கோடம்பாக்கத்துல அடிக்கடி ஹாலிவுட் ரேஞ்சுக்கு படம் எடுக்கனும்னு ஒரு குரல் அடிக்கடி கேட்டுட்டே இருக்கும், அல்லது ஒலிச்சுட்டே இருக்கும் (2ம் ஒண்ணுதானோ?)அது இந்தப்படத்தோட டைரக்டருக்கு அப்படியே உள் மனசுல பதிஞ்சுடுச்சு போல.. அப்படியே ஆங்கிலப்படமாட்டமே எடுத்திருக்காரு.....
அதாவது படமாக்கம், கதை ,திரைக்கதை போன்றவற்றில் அப்படி என அர்த்தம் இல்ல. மொத்தப்படமே 90 நிமிஷம்தான்.( அதுக்கே முடியல)
அறிமுக நாயகன் அஜய் நம்ம தன்மானச்சிங்கம் டி ராஜேந்தருக்கு தம்பி மாதிரி இருக்காரு. பாக்கவே சகிக்கலை.இதுல கலரிங்க் ஹேர் வேற. கலரிங்க் ஹேரோட அவர் நடந்து வர்றப்ப புதுமைப்பித்தன் ஆர்.பார்த்திபன் மாதிரியே இருக்காரு.(உவ்வே..)
தமிழ் சினிமாவில் காமெடிக்காட்சிகள் குறைந்து வருகின்றன என சமீபகாலமாக குற்றம் சொல்லுபவர்கள் இந்தப்படத்தில் ஹீரோ போடும் ஃபைட் சீன்களையும், டான்ஸ் மூவ்மெண்ட்ஸ்களையும் பார்த்தால் போதும். வயிறு குலுங்க சிரிக்கலாம். செம காமெடி நைனா...
ஹீரோயின் புது முகமாம்....இதை நாங்க நம்பனுமாம். சொம்பு ரொம்ப அடி வாங்கி இருக்கு போல.... பார்ட்டி பேரு சோனியா பட்.ஃபிகர் பார்க்கற ஆசையே விட்டுப்போயிடும் போல.
எனக்கு ஹீரோ - ஹீரோயின் ரெண்டு பேரும் சொதப்பலா அமைஞ்சது கூட வருத்தம் இல்ல, படம் டப்பாவா போனது கூட ஓக்கே.. இந்த புரொடியூசரை நினைச்சாத்தான் பாவமா இருக்கு.எந்த நம்பிக்கைல பணம் போட்டாரு.?இதையும் நம்பி எப்படி படம் எடுத்தாரு? எப்படி தியேட்டர்ல ரிலீஸ் ஆச்சு?
சரி படத்தோட கதை என்ன?ஹீரோ ஒரு போலீஸ் ஆஃபீசர்.. ( இவ்வளவு கேவலமான போலீஸ் ஆஃபீசரை நான் என் லைஃப்லயே பார்த்ததில்லை.). அவரை ஒரு பொண்ணு விரட்டி விரட்டி லவ் பண்ணுது.(அந்த பொண்ணே வறட்டி மாதிரிதான் இருக்கு ) ஹீரோ வற டீ மாதிரி இருக்கார். நல்ல ஜோடி பொருத்தம்.
அந்த ஊர் தாதா அண்ணாச்சி.ஹீரோயின் கிட்டே சொல்றாரு. உன் ஆளை நாங்க போட்டுத்தள்ளாம இருக்கனும்னா நீ அவனை லவ் பண்ற மாதிரி நடிச்சு உன் வலைல விழுந்த பிறகு விலகி வந்துடனும்.அவன் ஆற்றாமையில வெந்துடுவான். அதான் எனக்கு வேணும்.
லவ் பண்ணுற மாதிரி நடிக்கற ஹீரோயின் நிஜமாவே லவ் பண்ண ஆரம்பிச்சுடறா..ஒரு கட்டத்துல ( ஏன் சதுரத்துல இல்லையா?) எதிர்பாராத விதமா ஹீரோயினை வில்லன் கொன்னுடறாரு.அப்புறம் ஹீரோ பைத்தியம் மாதிரி வேஷம் போட்டு ( வேஷம் போடாமையே அவரு அப்படித்தான் இருக்காரு.) வில்லனை கொன்னுடறாரு. மொத்தத்துல படம் பார்க்கற ஆடியன்சை கொன்னெடுத்துடறாங்க...
மழையே மழையே மார்கழி மழையே பாட்டு வரிகள் நல்லாருக்கு. பாடல் படமாக்கப்பட்ட விதம் படு திராபை.அப்ப்புறம் மின்னல் சூரியனா?ன்னு ஒரு பாட்டு படு கேவலம்.அதற்கான சிச்சுவேஷன் காக்கிச்சட்டை பட்டுக்கன்னம் பாட்டுக்கான அதே இடம்.
படத்துல வர்ற எல்லா நடிகர்களுமே ஏதோ நாடக நடிகர்கள் மாதிரி வந்து வசனத்தை ஒப்பிக்கறாங்க...
படு கேவலமான இந்த படத்துலயும் வந்த சில நல்ல வசனங்கள்
1. உனக்கு எது நல்லதுன்னு நினைச்சு அதை மட்டும் செய்டா..
சரி சரி.. நாயர் கடைல டீ சொல்லு 4 பேருக்கும்.நாயருக்கு நல்லது.
2.கைதி - ஏட்டய்யா.. உங்க முகத்தையும்,லாக்கப் சுவரையும் பார்த்து பார்த்து போர் அடிச்சிடுச்சு.ஏதாவது டி வி இருந்தா போடுங்க...
யோவ்.. அதெல்லாம் பெரிய தப்பு பண்ற அரசியல் வாதிகளுக்கு... நீ சின்னத்தப்பு தானே பண்ணி இருக்கே..?
அப்போ ரிலீஸ் பண்ணி விடுங்க.. போய் பெரிய தப்பு பண்ணிட்டு வர்றோம்.
3. டேய்.. என்னை என்ன பைத்தியம்னு நினைச்சீங்களா?
ம்ஹூம், எந்தப்பைத்தியம் தன்னை ஒரு பைத்தியம்னு ஒத்துண்டிருக்கு.?
4. ஹீரோ - ஐ லவ் யூ
ஹீரோயின் - வாட்?
ஹீரோ - ம் நான் உன்னை காதலிக்கிறேன்..
ஹீரோயின் - ஓ. தமிழ்ல ட்ரான்ஸ்லேட் பண்றீங்களோ// ( இது காமெடி சீன்.. கை தட்டனும் )
5. வில்லன் - நான் உயிரோட இருக்கறப்பவே எல்லாவித மரியாதையும் எனக்கு கிடைக்கனும்.
6. முதன் முதலாக காதலை வெளீப்படுத்திய பிறகு ஹீரோ - ம் எங்கே போலாம்?
ஹீரோயின் - ம்.. எங்கே வேணும்னாலும். ( வாழ்க பத்தினி )
(
7. ஹீரோயின் - இந்த டிரஸ்ல நான் எப்படி இருக்கறேன்? ( எந்த டிரஸ் போட்டாலும் நீ தேற மாட்டே)
ஹீரோ - சகிக்கல ( அப்படி இருந்தும் விட மாட்டேங்கறியே..)
8. ஹீரோவின் அம்மா - பெரிய மனுஷங்களை பகைச்சுக்காதேப்பா.. நாம் போற வழில பள்ளம் இருந்தா ஒண்ணூ தாண்டிப்போகனும், அல்லது சுத்திப்போகனும்.. நீ அந்த பள்ளத்துலதான் இறங்கிப்போவேன்னு சொன்னா எப்படி?
9/. ஒரு பொண்ணு லவ் பண்ணாமயே வேணா இருப்பா.. ஆனா லவ் பண்றதா நடிக்கறேன்னு எல்லாம் சொல்ல மாட்டா...
10. வில்லன் - பொண்ணுங்க விஷயத்துல நான் வீக் கிடையாது. அப்படி நான் வீக்கா இருந்தா தலைவன் ஆகி இருக்க முடியாது. ( தமிழ்நாட்ல பெண்கள் விஷயத்துல வீக்கா இருக்கறவங்க தான் பெரிய பெரிய கட்சிப்பதவிகள்ல இருக்காங்க )
இந்தப்படம் ஏ ,பி , சி ஆகிய 3 செண்ட்ட்ர்லயும் தலா 3 நாட்கள் ஓடுனாலே அதிசயம் தான்.
ஆனந்த விகடன், குமுதம் மூச்...........ஸ்டில் கூட போட மாட்டாங்க.....
டிஸ்கி 1 - தனுஷ் -ன் சீடன் - சினிமா விமர்சனம்