Friday, February 18, 2011

ஆடுபுலி - Dr ராம்தாஸ் சுய சரிதை? - சினிமா விமர்சனம்


http://cinema.vikatan.com/index.php?view=image&format=raw&type=img&id=1460&option=com_joomgallery&Itemid=65
சி எம் சீட்டுக்காக நாய் மாதிரி அலையும் ஒரு சந்தர்ப்பவாத , பச்சோந்தித்தனமான மன நிலை கொண்ட அரசியல் வாதி.... ( சுருக்கமா நம்ம டாக்டர் ராம்தாஸ் மாதிரி) தான்  படத்துக்கு வில்லன்.(பொதுவா இந்த அரசியல் வாதிகளே நமக்கு வில்லன்க தானே..?). அவரது பொண்ணைக்காதலிக்கும் ஹீரோ...எப்படி எதிர்ப்புகளை மீறி கைப்பிடிக்கிறார்ங்கறது தான் கதை.

ஈரம்,அய்யனார்,மிருகம் போன்ற வித்தியாசமான சப்ஜெக்ட்டில் நடித்து நல்ல பெயர் வாங்கிய ஆதிக்கு விஜய் மாதிரி ஆக்‌ஷன் கம் மசாலா ஹீரோ ஆகனும்னு ஆசை வந்துடுச்சு போல.. அறிமுக பாடல் காட்சிலயே விஜய் மாதிரி டான்ஸ் மூவ்மெண்ட்ஸ் எல்லாம் குடுத்து பயப்பட வைக்கிறார்.அதே போல் வில்லனிடம் சவால் விடும் காட்சிகளில் சிவகாசி விஜய்-யை இமிடேட் செய்கிறார்.ம்ஹும், தேற மாட்டார்னு நினைக்கிறேன்.. ஏற்கனவே விஷால்க்கு நேர்ந்த கதிதான் இவருக்கும்.

ஹீரோயின் பூர்ணா.. ஜூனியர் அசின் -னு முகச்சாயல்ல இவரை கோடம்பாக்கத்துல சொல்றாங்களாம். (அப்படின்னு பூர்ணாவே வதந்தியை கிளப்பறார்னு நினைக்கிறேன்.)முகத்துல ஒரு ஃபிரஸ்னெஸ்ஸெ இல்லை. ஏதோ சம்பளம் வாங்குனமா? டைரக்டர் சொன்னபடி நடிச்சமா?ன்னு ரொம்ப சுமாரான நடிப்புத்தான்.

படத்துல ஆறுதலான ஒரே அம்சம் வில்லனா வர்ற சுரேஷ்தான் ( பன்னீர் புஷ்பங்கள் புகழ்)சொட்டைத்தலையோட வந்து அவர் நயவஞ்சகமா சிரிக்கறப்ப அப்படியே டாக்டர் ராம்தாஸைப்பார்க்கற மாதிரியே இருக்கு.

http://www.dinamani.com/Images/article/2010/8/6/cin2.jpg
வில்லனுக்கு பி ஏ வாக வரும் மயில்சாமி அப்பப்ப சிச்சுவேஷனுக்குத்தக்கபடி கவுண்ட்டர் டயலாக் குடுத்து அப்ளாஸை அள்ளறார்.

உன்னை நினைக்கையிலே மனசுக்குள் மழைக்காலம் என்ற பாடல் வரிகளை அழகாக எழுதிய கவிஞர் பாடலை படமாக்கிய விதத்தினை பார்த்திருந்தா (PICTURAISATION OF THE SONG)பாட்டு எழுதுறதையே விட்டுடுவார்னு நினைக்கிறேன்.

அதே போல் இடைவேளைக்குப்பிறகு வரும் மாமூல் ஃபேமிலி சாங்க்கில் அத்தனை பேரும் (கிட்டத்தட்ட 24 பேர்) கூலிங்க் கிளாஸ் அணிந்து வந்து பயமுறுத்துகிறார்கள். அந்த பாடல் காட்சியில் பழம்பெருமை மிக்க ரவிச்சந்திரன்,கே ஆர் விஜயா உட்பட அனைவருக்கும் டான்ஸ் மூவ்மெண்ட் கொடுத்து அவர்களையும் படுத்தி , நம்மையும் படுத்தி எடுக்கிறார் இயக்குநர்.

மனதைத்தொட்ட வசனங்கள்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEip5yXmTS28HTTvXFc6fyBMstjRMTKdmLRfI92ZwrLF8X0-0-XUr4HfxXaStLbxnvUR-S6Uxhyphenhyphen2EFBJW9Qz4ef37bhM2efDyDlzAvrMNhrTsBeHdaNGJ9JyVLzX3gWVOUQf7EjEdE909Ls/s320/poorna.jpg
1. அடேங்கப்பா.. வழுக்கு மரமே இப்படி ஏர்றானே.....வாழ்க்கைல எப்படி முன்னேறுவான்?

அவ்வளவுதானா? நான் கூட என்னவோ ஏதோன்னு நினைச்சேன்.

2.  நீங்கதான் என் பையனுக்கு ஒரு பேரு வைக்கனும்.

ஹரிதாஸ்  , ஹரிதாஸ்

எனக்கு இந்த பேரு பிடிக்கலை.
ஓ. இதுக்குத்தான் குழந்தைகளுக்கு பேசறதுக்கு முன்னேயே பேரு வெச்சுடறாங்க போல...

3. ஏம்மா.. படுத்திருந்த பொண்ணைக்காணோமேன்னுபதட்டப்படாம ஸ்கூல்க்கு கிளம்பறியே.. ஏன்?

பொண்ணைப்பெத்திருந்தா பயப்படுவேன், பொறுக்கியை அல்ல பெத்திருக்கேன்..? ( ஆஹா என்ன ஒரு மாதர் குல மாணிக்கங்களாடா...)

4. பாப்பா பாக்க டாப்பாத்தான் இருக்கு, ஆனா ட்ரை பண்ணிப்பார்த்தா படு லோக்கலா இருக்கும் போல...

5. கணக்கு டீச்சர் - டேய்.. உங்கப்பாவுக்கு நான் ரூ 1000 பணம் கடன் தர்றேன். மாசாமாசம் ரூ 50 திருப்பித்தர்றதா சொல்றாரு. அப்போ எத்தனை  மாசத்துல திருப்பித்தருவாரு?

மாணவன் - எத்தனை  மாசமானாலும் திருப்பியே தரமாட்டார் மேடம்.. உங்களுக்கு எங்கப்பாவைப்பற்றித்தெரியலை...

6. ஒரு கெட்டவன் உருவாகறது அவன் சொன்ன முதல் பொய்ல...

7. எல்லாரும் சாவுக்கு சங்கு ஊதுவாங்க.. இவன் தான் சாகறதுக்கே சங்கு ஊதறான்.

8. ஒரு பொண்ணு வண்டி ஓட்டறப்ப அவ பின்னால ஒரு பையன் உக்காந்தா அது லிஃப்ட்டுன்னு நினைப்பாங்க. ஆனா ஒரு பையன் பின்னால ஒரு பொண்ணு உக்காந்தா லிஃப்ட்டைத்தவிர மத்த எல்லாத்தையும் நினைப்பாங்க..

9. ஹீரோயின் - உன் கை டிகாக்‌ஷன் மாதிரி இருக்கு, என் கை பால் மாதிரி இருக்கு...

ஹீரோ - அப்போ நமக்குப்பிறக்கபோற குழந்தை காஃபி  மாதிரி இருக்கும்னு சொல்லு.

(இந்த சீன்ல என்ன காமெடின்னா 2 பேர் கையும் மாநிறமா தான் இருக்கும் )

10. எனக்கு இந்த மாப்பிள்ளை வேணாம்.

ஏன் அப்படி சொல்றே.. எனக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லையே...எந்தப்பொண்ணையும் எதுவும் பண்ணுனது இல்லையே...

அதான். கல்யாணத்துக்குப்பிறகு மட்டும் என்னைக்கட்டிட்டு என்ன செய்யப்போறே,,?

(சபாஷ்.. தமிழ்ப்பொண்ணுன்னா இப்படித்தான் கலாச்சாரத்தைக்காப்பாத்தனும்)

11. ஹீரோ - அப்பா, இவ்வளவு கட்டுப்பாடா வளர்ந்த நீங்க எப்படி எனக்கு இவ்வளவு ஃபிரீடம் குடுத்தீங்க..?

பிரபு -  நான் எப்படி எல்லாம் வாழனும்னு நினைச்சனோ அந்த மாதிரி...நீ வாழனும்னு ஆசைப்படறேன்.

12. ஹீரோயின்  - எதுக்காக என்னை அவசரமா வரச்சொன்னே..?

ஹீரோ - நம்ம லவ் மேட்டர் எங்க வீட்ல எல்லோருக்கும் தெரிஞ்சு போயிடுச்சு.

ஹீரோயின் - அய்யய்யோ.. என்ன சொன்னாங்க..?

ஹீரோ - ஓக்கே சொல்லீட்டாங்க.. அதான் கவலையா இருக்கு..

13. வில்லனின் எடுபுடி  - பால்பாண்டின்னா பால் கறக்கற பாண்டின்னு நினைச்சியா?உனக்குப்பால் ஊத்தற பாண்டிடா... ( பஞ்ச் டயலாக்காம்.. சகிக்கல...)



http://www.sivajitv.com/newsphotos/poorna4.jpg
இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்

1. ஹீரோ தனது காதலை குடும்பத்தில் உள்ள அனைவரிடமும் தனித்தனியே சொல்லி உங்க கிட்ட மட்டும் தான் சொல்றேன் .என டபாய்ப்பதும் அதைத்தொடர்ந்து வரும்  கல கல சீனும்.

2.செலவு அதிகம் இல்லாம ஒரு மசாலாப்படத்தை கொடுத்தது.

3. ஹீரோயினை சுமாரா செலக்ட் பண்ணி கடுப்பை கிளப்பினாலும் ஹீரோயின் அம்மாவா யுவராணியை போட்டு கிளுகிளுப்பு ஏத்துனது..

இயக்குநரிடம் சில கேள்விகள்

1. படத்தோட ஓப்பனிங்க் சாங்க்ல ஹீரோ கம்பம் ஏறும்போது கீழே விழுந்து சேறு ஆகிடுது ஓக்கே... அப்போ கூட இருந்த 42 பேருக்கும் அதே மாதிரி சேறு எப்படி ஆச்சு? ( பாட்டுக்கு மேட்ச்சுக்கு மேட்சுக்கா?)

2. க்ளைமாக்ஸ்ல ஹீரோ பைக்ல வேகமா வந்து விழறார். வில்லனோட அடியாளுங்க 34 பேர் சுத்தி நிக்கறாங்க. உடனே எந்த ஸ்பேனர், ஸ்க்ரூ ட்ரைவர் இல்லாம தன் பைக்கோட முன்னாடி சக்கரத்தை கழட்டி வீசி அடிக்கறாரு..? அது எப்படி?அந்த ஒரு சக்கரம் பட்டு 12 பேர் விழறாங்க...

எப்படியோ படம் தப்பிச்சிக்கிச்சு....

ஏ செண்ட்டர்ல 35 நாட்கள், பி செண்ட்டர்ல 25 நாட்கள், சி செண்ட்டர்ல  15 நாட்கள் ஓடலாம்.

ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 39
குமுதம் ரேங்க்கிங்க் - ஓகே


டிஸ்கி -