Friday, February 25, 2011

மார்கழி 16 - அழகிய காதல் சொதப்பல் - சினிமா விமர்சனம்

http://todaynews.yolasite.com/resources/Margazhi%2016.jpg 
மொக்கைப்படங்களுக்கு விமர்சனம் போடறதால உங்களுக்கு என்ன லாபம்? அதைப்படிக்கிற எங்களுக்கென்ன லாபம்?அல்லது நாட்டுக்குத்தான் என்ன பிரயோஜனம்?னு நிறைய பேரு என்னைக்கேக்கறப்ப எல்லாம்  அவங்களுக்கு சரியான பதிலடி தர முடியாம தவிச்சுக்கிட்டு இருந்தேன்.. இன்னைக்கு எனக்கு ஒரு சான்ஸ்......

இந்தப்படத்து மூலமா இதுவரை தெரிஞ்சுக்காத சில அரிய வரலாற்று உண்மைகளை தெரிஞ்சுக்கிட்டேன்...படத்தோட விமர்சனத்துக்குப்போறதுக்கு முன்னால அந்த மேட்டரை (சீ... சீ ,,,,அது இல்லை...) உங்க கிட்ட ஷேர் பண்ணிக்கறேன்.

1. ஒரு ஃபிகரைப்பார்த்ததும் இது தேறுமா? தேறாதா?ன்னு எப்படி கண்டுபிடிக்கறது..? அதாவது நமக்கு இது செட் ஆகுமா? ஆகாதா?ன்னு எப்படி தெரிஞ்சுக்கறது?

பொதுவா டீன் ஏஜ் பொண்ணுங்க ரெட்டை ஜடை போட்டிருப்பாங்க.1 ஜடை முன்னால எடுத்தும் ஒரு ஜடை பின்னால எடுத்தும்  போட்டிருப்பாங்க..நம்மைப்பார்த்ததும் அவங்களுக்கு  நம்மைப்பிடிச்சிருந்தா பின்னால இருக்கற ஜடையை எடுத்து முன்னால போட்டுக்குவாங்க..பிடிக்கலைன்னா முன்னால இருக்கற ஜடையை பின்னால தூக்கிப்போட்டுக்குவாங்க....

இந்த உண்மை தெரியாம இத்தனை நாளா வேஸ்ட் பண்ணீட்டனேன்னு நினைக்கும்போது.... (ம்க்கும்.. தெரிஞ்சிருந்தா மட்டும் என்னத்தை கிழிச்சிருக்கபோறே..?)

http://www.cinemaexpress.com/Images/article/2010/2/20/margzhli16.jpg
2. உங்க காதலி உங்களுக்கு ஒரு மோதிரம் பரிசா தர்றா... அது சைஸ் பத்தலை.. என்ன பண்ணனும்? ( மார்வாடிக்கு போய் அடகு வைக்கனும் # அல்பன்).உடனே அந்த மோதிரத்தை ஒரு கயிற்றுல கோர்த்து ( செயின்லயும் கோர்க்கலாம்.. அதுக்கு நமக்கு வக்கு ஏது?) பழனி மலை முருகன் டாலர் மாதிரி கழுத்துல கட்டிக்கனும். (இந்த நாய்ங்களுக்கு டோக்கன் மாட்டிக்கற மாதிரி..)

3. ஒரு ஃபிகரு ஜன்னல் வழியா உங்களுக்கு டாட்டா காட்டுது. கை மட்டும் தான் தெரியுது. ( வேற எதெல்லாம் தெரியனும்னு எதிர்பார்க்கறே..?)அந்த வீட்டுல 4 ஃபிகருங்க.. எல்லாரும் அக்கா தங்கைங்க.. எப்படி கை காட்டுன காரிகையை கண்டிபிடிப்பது? ( கா- கா - க கவிதை வரும் போல இருக்கே..?)

பக்கத்து வீட்டு சின்ன பொண்ணு மூலமா மருதாணி வெச்சு விடுங்கன்னு நீங்க சந்தேகப்படற பொண்ணு கிட்டே ஹெல்ப் கேட்க வைக்கனும் .மருதாணி வெச்சு விடும்போது கை சிவந்துடும்.அடுத்த டைம் கை காண்பிக்கும்போது சிவந்த கை காட்டிக்குடுத்துடும்.. அடடா.. என்னே ஒரு கிரியேட்டிவ்..

ரைட்டு.. படத்தோட கதை என்ன? ஹீரோ தலை சீவாத ,தாடி வெச்சிருக்கற அக்மார்க் கோடம்பாக்க ஹீரோ...ஹீரோயின் பிளஸ் ஒன் படிக்கற டீன் ஏஜ் ஃபிகரு...( யாரப்பா அது எந்திரிச்சுப்போய் பவுடர் அடிச்சுட்டு வந்து உக்கார்றது..?)
2 பேரும் என்ன பண்றாங்க? சமூக சேவையா பண்ணப்போறாங்க ? காதல் தான். வழக்கம் போல் எதிர்ப்ப்பு.. நைஸா பேசி பொண்ணை கேரளா அனுப்பி வைக்கறாங்க. ஹீரோ  என்ன பண்ணுனாரு? அவங்க ஜோடி சேர்ந்தாங்களா?ன்னு டி வி ல இந்தப்படத்தை போடறப்ப தெரிஞ்சுக்குங்க...


http://cinema.mywebulagam.co.in/uploads/uploads_4bf12a2da6cce.jpg
புதுமுக ஹீரோ கற்றது தமிழ் ஜீவா மாதிரி சாயல்ல இருக்கார். பரவால்ல.. நடிப்பு ஓரளவு  வருது.. ( பாரய்யா... ஆம்பளைங்களைக்கூட பாராட்டறானே..?)

ஹீரோயின் ஈரமான ரோஜாவே மோகினி மாதிரி சாயல்.. நல்ல ஃபிகர் தான்.. உதடு அமைப்புதான் சரி இல்லை... (கொங்கு மணடலத்துல சப்பை வாய்னு சொல்வாங்க)வெட்கப்படும் காட்சிகளில், டூயட் சீனில் நல்லா நடிச்சிருக்கு பாப்பா.. தேறிடும்.

ஹீரோயினுக்கு 60 மார்க் போடலாம்னா ஹீரோயின் தங்கையாக வரும் ஃபிகருக்கு 65 மார்க் போடலாம்.( காசா? பணமா? அள்ளி இறைக்க வேண்டியதுதானே..?)

படம் இடைவேளை வரை ஜாலியா போகுது.. இப்போ வர்ற படங்கள் எல்லாமே அப்படித்தான்.2 பேரும் லவ் பண்ணறது பார்க்க போரடிக்காம போகுது..லைவ் ஷோவும், லவ் ஷோவும் எந்தக்காலத்துல போர் அடிச்சிருக்கு?

க்ளைமாக்ஸ்ல ஹீரோ ஆக்சிடெண்ட்ல மாட்டறது,மன நலம் கெடுவது,அதே இடத்துக்கு ஹீரோயின் வர்றது,ஹீரோயினுக்கு பைத்தியம் பிடிக்கறது
எடுபடலை. பார்க்க ப்ளம் கேக்கு மாதிரி இருக்கற பொண்ணு  பேக்குன்னு சொன்னா எப்படி ஏத்துக்கறது? ( கேக்கு - பேக்கு #சோக சூழல்ல கூட உனக்கு ரைமிங்க் கேட்குது? @கவிஞண்டா..

http://cinema.mywebulagam.co.in/uploads/uploads_4bf129ff7bb75.jpg
படத்தில் மனதைக்கவர்ந்த வசனங்கள்

1. இப்போ ஃபிகருங்க வர்றாங்க.. அறிமுகப்படுத்தி மார்க் போடறோம்.....

இவ பேரு மோனிகா...10 வார்த்தை பேச வேண்டிய இடத்துல ஒரு வார்த்தை தான் பேசுவா.. ( ஏன்.. ? சோம்பேறியா?)

இவ பேரு ஜெனி... இவ கிட்டே வாயைக்குடுத்தா சனி ( வாயைக்குடுக்கலைன்னா வெள்ளியா?)

இவ அகிலா.. இவலை யாருமே கவனிக்கலைன்னாலும் பண்ற அலட்டல்லயே கவனிக்க வெச்சிடுவா...(பாதிப்பேரு அப்படித்தானே பண்றாங்க...)

2.  ஏண்டி பேப்பர்ல சுக்கு பீர் அப்படின்னு எழுதி வெச்சிருக்கே..?

என் பேரு சுலக்‌ஷணா..என் ஆள் பேரு பீர் முகமது    ரெண்டையும் சேர்த்து சுருக்கு சுக்கு பீர்... 

3. ஒரு ஃபிகர் உன்னைப்பார்த்ததும் ஒரு பேப்பரை கீழே போட்டுட்டு போச்சு.. நீ எடுத்தே .. அதில என்ன எழுதி இருந்தது?

அட போங்கப்பா/...ஓம் சக்தி பரா சக்தி அப்படின்னு 300 தடவை எழுதி இருந்தது.அதே மாதிரி நானும் எழுதி கோயில் உண்டியல்ல போடனுமாம். இல்லைன்னா எனக்கு கெடுதலாம்....

4. என்ன? காபித்தூள் வாங்கப்போன பையனை இன்னும் காணோம்?

சரி,... ஏன் டைம் வேஸ்ட் பண்றீங்க..?மோராவது குடுங்க....

5. நீ பீருவை (பீர் முகமதுவோட சுருக் பேராம்) லவ் பண்றதா சொன்னே.. இங்கே இவன் கூட என்ன பண்ணிட்டு இருக்கே..?

இவன் பேரு ஷாரு.. (ஷாருக்கானாம்) இவன் என்னை லவ் பண்றானாம். இவன் மனசு புண்படக்கூடாதுங்கறதுக்காக இவனுக்கு கம்ப்பெனி குடுக்கறேன்.

( குத்து விளக்கு.. நீ தான் குத்து விளக்கு குடும்பத்துக்கு ஏத்த குத்து விளக்கு)

6. கடைல ஒண்ணு வாங்குனா ஒண்ணு ஃபிரீங்கற மாதிரி இந்த வீட்ல 3 ஃபிகருங்க டா.. ஒண்ணை கரெக்ட் பண்ண்ணுனா  2 ஃபிரீ..

3 ஃபிரீடா..

எப்படி?

அத்தையை விட்டுட்டீங்களேடா..  (அடப்பாவி...மாமியார்...)

 7.   இன்ஸ்பெக்டர் சார்.. என்னை சாதாரன கைதின்னு நினைக்காதீங்க. நான் கஞ்சா கைதி.. ( நாய்  கடத்தறது கஞ்சா அதுல பெருமையை பாரு.)

8. ஒரு நாள் பார்க்காம விட்டா அந்த காதல் சக்சஸ் ஆகாதுங்கறது முட்டாள்தனம்.5 வருஷம் பார்க்காம இருந்தும் ஒரு ஜோடியோட காதல் சக்சஸ் ஆகி இருக்கு... ( ஒரு வேளை பார்த்திருந்தா போரடிச்சிருக்கும்..)

9. யோவ்,.. லிமிட்டா குடிக்க வேண்டியதுதானே...

குடிச்சா அன் லிமிட்டெடாத்தான் குடிக்கனும்...

விழுந்துட்டா..?


அதுக்குத்தான் பிடிச்சுக்க நீ இருக்கியே.....குடிகாரனுக்கு என்ன மரியாதை.. கம்மியா குடிச்சு ஸ்டடியா இருந்தா...

10. காதலைப்பிரிக்கனும்னு நினைச்சா அவங்க சேரனும்னு நினைப்பாங்க.. அதனால ஃபிரீயா விட்டு சரியான நேரத்துல கழுத்தை அறுக்கனும்.

11. மருத்துவம் எவ்வளவோ முன்னேறுனாலும் நாம இன்னும் கடவுளை நம்பிட்டுத்தானே இருக்கோம்.

http://cinema.dinakaran.com/cinema/gallery/Kollywood-news-293.jpg
பாடல்கள் ப்ரியன், ஃபிரான்சிஸ் கிருபா. 3 பாட்டு ஆல்ரெடி செம ஹிட்டு.

கொஞ்சம் வெயிலாக ,கொஞ்சம் மழையாக சூப்பர் ஹிட் மெலோடி...அதற்கான பிக்சரைசேஷன் அழகு.

சுட்ட முறுக்கா கம்மர்கட் வாங்கிதரட்டா  கொண்டாட்டமான பாடல் .

கச்சத்தீவு போகலாம்,காதல் சொல்லி மீட்கலாம் அழகிய கவிதை வரிகளை உள்ளடக்கியது.

காதலர்கள் ரெகுலராக சந்திக்கும் இடம் ஒரே மரம் உள்ள பின்னணி ஒளிப்பதிவாளரை உள்ளேன் ஐயா சொல்ல வைக்கிறது.

நல்ல லவ் ஸ்டோரி இயக்குநர் அவசரப்பட்டுட்டார்.....இன்னும் நல்லா பண்ணீ இருக்கலாம்.

ஏ செண்ட்டரில் 25 நாட்கள்,  பி செண்ட்டரில்  20 நாட்கள் , சி செண்ட்டரில் 10 நாட்கள் ஓடலாம்.

இந்தப்படத்துக்கு ஆனந்த விகடன்ல விமர்சனம் போடமாட்டாங்கன்னு நினைக்கறேன். மீறிப்போட்டா  39 மார்க்.

குமுதம் ரேங்க்கிங்க் - ஓக்கே