித்த ஒரே குடும்பம், கருணாநிதி குடும்பம் தான். சட்டசபை தேர்தலில், ஊழல் நிறைந்த மத்திய, மாநில அரசுகளுக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும்.
பஞ்ச பூதங்களும் லஞ்ச வடிவாகும்... ஆறு காலங்களிலும் ஊழலே தோணும்...
3.தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலை துணைவேந்தர் விஜயகுமார் பேச்சு: சட்டம் பற்றி பேசக்கூடிய சட்டக் கல்லூரி, அரசு நிர்வாகம், நீதித் துறை என எந்தவொரு இடத்தை எடுத்துக் கொண்டாலும், அங்கிருப்பவர்களில் ஒருவர் கூட இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை முழுமையாகப் படித்திருக்கவில்லை.
அடடா. எம் எல் ஏ, எம் பிகளூக்கு மட்டும் தான் படிக்கத்தெரியாதுன்னு இத்தனை நாளா நினைச்சிட்டு இருந்தோம்...
4. தி.மு.க., அமைச்சர் மைதீன்கானின் தம்பி முகமது இக்பால் பேட்டி: நான் வியாபாரம் செய்வதால், எல்லா மக்களையும் சந்திக்கிறேன். இதனால், மக்களின் மன ஓட்டம் புரிகிறது. ஆனால், தொண்டர்களை சந்திக்காத மைதீன்கானுக்கு, மக்களின் நிலை தெரிய வாய்ப்பில்லை. அவர் அமைச்சர் ஆவதற்கு காரணமாக இருந்த தொகுதி மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாததால், கடுமையான கோபத்தில் உள்ளனர்.
மன்னர் எவ்வழி..? மந்திரி அவ்வழி...
5.சுப்ரீம் கோர்ட் நீதிபதி மார்கண்டேய கட்ஜு பேச்சு: பொதுமக்கள் தங்கள் பிரச்னைகளுக்கு, தீர்வு காண, கோர்ட்டுகளை யே முழுமையாகச் சார்ந்துள்ளனர். அனைத்து பிரச்னைகளுக்கும் கோர்ட்டில் முழுமையான தீர்வு கிடைக்காது. ஓரளவு தீர்வு தான், கோர்ட்டுகள் மூலம் கிடைக்கும். பொதுமக்கள் பெரும்பாலும் தங்கள் பிரச்னைகளுக்கு தாங்களே தீர்வு காண முயற்சிக்க வேண்டும். அது தான் பாதுகாப்பானது.
ஹா ஹா ஹா .. அப்புறம் என்ன இதுக்கோசரம் இத்தனை கோர்ட், இத்த்னை வக்கீலுங்க இருக்காங்க..? சம்பளம் மட்டும் வாங்கிக்கவா?
6.இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பச்சமுத்து பேட்டி: தமிழகத்தில், 65 சதவீத விவசாயிகள் உள்ளனர். ஆனால், விவசாயிகளுக்கான திட்டங்கள் எதுவும் தீட்டப்படுவதில்லை. விவசாயிகளின் அடிப்படை தேவையான மின்சாரத்தை வினியோகிக்க எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. காவிரி தண்ணீரையும் பெற்றுத் தரவில்லை.
ஊழல் பண்றதுக்கும், அந்த ஊழலை மறைப்பது எப்படி?பணத்தை பங்கு போடுவது எப்படி? இதுக்கே நேரம் போறது இல்லை...அப்புறம் எங்கே இருந்து விவசாயிகளுக்கு திட்டம் தீட்டுவது?
7.முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீன்: கடந்த முறை இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டோம். இந்த முறை, முதல் சுற்று பேச்சின்போது எட்டு தொகுதிகள் கேட்டோம்; மூன்று தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
கிடைச்சவரை லாபம்னு ஓடிடுங்க... 2வது கட்ட பேச்சுவார்த்தைல உக்காந்தா 3 என்பது நாலாக ஆகும்னு நினைச்சா அப்புறம் நீங்க வெளீல வர ரொம்ப நாளாகும்...அப்புறம் உள்ளதும் போச்சுடா....பழமொழி ஆகிடும்...
8. வருமான வரித்துறை டைரக்டர் ஜெனரல் லூகோஸ்: சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி பாலகிருஷ்ணனின் உறவினர்கள், கறுப்புப் பணம் வைத்திருந்ததை, அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இது தொடர்பாக அவர்களிடம் மீண்டும் விசாரணை நடத்தவுள்ளோம். கே.ஜி.பாலகிருஷ்ணனிடம் விசாரணை நடத்தப்படுமா என்பதற்கு பதில் அளிக்க முடியாது.
அது எப்படிங்க விசாரணை பண்ணுவீங்க... இப்போ ஆ ராசாகிட்ட மட்டும் தான் விசாரணை பண்றாங்க.. மெயின் ஸ்விட்சே கலைஞரும், சோனியாவும் தான்.. அவங்க கிட்டே விசாரணை பண்ணுவாங்களா?
9.தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார்: எம்.எல்.ஏ., வேட்பாளர்கள் தேர்தல் செலவு, 10 லட்சத்திலிருந்து, 16 லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. வேட்பாளர்கள் தனி வங்கிக் கணக்கு தொடங்கி, அனைத்து செலவுகளையும், குறிப்பிட்ட வங்கிக் கணக்கு மூலமே செய்ய வேண்டும்.
ஆமாம்ப்பா.. ஞாபகம் இல்லாம உங்க சேவிங்க்ஸ் அக்கவுண்ட்ல கணக்கு வரவு செலவு வெச்சு சமர்ப்பிச்சுடாதீங்க.. அப்புறம் வருமான வரி த்துறை அதிகாரிங்க மயக்கம் போட்டு விழுந்துடுவாங்க..
டிஸ்கி 1 - அரசியல் பதிவு போட்டாலும் நாங்க அடிப்படை பேட்டர்ன் மாத்தமாட்டமில்ல?எப்படி தமிழன் போட்ட தமிழச்சி ஸ்டில்லு..?
டிஸ்கி 2 -டைட்டிலுக்கான விளக்கம்.நமது புரட்டாசிக்கலைஞர் கேப்டன் புரட்டுத்தலைவியிடம் சரண்டர் ஆகிவிட்டதை பாராட்டும் வண்ணம்.... ஹி ஹி ஹி
10. முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் கோபாலசாமி: 2006க்கு முன் வரை, தேர்தல் நடத்த சிரமமான மாநிலங்களின் பட்டியலில், பீகார், உத்தர பிரதேச மாநிலங்கள், முதல் இரண்டு இடங்களில் இருந்தன. 2006க்கு பின், இந்த பட்டியலில் பீகார், உத்தர பிரதேச மாநிலங்களை பின்னுக்குத் தள்ளி, தமிழகம் முதல் இடம் பெற்றுள்ளது.
பாத்துப்பா... இதுக்கும் ஒரு பாராட்டு விழா நடத்தி கலைஞரைக்காட்டிக்குடுத்துடாதீங்க...
டிஸ்கி 1 - அரசியல் பதிவு போட்டாலும் நாங்க அடிப்படை பேட்டர்ன் மாத்தமாட்டமில்ல?எப்படி தமிழன் போட்ட தமிழச்சி ஸ்டில்லு..?
டிஸ்கி 2 -டைட்டிலுக்கான விளக்கம்.நமது புரட்டாசிக்கலைஞர் கேப்டன் புரட்டுத்தலைவியிடம் சரண்டர் ஆகிவிட்டதை பாராட்டும் வண்ணம்.... ஹி ஹி ஹி