Monday, February 28, 2011

ஈரோடு தனியார் பள்ளிகளில் நடக்கும் அவலங்கள்

http://www.baiwan.org/images/new%20school%20building.jpg 
ஈரோடு ஜி ஹெச் அருகில் சவீதா பஸ் ஸ்டாப் அருகே உள்ள கலைமகள் கல்வி நிலையம் நீண்ட வருடங்களாக நல்ல பெயர் வாங்கி வந்த ஸ்கூல்.பத்தாவது ரிசல்ட் வந்தாலே 100% கன்ஃபர்ம் தான்.இப்படி எல்லா இடங்களிலும்,எல்லா மாணவிகளிடமும் நல்ல பெயர் வாங்கி வந்த அந்த ஸ்கூலுக்கு 2 வருடங்களுக்கு முன் சோதனைக்காலம் ஆரம்பித்தது.

அதாவது இன்ஸ்பெக்‌ஷன் வந்த ஆஃபீசர்ஸ் கலைமகள் மெட்ரிகுலேஷன் ஸ்கூல் விதிகளின் படி கட்டப்படவில்லை,விதிமுறைகளை மீறி உள்ளது எனவே லைசென்ஸ் ரத்து செய்யப்பட போகின்றது  என ஒரு குண்டைத்தூக்கிப்போட்டனர்.

6வது வகுப்பு முதல் 12 வது வகுப்பு வரை உள்ள கலைமகள் ஹையர் செகண்டரி ஸ்கூல் எந்த பிரச்சனையும் இல்லை.  எல் கே ஜி ,1 வது முதல் 5 வது வரை செயல்படும் மெட்ரிகுலேஷன் ஸ்கூல் மாடியில வகுப்பு உள்ளது என காரணம் சொன்னார்கள். பாத்ரூம் வசதியும் கிடையாது என்றார்கள்.

நிர்வாகம் என்னென்னவோ செய்து பார்த்தது ,நடக்கவில்லை. விபரம் அறிந்த பெற்றோர்கள் சிலர் டி சி வாங்கி வேறு ஸ்கூலில் மாணவிகளை சேர்த்து விட்டார்கள்.

ஆனால் இப்போதும் அந்த ஸ்கூல் எந்த பாதிப்பும் இல்லாமல் அப்படியே தான் நடந்து வருகிறது.மாடியில் இயங்குகிறது.பாத்ரூம் வசதிகள் முறையாக இல்லை.இடையில் என்ன நடந்தது? எப்படி கவனிக்கப்பட்டார்கள் ?எவ்வளவு பணம் கை மாறியது என்று தெரிய வில்லை.

ஒரு வகுப்பில் 55 முதல் 65 மாணவிகள் இந்த மெட்ரிகுலேஷன் ஸ்கூலில் படிக்கிறார்கள். சராசரியாக 40 மாணவிகளை மட்டுமே ஒரு டீச்சரால் நிர்வகிக்க முடியும் என டீச்சரே சொல்கிறார். ( எனது பெரியம்மா பெண் அங்கே டீச்சர்)

அதே போல் மாமரத்துப்பாளையம் அருகே உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியைகளுக்கு 3 மாதங்களாக சம்பளம் தரப்படவில்லை.காரணம் சமீபத்தில் தனியார் பள்ளிகள் ஃபீஸ் வசூலிப்பதில் வந்த தடை. அவர்கள் சவுகரியத்துக்கு வசூல் பண்ண முடியாது என்றும் அரசு நிர்ணயித்த அளவே வசூல் பண்ண வேண்டும் என்றும் சொல்லப்பட்டது.

ஆனால் நிர்வாகம் பழையபடியே வசூல் செய்தது. பெற்றோர்கள் எதிர்த்தனர், சிலர் தர மறுத்தனர். அப்படித்தராத ,ஃபீஸ் கட்டாத குழந்தைகள் தனியே அமர வைத்து சரியாக பாடம் சொல்லித்தராமல் தனிமைப்படுத்துகிறார்கள்.இது மனவியல் ரீதியான பாதிப்பை குழந்தைகளிடம் ஏற்படுத்தும் என்பதை நிர்வாகம் உணர வேண்டும்.

மேலும் டீச்சர்களுக்கு சம்பளம் தராததால் அவர்கள் ஏனோ தானோ என பாடம் நடத்துகிறார்கள்.வேண்டா வெறுப்பாக செய்ய இது ஆஃபீஸ் உத்தியோகம் அல்ல.

ஸ்கூ;ல் ஃபீஸ் வாங்கி அதில்தான் சம்பளம் என அடம் பிடிக்கும் பள்ளி நிர்வாகி ஒரு கோடீஸ்வரர். பல பிஸ்னெஸ் செய்பவர்.அவர் ஸ்கூலில் பல லாபம் பார்த்த போது  இப்போது செம லாபம் எனவே உங்கள் சம்பளம் முன் கூட்டியே வழங்கப்படுகிறது என்றாரா? இல்லை. அப்படி இருக்க ஃபீஸ் சரியாக வசூல் ஆகலை என்பதை காரணம் காட்டி டீச்சர்களுக்கு சம்பளத்தை நிறுத்துவதால் அவர்கள் மனம் பாடம் நடத்துவதில் ஈடுபடுவதில்லை. அது மாணவிகளைத்தான் பாதிக்கிறது.

அதே போல் ஸ்கூல் மாணவிகளும் சரி, டீச்சர்களும் சரி யூனிஃபார்ம் பள்ளி நிர்வாகம் கொடுப்பதைத்தான் வாங்க வேண்டும் என வற்புறுத்தப்படுகிறார்கள்.இதன் மூலம் பள்ளி நிர்வாகம் அடிக்கும் பணம் ஏராளம்.

நான் முன்னாள் கார்மெண்ட்ஸ் ஓனர் என்ற முறையில் இது பற்றி நன்கு அறிவேன்.உதாரணமாக ஒரு சட்டை தையற்கூலி ரூ 60 என வைத்துக்கொண்டால் பல்க் ஆர்டர் அதாவது ஒரு ஸ்கூல் 2000 பேர் 4000 சர்ட் என்றால் வாங்கப்படும் கூலி ஒரு சர்ட்டுக்கு ரூ 35 மட்டுமே...ஆனால் டீச்சர்களிடமும், மாணவிகளிடமும் ரூ 60 கணக்கு போட்டே வங்கப்படுகிரது. இதே போல் தான் துணிகளும்.

ஸ்கூல் ஃபீஸ் வாங்கியே செம லாபம் பார்க்கும் பள்ளிகள் இது போல் யூனிஃபார்மில் பகல் கொள்ளை அடிப்பது முறையா?இதை யார் தட்டிக்கேட்பது?இதற்கு  என்னதான் தீர்வு?