Monday, February 07, 2011

மின்சாரக்காதலி - இஷாகோபிகர் நடித்த ஜல்சா பட விமர்சனம் 17 +

http://www.jointscene.com/php/image.php/picmain.jpg?width=350&height=350&image=/ahtees/admin/movies/content/13767_17_Minsara%20Kadhali.jpg
மின்சாரக்காதலி - என் சுவாசக்காற்றே படம் வந்த புதுசல அர்விந்த சாமியை விட  இஷாகோபிகர் தான் அதிகம் பேரால ரசிக்கப்பட்டாங்க..(நாம எந்தக்காலத்துல ஹீரோக்களை ரசிச்சோம்?)அவங்க நடிச்ச ஒரு ஹிந்திப்படத்தை தமிழ்ல டப் பண்ணி இருக்காங்க.

சரி. .. மேட்டருக்கு வருவோம்...(மேட்டரா? யாரு யாருன்னு கேக்கப்படாது..)படத்தோட கதை என்ன?ஒரு பிரபல அட்வர்ட்டைசிங்க் கம் மாடலிங்க் கம்பெனியின் எம் டி...அவர் கம்ப்பெனில நம்ம இஷா மேடம் ரிசப்ஷனிஷ்ட்டா சேர்றாங்க...அப்புறம் அவரோட திறமையைப்பார்த்து (!!??)பர்சனல் அசிஸ்டெண்ட்டா பிரமோஷன் கொடுத்திடறாரு.2 பேருக்கும் ராங்க் கனெக்‌ஷன் ஆகிடுது.அப்பதான் கதைல ஒரு ட்விஸ்ட்.. இஷா மேடத்துக்கு இன்னொரு 25 வயசு இளைஞன் மேல காதல் வருது.. (காசா பணமா? காதல்தானே ,வந்துட்டுப்போகட்டும்)

பா ம க ராம்தாஸ் வெட்கமே இல்லாம தி மு க , அ தி மு க அப்படினு மாத்தி மாத்தி கூட்டணிவெச்சுக்கற மாதிரி இஷா மேடமும் 2 பேர் கூடவும் தெய்வீகக்காதல்ல ஈடுபடறாரு.(2 பேரை லவ் பண்ணுனா அது எப்படி தெய்வீகக்காதல் ஆகும்னு யாரும் கிராஸ் கேள்வி கேக்கப்படாது...)

அப்போ கதைல அடுத்த ட்விஸ்ட் .. கம்பெனி எம் டி க்கு ஒரு பொண்ணு.. அந்தப்பொண்ணு ஒரு பையனை காதலிக்கிறா... (பின்னே.. பொண்ணையே காதலிச்சா ஃபயர் ஆகிடுமே..)அந்தப்பையன் தான் ஏற்கனவே இஷா காதலிக்கற பையன்.
http://www.top10cinema.com/dataimages/300/ish34a.jpg
கே பாலச்சந்தர் பார்த்தா அவமானத்துலயே படம் எடுக்கறதை நிறுத்திடுவாரு.இப்போ கதைல என்ன ட்விஸ்ட்டுன்னா அந்தக்காதலன் திடீர்னு இஷா வை கழட்டி விட்டுடறான்.இஷாவுக்கு கோபம் வந்துடுது.. படையப்பா நீலாம்பரி கணக்கா வெகுண்டு எழுந்து அடைந்தால் அதே காதலன் இல்லாவிட்டால் காலன் அப்படினு சபதம் எடுக்கறாரு.(இடைவேளை ட்விஸ்ட்டாம்).. க்ளைமாக்ஸ்ல என்ன ஆகுதுங்கறதுதான் கதை.


இந்த படத்துக்கு ஏ சர்ட்டிஃபிகேட் எதுக்கு குடுத்தாங்கன்னே தெரியல.சுத்தமா ஒரு சீன் கூட இல்லை. ( அசுத்தமாக்கூட இல்லை)

சீன் படத்தில் வந்த காமெடி காட்சிகள்

1. லட்சக்கணக்கான சொத்துக்கு அதிபதியா வரும் தொழில் அதிபர் பாவம் 2000 ரூபா மொபைல் ஃபோன் தான் வெச்சிருக்காரு.( ரொம்ப லோ பட்ஜெட் படம் போல)

2. புதுசா ஜாயின் பண்ணுன ரிசப்ஷனிஸ்ட் சர்ட் போட்டு ஃபுல்லா கவர் பண்ணி இருப்பாங்க.. நம்ம இஷா வந்து சர்ட் பட்டன் 3 ஐ கழட்டி விட்டுட்டு  மாடலிங்க் கம்பெனினா இப்படித்தான் டிரஸ் பண்ணி இருக்கனும்பாரு..(வாழ்க தமிழ்க்கலாச்சாரம்)

3. நடிகை அசின் மேல என்ன கோபமோ  ஹீரோயின் பேரு அசின் அப்படினு வெச்சிருக்காங்க..( அவங்ககிட்டே கால்ஷீட் கேட்டு கிடைச்சிருக்காது)

4. இஷாவின் கள்ளக்காதலன் பேசும் வசனம் செம காமெடி..

ஆமா.. உங்களை லவ் பண்ணுனது உண்மைதான். இப்போ அவளை லவ் பண்றேன்... என்னைத்தொந்தரவு பண்ணாதீங்க.. முதல்ல உங்க கூட இருந்தது பாவம், இப்போவும் உங்க கூட இருந்தா துரோகம்..( கண்டு பிடிச்சிட்டாருய்யா 
கவர்னரு)

http://dinamani.co.in/Images/article/2009/7/12/13isa.jpg
உலக திரைப்பட வரலற்றிலேயே முதல் முறையாக பிட்டு இல்லாத பிட்டுப்படத்துக்கான வசன அணீவகுப்பு


1. உங்க பொண்ணு தண்ணி அடிக்கறப்ப சரக்குல தண்ணீரை அதிகம் மிக்ஸ் பண்றாங்க..  ராவா அடிக்க சொல்லுங்க எல்லாம் சரி ஆகிடும்.

2.பார்ட்டிங்கறது என்ன? ட்ரிங்க்ஸ் + கிளாமர் இதான்.பொண்ணுங்க உடம்பை ஆம்பளைங்க வேடிக்கை பார்க்கற இடம்.

3. டாடி.. நான் ஒருத்தனை லவ் பண்றேன்.

அவன் எப்படி..?உன்னை மதிரியே அசிங்கம இருப்பானா?

4. சார்.. என்ன சொல்றீங்க?இவங்க உங்க பொண்ணா?

அதுல உனக்கென்னப்பா சந்தேகம்? 


5 கிளைமாக்ஸ் பஞ்ச் - நீ எனக்கு அம்மா முறையா? சக்களத்தி முறையா? நீயே முடிவு பண்ணு..

இந்தப்படம் திருப்பூர்ல 4 தியேட்டர்ல ரிலீஸ் ஆகி இருக்கு.. சீன் படத்துக்கு போகாத ஆளுங்க கூட அடடே 4 தியேட்டர்ல போட்டிருக்காங்களா? அப்போ படத்துல கண்டிப்பா ஏதவது இருக்கும்னு பேசிக்கறாங்க.. ( ஆஹா, என்ன ஒரு நம்பிக்கை)

இந்தப்படத்துல சீன் இல்லைங்கற வரலாற்று உண்மையை பதிவு செஞ்சதால யாராவது எனக்கு ஏதாவது அவார்டு குடுத்தா பிகு பண்ணாம வாங்கிக்க தயாரா இருக்கேன்.. ஹி ஹி

டிஸ்கி -
டிஸ்கி  - சனி, ஞாயிறு நெட் பக்கம் வராதவங்களுக்காக

1.

சகி...நீ நடிக்கறது சகிக்கலை


2. 

தூங்கா நகரம் - சினிமா விமர்சனம்


3. 

யுத்தம் செய் - சஸ்பென்ஸ் த்ரில்லர் - சினிமா விமர்சனம்



4. 

.காதலுக்கு அதிக மதிப்பு தர்றது ஆண்களா? பெண்களா?


5.

ஊழல் இல்லாத பாரதம் உருவாக.