இசையோ, பின்னணி இசையோ இல்லாமல் வெறும் சிறப்புச்சத்தங்கள்.ஒலிச்சேர்ப்பு மட்டுமே துணையாகக்கொண்டு ஒரு த்ரில்லர் படம் கொடுக்க தைரியமாக வந்த இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனனனுக்கு ஒரு ஃப்ளவர் பொக்கே கொடுத்துப்பாராட்டலாம் என்றால்.........
சிகப்பு ரோஜாக்கள் படத்தில் வருவது போல் பெண்களை துரத்தி துரத்தி வேட்டையாடும் ஒரு சைக்கோவின் கதை தான் இது என்பது கூட பரவாயில்லை. ஆனால் ஆண்ட்டி ஹீரோ சைக்கோ ஆனதற்கு இயக்குநர் வைத்திருக்கும் ஃபிளாஷ்பேக்... ஸாரி சார்...
மென்மையான காதல் படங்களை மயில் இறகு வருடுவது மாதிரியான காட்சி அமைப்புகளில் மனம் கவர்ந்த இயக்குநரா இப்படி? என அதிர்ச்சி ஏற்படுத்தும் வண்ணம் பல காட்சிகளை கண் முன் நிறுத்தும் படி எடுத்ததற்கு என் வன்மையான கண்டனங்கள்.
மனவியல் நிபுணர்களின் கருத்துப்படி ஹோமோ வாக மாறும் ஒரு ஆண் பெண்களுடன் பழகும் வாய்ப்பு பெறாதவனாகவே இருப்பான் என்கிறார்கள். ஆனால் பல பெண்களுடன் சகவாசம் வைத்திருக்கும் கதையின் ஹீரோவின் அப்பா தனது சொந்த மகன் (அதுவும் வயது 8) கூடவே.....
இளவயதில் பாலியல் வன்முறைக்கு ஆளாகும் குழந்தைகளின் நலன் கருதிதான் எடுத்தேன் என 1000 சால்ஜாப்புகள் சொன்னாலும், BASED ON A TRUE STORY போஸ்டரில் போட்டு தப்பிக்கப்பார்த்தாலும் இந்த மாதிரி படங்கள் பார்ப்பவர்களின் மன நிலையை பாதிக்கும் என்பதால்,சமூகத்தில் குற்றங்கள் மீண்டும் மீண்டும் தொடர இது பாதை வகுக்கும் என்பதால் இந்த மாதிரி படங்கள் தடை செய்ய்ப்பட வேண்டும் அல்லது மக்களே ஒதுக்க வேண்டும்.
16 வயதே ஆன ஹீரோ தனது கார்டியன் மாதிரி இருக்கும் பக்கத்து வீட்டு ஆண்ட்டியை பலாத்காரப்படுத்தும் இடமும்,ஒரு கட்டத்துக்கு மேல் அந்த ஆண்ட்டியும் இணங்குவது போல் காட்டுவதும் வன்மையாகக்கண்டிக்கத்தக்க சீன்கள்.
அதே ஆண்ட்டி தனது காதலனை கல்யாணம் பண்ணி வந்த பிறகு முதல் இரவிலேயே ஹீரோ கணவனை கொலை செய்வதை நேரில் பார்த்த பிறகும் போலீஸில் சாட்சி சொல்லாமல் ஹீரோவைக் காப்பாற்றுவதும் நம்ப முடியாத காட்சி அமைப்பு.
அதே போல் இறந்து விட்ட அந்த ஆண்ட்டி உயிருடன் இருப்பது போல் கற்பனை செய்து கொண்டு வாழும் மனப்பிறழ்வு நோய் கொண்டவர் ஹீரோ என்பதெல்லாம் ஆங்கில சைக்கோ ( ஹிட்சாக்) படத்திலும், பாலு மகேந்திராவின் மூடு பனி படத்திலும், ஆர் .பார்த்திபனின் குடைக்குள் மழை படத்திலும் வந்தவை தான்.
சிட்டியில், பப்ளிக்காக ஹீரோ பெண்களை கடத்துவதும், கொலை செய்வதும் சர்வசாதாரணமாக நடப்பதாக காண்பிப்பது கேலிக்கு உரியது. போலீஸ் எல்லாம் என்ன தான் பண்றாங்க?
அதே போல் அந்த ஆண்ட்டி பெட்ரூமில் உள்ள மெழுகுவர்த்தி கீழே விழுந்து தீ விபத்தில் மாட்டுவது நம்பும்படி இல்லை.ஹீரோவாக நடிப்பவரின் (வீரா) முக பாவனை, பாடி லேங்குவேஜ் எல்லாம் ஓக்கே.ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு எதுவும் குறை சொல்லும்படி இல்லை. இசை இல்லாதது படத்தில் ஒரு குறையாகவே தெரியவில்லை.
ஷமீரா ரெட்டியின் நடிப்பும், அவரது பாடி லேங்குவேஜ்ஜூம் அருமை.ஆனால் திகில் படங்களில் நடிப்பதில் கலக்கிய நளினி( நூறாவது நாள் ),ஜீவிதா போல் வரவில்லை.
நகரத்தில் வாழும் இளம்பெண்களை எதற்கும் கவலைப்படாதவர்கள் போலவும் ,கற்பு பற்றிய எண்ணம் இல்லாதவர்கள் போலவும், குடும்பப்பாங்கான வாழ்க்கைக்கு ஒத்து வரமாட்டார்கள் என்பது போலவும் வரும் காட்சி அமைப்புகள், வசனங்கள் வன்மையாக கண்டிக்கத்தக்கவை.
--
கண்டிக்கத்தக்க வசனங்களில் சில சாம்ப்பிள்ஸ்
1.பொண்ணுங்க.. பாருங்க... ரொம்ப அறிவாளியா இருப்பாங்க... ஆனா நெட்ல உக்காந்து பாருங்க.. சேட்டிங்ல வரிசையா விழுவாங்க..
2. அம்மா, அப்பா ரூம்ல பொண்ணு படிக்கறதா நினைப்பாங்க.. இவளுங்க ரூம்ல பசங்களோட சேட்டிங்க்ல இருப்பாளுங்க...
.3. ஏய்ய்... என் பேரு வீரா... நான் ரொம்ப நல்லவன்...இப்போ உன்னை ரேப் பண்ணப்போறேன்.
4.நீ தூங்குன பிறகு எப்பவாவது உன் ரூமுக்கு வந்து உங்கப்பா நீ ரூம்ல தான் இருக்கியா?ன்னு செக் பண்ணி இருக்காரா? என்னா நீ நல்லவன்னு தெரியும்... அதனால நீ என்ன பண்றே.. நைசா சுவர் ஏறி குதிச்சு என் ரூம்க்கு வர்றே....
5. இப்போ உன் கிட்டே வந்து ஐ லவ் யூ சொல்லி இருந்தா நீ என்ன பண்ணி இருப்பே.. அர்ஜூனை ஏற்கனவே லவ் பண்றேன்னு சொல்லி இருப்பே.. அதான்.. அவனை சீனை விட்டே தூக்கிட்டேன்..
6. இந்தா தண்ணீர்.. WASH YOUR MOUTH... I WANT TO KISS YOUR MOUTH.
நல்ல பேர் எடுக்க ரொம்ப நாள் ஆகும் , ஆனா கெட்ட பேரை சீக்கிரமா எடுத்துட முடியும் என கிராமங்களில் சொல்வார்கள். அது மாதிரி இத்தனை நாளாக கஷ்டப்பட்டு சேர்த்த நல்ல பெயரை இந்த ஒரு படத்தின் மூலம் இழக்கப்போகிறார் இயக்குநர்.
இதய பலஹீனம் உள்ளவர்கள், மென்மையான மனம் படைத்தவர்கள்,பெண்கள், மாணவ மாணவிகள்,கர்ப்பிணிப்பெண்கள் இந்தப்படம் பார்க்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்
ஏ செண்ட்டர்களில் 25 நாட்கள், பி செண்டர்களில் 20 நாட்கள் , சி செண்ட்டர்களில் 10 நாட்கள் ஓடலாம்.
ஆனந்த விகடன் எதிர்பார்க்கப்படும் மார்க் - 40
குமுதம் ரேங்க்கிங்க் - ஓக்கே
diski - ஆடுபுலி - Dr ராம்தாஸ் சுய சரிதை? - சினிமா விமர்சனம்
டிஸ்கி 2 - காதலர் குடியிருப்பு - ட்ராஜடி லவ் - சினிமா விமர்சனம்
diski - ஆடுபுலி - Dr ராம்தாஸ் சுய சரிதை? - சினிமா விமர்சனம்
டிஸ்கி 2 - காதலர் குடியிருப்பு - ட்ராஜடி லவ் - சினிமா விமர்சனம்