Tuesday, March 01, 2011

= ஹோம்லி நடிகை அமலாபாலா? தாப்ஸியா? பட்டிமன்றம்


1. தலைவருக்கு  சிறந்த  நகைச்சுவைப்  பேச்சாளர்  விருது  எப்படி  கிடைச்சுது?

குடும்ப  அரசியல்  நடத்துவதில்  எனக்கு  உடன்பாடு  இல்லை-னு சொல்லிட்டு  அவர்  குடும்பத்துல  இருக்கும்  142  பேருக்கு  சீட் குடுத்துட்டாராம்.

-----------------------------------------


2. மோஹனா...    லவ்  யூ.

இந்தாங்க   சதீஷ் டோக்கன்வெயிட்டிங்  லிஸ்ட்ல  இருங்ககூப்பிடறேன்.

-----------------------------------------


3. உடல்  மண்ணுக்கு  உயிர்  தமிழுக்குனு  தலைவர்  வீரமுழக்கம்  இடறாரே?

சும்மா  உதார்உடல்  அவர்  சின்ன  வீடு  மோஹனாவுக்குஉயிர்  மகளிர் அணித்  தலைவி  மல்லிகாவுக்கு.

---------------------------------------


4. நான்  சந்திக்கப்போகும்  கடைசி  தேர்தல்  இது-னு  தலைவர் தழுதழுக்கறாரே?

அதாவது  2011-ல்  சந்திக்கும்  கடைசித்  தேர்தல்னு  அர்த்தம்.

--------------------------------------


5. கட்சி  ஆட்கள்  எல்லாரும்  பேண்ட்  சர்ட்தான்  அணியனும்-னு  ஆர்டர்  வந்திருக்கேஏன்?

எங்க  கட்சில  கோஷ்டி-வேஷ்டி  என்ற  பேச்சுக்கே  இடம்  இல்லைனு ரைமிங்கா  பேசத்தான்.

--------------------------------

6. கிடா  மாதிரி  தெனாவெட்டா  திரிஞ்ச  உங்க  பையன்  இப்போ பலிகிடா  மாதிரி  பம்பிட்டு  போறானே?

மேரேஜ்  ஆகிடுச்சுல்ல?

--------------------------------


7. எதிரியை  எதிர்  கொள்வது  எப்படி  தளபதி?

எதிர்ல  யார்  வந்தாலும்  உடனே  கொல்வது  மன்னா!

--------------------------


8. மேடம்...  ஹோட்டல்ல  தங்கி  இருந்த  நீங்க  சொந்தமா  வீடு  வாங்கி  இப்போ  வீட்ல  இருக்கீங்களே?

ஹோம்லி  நடிகை-னு  பெயர்  எடுக்க  ஆசை.

------------------------------------


9. கதை  மதுரைல  நடக்குது...

அதுக்காக  ஹீரோ  மீனாட்சி  அம்மா...  மீனாட்சி  அம்மானு  அடிக்கடி  கூப்பிடறது  நல்லாலை. (புரியாதவங்க நடு நிசி நாய்கள் டிரெயிலர் பார்க்கவும்)

-------------------------------


10. வில்லன்  ஹீரோயினை  ரேப்  பண்ண  போறப்ப  ஹீரோ  காப்பாத்தறாரு...

ரொம்ப  பழைய  சீன்லேட்டஸ்ட்  டிரண்ட்டுக்கு  வாங்க. ஹீரோ  ஹீரோயின்  கூட  டூயட்  பாட  கிளம்பறப்ப  வில்லன்  தடுக்கறான்.

-------------------------------
 டிஸ்கி- 1: இந்த பட்டி மன்றத்துக்கு நீங்கதான் ஓனர்.. தீர்ப்ப்பு நீங்களே சொல்லிக்கலாம்

டிஸ்கி 2 - அமலா பால் சிவப்பு கலர் டிரஸ் போட்டது தற்செயலானது.. கம்யூனிஸ்ட் ஆளுங்க உடனே இதான் சாக்குன்னு நம்ம கட்சி போலன்னு பிரச்சாரத்துக்கு கூப்பிட்டுடாதீங்க..