Friday, February 18, 2011

பிரபு தேவா - நயன் தாரா ஜோடியா நடிச்சா..?

http://narumugai.com/wp-content/uploads/2010/09/931.jpg
1. தலைவருக்கு கிரிக்கெட் மோகம் ஜாஸ்தின்னு  எப்படி சொல்றே?

மகளிர் அணித்தலைவியை ஏலம் போட்டுடலாமா?ன்னு கேட்கறாரே?

-------------------------------------------

2.பிரபுதேவா- நயன் தாரா 2 பேரும் ஒரு படத்துல ஜோடியா நடிச்சா என்ன டைட்டில் வைப்பாங்க?

கள்ளக்காதலுக்கு மரியாதை

------------------------------------

3.என் கட்சில கோஷ்டிப்பூசலே கிடையாது...

விளையாடாதீங்க தலைவரே...  உங்க கட்சில இருக்கறதே 2 பேரு. 1. நான். 2. நீங்க.

---------------------------------

4. மக்களுக்கு சேவை செய்யத்தான் நான் அரசியலுக்கு வந்தேன்.

தலைவரே... பொது மக்களுக்கா? உங்களோட வாரிசு மக்களுக்கா?

---------------------------------------

5. தன்னை கேவலப்படுத்தறது தெரியாம டி வி யை ரசிச்சுப்பார்த்துட்டு இருக்காரு தலைவரு.

புரியலையே..?

தலைவரோட  டாப் டென் ஊழல்கள் பற்றி  புரோக்ராம் நடக்குது.....கை தட்டி ரசிக்கறாரே..?

-----------------------------------
http://www.dinamani.com/Images/article/2010/12/18/niira_radia.jpg
6. தலைவருக்கு ஒரு சின்ன வீடு இருக்குன்னு சொன்னியே.. அது அவர் காதுக்கு கேட்டுடுச்சு.. கோவிச்சுக்கிட்டாரு...

அய்யய்யோ. அப்புறம்?

சின்ன பங்களான்னு தான் இனி சொல்லனுமாம்.

------------------------------------

7. டைப்ரைட்டிங்க் இன்ஸ்டிட்யூட்டை திறந்து வைக்க தலைவர் ஒத்துக்கலை.

பிராஸ்டிடியூட் இன்ஸ்டிடியூட்னா உடனே ஓக்கே சொல்லி இருப்பாரு.

-------------------------------

8. இந்திய மாணவர்கள் கால்களில் கண்காணிப்புக்கேமரா பொருத்தப்பட்டதைப்பற்றி தலைவர்ட்ட கருத்து கேட்டது தப்பா போச்சு.

 ஏன்?

நாமும் பதிலுக்கு அமெரிக்க மாணவிகள்  கால்ல  கண்காணிப்புக்கேமரா பொருத்தி அவங்க குளிக்கறப்ப சீன் பார்த்துட வேண்டியதுதான் அப்படிங்கறாரே....

------------------------

9. நம்ம தலைவர் அரெஸ்ட் ஆனதும் டில்லில இருக்கற 40 மினிஸ்டர்களுக்கு ம் ஹார்ட் அட்டாக் வந்துடுச்சே.. ஏன்?

அப்ரூவர் ஆகிடறதா தலைவர் சி பி ஐ கிட்டே வாக்கு குடுத்துட்டாராம்.

----------------------------------

10. தலைவர் அப்ரூவர் ஆகிடறதா வாக்கு குடுத்தும் யாரும் பயப்பட்ட மாதிரி  தெரியலையே....?

எந்தக்காலத்துல கொடுத்த வாக்குறுதியை நிறைவேத்தி இருக்காருங்கற தைரியம் தான்.

-----------------------------------

டிஸ்கி -1   : இன்னைக்கு வெள்ளிக்கிழமைங்கறதால ஆஃபீஸ்ல கண்காணிப்பு அதிகமா இருக்கும். அதையும் தாண்டி நடுநிசி நாய்கள்,காவலர் குடி இருப்பு, ஆடு புலி, மார்கழி 16,உட்பட ரிலீஸ் ஆகி இருக்கற 5 படங்கள்ல ஏதாவது ஒரு படத்தை கட் அடிச்சுட்டு பார்த்துடனும்.ஸ்கூ;ல் லைஃப்,காலேஜ் லைஃப்,ஆஃபீஸ்லைஃப்னு பல கால கட்டங்கள்லயும் கட் அடிச்சுட்டு படம் பார்க்கறது ஒரு த்ரில்லிங்க் அனுபவம் தான்.

டிஸ்கி 2 - இந்த 7 மாசத்துல முதன் முதலா பயணம் படத்துலதான் என் கணிப்பு 100% மேட்ச் ஆகி இருக்கு.ஆனந்த விகடன் மார்க்கும், என் எதிர்பார்பு மார்க்கும் 42 தான்.ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க்கிற்கு நான் ஏன் முக்கியத்துவம் தர்றேன்னா அந்த பத்திரிக்கை ஆஃபீஸ்ல பணியாற்றத்தான் முடியல்... அந்த கெஸ்ஸிங்கையாவது கரெக்ட்டா பண்ணலாம்னுதான்.