மொழி,அபியும் நானும் போன்ற நெஞ்சை நெகிழ வைக்கும் படங்களை எடுத்த ராதா மோகன் தனது வழக்கமான பாணியிலிருந்து விலகி ஆக்ஷன் அவதாரம் எடுத்துள்ள படம் பயணம்.
தீவிரவாதியின் விடுதலை கோரி ஒரு விமானம் கடத்தப்படுகிறது.பயணிகளின் தவிப்பு,அதிகாரிகளின் மீட்பு நடவடிக்கைதான் திரைக்கதை.
நாகார்ஜூன் தெலுங்கில் சூப்பர்ஸ்டார் ஆக இருந்தாலும் இந்தப்படத்தில் அண்டர் ப்ளே ஆக்டிங்க் செய்திருப்பது வரவேற்கத்தக்கது.ஆனால் பாடி லேங்குவேஜ்ஜில் அவர் காட்டிய மிடுக்கை கொஞ்சம் கெட்டப்பிலும் காட்டி இருக்கலாம்.நேஷனல் செக்யூரிட்டி கார்டாக வரும் அவர் க்ளோஸ் ஹேர் கட் பண்ணி இருந்தால் கூடுதல் கம்பீரம் சேர்த்திருக்கும்.படத்தில் அவருக்கு ஜோடி ஏதும் இல்லை என்பது டூயட்டை வெறுக்கும் பார்ட்டிகளுக்கு நிம்மதி.
படத்தின் தயாரிப்பாளர் என்பதற்காக படம் முழுக்க வர வேண்டும் என்ற சில்லித்தனமான எண்ணம் எதுவும் இல்லாமல் கதை எந்த அளவு அனுமதிக்கிறதோ அந்த அளவு மட்டும் பிரகாஷ்ராஜ் வந்து போவது அழகு
படத்தில் சின்ன சின்ன கேரக்டர்களைக்கூட கவனிக்க வைக்கும் அளவு முக்கியத்துவம் கொடுக்கும் வெகு சில இயக்குநர்களில் ராதாமோகனும் ஒருவர். மனித நேயங்களுக்கும் , உறவுகளுக்கும் மதிப்புக்கொடுக்கும் அவர் இந்த ஆக்ஷன் படத்தில் கூட தனது பாணியில் மாறாமல் டைரக்ஷன் டச்சை வெளிப்படுத்திய விதம் பாராட்டத்தக்கது.
பயணிகளாக வருபவர்களில் கவனிக்க வைப்பவர்கள் டீலா நோ டீலா ரிஷி, பாதிரியாராக வந்து குணச்சித்திர நடிப்பை வெளிப்படுத்தும் எம் எஸ் பாஸ்கர்,ஷைனிங்க் ஸ்டாராக வந்து கலகலப்பு ஊட்டும் பப்லு என வரிசையாக சொல்லிக்கொண்டே போகலாம்.
இடைவேளை வரை , படம் எதிர்பார்த்த, நமக்கு பழக்கப்பட்ட ஒரே திசையில் பயணிக்கும்பொது, கைதியான தீவிரவாதி விபத்தில் இறந்து விட்டார் என்றதும் திரைக்கதையில் புதிய திருப்பம்.. அதைத்தொடர்ந்து கதையின் போக்கில் ஏற்படும் மாற்றம் நல்ல திரைக்கதை ஆசிரியரின் உத்தியுடன் சொல்லப்படும் ட்விஸ்ட்கள் சபாஷ் சொல்ல வைக்கின்றன.
டம்மி தீவிரவாதியாக வருபவரின் பயந்தா கொள்ளித்தன நடிப்பு கலக்கல் ரகம். கிட்டத்தட்ட கோல்மால் படம் போன்ற KNOT.படத்தில் பாடல்களே இல்லாதது, தீவிரவாதிக்கு குழந்தையிடம் ஏற்படும் அன்பு அன்று அங்கங்கே அழகியல் அம்சங்கள்.
வசனகர்த்தா நம் இதயங்களில் பயணம் செய்த இடங்கள்.
1.டைரக்டர் - சார்.. ஃபைட் சீன் ரெடி பண்ணீட்டேன். நீங்க 50 பேரை அடிக்கற மாதிரி...
ஹீரோ - இப்போ வர்ற பசங்க எல்லாம் 30 பேர் 40 பேரை சர்வ சாதாரணமா அடிக்கறாங்க..நான் அட்லீஸ்ட் 100 பேரையாவது அடிக்கனும்.ரெடி பண்ணுங்க. டவுட்னா கில் பில் ( KILL BILL) படம் பாருங்க.
2. ஊர்ல பல பேர் ஸ்பெல்லிங்க் மிஸ்டேக்கோட தங்களோட பேரை எழுதறாங்கன்னா அதுக்குக்காரணமே உங்களை மாதிரி நியூமராலஜிஸ்ட்ஸ்தான்.
3. சிவாஜி, சிரஞ்சீவி, நிரோத் எல்லாமே கூட்டுத்தொகை 5 வருது.. செம ஃபேமஸ்.
யோவ்,சிவாஜி, சிரஞ்சீவி, ஓக்கே.. எதுக்கு சம்பந்தமே இல்லாம நிரோத் இங்கே வருது..?
மக்கள் மத்தில பிரபலம் ஆகிடுச்சுல்ல?
4.என்னது? தீவிரவாதிங்களா? ஏன்னா..நம்ம ஊர்ல கூட இந்த மாதிரி ஆளுங்க இருக்காங்களா?
ம்.. இருப்பாங்க.. ஏன். இப்போ உங்க வீட்ல இல்ல?
5. இந்தப்படம் ஓடுச்சா?
படம் பூரா ஹீரோதான் ஓடிட்டே இருந்தாரு..படம் ஓடலை.
படம்தான் பார்க்க நல்லாலைன்னா கதை என்னன்னு கேக்கறதுக்குக்கூட நல்லாலையே..?
6. பேசினா தீர்க்க முடியாத பிரச்சனைகள் இந்த லோகத்துல இருக்கோன்னா?
7.இந்தியாவுக்கே இப்போ நேரம் சரி இல்ல. கடக ராசி,, ஏழரை நாட்டு சனி நடக்குது..
ஏழு நாடு கூட ஏதோ ஒத்துக்கலாம். இந்த அரை நாடு... எங்கே..?
8. இந்த கோயில் , சாமி எல்லாம் இல்லைன்னா என்ன ஆகி இருக்கும்?
மக்கள் எல்லாம் ஒழுங்கா இருந்திருப்பாங்க.இருக்காங்காட்டிதான் என் மதம் உன் மதம்னு அடிச்சுக்கறாங்க.
9.இந்தியாவுல 40 கோடி பேர் கழிப்பறை இல்லாம கஷ்டப்படறாங்க.. அதைக்கட்ட வழியைப்பாக்காம இங்கே ஒரு கோயிலை இடிச்சு இன்னொரு கோயிலை எப்போ கட்டலாம்னு டைம் பார்த்துட்டு இருக்காங்க..
10. இன்னும் எத்தனை நாளுக்கு தீவிரவாதிங்க கிட்டே பேசிட்டே இருப்பீங்க?
11.இவனுங்களுக்கெல்லாம் ( அரசியல்வாதிகள்) எலக்ஷன் பற்றி மட்டும்தான் கவலை..பயம் எல்லாம், மக்கள் பற்றி கவலையோ ,அக்கறையோ கிடையாது.
12. முடிவு எடுக்க டிலே (DELAY) பண்றதும், தப்பான முடிவு எடுக்கரதும் ஒண்ணுதான்.
13. வியட்நாம் போர் ஒரு முடிவுக்கு வர காரணமா இருந்தது ஒரு ஜர்னலிஸ்ட் எடுத்த புகைப்படம்தான். அதே ஜர்னலிஸ்டாலதான் ஒரு நாட்டின் இளவரசியே அகால மரணம் அடைஞ்சாங்கங்கறதையும் மறந்துடக்கூடாது.( டயானா)
14 . தீவிரவாதி - நம்மோட முதல் எதிரி கண்ணீர், அடுத்தது செண்ட்டிமெண்ட்.
15. கம்ப்யூட்டர் படிச்சு அலுங்காம குலுங்காம அமெரிக்கா போயிடறீங்க.. ஏன் காஷ்மீர் போய் பாருங்களேன்.
16. சார்.. கூல் டவுன்..
உங்களை மாதிரி ஜோசியம் படிச்சிருந்தா கம்முனு உக்காந்திருப்பேன். காந்தியும், கம்யூனிசமும் ,காரல்மார்க்ஸூம் படிச்சுட்டனே.
17. என்னை அடிச்சு ஆக்ஷன் ஹீரோ ஆகனும்னு பார்க்காதே.. ஏன்னா என்னை என் மனைவி கூட அடிப்பா.. அவ்வளவு ஏன்? என் 4 வயசு பையன் கூட அடிப்பான்.
18. என் கிட்டே கோவிச்சுக்கிட்டு அம்மா வீட்ல போய் 3 மாசம் இருந்துட்டு வந்துட்டே... ஆனா நான் ஒரு தடவை கூட உன் கிட்டே சாரி கேட்கலையே.. தப்பு சாரி கேட்டிருக்கனும்.
19. மழலை - அங்கிள் நீங்க யாரு? உங்க பேரு என்ன?
பேரே கிடையாது எங்களுக்கு.. நாங்க இறைவனால் படைக்கப்படற போராளிகள்.
கரப்பான் பூச்சிக்கே ரியல் லைஃபில் பயப்படுபவர்தான் சினிமாவில் ஆக்ஷன் ஹீரோ என ஒரு வாரு வாரி இருப்பது வெல்டன் ராதா பாரதி என சொல்ல வைக்கிறது.அதே போல் சீரியஸான இந்தக்கதையில் முடிந்த வரை எங்கெல்லாம் காமெடி மசாலாவை தூவ முடியுமோ அங்கெல்லாம் கலகலப்பாய் கொண்டு செல்வது இயக்குநரின் ஸ்பெஷல் டச்.
ஆனால் அதே சமயம் படம் படு சீரியஸாக செல்லும்போது ஆங்காங்கே வரும் காமெடிகள் படத்தின் வேகத்துக்கும், டெம்ப்போவுக்கும் ஸ்பீடு பிரேக்கர் ஆகி இருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
எல்லா மனிதரும் நல்லவரே என்ற இயக்குநரின் கான்செப்ட் பிரமாதம் தான் என்றாலும் இவரது படங்களில் வரும் அனைவரும் நல்லவர்களாகவே வருவதும் எல்லாருமே எம் ஏ சைக்காலஜி முடித்தவர் போல் தத்துவம் பேசுவதும் களைய வேண்டிய குறைகள்.
பிருத்வி எனும் பப்லுவை ஆக்ஷன் ஸ்டார் ஆக காண்பித்து தமிழ் சினிமா ஹீரோக்களை செம இறக்கு இறக்குனது கலகல.. ( நிஜத்தில் இவரது முதல் படத்துக்கு கால்ஷீட் கேட்டு ஒரு முன்னணி ஹீரோவை அணுகிய போது அவர் நடிக்க மறுத்து விட்டார்.. அந்த கோபத்தைத்தான் இப்படி காட்டி தீர்த்துக்கொள்கிறார்.)
காமெடியில் கை கொடுத்து ஹீரோ அடிக்கும் நக்கல் பஞ்ச டயலாக்ஸ்.
1.நீ அடிக்கடி அடிப்பியே ஒரு பாழாப்போன பஞ்ச் டயலாக்.. அதென்ன?
ரத்தத்துல வேணா பல குரூப் இருக்கலாம்.ஆனா மனுஷங்க எல்லாம் ஒரே குரூப்தான்.
2, நீங்க பார்க்கத்தான் சைலண்ட்.. ஆனா வயலண்ட்..போய் அட்டாக் பண்ணுங்க.
3. தாய்க்கு ஒரு ஆபத்துன்னா ஆம்புலன்சுக்கு ஃபோன் பண்ணுவேன்
ஆனா தாய் நாட்டுக்கு ஒரு ஆபத்துன்னா நானே ஓடிப்போய் காப்பாத்துவேன்..
மொழி,அபியும் நானும் படங்கள் போல எல்லாத்தரப்பு ரசிகர்களுக்கும் இந்தப்படம் பிடித்து விடும் என சொல்லி விட முடியாது.ஆனாலும் தமிழில் இது வரவேற்கத்தக்க ஒரு முயற்சியே..
ஏ, பி செண்ட்டர்களில் 40 டூ 50 நாட்கள் ஓடலாம். சீ செண்ட்டர்களில் 15 நாட்கள் ஓடலாம்,
எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 42
எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்கிங்க் - ஓக்கே
diski - தமிழ்வாணன் -ன் நந்தி - கிராமத்துக்காதல் - சினிமா விமர்சனம்
diski - தமிழ்வாணன் -ன் நந்தி - கிராமத்துக்காதல் - சினிமா விமர்சனம்