Monday, February 14, 2011

காதல் ரசம் சொட்ட சொட்ட - கவிதை

http://www.myorkutglitter.com/wp-content/uploads/2009/03/love-hurts.gifமருதமலைக்குக்கூட்டிச்செல்லாமலேயே

மயில்தோகையை காட்டிச்சென்ற அவள் கூந்தலுக்கு 

மருதாணியில் அரைத்த தைலம் தடவுவேன்.

மகாபாரதப்போர்க்காலம் கடந்தாலும் அர்ஜூனனின் வில்லுக்கு

மாடலிங்காக இருக்கும் அவள் புருவங்களுக்கு இடையே

மைசூர் சந்தனத்திலகம் இடுவேன்.

ஏழாம் எண்ணைக்கவிழ்த்தாற்போன்ற 

எடுப்பாக இருக்கும் அவள் நாசியில் 

அருண் ஐஸ்க்ரீமின் கோன் மேல் வைக்கும் செர்ரி போல்

மூவுலகமும் மூக்கில் விரல் வைக்கும் வண்னம்

அழகிய மூக்குத்தி இடுவேன்..

காங்கிரஸ் கட்சி போல் பிளவு பட்டிருந்தாலும் 

எப்போதும் இணைந்திருப்பது போலவே மாயத்தோற்றம்

அளிக்கும் அவள் உதடுகளுக்கு மென் முத்தம் எனும் 

உதடு ஒத்தடம் வழங்குவேன்.

மானினம்,மீனினம்,தமிழின் மெல்லினம்

 இம்மூன்றையும் தன் மென்மையில் தோற்கடிக்கும்

அவள் இடையினத்துக்கு 

இல்பொருள் உவமை அணிக்கு 

மிகச்சிறந்த எடுத்துக்காட்டு என பட்டம் அளித்து 

உயிரியல் லேப்பில் ஸ்பெசிமென் சாம்ப்ப்பிளாக (LAB SPECIMEN SAMPLE)

வைத்து அதற்கு தங்க ஒட்டியானம் செய்வேன்.

காலடி பட்டதும் மண்வளத்தை அதிகரிக்கும் 

அவள் பாதங்களுக்கு வெள்ளிக்கொலுசு அணிவிப்பேன்.

(தங்கக்கொலுசு அணிவிச்சா ஆயுள் குறைஞ்சிடுமாம்)
எங்கே இருக்கிறாய்

என் கற்பனைக்காதலியே..?
http://sirippu.files.wordpress.com/2010/02/a21.jpg
டிஸ்கி - 1  : இது கவிதை.. சும்மா படிச்சுப்பாக்காமயே  வழக்கமா போடற மாதிரி யாராவது ஜோக் சூப்பர்னு டெம்ப்ளேட் கமெண்ட் போட்டா நொந்து நூடுல்ஸ் ஆகிடுவேன்.ஹி ஹி 

டிஸ்கி 2 - சனி ,ஞாயிறு நெட் பக்கமே வராதவங்களுக்காக

1.அனகாவின் வர்மம் - சீன் படமா? - சினிமா விமர்சனம் 18

2.தம்பிக்கோட்டை - சந்தானம் காமெடி + மசாலா - சினிமா விமர்சனம்