ஒரு மனுஷனுக்கு நல்ல நேரம் எப்போ ஸ்டார்ட் ஆகும்னு யாராலும் சொல்ல முடியறதில்ல.ஆனா ஒவ்வொரு மனுஷனோட வாழ்க்கைலயும், நல்ல நேரமும் உண்டு. கெட்ட நேரமும் உண்டு. சில வருடங்களுக்கு முன்னால கோகுலம் கதிர் என்ற மாத இதழில் காதலர் தினத்துக்கான ஸ்பெஷல் கவிதைப்போட்டி வெச்சாங்க.அதுல கலந்துக்கிட்டு முதல் பரிசு வாங்குனது எஸ் சி கலையமுதன் சுக்கம்பட்டி, சேலம்... அவர் இப்போ சாதாரண கிளார்க் உத்தியோகம்தான் பார்க்கிறார்.2வது பரிசு வாங்குனது நான். அந்த கவிதை தான் இங்கே.. நானும் ஏதோ குப்பை கொட்டிட்டு இருக்கேன்.
பிளாக்ல கொட்டறதை சொல்லலை. ஆஃபீஸ்ல கொட்டற குப்பையை சொன்னேன்.3 வ்து பரிசு வாங்குனவரு தஞ்சை யுக பாரதி.இப்போ பாடல் ஆசிரியரா சினிமால ஜொலிக்கறாரு.நான் பொறாமைலயோ, ஆற்றாமைலயோ சொல்றதா யாரும் நினைக்காதீங்க..சும்மா ஒரு தகவலா பரிமாறிக்கிறேன்.. அவ்வளவுதான்.
கவிதைப்போட்டிக்கான தலைப்பு காதல் நேரம்
ஒவ்வொரு முறை வீட்டின் கூரையில்
காகம் வந்து கரையும்போதும்,
காற்றினால் வீட்டின் வாசல் கதவு
லேசாய் ஆடும்போதும்,
பக்கத்து வீட்டில் செருப்பு விடும் சத்தம் கேட்கும்போதும்,
என் வலது கண் துடிக்கும்போதும்
இடது கண் துடிக்காத போதும்,
ரோஜாவோடு குல்கந்து கலந்த வாசம் வீசும்போதும்,
கொலுசு சத்தம் கேட்காத எச்சரிக்கை நடை பாத ஒலியின் போதும்
எட்டிப்பார்ப்பேன்
அவள்தான் வந்து விட்டாளோ என.....
டிஸ்கி - இந்த கவிதைப்போட்டில வின் பண்ணுனவங்களுக்கு வால்கிளாக் பரிசுன்னும், அதை (ரேப் ஸ்பெஷலிஸ்ட்) மன்சூர் அலிகான் தருவார்னும் அறிவிச்சாங்க... 13 வருஷம் ஆகியும் இன்னும் தர்லை...சமீபத்துல ஃபோன் பண்ணி பத்திரிக்கை ஆஃபீஸ்ல கேட்டேன்...எடிட்டர்ட்ட கேட்டு சொல்றோம்னாங்க... ( நான் நினைக்கிறேன்.. ஃபோனை அட்டெண்ட் பண்ணுனதே அந்த எடிட்டராத்தான் இருக்கும்னு.. ஹா ஹா)